க.மு,க.பி எது சுவாரஸ்யமானது

கல்யாணத்திற்கு முன்பு [ க.மு ],கல்யாணத்திற்கு பின்பு [ க.பி ]
இவை இரண்டில் உங்களூக்கு மிகவும் சுவாரஸ்யமானது எது என்றால் எதை சொல்விர்கல்.
உங்கள் ருசிகரமான் பதிவை இங்கே பகிர்ந்து கொள்ளுங்கள்.
என் பதிவை பின் சொல்கிறேன்

ரெண்டுமே சுகமானதுன்னு தான் தோன்றுகிறது. அமையும் கணவனை பொறுத்தே சரியாக சொல்ல முடியும். இப்போ க.மு-வில் நான் மிக சந்தோஷமாகதான் இருக்கேன். க.பி. பத்தி கல்யாணம் முடிந்ததும் குட்டிரேயம்மாவிற்கு பதிவு போடறேன். ஓகேவா!

தினமும் ஒரு புது இழை ஆரம்பிச்சுaடறீங்க போங்க.

அன்புடன்
பவித்ரா

கல்யாணத்துக்கு முன்னாடி நான் அப்பா செல்லம்!

கபிக்கு அப்புரம் நான் .............................................

போங்கோ நேக்கு வெக்கம்மாருக்கு!

வாழ்க வளமுடன்!
அன்புடன்
மாமி (எ) மோகனா ரவி...

க.மு. -- அப்பா அம்மா செல்லம்
க.பி -- கணவருக்கும் எனக்கும் என் பையன் செல்லம்... அதுனால இரண்டு வாழ்க்கையுமே சுகமான வாழ்க்கை தான்...சுவாரஸ்யமான வாழ்க்கை தான்

"செய்க தவம், தவமாவது அன்பு செலுத்துதல்"

ராதா ஹரி

கல்யாணத்திற்கு முன் :

1. நானும் அப்பா,அம்மா,அப்பா உறவினர்கள்,அம்மா உறவினர்கள் செல்லம், மேலும் எது என்றாலும் என் அப்பா,அம்மாதான் எனக்கு வேண்டியதைசெய்வார்கள்,
2. அப்பா எது கேட்டாலும் உடனே வாங்கிகொடுத்துவிடுவார், அம்மாதான் ஸ்கூலுக்கு போய்ட்டு வந்தாலும் காலேஜ்க்கு போய்ட்டு வந்தாலும் சாதம் உருட்டிக்கொடுப்பா
3. அம்மா ரொம்ப செல்லமா வளத்துட்டா, அதனால வெளிஉலகம்னா என்ன மனிதர்கள் எப்படி பேசுவாங்கன்னு தெரியாது.

கல்யாணத்திற்கு பின் :

1. நான் இப்ப,என் கணவர்,அம்மா,அப்பா உறவினர்கள்,அம்மா உறவினர்கள் செல்லம், மற்றும் கணவர் வீட்டு செல்லம்,
2. ஆத்துக்காரர் எது கேட்டாலும் உடனே வாங்கிகொடுத்துவிடுவார், அவருக்கு நான் ஊட்டிவிட அவர் எனக்கு ஊட்டிவிட இப்படி போகுது.
3. வெளிஉலகம்னா என்ன மனிதர்கள் எப்படி பேசுவாங்கன்னு தெரியாது.இப்படி தெரியாம இருந்த எனக்கு ஒரு நாள் கடவுள் ஒரு இளவரசனை அனுப்பிவைத்தார், அந்த இள்வரசன் மிக்க பொறுமைசாலி,கோபப்படாதவர்,அமைதியானவர் சுருங்கச்சொன்னால்

" அந்த வானத்த போல மனம் படச்சா மன்னவன்"

அவர்தான் அந்த இளவரசிக்கு உலகம் எப்படி இருக்கு எப்படி பேசினால் எப்படி பேச வேன்டும் என்று சொல்லிக்கொடுத்து என் திறமைகளை வெளிக்கொணர்ந்தவர், மேலும் நான் எது புதிதாக செய்தாலும் ( சமையல் கலை முதல் எந்த கலையும் ) அதற்கு பாராட்டு தெரிவிப்பது,

இவர் இது போன்று பல விஷயங்களை சொல்லிக்கொடுத்ததினால் புகுந்த வீட்டிலும் ஊரிலும் பரவாயில்லப்பா இருவரும்னு சொல்ராங்க.

இதனால் நான் உங்களுக்கு சொல்வது என்னவென்றால் க.முன்னும் நான் சந்தோசமாகவே இருந்தேன், க.பின்னும் நான் சந்தோசமாகவே இருக்கிறேன் இறைவன் ஆசியில். நம் சந்தோசத்திற்காக வாழ்பவர்களின் சந்தோசத்திற்காக நாமும் வாழ்வோம் அன்பு என்னும் கூட்டில்.

உன் மீது மற்றவர்கள் பொறாமை படுகிறார்கள் என்றால் அதுவும் ஒருவித புகழ் மாலை தான்.

அன்புடன்
ஹேமா

ஹாய் பவி எப்படி இருக்கீங்க.என்ன பண்றது பா காலைலயே வேலை முடிஞ்சிபோது
அப்பறம் அருசுவைதான நம்ம உலகம் இங்க உள்ளவங்கல குழப்பறதுதான வேலை.அதான் தினமும்
1 இழை ஆரம்பிச்சிடுரன் பா ஏதோ நம்மாள முடிஞ்சது அவ்வளவுதான்

எனக்கு க.பி தான்பா சுவரஸ்யம் உண்மையில்.. திருமணத்திற்குப் முன் எனக்கு என்று எந்த பெரிய பொறுப்பும் இருந்தது இல்லை.. பள்ளிக்கு போவது படிப்பது,கல்லூரி போவது படிப்பது;அப்பா அம்மாவே தேவையானதை வாங்கிக் கொடுப்பது்.. எனக்கான உடைகளைக் கூட என் அம்மா தான் செலக்ட் செய்வார்.. உண்மையில் ஒரு இளவரசியைப் போல் பவனி வந்ததை தவிர பெரிதாக ஒன்றும் செயல் படுத்த வாய்ப்புக் கிட்டவில்லை...

திருமணதிற்குப் பின் தான் வாழ்க்கைக்கு ஒரு அர்த்தமே கிடைத்தது போல் உள்ளது.. i feel like this is the real excution time of wat we learnt before marriage... :)க.மு பல விஷயங்களைப் பார்த்து இதெல்லாம் அம்மாவைப் போல் சிறப்பாக செய்ய முடியுமா என எண்ணியது உண்டு.. அதே சூழ்னிலைகளை நான் கடக்கும் போது தான் அம்மாவின் அருமை பெருமை நன்கு புரிகிறது... அம்மாவை விட ஒரு படி மேலே செய்ய வேண்டும் என உந்துதல் வருகிறது.. அம்மாவை விட ஒரு படி மேலே செய்து அம்மா வாயாலேயே பாரட்டும் பெரும் போது பெருமிதமாக உள்ளது.. க.பி நான் மிகவும் தடுமாறுவது எனக்கான உடைகளை தேர்ந்தெடுப்பதில் தான்.. கடவுள்அருளால் அதை என் கணவர் தீர்த்து வைத்து விடுகிறார்.. அம்மாவைப் போலவே இருக்கும் அவர் உடை விஷயங்களை பற்றி பேசும் போது... ஆக மொத்ததில் திருமணத்திற்குப் பின் தான் எனக்கு வாழ்க்கை மிகவும் ஸ்வாரஸ்யம் என்று தோன்றுகிறது... :)

க.முன்னாடி சுதந்திரம்னா அது ஒருவித சுதந்திரம். ஆனால் அதிலும் ஒரு எல்லை உண்டு. வெளியில் போய் வீட்டுக்கு திரும்ப நேரம் ஆய்ட்டா வீட்ல இருக்குறவங்க கவலை பட ஆரம்பிச்சிருவாங்க. நாளைக்கு கல்யாணம் ஆக போற பொண்ணு நாலு பேரு பார்த்தா நாலு விதமா பேசுவாங்கன்னு சொல்லுவாங்க. அதே கல்யாணம் ஆன பிறகு பொறுப்பு கை மாறிடுது. அப்போ யாரும் நம்மை எதுவும் கேட்க முடியாது.(அத்தியாவசிய வேலைக்கு வெளியில் போய் நேரம் ஆனால்)க.மு. சுதந்திரம் என்று சொன்னால் சமையல் கவலை கிடையாது. யார் வந்தாலும் அம்மா பார்த்துக் கொள்வார். தினப்படி வேலைகள், சமையல் வேலை என்று அம்மா கூட கொஞ்சம் உதவி செய்தால் போதும். ஆனால், க.பி அப்படி இல்லை. எல்லா பொறுப்பும் நமக்குதான். யார் வந்தாலும் நாம் தான் கவனிக்க வேண்டும். உடம்பிற்கு ஏதாவது வந்தால் அம்மா வீடென்றால் அப்படியே போட்டுவிட்டு படுத்துவிடலாம். ஆனால், மாமியார் வீட்டில் அது நடக்குமா? யார் என்ன சொல்வார்களோ என்று நினைக்க தோன்றும்.அம்மா வீட்ல இருந்தாலும் கல்யாணம் ஆகாம இருந்தா அது ஒரு நெருஞ்சி முள் மாதிரி குத்திட்டு தான் இருக்கும். வெளிய சுதந்திரமா இருக்குறமாதிரி தெரிஞ்சாலும் உள்ளுக்குள்ள குமைந்துகிட்டு தான் இருப்போம். கல்யாணத்துக்கு பிறகு இன்னும் நல்ல புகுந்தவீடு கணவன் கிடைத்தால் சொர்க்கம் தான் போங்க. எனக்கு கிடைச்சிருக்கிறது சொர்க்கம்தான். இங்கே பொதுவான கருத்துக்காகதான் மேற்கண்டவற்றை சொன்னேன். என்னைக் கேட்டால் எனக்கு சுதந்திரம் எல்லாவற்றிலும் கிடைத்தது கல்யாணத்திற்கு பிறகுதான் என்று ஆணித்தரமாக சொல்வேன் ;)

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

மேலும் சில பதிவுகள்