ஃப்ரைடு ரைஸ்

தேதி: August 26, 2010

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 4.1 (8 votes)

 

பாஸ்மதி அரிசி - 2 கப்
பெரிய வெங்காயம் - ஒன்று
முளைகட்டிய பாசிப்பயறு - ஒரு கப்
காரட், பச்சைபட்டாணி கலவை - அரை கப்
குடைமிளகாய் - ஒன்று
வெங்காயத்தாள் - சிறிதளவு
பச்சைமிளகாய் - 2 (காரத்திற்கு ஏற்ப உபயோகிக்கவும்)
பூண்டு - 2 பல்
புதினா, கொத்தமல்லி தழை - சிறிதளவு
சீரகம் - சிறிதளவு
மிளகு பொடி - சிறிதளவு
நெய் மற்றும் எண்ணெய் - தேவையான அளவு


 

முதலில் பாஸ்மதி அரிசியை தண்ணீர் விட்டு அரை மணி நேரம் ஊற வைக்கவும். புதினா கொத்தமல்லி இரண்டையும் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
வெங்காயம், குடைமிளகாய் இரண்டையும் நீளவாக்கில் நறுக்கிக் கொள்ளவும். வெங்காயத்தாளை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். பச்சைமிளகாயை இரண்டாக கீறிக் கொள்ளவும். பூண்டையும் நீளவாக்கில் நறுக்கிக் கொள்ளவும்.
குக்கரில் சிறிது நெய் விட்டு சீரகம் தாளிக்கவும். அதில் நறுக்கி வைத்துள்ள புதினா கொத்தமல்லியை சேர்த்து ஒரு நிமிடம் வதக்கவும். பின்பு ஊற வைத்த அரிசியை சேர்த்து ஒரு நிமிடம் வதக்கி தண்ணீர் சேர்க்கவும். அரிசியும் தண்ணீரும் சேர்ந்து கொதிக்க விடவும். தண்ணீர் நன்கு கொதித்து அரிசி தண்ணீர் சமஅளவாக ஆகும் வரை கொதிக்க விடவும். பிறகு குக்கரை மூடி அடுப்பை குறைத்து 5 நிமிடம் கழித்து, அடுப்பை அணைத்து விடவும். இப்படி செய்யும்பொழுது பாஸ்மதி அரிசி நன்கு வெந்து உதிரி உதிரியாக வரும்.
பின்பு வேறொரு வாணலியில் எண்ணெய், நெய் சேர்த்து நறுக்கி வைத்த வெங்காயம், குடைமிளகாய், பச்சைமிளகாய், காரட், பச்சைப்பட்டாணி கலவை மற்றும் முளைகட்டிய பாசிப்பயறு சேர்த்து தணலைக் குறைத்து வைத்துக் கொண்டு வதக்கவும்..
பாசிப்பயறு சற்று வெந்ததும் வேக வைத்துள்ள சாதத்தை இந்த காய்கறி கலவையோடு சேர்த்து சிறிது நேரம் கிளறி விடவும். தேவையான உப்பு சேர்த்துக் கொள்ளவும். நறுக்கி வைத்த வெங்காயத்தாள், மிளகு பொடி மற்றும் கொத்தமல்லித்தழை சேர்த்து மேலும் ஒரு நிமிடம் கிளறி அடுப்பை அணைத்து விடவும்.
சூடான ஃப்ரைடு ரைஸுக்கு சாஸ் அல்லது ரைத்தா அல்லது தேங்காய்பால் குருமா வைத்துப் பரிமாறலாம்.

தேவைப்பட்டால் ஃப்ரைடு ரைஸ் செய்யும் பொழுது அஜினோமோட்டோ (MSG – Mono Sodium Glutamite) உபயோகப்படுத்தலாம். நான் அதிகம் உபயோகிப்பது இல்லை. அஜினோமோட்டோ அதிகம் சேர்த்துக் கொண்டால் உடம்புக்கு கெடுதல். மேலும் ஃப்ரைடு ரைஸ்கு பீன்ஸ், பன்னீர் சேர்த்தும் செய்யலாம்.
பாசிப்பயறு முளைக்கட்ட ஒரு பத்திரத்தில் பஞ்சு(cotton) போட்டு அதில் பாசிப்பயறு போட்டு சிறிதளவு தண்ணீர் ஊற்றி வைக்கவும். 3 நாட்கள் தண்ணீர் ஊற்றி இதே போல் வைத்தால் பயறு முளைகட்டிவிடும். கடைகளிலும் ரெடிமேடாக கிடைக்கிறது.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

ப்ரைட் ரைஸ் வித்தியாசமா இருக்கு. இப்பவே சாப்பிடணும் போல இருக்கு. செய்துட்டு சொல்கிறேன்.

மேலும் பல குறிப்புகள் தர வாழ்த்துக்கள்!

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

நன்றி ஆமினா
என்னுடைய குறிப்பு வந்திருக்கிறது நானே இப்ப நீங்க சொல்லிதான் பாத்தேன்... நோன்பு எப்படி செல்கிறது.. சாப்டாச்சா?, அண்ணா மற்றும் பையன் நலமா?

"செய்க தவம், தவமாவது அன்பு செலுத்துதல்"

ராதா ஹரி

மிக விரைவிலேயே என்னுடைய குறிப்பை வெளியிட்டதற்கு பாபுஅண்ணா அவா்களுக்கு மிக்க நன்றி...

"செய்க தவம், தவமாவது அன்பு செலுத்துதல்"

ராதா ஹரி

;-);-);-);-);-);-);-);-);-);-);-);-);-);-);-);-);-);-);-);-);-;-) வாவ்!
அட்டகாசம்!

வாழ்க வளமுடன்!
அன்புடன்
மாமி (எ) மோகனா ரவி...

ராதா

பட்டியிலும் கலக்கிட்டு சமயலும் படு பயங்கரமா கொடுக்கறீங்க.. ஃபிரைட் ரைஸ் என்னோட ஃபேவரிட். பாத்தாலே பசிக்குது ;(

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

மாமி
உங்க பாராட்டுக்கு மிக்க நன்றி.....

"செய்க தவம், தவமாவது அன்பு செலுத்துதல்"

ராதா ஹரி

நன்றி ரம்யா

நீங்க வேற இன்னைக்கு காலைல என் கணவரை போட்டு பாடா படுத்திட்டேன். ஒவ்வொரு முறையும் போட்டோ ஒழுங்கா இருக்கானு கேட்டு அவர ஒரு வழி பண்ணிட்டேன்....

"செய்க தவம், தவமாவது அன்பு செலுத்துதல்"

ராதா ஹரி

ராதா ரொம்ப அழகா செய்திருக்கீங்க. பார்க்கவே சாப்பிடத் தோணுது. ஃபோட்டோஸ் ரொம்ப அழகா வந்திருக்கு, கீப் இட் அப் :-)

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

ராதா,
பாசிபயறு சேர்த்த ஃபிரைட் ரைஸ், வித்தியாசமா இருக்கு. பார்க்கவும் அழகா, இருக்கு. அழகா பிரசன்ட் பண்ணியிருக்கீங்க. மேலும் நிறைய குறிப்புகள் கொடுங்க. வாழ்த்துகள்.

ராதா மேடம்,
கலர்புல்லா இருக்கே!
மதியம் இது தான் செய்யபோறேன்
வாழ்த்துக்கள்

என்றும் அன்புடன்,
கவிதா

ஃப்ரைடு ரைஸ் கவர்ந்து இழுக்குது.

Don't Worry Be Happy.

ராதா, பிரைட் ரைஸ் என் ஆத்துக்காரர் ஃபேவரட். ரொம்ப அழகா பிரசன்ட் பண்ணியிருக்கீங்கப்பா.பார்க்கும் போதே சாப்பிட தூண்டுது. வாழ்த்துக்கள். தொடர்ந்து இதே போல கலர்புல்லா ரெசிப்பி தந்துட்டே இருங்க.:)

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

வாழ்த்துக்கள்ராதா. எப்படியாவது உங்க அண்ணிக்கு ஐஸ் வைத்து ப்ரைடு ரைஸ் செய்யச் சொல்லனும். எப்படி ஐஸ் வைப்பது ...

அன்புடன்
THAVAM

அன்பரசி மேடம் உங்க பாராட்டுக்கு மிக்க நன்றி.. செய்து பார்த்துவிட்டு சொல்லுங்க.....

"செய்க தவம், தவமாவது அன்பு செலுத்துதல்"

ராதா ஹரி

கவிதா, கண்டிப்பா செய்து பார்த்துவிட்டு சொல்லுங்க.. உங்க பாராட்டுக்கு மிக்க நன்றி...

இந்த மேடம் எல்லாம் வேண்டாமேபா... ப்ளீஸ்....

"செய்க தவம், தவமாவது அன்பு செலுத்துதல்"

ராதா ஹரி

உங்களது பாராட்டுக்கு மிக்க நன்றி... சீக்கிரம் செய்து பார்த்துட்டு பின்னுாட்டம் கொடுங்க.......

"செய்க தவம், தவமாவது அன்பு செலுத்துதல்"

ராதா ஹரி

கலப்ஸ் பாராட்டுக்கு மிக்க நன்றி... அண்ணனுக்கு இல்லாதா?... வீட்டுக்கு கூட்டிட்டு வாங்க.. செய்து கொடுக்கறேன்....

"செய்க தவம், தவமாவது அன்பு செலுத்துதல்"

ராதா ஹரி

அண்ணிக்கு எதுக்கு ஐஸ் வைக்கனும்.. உங்களுக்கும் அண்ணிக்கும், மருமகன் மருமகளுக்கும் சேர்த்து நானே பண்ணித்தரேன்... (உங்க வீட்டுக்கு கூப்டாமலா போயிடப்போறீங்க... அண்ணி சமையலை நானும் சாப்பிடனுமில்ல...)

"செய்க தவம், தவமாவது அன்பு செலுத்துதல்"

ராதா ஹரி

சூப்பர் ராதா மேடம் ரொம்ப கலர் புல்லா இருக்கு எனக்கு ப்ரைட் ரைஸ் ரொம்ப பிடிக்கும் ஹோட்டல் போனா சாப்பிடுவதோடு சரி இப்ப நானே ட்ரை பண்ணி பார்க்க உங்க குறிப்பு கிடைச்சாச்சு. செய்துட்டு சொல்றேன் மேடம்.

லஷ்மிஸ்ரீ உங்கள் பாராட்டுக்கு மிக்க நன்றிப்பா... சீக்கிரம் ட்ரைபண்ணி பாத்துட்டு சொல்லுங்க எப்படி இருந்தது என்று... மேடம் எல்லாம் வேண்டாம்.. ராதா போதும்...

"செய்க தவம், தவமாவது அன்பு செலுத்துதல்"

ராதா ஹரி

ஹாய் ராதா ஃப்ரைடு ரைஸ் பார்க்கவே ரொம்ப நல்லா இருக்குபா வித்தியாசமா இருக்கு ரைஸ்

நஸ்ரின் கனி உங்க பாராட்டுக்கு மிக்க நன்றிப்பா... செய்து பார்த்துட்டு பின்னுாட்டம் கொடுங்க....

"செய்க தவம், தவமாவது அன்பு செலுத்துதல்"

ராதா ஹரி

ராதா ஹரி(அக்கா),
அங்கிருந்து அப்படியே இங்கொரு பார்சல் அனுப்ப முடியுமா?!! பார்க்கவே இப்படி இருக்கே!! சாப்பிட்டால்!!!!!!!! அற்புதம் தான் போங்கோ!

பாதகம் செய்பவரைக் கண்டால் நீ பயம் கொள்ளல் ஆகாது பாப்பா'

hellow

this is my favourite dot com. I used to watch all types of food. I am also very interesting to join with this. First time I intruduce my menu in this arusuvai.com so i am very happy to say this.

Hai my dear friends

I want to say about spicy pastha. this is my family favourite dish.I will do this in weekends. I told to my family friends,everybody told that it is nice. so i want to share this with arusuvai.com friends.

Needs

pastha 2cup
onion big 2
tomato 2
ginger 2spoon smashed
garlic 2spoon smashed
turmaric powder
chilli powder 1s
garam masala powder 1s
soumbu 1s
cloves 4
chinnamun 4
oil
curry leaves
corrinder leaves
salt optional

first we have to keep cooker in the stove. Then pure oil and make it heat, put cloves,soumbu, chinnamun and fry it, then put onion,tomato,ginger,garlic,curry leaves and corriender leaves.then put turmaric powder,chilli powder,garam masala powder and salt. Then pour water(for 1tumbler pastha-2 tumbler water) and put pastha and mix it and close the cooker, make it 3 sound, wait for complete cool,it may take half an hour to complete cook and cool. very tasty spicy pastha is ready. Try this and please send reply. Thank you.

Thank you for arusuvai.com