பாகற்காய் பருப்பு பொரியல்

தேதி: August 27, 2010

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 4.1 (8 votes)

பாகற்காய் இரும்பு சத்து, வைட்டமின் A, B1, B2, C நிறைந்தது. சரும வியாதிகள், கண் குறைபாடு, ரத்த கொதிப்பு, நீரழிவு, எதிர்ப்புசக்தி இன்மை ஆகியவற்றை குணப்படுத்தும் ஆற்றல் உடையது.

 

பாகற்காய் - 1
வெங்காயம் - 1
பாசிபருப்பு - 3 மேசைக்கரண்டி
கடலை பருப்பு, உளுந்து, காய்ந்த மிளகாய், வேர்கடலை - தாளிக்க
கடுகு, சீரகம், கறிவேப்பிலை, எண்ணெய் - தாளிக்க
உப்பு - தேவைக்கு ஏற்ப
தேங்காய் - சிறிது (விருப்பபட்டால்)


 

வெங்காயம் மற்றும் பாகற்காயை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். மற்ற தேவையான பொருட்களையும் தயாராக வைத்துக் கொள்ளவும்.
பாகற்காயுடன் உப்பு சேர்த்து தண்ணீர் விட்டு நன்கு கொதிக்க வைக்கவும். நன்கு கொதித்தவுடன் தண்ணீரை வடிகட்டியில் போட்டு வடித்து எடுக்கவும்.
வானலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, சீரகம், கறிவேப்பிலை, பருப்பு வகைகள் சேர்த்து தாளிக்கவும்.
பின்பு நறுக்கின வெங்காயம் மற்றும் மிளகாய் வற்றல் சேர்த்து நன்கு வதக்கவும்
வதக்கியவற்றுடன் பாசிபருப்பு, தண்ணீர் சேர்த்து வேக வைக்கவும்.
பருப்பு முக்கால் பதம் வெந்ததும் வேக வைத்து, தண்ணீர் வடித்த பாகற்காய் சேர்த்து கிளறவும்.
நன்கு தண்ணீர் சுண்டியதும் தேங்காய் சேர்த்து அடுப்பை அணைக்கவும்.
மேலே கொத்தமல்லி தழை தூவி பரிமாறவும். சுவையான சத்தான பாகற்காய் பருப்பு பொரியல் ரெடி.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

நல்ல குறிப்பு!

இப்படி செய்தா கசப்பே தெரியாது. குழந்தைகளுக்கும் கொடுக்கலாம்.

குறிப்புக்கு மிக்க நன்றி பா!

வாழ்த்துக்கள்

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

கவிதா,
பாகற்காய் பருப்பு பொரியல் வித்தியாசமா இருக்கு. கண்டிப்பா ட்ரை பண்றேன். பாகற்காயின் சத்துக்கள் பற்றிய விவரங்களும் அருமை.
வாழ்த்துக்கள்.

கவிதா,
நல்ல சத்தான, வித்தியாசமா குறிப்புங்க, வாழ்த்துக்கள்..

Devi

எனது குறிப்பை வெளியிட்ட அட்மின் அவர்களுக்கு நன்றி

என்றும் அன்புடன்,
கவிதா

ஆமினா,
நீங்க சொல்லுறது நிஜம் அதிக கசப்பு தெரியாது
நீங்களும் செய்து பாருங்க
உங்கள் வருகைக்கும்,பின்னூட்டத்திற்கும் நன்றி

என்றும் அன்புடன்,
கவிதா

அன்பரசி,
விவரம் நெட் குரு சொன்னது
நீங்களும் செய்து பாருங்க
உங்கள் வருகைக்கும்,பின்னூட்டத்திற்கும் நன்றி

என்றும் அன்புடன்,
கவிதா

தேவி,
நீங்களும் செய்து பாருங்க
உங்கள் வருகைக்கும்,பின்னூட்டத்திற்கும் நன்றி

என்றும் அன்புடன்,
கவிதா

கவிதா அருமையான குறிப்பு... இப்படி செய்தா கசப்பு தெரியாதா, என் பையன் கசக்குதுன்னு சாப்பிட மாட்டேங்கறான்.. வம்பா ஊட்ட வேண்டியிருக்கு.. இது மாதிரியும் ட்ரை பண்ணிப்பாக்குறேன்.. பாக்கவே அழகா இருக்கு..நான் பெரும்பாலும் வறுத்துதான் கொடுக்கறேன். அட்லீஸ்ட் அது மாதிரியாவது சாப்பிடட்டுமே என்று....வாழ்த்துக்கள்பா....

"செய்க தவம், தவமாவது அன்பு செலுத்துதல்"

ராதா ஹரி

கவிதா பாகற்காய் பொரியல் செய்தேன். நல்லா இருக்குது அவ்வளவாக கசப்பு தெரியலை. இங்கு நீர்ச்சத்து அதிகம் உள்ள பார்க்க மெழுகில் செய்தது போல் இருக்கும் பாகற்காய்தான் கிடைக்கும் :(. நம் ஊர் பாகற்காயில் செய்தால் இந்த கசப்பும் இருக்காதுன்னே நினைக்கிறேன். நன்றி கவிதா

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

நான் பாவக்காயில் இந்த மாதிரி பருப்பு போட்டு செய்ததில்லை.
உங்க குறிப்புப்படி செய்துபாத்துட்டு சொல்ரேன்.

நல்ல குறிப்பு....இப்போதெல்லாம்..முகப்பை மட்டும் பார்த்தாலே உங்க குறிப்பை கண்டுபிடிக்க முடியுது..
தொடர்ச்சியா அசத்தல் குறிப்புகள் கொடுக்கறீங்க ..பின்னூட்டம்தான் தொடர்ச்சியா கொடுக்க முடியல...:-

பாராட்டுக்கள்..தொடர்ந்து அசத்துங்க..நானும் இந்த முறையில் செய்ததில்லை...
செய்யும்போது சொல்கிறேன்.

அன்புடன்
இளவரசி

புரியாத பிரியம் பிரியும் போது புரியும்.

ராதா மேடம்,
இங்கு கிடைக்கும் பாகற்காய் வாயிலே வைக்க முடியாத அளவு கசப்பு இப்படி தான் செய்வேன் ரொம்ப கசப்பு தெரியாது செய்து பாருங்க
உங்கள் வருகைக்கும்,பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றி

என்றும் அன்புடன்,
கவிதா

கவி மேடம்,
செய்து பார்த்தீங்களா?
இங்கு கிடைக்கும் பாகற்காயும் வாயிலே வைக்க முடியாத அளவு கசப்பு இப்படி தான் செய்வேன் இப்படி செய்தால் ரொம்ப கசப்பு தெரியாது
உங்கள் வருகைக்கும்,பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றி

என்றும் அன்புடன்,
கவிதா

கோமு மேடம்,
செய்து பாருங்க இப்படி செய்தால் ரொம்ப கசப்பு தெரியாது
உங்கள் வருகைக்கும்,பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றி

என்றும் அன்புடன்,
கவிதா

இளவரசி மேடம்,
செய்து பாருங்க
உங்கள் வருகைக்கும்,பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றி

என்றும் அன்புடன்,
கவிதா

கவிதாஆஆஆஆஆஆஆ
பாகற்காய் பொறியல் சூப்பர். கண்டிப்பா, இனி 2 வாரத்துக்கு ஒரு தடவை இதுதான், வாழ்த்துக்கள்

அன்புடன்
பவித்ரா

It came out very well. I added a bit of Jaggery. Thanx.

பவித்ரா ,
செய்து பாருங்க
உங்கள் வருகைக்கும்,பின்னூட்டத்திற்கும் நன்றி

என்றும் அன்புடன்,
கவிதா

ஜானகி மேடம் ,

வெல்லம் சேர்த்து செய்தது இல்லை நானும் அது போலே செய்கிறேன்
உங்கள் வருகைக்கும்,பின்னூட்டத்திற்கும் நன்றி

என்றும் அன்புடன்,
கவிதா

கவி
நான் செஞ்சுட்டேன், செஞ்சி தான் பதிவே போட்டேன்,

அன்புடன்
பவித்ரா