இரவில் தூங்க

என் மகனுக்கு 1 வயது ஆக போகுது. அவன் 9 மாதம் வரை தாய்பால் குடித்தான். பின் எனக்கு பத்தவில்லை. பகலில் formula milk குடிக்கிறான். night formula milk(220 ml) வயிறு நிரம்ப குடிப்பான். இப்பொழுது பிரச்சனை என்னவெனில் அவன் இரவில் என் மார்பை வைத்தால் மட்டும் தான் தூங்குகிறான். இல்லையென்றால் தொட்டிலில் போட்டு ஆடினால் மட்டும் தான் தூங்குகிறன்.அதுவும் 12 மணி, 1 மணி ஆகுது. இதனால் என் துக்கமும் போகுது. 4 பல் வந்து இருக்கு. கடிக்குறான். pls help me pls pls pls என் மார்பை வைக்காமல்,தொட்டிலில் போடாமல் அவன் தூங்க வழி சொல்லுங்க தோழிகளே

நீங்க எப்படி பால் மறக்க வைச்சீங்கனு தெரியல, பொதுவா ரத்தப் பழம்னு ஆயுர்வேதிக்கடைகள்ல கிடைக்கும் அத காம்புல தடவினா குழந்தை கசப்பபாத்து வாய்வெக்க மாட்டான். தொடர்ந்து இரண்டு மூணு நாள் கொடுத்தாலே எப்பெல்லாம் வாய் வைக்கும் போதும் மறக்காம அவனுக்குத் தெரியாமல் வைக்கனும். இதே மாதிரி வேப்பெண்னையும் வைப்பாங்க.நல்லா அழுவாங்க கஷ்டமாதான் இருக்கும். இடைவிடாமல் வைச்சாதான் மறப்பாங்க.

உங்க பையனை உங்க பக்கத்தில படுக்க வைக்காம அவங்க அப்பா பக்கத்தில அல்லது உறவினர் பக்கத்தில படுக்க வையுங்க.

நீங்க சிரமம் பாக்காம தொட்டிலில் போட்டு ஆட்டுங்க. இடைவிடாமல் நாலைஞ்சுநாள் பழக்குங்க. சீக்கிரம் மறந்துடுவான்.

இரண்டு வயது வரை தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்கள் நிறைய பேர் இருக்காங்க. வலிக்கிறதுங்கறதுக்காக தாய்ப்பால் கொடுக்கிறத நிறுத்தவேண்டாம். அது பல் முளைக்கும் போது மட்டும்தான் செய்வாங்க. எல்லாப் பல்லும் வந்ததுக்கு அப்புறம் கூட கடிக்கமாட்டாங்க. தாய்ப்பால் இரண்டு வயது வரை கொடுக்கிறது குழந்தைக்கு ரொம்ப நல்லது. மனதளவிலும், உடலளிவிலும் அவங்களுக்கு நன்மை அளிக்ககூடியது. தாய்ப்பால் பத்தி நம்ம தளிகாவும் குழந்தை வளர்ப்புல சொல்லியிருக்காங்க, படிச்சுப்பாருங்க.

ஜெயா ஆனந்த இது பால்கொடுக்கும் தாய்மார்களுக்காக நான் சொல்ற ஒரு இன்ஃபார்மேஷன். இப்படிதான் பல்லு முளைக்கும் போது கடிக்கிறதப் பாத்து பயந்துடறாங்க. நீங்க தப்பா நினைச்சுக்காதீங்க. நான மேற்சொன்ன முறையில முயற்சி செய்து பாருங்க.

Don't Worry Be Happy.

thanks.எனக்கும் பால் குடுக்கனும் தான் ஆசை. ஆனால் பத்த வில்லை. நீங்க சொன்ன ரத்த பழம் singapore la எங்கே கிடைக்கும்.

jaya

என்னுடைய கருத்து உங்களை காயப்படுத்தலை இல்லையா, நன்றி.

ரத்தப்பழம் என்பது ஃபுருட் இல்லை. கருப்புகலரில் கட்டிமாதிரி கிடைக்கும். விரல்ல தண்ணி தொட்டு அதை உரசி எடுத்து வைப்பாங்க. தமிழ்நாட்டுல காதி கிராப்ட்ல கிடைக்கும். உங்களுக்கு அங்க கிடைக்கலைனா வேப்பெண்ணையும் பயன்படுத்தலாம்.

தாய்மார்களுக்காக பால்பத்தலைன்னு நீங்க நினைக்கும்போது டாக்டரை அணுகலாம். பால்சுரக்க மருந்து தருவாங்க. அப்புறம் லாக்டானிக்குனு ஒரு பவுடர் மெடிக்கல்ஷாப்புல கிடைக்கும் அத பால்ல கலந்து குடிக்கலாம். மதர்ஸ் ஹார்லிக்‌ஷ் பேறு காலத்தில் இருந்து எடுத்துகிட்டா ரொம்ப நல்லது.

Don't Worry Be Happy.

ஒன்பது மாதம் வரை தாய் பால் கொடுத்ததற்கு முதலில் என் வாழ்த்துக்கள். பால் பத்தவில்லை என்று நீங்கள் எதை வைத்து சொல்லுகிறீர்கள்? குழந்தை பிறந்த சில மாதங்களில் (அதாவது அவர்கள் எப்பொழுது வேறு உணவு சாப்பிட ஆரம்பிகிறார்களோ) பால் சுரப்பு குறையா ஆரம்பிக்கும். அவர்கள் வேறு உணவு சாப்பிடுவதால் அது அவர்களுக்கு போதுமானதாக தான் இருக்கும். பால் போதவில்லை என்பதால் குடுப்பதை நிறுத்த கூடாது. கொடுக்க கொடுக்க தான் சுரக்கும். இரும்பு சத்து அதிகம் உள்ள உணவை சாப்பிடவும். அறுசுவையில் பால் அதிகம் சுரக்க சாப்பிட வேண்டியவை பற்றி முதலிலே ஒரு இழை உள்ளது. அதை தேடி பார்த்து அறிந்து கொள்ளுங்கள். இரவில் ஒரு முறை பால் கொடுத்தால் தூங்குகிறாரா இல்லை இடையிலும் கேட்கிறாரா? தூங்குவதற்காக என்றால் அவ்வளவு நேரம் ஆட்டாமல் பால் கொடுத்தால் சீக்கிரம் தூங்கிடுவார் இல்லையா?? சொல்லுகிறேன் என்று தப்பாக நினைக்க வேண்டாம். என் அம்மா சொல்லுவார்கள் குழந்தை என்று வந்து விட்டால் நம் பசி தூக்கம் எல்லாம் அவர்களுக்கு அப்புறம் தான். பல் முளைக்கும் போது கடிப்பார்கள். அப்பொழுது அவர்களை மார்பிலிருந்து எடுத்து விட வேண்டும். அப்படியே செய்து பாருங்கள் அவர்கள் புரிந்து கொள்வார்கள். மார்பில் வைக்காமல் தொட்டிலில் போடாமால் அவர்கள் தூங்க நீங்க சில வருடங்கள் காத்திருக்க வேண்டும்.

லாவண்யா

லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!

லாவண்யா ஜெயா ஆனந்த் பால் கொடுக்கிறத நிறுத்திட்டாங்க. இப்ப அவங்க குழந்தைக்கு ஒரு வயது ஆகப்போகுது. ஆனாலும் இரவில் மட்டும் வாய் வைத்தாதான் தூங்குவதாக கூறுகிறார். அதற்குதான் மேற்சொன்ன வழிமுறைகளை பின்பற்றுமாறு கூறினேன்.

மத்த விஷயமெல்லாம் இதை படிக்கும் மற்ற இளம் தாய்மார்கள் பால் பத்தலைனு தவறா நினைச்சும், பல் முளைக்கும்போது பயந்து கொடுக்காம நிறுத்தக் கூடாதுங்கறதுக்காவும்தான் சொல்லியிருக்கிறேன்.

சரி இன்னொரு விஷயம் பால் கொடுக்கும்போது படுத்துக்கொண்டெ கொடுப்பதை பழக்கப்படுத்தக்கூடாது. எப்ப அழுதாலும் சிரமம் பார்காமல் எழுந்து மடியில் படுக்கவைத்தே கொடுக்கவேண்டும். குழந்தை ஆறு கிழோ ஆகும்போது இரவில் பால் கொடுப்பதை நிறுத்தவேண்டும். அழும் பொழுது தோளில் தட்டிக்கொடுத்தோ தொட்டிலில் போட்டோ தூங்க வைக்கவேண்டும். பகல் நேரத்தில் குறைவாக தூங்கப்பழக்கினால் இரவில் நன்றாக தூங்குவார்கள். இரவில் விளக்கு போடாமல் இருட்டில் தூங்க பழக்கவேண்டும்.

Don't Worry Be Happy.

நன்றி தோழிகளே

jaya

இரவில் ஒரு முறை பால் கொடுத்தால் தூங்குகிறார். ஆனால் 12 மணி 1 மணி வரை விளையாடி கொண்டே இருக்கான்.லைட் off செய்தாலும் தூங்க மாட்டேன்றான். நடு இரவில் இரு முறை பால் கொடுத்தால் தூங்குகிறான்.துங்கிட்டால் நல்லா துங்குவான். 10 மாதத்தில் நடந்தான். இப்போ ஒடுறான்.

jaya

என் பொண்ணுக்கு ஒரு வயது ஆகப்போகுது. கொஞ்சம் லைட் வெளிச்சம் தெரிஞ்சாலும் விளையாடிடே இருப்பா. ஜன்னல்ல கர்ட்டன் எல்லா நல்லா கவர் பண்ற மாதிரி போட்டுருங்க. முடிஞ்ச வரைக்கும் பகல்ல தூங்க வைக்காதீங்க. அவனா தூங்கினா பரவாயில்லை. கொஞ்சநாள்ல சரியாயிடும். நைட் விளையாடும்போது நீங்க என்க்ரேஜ் பண்ணாதீங்க. பேசாம படுத்துட்டு பாருங்க. கொஞ்சநேரம் விளையாடிட்டு ரெஸ்பான்ஸ் கிடைக்கிலைனா வந்து தூங்கிடுவான்.

நம்ம தோழிகளும் வேற ஐடியா தருவாங்க வெயிட் பண்ணுங்க.

Don't Worry Be Happy.

மேலும் சில பதிவுகள்