போகலாமா? வேணாமா?

வெளிநாட்டில் வேலை செய்யும் கணவருடன்..கூடவே போய் வாழலாமா ?
இல்ல நாட்லே இருக்கலாமா ?
யாராவது அனுபவங்கள சொல்லுங்களேன்....?

இதுல நீங்க நிறைய விஷயங்கள் யோசிச்சு முடிவு எடுக்கணும்.

1. முதலில் உங்கள் கணவர் இருக்கும் நாடு அதன் சூழ்நிலை... எல்லா இடத்திலும் உங்களால் அட்ஜஸ்ட் பண்ணி வாழ முடியுமான்னு நீங்கதான் முடிவு செய்யணும்.

2. உங்கள் கணவரின் சம்பளம் மற்றும் அவர் இருக்கும் இடத்தின் cost of living ... சமாளிக்க முடியுமா என பார்க்கணும்

3. விசா நடைமுறைகள்.

4.குழந்தைகள் இருந்தால் அவர்களின் படிப்பு மற்றும் மருத்துவ வசதிகள் எப்படீன்னு பார்க்கனும்.

5. குடும்ப சூழ்நிலை.

இதை எல்லாம் யோசிச்சு நீங்கள் இருவரும்தான் முடிவெடுக்கணும். என்னைக் கேட்டால் சிலச்சில அட்ஜஸ்ட்மெண்டுகள் செய்து கொண்டு கணவரோடு இருப்பதே சிறந்தது.

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

நன்றி கவிசிவா!!

அறிவுபூர்வமான கருத்துக்கள்..
திருமணமாகி ஒரு வருடமாகிறது...
கணவர் UK ல இருக்காங்க .இன்னும் குழந்தைகள் இல்லை...
எல்லாவற்றையும் அனுசரிச்சு போற கொஞ்சம்....நல்ல பொண்ணு நான்

அன்புடன்

றஹீமா பைஷால்

மலேசிய ‘கவி’ யை நான் வழி மொழிகிறேன்!

வாழ்க வளமுடன்!
அன்புடன்
மாமி (எ) மோகனா ரவி...

என்னங்க நீங்க....
ஐடியா கேட்டா, உங்க விருப்பம்னு எல்லாரும் கலர்ரீங்க .....
போனவங்க ,போகாதவங்களுக்கு விசயத்த சொல்லலாமில்லங்க ....
விடுங்க நான் எப்படியோ போறன்.....

அன்புடன்

றஹீமா பைஷால்

ரகீமா இது நீங்களும் உங்கள் கணவரும் சேர்ந்து எடுக்க வேண்டிய முடிவுபா

திருமணமாகி ஒரு வருடம்தான் ஆகுதுனு சொல்லிருகீங்க நீங்க தனியாக இருப்பதைவிட உங்கள் கணவருடன் வசிப்பதே நல்லது. நீங்கதான் //எல்லாவற்றையும் அனுசரிச்சு போற கொஞ்சம்....நல்ல பொண்ணு நான்// சொன்னீங்க,

கணவருடன் இருப்பதால் நன்கு புரிந்து கொள்ளுதல் இருக்கும்.
இதுதான் என் கருத்து.

நம்ம கவி அழகா சொல்லிருக்காங்க அதையும் யோசிங்க ரகீமா.

அன்புடன்
நித்யா

மாமி என்னைய நீங்க அடிக்கடி நாடு கடத்தறீங்க :(. அன்னிக்கு சிங்கப்பூர்னு சொன்னீங்க இன்னிக்கு மலேசியாவா? நான் இந்தோனேசியாவில் இருக்கிறேன் மாமி. நான் அழுதுடுவேன்

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

உடைந்து போகாமலிருக்க வளைந்து கொடுங்கள். இது உங்களின் மொழிதானே. அதன்படி நடந்து கொள்ளுங்கள். UK நல்ல நாடுதானே.அங்கும் இருப்பவர்கள் மனிதர்கள்தானே?. நீங்கள் சென்று குடியேறியபின் உங்களுக்கு கிடைக்கும் அனுபவமே உங்களை அதற்கு தகுந்தாற் போல் மாற்றும்.

அன்புடன்
THAVAM

ரஹீமா உங்களுக்காக அடுத்தவங்க முடிவு எடுக்க முடியாது இல்லையா? இதையெல்லாம் யோசிச்சுக்கோங்கன்னுதான் சொல்ல முடியும். முடிவை நீங்க ரெண்டுபேர் மட்டுமே எடுக்க முடியும். எங்கள் எல்லோரையும் விட அவர் இருக்கும் இடத்தைப் பற்றி உங்கள் கணவருக்குத்தான் தெரியும். இருக்கவே இருக்கு இணையம் உங்கள் கணவர் இருக்கும் இடத்தின் பெயரை போட்டு தேடுனீங்கன்னா எல்லா விவரங்களும் தெரியும். அதைப் பார்த்து நீங்கதான் முடிவு செய்யணும். யாரும் வாழைப்பழத்தை உரித்து ஊட்டி விடுவாங்கன்னு எதிர்பார்க்காதீங்க. இங்கே வாழைப்பழம் இருக்குன்னு வேணும்னா சொல்லுவாங்க :)

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

kavi,thavamani&,Mohana maami ,THANKS to all

நாங்க ரெண்டு பேரும் முடிவு பண்ணிடங்க..என்னோட உம்மாவுக்கு இஷ்டமில்ல ..அவங்களுக்கு .நாங்க மொத்தம் மூணு பொண்ணுங்க .
இருந்தாலும்...அங்கெல்லாம் போக வேணாம்
ரெண்டு பேரும் படிச்சிருக்கீங்க ஏதாவது வேல எடுத்துட்டு இங்கே இருக்கலாமே என்றாங்க..
ரெண்டு பேரோட பக்கமும் நியாயமிருக்கு இல்லையா என்ன பண்ணலாம்
அதானே பிரச்சினையே...

அன்புடன்

றஹீமா பைஷால்

அரட்டை 32 ல் கவிசிவா இப்போ போட்ட பதிவுகளை படிங்க நீங்களே ஒரு முடிவு எடுத்து விடுவீர்கள்.

அன்புடன்
THAVAM

மேலும் சில பதிவுகள்