மார்பக புற்றுநோய் பற்றி தெருஞ்சுக்கலாம் வாங்க!!!!!!

அன்புள்ள தோழிகளே,
இந்த காலத்தில் பெண்களுக்கு வரக்கூடிய நோய்களில் முக்கிய இடம் வகிப்பது ,மார்பக புற்றுநோய். அதை பற்றி இங்கு பேசலாம். தெரியாத பல விஷியங்களை தெரிந்து கொள்வோம்!!!!

இந்த நோய் கு முக்கியமான காரணமாக கருதுவது, பரம்பரை ஜீன்கள், அம்மா, அப்பா, தாத்தா, பாட்டி கு இருந்தா நமக்கு வரதுக்கு வாய்ப்புகள் அதிகம், 80% வரும்கறது மருத்துவ உண்மை. மார்பில் சிறு கட்டி போன்ற உணர்வோம், அந்த கட்டி சிலருக்கு நகர்வது போலும் இருக்கும்.

கட்டிகளிலேயே நிறைய வகைகள் உண்டு, எல்லா கட்டி உம் புற்று நோய் கட்டி ஆகாது. எந்த கட்டியாக இருந்தாலும் டாக்டர் இடம் தான் காட்ட வேண்டும் , நாமே ஒரு முடிஉ பண்ண கூடாது. எந்த நோய் வந்தாலும் , டாக்டர் இன் treatment 50% தான், நமது மன தைரியம் தான் குனபடுத்த முடியும். நோயாளியை சுற்றி இருபவர்களும், பயப்பட கூடாது, நோயாளிக்கு தைரியம் சொல்ல வேண்டும்.

மார்பக புற்றுநோய் தொடகதிலேயே கண்டு பிடித்து விட்டால், மார்பகம் எடுக்க வேண்டியது இல்லை, நாம் கவனிக்காமல் விட்டு விட்டால் , எடுக்க வேண்டிய நிலை ஏற்படலாம். சிலர் மார்பகம் எடுத்தால், அழகு போய்விடும் என்று நினைத்து, எடுக்க வேண்டாம் னு சொல்லிடுவாங்க, அது மிக பெரிய தவறு. அப்படி எடுக்காம விட்டுட்டா, அந்த கிருமிகள் எல்லா பக்கமும் பரவி விடும்.

மார்பக புற்றுநோய் காண மருத்துவம் பற்றி கொஞ்ச நேரம் கலுச்சு வந்து எழுதறேன், எங்க அம்மா கு ஏற்றப்பட்ட அனுபவம் தான் , என்னை இந்த Thread எழுத வெச்சுஇருக்கு. நாங்க பண்ணுன முட்டாள் தனம் யாரும் பண்ண கூடாது னு தான், இத நான் எழுதறேன்....அம்மா இப்ப நல்லா இருக்காங்க....

இந்த நோய்க்கு எப்படி எடுக்கணும் னு , என்ன என்ன சாப்டனும், எப்படி இருக்கனும், இன்னும் நிறைய விசியம் சொல்றேன் .

என்னப்பா, யாருமே இந்த இழை படிக்கலயா!!!!!!!!!!
Topic பிடிக்கலயா!!!!!!!

சுகி
***பிரச்சனைகளை கிட்ட வைத்து பார்க்காதே, எட்ட வைத்து பார்***

ஹாய் சுகந்தி

உங்க இழை மிகவும் பயனுள்ளதாகத்தான் உள்ளது. கவலைப்படாதீா்கள் கண்டிப்பாக நம் தோழிகள் வந்து அவா்களுடைய அனுபவங்களை பகிர்ந்துப்பாங்க...

என்னோட அத்தைக்கு மார்பகப்புற்றுநோய் வந்து ஒரு பக்க மார்பையே ஆபரேஷன் பண்ணி எடுத்துட்டாங்க. ஆனால் அதுக்கப்பறம் அவுங்களுக்கு அதுனால் எந்த ஒரு பிரச்சனையும் வரலை. பிறகு பிபி மற்றும் சுகர் ஜாஸ்தி ஆகி இறந்துட்டாங்க. ஆனால் ஆபரேஷன் செய்து 25 வருடங்களாக அவா்களுக்கு அதனால் எந்த பிரச்சனையும் வரவில்லை. அதனால் என்னைக்கேட்டால் அழகுக்காக உயிரைப் பணயம் வைக்க முடியுமா? ... டாக்டரின் அறிவுரையைக்கேட்டு அவர் சொல்படி நடப்பது தான் புத்திசாலித்தனம்..

மேலும் உங்களுக்கு தெரிந்ததைப்பற்றி கண்டிப்பாக பகிர்ந்துகொள்ளுங்கள்.. நன்றி

"செய்க தவம், தவமாவது அன்பு செலுத்துதல்"

ராதா ஹரி

யாருக்கும் பிடிக்காம் இல்லப்பா. நிறையபேருக்கு இது பற்றி தெரியாமல் இருக்கலாம். நீங்கள் உங்களுக்கு தெரிந்தவற்றை பகிர்ந்து கொள்ளுங்கள். நாங்கள் தெரிந்து கொள்கிறோம்.

எனக்குத் தெரிந்த சில

குடும்பத்தில் மார்பகபுற்றுநோய் யாருக்காவது இருந்திருந்தால் 30வயதுக்கு மேல் வருடம் ஒரு முறை மேமோகிராம் செய்து கொள்வது நல்லது. மற்றவர்கள் 35 வயதுக்கு மேல் செய்து கொள்ள வேண்டும்.

வீட்டிலேயே குளிக்கும் போது சுயபரிசோதனை செய்து கட்டிகள் ஏதும் தென்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுகவேண்டும். எல்லா கட்டிகளும் புற்றுநோய்க்கட்டியாக்த்தான் இருக்கும் என எண்ண வேண்டாம். நீர்க்கட்டிகளாக கூட இருக்கலாம். உறுதி செய்து கொள்வது நல்லது.

முடிந்தவரை குழந்தைகளுக்கு தாய்ப்பால் ஊட்ட வேண்டும். மார்பகப் புற்றுநோய் வருவதை ஒரளவு குறைக்கும்.

சரியான அளவுள்ள சுத்தமான உள்ளாடைகள் முக்கியம். இது நேரடியான காரணியாக இல்லாவிட்டாலும் பாதிப்பு இருக்கலாம்.

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

சுகந்தி

அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய நல்ல ஒரு இழை..
என் அப்பாவின் அக்கா மகளுக்கும் இருக்கு என கேள்விப்பட்டேன். அவர் தாய்ப்பால் சரியாக கொடுக்கவில்லை. அதன் விளைவு என நினைக்கிறேன்..

தகவல்களை பகிந்துக் கொள்ளுங்கள். நன்றி..

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

இது அனைவருக்கும் ஒரு நல்ல தகவலை தர கூடிய பயனுள்ள இழை. நிச்சயம் இதை படிக்கும் போது ஒரு விழிப்புணார்வு வரும். இன்னும் உங்களுக்கு தெரிந்த தகவல்களை பகிர்ந்துக் கொள்ளுங்கள் சுகந்தி.

யாரும் வந்து பேசலனு வறுத்தப்படாதீங்க யாரும் அவ்வளவாக இன்னும் விழிப்புணர்வு பெறவில்லை அதனை பற்றி தெரியவும் இல்லை அதனால் தான் வரவில்லை.

ராதா, கவி, ரம்யா, Gowri எல்லாருக்கும் ரொம்ப ரொம்ப நன்றி.
யாருமே பதில் போடதனால நான் ரொம்ப வருத்தபட்டேன்.

சுகி
***பிரச்சனைகளை கிட்ட வைத்து பார்க்காதே, எட்ட வைத்து பார்***

கண்டிப்பா எல்லாருக்கும் இந்த நோய் பற்றிய விழிபுணர் இருக்கனும். எங்க அம்மா கு இருந்துச்சு, நாங்க நீர் கட்டி நு நினைத்து சின்ன hospital கு போய் ஒடச்சு விட்டுடோம், அப்பறம் தான் பெரிய Hospital போய் காட்டினோம், DR நல்லா திட்டினார். கட்டி ஒடைக்காம இருந்து இருந்தா, வேறும் operation மட்டும் பண்ணி இருந்து இருக்கலாம், இப்ப Breast எடுக்கனும் நு சொல்லிட்டாங்க.

நாங்க பண்ணுன தப்பு, அப்ப தான் தெருஜுது, ரொம்ப வருத்த பட்டோம், அப்பரம் ஒரு வழியா operation முடிந்து வீட்டுக்கு வந்தாங்க.

வீட்டுக்கு வந்த பின்னாடி தான் , நாம நல்லா கவனிக்கணும், எந்த காரணம் கொண்டும் நம்பிக்கை இழக்க கூடாது, Treatment ரெண்டு விதம் இருக்கு , Hemoglobin & current தருவாங்க, நம்ம உடம்புள்ள எந்த அலௌஎ நோய் பரவி இருக்கு னு பொறுத்து தான் டாக்டர் சொல்லுவாங்க. Hemoglobin தரும் போது அந்த வலி தான் தாங்கவே முடியாது, ரொம்ப எரியும், ஒடம்பு ரொம்ப ரொம்ப ஹிட் ஆய்டும், சிலருக்கு Hemoglobin treatment ல Urinal problem வரும் , அதாவது Urine tube HEAT கு சுருங்கிவிடும்,Hemoglobin treatment தரும் போது நிறையா நிறையா தண்ணி, ஜூஸ் எல்லாம் சாப்பிடனும் , அப்ப தான் அந்த மருந்து நாள வர heat manage பண்ண முடியும் !!!!!!!!!

எனக்கு தெருஞ்ச கொஞ்ச விஷியம் சொல்லிடேன், மத்தவங்களும் சொல்லட்டும் நிறைய தெருஞ்சுக்கலாம்!!!!!!!!!!!

சுகி
***பிரச்சனைகளை கிட்ட வைத்து பார்க்காதே, எட்ட வைத்து பார்***

இது நல்ல பயனுள்ளதாக உள்ளதுப்பா, எங்கவீட்டுக்காரரோட பாட்டிக்கு கூட வந்தது, அதும் அவங்களுக்கு வயதும் 65,ரொம்ப குண்டா இருப்பாங்க,அப்புறம் சுகர்,உப்புன்னு எல்லாம் இருந்ததால ஹாஸ்பிட்டல் போயும் காப்பாத்த முடியலப்பா, 2008ல இறந்துட்டாங்க.
மிக்க நன்றி இந்த மாதிரி இழை ஆரம்பித்தற்கு,எங்கள் வீட்டில் இப்படி நடந்திருந்தாலும் எனக்கு தோன்றாத ஒன்று உங்களுக்கு தோன்றியுள்ளது.
அம்மாக்கு இப்ப எப்படி இருக்குப்பா? நல்லா பாத்துகோங்க.

உன் மீது மற்றவர்கள் பொறாமை படுகிறார்கள் என்றால் அதுவும் ஒருவித புகழ் மாலை தான்.

அன்புடன்
ஹேமா

அம்மா க்கு operation பண்ணி 6 வருஷம் முடிந்தது, அம்மா ரொம்ப நல்லா இருக்கங்க, அவங்கல ஒரு நோயாளி மாதிரி ஒரு நாளும் பாக்க மாட்டோம், அவங்க ரொம்ப தைரியசாலி, அவங்க நாலு பேருக்கு அறிவரை சொல்லுவாங்க. நிறையா பேர் புற்றுநோய் அப்படினாலே, பயந்து நடுங்குவாங்க. அவங்க எல்லாருக்கும் எங்க அம்மா நல்ல உதாரணமா இருக்கட்டும்...........

சுகி
***பிரச்சனைகளை கிட்ட வைத்து பார்க்காதே, எட்ட வைத்து பார்***

ஹாய் சுகந்தி நல்லாருக்கீங்களா? நான் உங்க பதிவை பாத்தவுடனேயே ஒரு பதிவு குடுத்தேன் ஆனா கானோம் அதை... வேற பக்கத்துல குடுத்துட்டேனா இல்லை குடுக்கவே இல்லையானு தெரியலை.... மன்னிக்கவும்...

என் அம்மா கேன்சர்ல தான் இறந்தாங்க ஆனா அவங்களுக்கு பித்தப்பைல கேன்சர் இருந்துச்சு... அம்மாக்கு கொஞ்சம் கூட சிம்ப்டென்ஸ் இல்லை அதான் எங்க யாருக்குமே தெரியலை. கோயம்புத்துர் செங்காலியப்பன் மருத்துவமனைல தான் பாத்தோம். அம்மாக்கு டெஸ்ட்லாம் பன்னிப்பாத்துட்டு கல் இருக்குன்னு சொல்லிதான் ஆபரேஷன் பன்னினாங்க ஆனா ஆபரேட் பன்னப்ப தான் தெரிஞ்சுருக்கு அவங்களுக்கே அது கல் இல்லைன்னு... வேற வழியுல்லாம பித்தப்பையையே எடுத்துட்டாங்க, அப்பறம் பயாப்சி பன்னிப்பாக்கும் போதுதான் அது தெரிஞ்சுது கேன்ஸர்னு... அதுவும் கல்லீரல் வரைக்கும் பரவிருச்சு. கொடுமை அது அப்பப்பா அவங்க பட்ட கஷ்டம் கொஞ்சநஞ்சம் இல்லை... டாக்டர்ஸ்லாம் சொன்னாங்க சாரின்னு... அம்மாக்கு கால்வலியும் முதுகுவலியும் மட்டும் தான் இருந்துச்சு வேர எந்த அறிகுறியுமே இல்லை அவங்களுக்கு. டாக்டர்ஸ் ஆறு மாசம் தான் இருப்பாங்க அதுக்கு மேல இருந்தா உங்க அதிர்ஸ்டம்னு. சொன்னமாறியே சரியா ஆறு மாசத்துக்குல்ல அவஙகளும் இறந்துட்டாங்க... இப்ப ஆறுவருஷம் ஆச்சு அவங்க இல்லை அவங்க நினைவுகள் மட்டும் மனசுல உயிரோட இருக்கு...

இதை படிக்கர தோழிகள் கண்டிப்பா வருஷத்துக்கு ஒரு முறை முழு பரிசோதனை பன்னிக்கங்க ஏன்னா இப்பல்லாம் மார்பக புற்றுநோய் மட்டும் இல்லை பேரே தெரியாத வியாதிகளும் வர ஆரம்பிச்சுருச்சு அதுல இருந்து நாம நம்மள பாதுகாத்துக்கு கண்டிப்பா செக்கப் பன்னுங்க... எங்களை கூட 30வயசுக்கு மேல கண்டிப்பா வருஷத்துக்கு ஒரு முறை செக்கப் பன்னிக்க சொன்னாங்க அம்மாக்கு ட்ரீட்மென்ட் பன்ன டாக்டர்ஸ்...

நம்ம ஆரோக்யம் நமக்கு மட்டும் இல்லாம நம்மள சுத்தி இருக்கவங்களுக்கு ரொம்ப முக்கியமானது தோழிகளே நீங்க பதிவுகளை குடுக்கலனாலும் பரவால்ல கண்டிப்பா ஒரு செக்கப் பன்னிருங்க வருஷம் தவராம.....

இந்த இழையை ஆரம்பித்த சுகந்திக்கு என் நன்றிகள் பல என்றும்...

மீண்டும் பேசலாம்...

இருப்பதின் அருமை இல்லாத பொழுது தெரியும்.

அன்புடன்
லதாவினீ.

மேலும் சில பதிவுகள்