தேங்காய் அப்பம்

தேதி: April 9, 2006

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

பச்சரிசி - 500 கிராம்
தேங்காய் - 1
சீனி - 250 கிராம்
ஈஸ்ட் - ஒரு சிட்டிகை


 

பச்சரிசியைக் கழுவி, பிறகு நன்கு ஈரம் போக உலர வைத்து, மாவாக இடித்து பிறகு சலிக்கவும்.
தேங்காயைத் துருவவும். தேங்காய்த் துருவல், சீனி, மாவு அனைத்தையும் சேர்த்து முதல் நாள் இரவு இட்லி மாவு போல கரைத்து வைக்கவும்.
சிறிது நீரில் ஈஸ்டைக் கரைத்து மாவுடன் சேர்த்து நன்கு கலந்து வைக்கவும்.
மறுநாள் காலை வட்ட வடிவமான தட்டுகளில் மாவை அரை இஞ்ச் அளவுக்கு ஊற்றி இட்லிப் பாத்திரத்தில் வைத்து ஆவியில் 10 நிமிடங்களுக்கு வேக வைக்கவும்.
வெந்த பின்பு அது அளவில் பெரியதாகிவிடும்.


மேலும் சில குறிப்புகள்