தேதி: September 1, 2010
ப்ளைன் புடவை விரும்பிய நிறத்தில்
சம்கி தைத்த லேஸ்
ஊசி
புடவையின் நிறத்திற்கேற்ப நூல்
புடவையில் டிசைன் செய்வதற்கு வேண்டிய பொருட்களை தயாராக எடுத்துக் கொள்ளவும்.

ப்ளைன் புடவையில் நீளத்திற்கேற்ப அதன் அடியில் ஃபால்ஸை வைத்து தைத்து கொள்ளவும். புடவையின் ஒரத்தில் 2 இன்ச் தள்ளி இந்த சம்கி லேஸை வைக்கவும்.

ஊசியில் லைட் பச்சைநிற நூலை கோர்த்து கொண்டு புடவையின் அடிவழியாக சம்கி தைத்த லேஸின் முதல் சம்கியின் நடுவில் உள்ள துளையில் ஊசியை விடவும்.

இப்போது ஊசியை மேல் வழியாக புடவையோடு சேர்த்து அடுத்த சம்கியின் துளையில் விட்டு எடுக்கவும். இதுப்போல் ஒவ்வொரு சம்கியின் துளையிலும் ஊசியால் தைத்து கொண்டு வரவும். இது சம்கி லேஸை கையால் தைக்கும் முறை.

புடவை பார்டர் முழுவதும் இதுப்போல் தைத்து கொண்டு இருப்பது சிரமமானது. சின்ன சின்ன பூ டிசைனின் ஓரங்களில் இந்த முறையை கையாள்லாம்.

உங்களுக்கு தையல் தெரியுமானால் புடவையை மிகவும் சுலபமாக சம்கி லேஸ்ஸால் அலங்கரித்து விடலாம். ஃபால்ஸ் தைத்த புடவையின் ஒரத்தில் 2 இன்ச் தள்ளி இந்த சம்கி லேஸை வைத்து தையல் மிஷினில் அப்படியே தைத்து கொண்டே வர வேண்டும். புடவையின் நடுவில் சம்கி லேஸால் டிசைன் செய்ய வேண்டுமெனில் டிசைனின் வடிவத்திற்கேற்ப லேஸை வளைத்து அப்படியே தைத்து கொள்ளவும்.

இந்த புடவையில் ஒரத்தில் சம்கி லேஸ் வைத்து தைத்து, க்ரீன் கலர் ஸ்டோன் ஒட்டி டிசைன் செய்யப்பட்டுள்ளது. இப்போது உள்ள சுடிதார், புடவை, சிறுமிகளின் ஆடை என்று அனைத்திலும் இந்த சம்கி வேலைப்பாடுகள் செய்த துணிகள்தான் பெரும்பாலும் கிடைக்கிறது. பல நிறங்களிலும் இந்த சம்கி தைத்த லேஸ் கிடைக்கும்.

Comments
எனக்கா!!
சிம்பிளான அழகான டிசைன். புடவை கலர், போட்டோ எல்லாம் அசத்தலாக இருக்கிறது.
இது யாருது!! செண்பகா! பத்மா!! ரேவதி!! கெஸ் பண்ண முடியல. எனக்கே தந்துருங்க. ;))
நல்ல குறிப்பு பாராட்டுக்கள்.
- இமா க்றிஸ்
அழகோ அழகு
தெளிவான படங்களோட அழகா காட்டிருக்கீங்க. வாழ்த்துக்கள்!
நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா
எனக்கே எனக்கு
அந்த புடவை எனக்கே எனக்குத்தான். ரொம்ப அழகா ஈசியா இருக்கு. ஆனா இப்போ கைவசம் தேவையான பொருட்கள் எதுவுமே இல்லை :(. கிடைத்த பின் செய்யப் போறேன் :)
அறுசுவை டீம் எல்லா வேலைகளிலும் கலக்கறீங்கப்பா. பொறாமையா இருக்கு :). வாழ்த்துக்கள் அறுசுவை டீம்
வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!
அழகான புடவை
புடவை சிம்பிளாக இருந்தது சமிக்கி வேலைப்பாடு செய்தபிறகு மிகவும் சூப்பர்
life is short make it sweet.
புடவைக்கு அழகான வேலைப்பாடு
புடவைக்கு சிம்பிளான, அழகான வேலைப்பாடு. பார்க்க நன்றாக இருக்கின்றது.
இவ்விடம் இந்த பொருட்டகள் இடிக்குமா என்று பார்க்கின்றேன்.கிடைத்தால் நிச்சயம் செய்து பயன்பெறுவேன்.
தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.
;)
சிரிக்க வைக்கிறீங்க யோகராணி. வேலை நடுவே வந்தீர்களா? ;)
- இமா க்றிஸ்
அழகாய் இருக்கிறது புடவை.
அழகாய் இருக்கிறது புடவை. அருசுவை டீமுக்கு என் அன்பான வாழ்த்துக்கள்.
NAAN PUDIYA URUPPINARAGA INDRU SERNDULLEN
JAMIKKI PUDAVAI ARUMAI.MELUM PALA MODELGALIL EDHIRPARKIROM.
சம்கிலேஸ்
ஹாய் இந்த சம்கிலேஸ் எந்த கடைகளில் கிடைக்கும் என்று சொல்லுங்கலேன்pls
Thanks.
Thanks.
super
super
ஹலோ செல்லம் Hello Dear
ஹலோ செல்லம்
என் பெயர் binta உள்ளது
உங்கள் சுயவிவர மிகவும் அழகாக ஏனெனில் நான், இன்று உங்கள் சுயவிவரத்தை பார்த்தேன் நீங்கள் தெரிந்து கொள்ள ஆர்வமாக பெற, இங்கே என் மின்னஞ்சல் முகவரி (bintajaafar@yahoo.com) நான் நீங்கள் என் புகைப்படங்கள் அனுப்ப மற்றும் இன்னும் சொல்ல என்று என்னை ஒரு மின்னஞ்சல் அனுப்ப தயவு செய்து உள்ளது என் சுய பற்றி,. தூரம் நினைவில், நிறம், மதம் அல்லது பழங்குடி பிரச்சினையில்லை ஆனால் விஷயங்களில் மிகவும் நேசிக்கிறேன் இல்லை (bintajaafar@yahoo.com) எனக்கு மின் அஞ்சல்.
binta முத்தம்
::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::
Hello Dear
My name is binta
I saw your profile today and get interested to know you, because you look very nice in your profile, here is my email address (bintajaafar@yahoo.com) please send me an email so that i will send you my photos and tell you more about my self,mail me at(bintajaafar@yahoo.com).Remember distance,color,religion or tribe does not matter but love matters a lot.
kiss binta