மழலை சொல்

என் மகன் L.K.G படிக்கிறான். அவன் நன்றாக படிக்கிறான் ஆனால் அவனுக்கு மழலை சொல் மாறததால் அவன் ORAL சொல்வது யாருக்கும் புரிவதில்லை. அவன் மழலை சொல் மாற என்ன செய்வது?

பரவாயில்லைங்க..மழலை சொல் மாறினால் அதன் அழகு குறைந்து விடுமே...சில குழந்தைகளுக்கு 6 வயதெல்லாம் ஆகும் அது மாற...டீச்சருக்கு நீங்கள் சொல்லி புரிய வைய்யுங்கள்..
மற்றபடி நீங்கள் வீட்டில் நாம் பேசுவது போல் பேசுங்கள் அவர் பேச்சு போல் கொஞ்சி பேச வேண்டாம்.

உங்கள் பையனிடம் நிறைய தெளிவாக அவன் முகத்தை பார்த்து பேசி கொண்டே இருங்கள். நிறைய பாடல் rhymes எல்லாம் சொல்லி குடுங்கள். பாட்டு பாட கத்து குடுங்கள். போக போக மழலை மாறி தெளிவாக பேச ஆரம்பித்து விடுவான்

கார்த்திகா ஜெகன்
what's done to children, they'll do to society

ராதிகா, உங்க பையனாவது பரவாயில்லை சின்னப் பையன். என்னோட அக்கா பையன் 2வது படிக்கிறான். இன்னும் அவனுக்கு வார்த்தைகள் தெளிவாக வரவில்லை. அவன் குழந்தையாக இருந்தபோது அவனுக்கு சூட்டினால் பேதி அதிகமாகும். அதற்கு என் அம்மா வசம்பு இழைத்து ஊற்றியிருக்கிறார்கள். வசம்பு அதிகமாக நாக்கில் பட்டாலும் நாக்கு தடித்து சொற்கள் தெளிவில்லாமல் வரும் என்பார்கள். நீங்கள் உங்கள் பையனிடம் மழலைச் சொல்லில் பேசாமல் வளர்ந்த பையனிடம் பேசுவது போன்றே பேசுங்கள். அதை கவனித்து பையன் நன்றாக பேசினாலும் பேசுவான். சாதாரணமாகவே ஆண் பிள்ளைகள் பேச நாளாகும். போக போக சரியாக போகும். கவலை வேண்டாம் :)

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

மேலும் சில பதிவுகள்