அரட்டை 2010 பாகம் 37

பழைய அரட்டை 190 க்கும் மேல போனதால் இந்த அரட்டையை தொடங்குகிறேன்.:)

எல்லாரும் இங்கே வந்து அரட்டையை அடிங்க.

நல்லா பேசுனும். என்ன சாப்பாடு,என்ன குழம்பு, தூங்கியாச்சா? எழுந்தாச்சா? அப்படில்லாம் கேட்டா ஆமிக்கு தூக்கம் வந்துடும். சரியா!!!

சீக்கிரம் வாங்க......

இப்பதாம்பா பார்த்தேன் எனக்கே சிரிப்பா வருது உங்களுக்கு வராம இருக்குமா?

பயங்கரமா வேஷம்லா போட்டிருப்பிங்க போல

உன் மீது மற்றவர்கள் பொறாமை படுகிறார்கள் என்றால் அதுவும் ஒருவித புகழ் மாலை தான்.

அன்புடன்
ஹேமா

பவி

சப்போர்ட்டுக்கு நீங்க இருப்பிங்கனு பாத்தா.. ஓகே ஓகேனு சொல்றதுலேயே ஒரு உள்க்குத்து இருக்கே ;)

ராதா

ச்சே ச்சே அறுசுவையே வந்தா ரொம்ப சந்தோசம் தான். மெஜாரிட்டி எனக்கு தான் இருக்கும். நீங்க எல்லாம் வேற என்னை பத்தி புகழ்வீங்க.. நினச்சாவே சந்தோசம் தான் .;)
ஃபீல் எல்லாம் பண்ணல.. வரலைனா தான் ஃபீல்லிங்ஸ். ஊருக்கு தானே வரப் போறிங்க அப்ப ராதாவை எதிர்பார்க்கலாம் ;)

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

பவித்ரா, தங்கை இப்போது என்ன செய்து கொண்டிருப்பார்கள் என்றுதான் தெரியுமே தெரியுமே தெரியுமே.

அன்புடன்
THAVAM

கார்கோ ஆமியும் காங்கோ கல்பனாவும்

இப்படத்தில் வரும் கதையும் கதா பாத்திரங்களும் யாரையும் குறிப்பிடுவன அல்ல என்ற அறிவிப்புடன்
ஒரு படம் தொடங்கினாலே அந்த படத்தில் எல்லாரையும் குறிப்பிட்டுதான் கதை இருக்கும்..
என்ன நான் சொல்றது சரிதானே..ம்?..சரியா இல்லையா சொல்லுங்கள் என் அறுசுவைத்தோழிகளே!
என்ன யாருமே வாயத் தொறக்கமாட்டேன்றாங்க..சரி..நாம ஆரம்பிச்சிருவோம்..

உ.பி முதலமைச்சர் ஆமி காங்கோ ப்ரெசிடெண்ட் கல்பனா வீட்டு கிரஹப்பிரவேசத்துக்கு
விருந்தாளியாக போகிறார் (அழைக்கப்படாமலேயே) அப்போது கல்ப் தனக்குள்ளே பேசிக்கொள்கிறார்....
ஹும் இவளை யாரு கூப்பிட்டது வீட்ட மோப்பம் புடிச்சிட்டு வந்துட்டா . யாரங்கே!!!
வீட்ல உள்ள நகையெல்லாம் பத்திரம், வீட்டுக்கு ஒரு பிரச்சனை வந்துகிட்டு இருக்கு ஜாக்கிரதை!
என ஒரு அபாயச்சங்கை ஊதிவிட்டு ஆமியை வரவேற்க தயாராகிறார் கல்ப். (விருப்பம் இல்லாமலே)

ஆமி: ஹாய் கல்பனா எப்படி இருக்கீங்க?
கல்ப்: இப்ப வரை நல்லா இருக்கேன் வாங்க உக்காருங்க
(ஆமி உக்கார போக)
கல்ப்: ஐயோ அதுல உக்காராதீங்க அந்த சோபா புதுசு நேத்துதான் கவர்னர் மாளிகையிலிருந்து ஆட்டைய போட்டது
நீங்க இப்படி தரையிலேயே உக்காந்துருங்களேன் ப்ளீஸ்..
ஆமி:பிரச்சனை இல்ல ஆடம்பரமெல்லாம் இந்த ஆமி எப்பவுமே விரும்பமாட்டாள்.....
அதான் 20 பவுன் நெக்லஸ்,30 பவுன் கவர்னர் மாலை, 10 விரல்ல பத்து பவுன்ல மோதிரம், 25 பவுன்ல ஒட்டியாணம்,40 பவுன்ல வளையல்,30 பவுன்ல கொழுசு....அவ்வளவு தான்.இது மட்டும் போட்டுட்டு வந்துருக்கேன்
சரி கல்ப் வீடு இவ்வளவு பெருசா இருக்கே இவ்வளவு பெரிய வீட்டை எப்படி கட்டுனீங்க?
கல்ப்: அதோ அங்கே தெரியுது பாரு ஒரு பெரிய பாலம்
ஆமி: ஆமா தெரியுது
கல்ப்:அத கட்டும்போது அடிச்ச பணத்த வச்சு இந்த வீட்ட கட்டிட்டேன்.
ஆமி:அப்படியா;
கல்ப்:ஆமா ஆமி!, சரி நீங்க வாய மூடுங்க ஆமி வாயில ஈ போயிரப்போகுது..சரி ஆமி அப்பறம்,,,,, கிளம்பிட்டிங்க போல
ஆமி: இல்லையே நான் அப்படி சொல்லையே
கல்ப்:இல்ல வந்தா உடனே கிளம்பிருவீங்களே அதான் கேட்டேன்
ஆமி:நீங்க வேற, சாப்பிடாம போனா கோவிச்சுக்குவீங்களே அதான்
கல்ப்: ச்சே..ச்சே அதெல்லாம் ஆமிய நான் எப்பவுமே கோவிக்க மாட்டேன் அதுவுமில்லாம
நம்ம வீட்லேயெல்லாம் நீங்க சாப்பிடவா போறீங்க
ஆமி:நான் சாப்பிடாட்டிலும் நீங்க என்ன விடாவா போறீங்க
கல்ப:ஆமிய நான் அப்படில்லாம் வற்புறுத்த மாட்டேன்..ஆமி விருப்பமே என் விருப்பம்
ஆமி:சரி அப்ப நான் சாப்பிடுட்டே போயிடுறேன்
ஹும்....விடமட்டாளே என்று புலம்பியவாறு அந்த மூன்று வாரங்களுக்கு முந்தைய உப்பே இல்லாத உப்புமாவை
ஆமிக்கு பரிமாறுகிறார்...ஆமி அதையும் வீட்டு வைக்கவில்லை)
காட்சி2
இப்ப ஆமி வீட்டில் கல்ப்...
ஆமி; வாங்க கல்பனா எப்படி இருக்கீங்க..இப்பதான் வரீங்களா?
கல்ப்:அதான் பாத்துகிட்டுதானே இருக்கீங்க அப்பறம் ஏன் இந்த கேள்வி
ஆமி:இல்ல சும்மா பேச்சுக்கு கேட்டேன்..என்ன கிளம்புடீங்களோ?
கல்ப்:அடிப்பாவி நான் இன்னும் வீட்டுக்குள்ளேயே வரலையே அதுக்குள்ள
இப்படி கேட்டா எப்படி ஆமி? இருந்தாலும் நீங்க ரெம்ப தமாஷு.
(என்றவாறு வாசலை மறைத்துநின்ற ஆமியை சிரித்தபடியே ஒரு தள்ளு
தள்ளி விட்டு உள்ளே அத்துமீறி நுழைந்து விடுகிறார் கல்ப்)
கல்ப்:ஆமி!
ஆமி: என்ன சொல்லித்தொலைங்க (என்று அன்புடன் ஆமி கேட்கிறார்)
கல்ப்: ஆமி என் வீட்டைவிட பெருசா கட்டிருக்கீங்களே நீங்க எப்படி இதை கட்டுனீங்க?
ஆமி: அதோ அங்கே தெரியுது பாருங்க ஒரு பெரியா பாலம்
கல்ப்: இல்லையே அப்படி ஒன்னும் அங்கே தெரியலையே?
ஆமி: அங்கே பாலம் கட்டவேண்டிய பணத்தை வச்சு இந்த வீட்ட கட்டிட்டேன்
ஙொய்யால யாருகிட்ட நம்மகிட்டேயேவா? நாங்கள்லாம் காங்கோ நாட்டையே கார்கோவுல அனுப்புவோம்.

ம்ம்ம்... பாத்துட்டீங்களா... சும்மா தான்.. இங்க லோக்கல் கம்யுனிட்டி சென்டர்ல ஒரு போட்டி நடந்தது. அதுக்காக போட்டது. இவன் ரொம்ப சின்னவன். போய் மேடைல நின்னதே பெரிய விஷயம். அவன் முந்தாநாள் கிருஷ்ணர் வேஷம் போட்டுவிட்டா.. மறு நாள் காலைல எழுந்து எனக்கு அதே வேஷம் மறுபடியும் வேணும். நான் ஸ்கூலுக்கு போட்டுட்டு போகணும்னு ஒரே அடம். சமாதானப்படுத்தி யுனிஃபார்ம் போட்டு அனுப்புறதுக்குள்ள போதும் போதும்னு ஆகிடுச்சு....

அண்ணா பொண்ணு இங்க tampines ல இருக்கா.. அவன் கிருஷ்ணர் வேஷம் போட்டுட்டு அவளுக்கு ராதை வேஷம் போட்டிருக்காங்கனு போன்ல சொன்னதும் அவ இப்பவே வீட்டுக்கு வரணும்னு ஒரே அடம்.... என்ன பண்றது... இப்பவே ராதை கேக்குது.. எல்லாம் நேரம்...

ரம்யா... என்ன ஒரு நம்பிக்கை உங்களுக்கு.. அங்க வந்து உங்களுக்கு தான் சப்போர்ட் பண்ணுவேன்னு... நான் அண்ணாக்கு தான் சப்போர்ட்.. கார்த்திக் அண்ணா நான் உங்களுக்கு தான் சப்போர்ட்டு......சப்போர்ட்டு... சப்போர்ட்டு.......

"செய்க தவம், தவமாவது அன்பு செலுத்துதல்"

ராதா ஹரி

ஆஷிக் அண்ணா

இப்படி ஒபாமாவையும் கருணாநிதியையும்.. நம்ம ஆமினா, கல்பனாவோட ஒப்பிட்டு பேசுனத படிக்கும் போது பயங்கரமா சிரிச்சுட்டேன்... எங்க ரொம்ப நாளா ஆளையே காணோம்.... ஆமினாவும் கல்பனாவும் வந்து அடிக்க போறாங்க.... அதுக்குள்ள எஸ்கேப் ஆகிடுங்க...........

"செய்க தவம், தவமாவது அன்பு செலுத்துதல்"

ராதா ஹரி

கார்கோ ஆமியும் காங்கோ கல்பனாவும்
ஆனந்த வள்ளியின் ஆனந்த திருமகன் ஆதித்யா என்ற ஆதிக்குட்டியின் பிறந்த நாளையொட்டி இப்படம் திரையிடப்படுகிறது.
இந்த படம் பார்க்க அறுசுவை A/C தியேட்டருக்கு எல்லாரும் ஆனந்தி வீட்ல கூடி அங்கே இருந்து கிளம்புறாங்க
அப்போது....என்ன எல்லாரும் வந்தாச்சா? னு ஆனந்தியின் சின்னதா ஒரு Inspection.இல்ல சஹ்லா வும் ஜேக் (ஷேக் இல்ல) கும் இன்னும் வரல...
ஏன் ஷஹ்லாவுக்கு என்னாச்சு?
அவங்க பீரோல் சாவிய கானோமா? அதை தேடி எடுத்துகிட்டு வந்துருவாங்களாம்
அப்படினா இன்னைக்கு வரமாட்டாங்க
ஏன் அப்படி சொல்றீங்க
ஏன்னா அவங்க தேடும் விதம் வினோதம்
ஜேக்( ஷேக் இல்ல) என்னாச்சு
அவரு வந்திருப்பாரு நினைக்கிறேன்..இந்த பஸ்ஸ்டாண்டுல எங்கேயாவது டிவி பாத்துகிட்டு இருப்பாரு
இல்ல அவர் இன்னும் வரல..வர்ர வழில எதோ நாய்கடிச்சிருச்சாம்
அடப்பாவமே அப்பறம் என்னாச்சு
ஊசி போட்டிருக்காங்க ஜேக்குக்கா...
இல்ல நாய்க்கு
இப்படி சொன்னது ஜோக்குக்கா?
இல்ல தாமதத்திற்கா ஒரு சாக்குக்கு
இப்ப வந்துருவாரு, ஆனாலும் வீட்ல அவருக்கும் அவரு மனைவிக்கும் வாக்குவாதம்.
என்னவாம்
அவங்க மனைவி எடுத்துகொடுத்த சட்டையத்தான் போட்டுட்டு போகனும்னு அவரு மனவி பிடிவாதம்.
போடவேண்டியதுதானே
அவரு போடமாட்டேனு பிடிவாதம்
ஏன் இந்த வாதங்கள்
அந்த சட்டை ஊதா கலரா இருக்குதாம், அது மட்டும் இல்லாம
இப்பெல்லாம் அவரு எந்த விழாவுக்கும் போறதிலையாம்
இது ஒன்னும் ஆண்டு நிறைவு விழா இல்லையே
Anyway..
இப்படத்தில் வரும் கதையும் கதா பாத்திரங்களும் யாரையும் குறிப்பிடுவன அல்ல என்ற அறிவிப்புடன்
ஒரு படம் தொடங்கினாலே அந்த படத்தில்எல்லாரையும் குறிப்பிட்டுதான் கதை இருக்கும்..என்ன நான் சொல்றது
சரிதானே..ம்?..சரியா இல்லையா சொல்லுங்கள் அறுசுவை ஜனங்களே என்ன யாருமே வாயத் தொறக்கமாட்டேன்றாங்க..
சரி..நாம ஆரம்பிச்சிருவோம்..அப்பறம் எங்கே இந்த சுந்தரி அர்ஜூன், ராதா,சஹ்லா இவங்கெல்லாம் எங்கே? பாத்து ரெம்ப நாளாச்சு?

இப்ப படம் ஆரம்பிக்கிறது.....
ஆதி மூவிஸ் வழங்கும்.
"கார்கோ ஆமியும் காங்கோ கல்பனாவும்"
இப்படத்தில் வரும் கதையும் கதா பாத்திரங்களும் யாரையும் குறிப்பிடுவன அல்ல

படம் போட்டாச்சு....
உ.பி முதலமைச்சர் ஆமி, காங்கோ ப்ரெசிடெண்ட் கல்பனா வீட்டு கிரஹப்பிரவேசத்துக்கு விருந்தாளியாக போகிறார் (அழைக்கப்படாமலேயே)
அப்போது கல்ப் தனக்குள்ளே பேசிக்கொள்கிறார்....ஹும் இவளை யாரு கூப்பிட்டது வீட்ட மோப்பம் புடிச்சிட்டு வந்துட்டா
யாரங்கே!!! வீட்ல உள்ள நகையெல்லாம் பத்திரம், வீட்டுக்கு ஒரு பிரச்சனை வந்துகிட்டு இருக்கு ஜாக்கிரதை என ஒரு அபாயச்சங்கை
ஊதிவிட்டு ஆமியை வரவேற்க தயாராகிறார் கல்ப். (விருப்பம் இல்லாமலே)
ஆமி: ஹாய் கல்பனா எப்படி இருக்கீங்க?
கல்ப்: இப்ப வரை நல்லா இருக்கேன் வாங்க உக்காந்து தொலைங்க
ஆமி: ம்? என்னது? என்ன சொன்னீங்க
கல்ப்: இல்ல உக்காருங்கனு சொன்னே.
(ஆமி உக்கார போக)
கல்ப்: ஐயோ அதுல உக்காராதீங்க அந்த சோபா புதுசு நேத்துதான் கவர்னர் மாளிகையிலிருந்து ஆட்டைய போட்டது
நீங்க இப்படி தரையிலேயே உக்காந்துருங்களேன் ப்ளீஸ்..
ஆமி:பிரச்சனை இல்ல ஆடம்பரம், தற்பெருமை இதெல்லாம் இந்த ஆமி எப்பவுமே விரும்பமாட்டாள் அதுனாலதான்
சிம்பிளா 5 பவுன் நெக்லஸ், 20 பவுன் கவர்னர் மாலை, 10 10 பவுன்ல வளையள், 30 பவுன்ல ஒட்டியாணம், 40 பவுன்ல கொழுசு
பத்து பவுன்ல 10 விரலுக்கும் மோதிரம் இது மட்டும் போட்டுட்டு வந்துருக்கேன் சரி கல்ப் வீடு இவ்வளவு பெருசா இருக்கே
இவ்வளவு பெரிய வீட்டை எப்படி கட்டுனீங்க?
கல்ப்: அதோ அங்கே தெரியுது பாரு ஒரு பெரிய பாலம்
ஆமி: ஆமா தெரியுது
கல்ப்:அத கட்டும்போது அடிச்ச பனத்தை வச்சு இந்த வீட்ட கட்டிட்டேன்.
ஆமி:அப்படியா;
கல்ப்:ஆமா ஆமி!, சரி நீங்க வாய மூடுங்க ஆமி வாயில ஈ போயிரப்போகுது..சரி ஆமி! அப்பறம்,,,,, கிளம்பிட்டிங்க போல
ஆமி: இல்லையே நான் அப்படி சொல்லையே
கல்ப்:இல்ல வந்தா உடனே கிளம்பிருவீங்களே அதான் கேட்டேன்
ஆமி:நீங்க வேற, சாப்பிடாம போனா கோவிச்சுக்குவீங்களே அதான்
கல்ப்: ச்சே..ச்சே அதெல்லாம் ஆமிய நான் எப்பவுமே கோவிக்க மாட்டேன் அதுவுமில்லாம நம்ம வீட்லேயெல்லாம்
நீங்க சாப்பிடவா போறீங்க (இப்படித்தான் இருக்கனும் நல்ல விருந்தோமபல்னா)
ஆமி:நான் சாப்பிடாட்டிலும் நீங்க என்ன விடாவா போறீங்க
கல்ப:ஆமிய நான் அப்படில்லாம் வற்புறுத்த மாட்டேன்..ஆமி விருப்பமே என் விருப்பம்
ஆமி:சரி அப்ப நான் சாப்பிடுட்டே போயிடுறேன்
(ஹும்....விடமட்டாளே என்று புலம்பியவாறு அந்த மூன்று நாளுக்கு முந்தைய உப்பே இல்லாத உப்புமாவை
ஆமிக்கு பரிமாறுகிறார்...ஆமி அதையும் கூட வீட்டு வைக்கவில்லை, அடுத்து இன்னும் கேட்பதற்குள்)
கல்பன: இந்தாங்க ஆமி தண்ணி அங்கே போய் கைய கழுவுங்க
ஆமி: சரி கல்ப் அப்ப நான் கிளம்புறேன் (ஆமிய பாக்க பாவமா இருக்குல்ல இப்ப?)
கல்பனா: ஓ Sure Sure...அந்த குடைய வச்சுட்டு போங்க..அது பக்கத்து வீட்ல உள்ளது.
உடனே சோகத்துல ஆமி பாட்டு...யாரைத்தான் நம்புவதோ பேதையின் நெஞ்சம்...இவுக குடையை லவுட்டிட்டு போகா பாத்துட்டு
யாரைத்தான் நம்புவதோனு பாட்டு வேற)
மாமி: ஏம்மா கல்பனா! எங்கே என்னுடைய வலது கால் செருப்ப மட்டும் கானோம்
கல்பனா: மாமி எனக்கும் ஒத்தக்கால் செருப்பு மட்டும்தான் இருக்கு, மத்தக்கால் செருப்பக்காணோம் எங்கே போச்சு மாமி
மாமி:ஆமி வந்தாளோலில்லையோ....
கல்பனா: ஆமா!
மாமி: அவா கூடவே செருப்பும் போயிருக்கும்
கல்பனா; அவா தூக்கிட்டுபோன ரெண்டு செருப்புமே வலதுகால் செருப்பு மாமி
மாமி: அட ராமா!

இடைவேளை.....
மாமி: ஆமா ஆமா
நவமனி: என்ன ஆமா ஆமா
மாமி: இல்ல நீங்க சொல்றது சரிதான்
நவமனி: நான் ஒன்னுமே சொல்லலையே மாமி
மாமி:சரி எதாவது சொல்லிவச்சுக்கோங்கோ

ஜேக்கும் நவமனியும் ஒன்னா போய் டீ குடிக்கிறாங்க ரெண்டுபேருமே ஊதி ஊதி ரெம்ப மெதுவா குடிக்கிறாங்க
ஏன்னா முதல்ல குடிக்கிறவங்கதானே காசு கொடுக்கனும் (அதான் அந்த...கோவிந்தா டீ ரெம்ப சூடா இருக்குல்ல
கோவிந்தா? அந்த காமெடிய நினைவில் கொள்க)
படம்போட்டுட்டாங்க......
இப்ப ஆமி வீட்டில் கல்ப்...
ஆமி; வாங்க கல்ப எப்படி இருக்கீங்க..இப்பதான் வரீங்களா?
கல்ப்:அதான் பாத்துகிட்டுதானே இருக்கீங்க அப்பறம் ஏன் இந்த கேள்வி
ஆமி:இல்ல சும்ம பேச்சுக்கு கேட்டேன்..என்ன கிளம்புடீங்களோ?
கல்ப்:அடிப்பாவி நான் இன்னும் வீட்டு உள்ளேயே வரலையே அதுக்குள்ள இப்படி கேட்டா எப்படி ஆமி?
இருந்தாலும் ஆமிக்கு ரெம்ப தமாஷு. (என்றவாறு ரெண்டு காலிலும் வலது கால் செருப்பை போட்டுகொண்டு
வாசலை மறைத்துநின்ற ஆமியை சிரித்தபடியே ஒரு தள்ளு தள்ளி விட்டு உள்ளே அத்துமீறி நுழைந்து விடுகிறார் கல்ப்)
கல்ப்:ஆமி!
ஆமி: என்ன சொல்லித்தொலைங்க (என்று அன்புடன் ஆமி கேட்கிறார்)
கல்ப்: ஆமி என் வீட்டைவிட பெருசா கட்டிருக்கீங்களே நீங்க எப்படி இதை கட்டுனீங்க?
ஆமி: அதோ அங்கே தெரியுது பாருங்க ஒரு பெரியா பாலம்
கல்ப்: இல்லையே அப்படி ஒன்னும் அங்கே தெரியலையே?
ஆமி: சரி தெரியலேனா விடுங்க...அங்கே பாலம் கட்டவேண்டிய பணத்தை வச்சு இந்த வீட்ட கட்டிட்டேன்
எப்புடி....ஙொய்யால யாருகிட்ட நம்மகிட்டேயேவா? நாங்கள்லாம் காங்கோ நாட்டையே கார்கோவுல போட்டு அனுப்புவோம். தெரியும்ல

ஆனந்தி: சரிடா ஆதி எல்லார்கிட்டேயும் போய் ஆசிர்வாதம் வாங்கிட்டு வாடா
ஆதி:இல்லேம்மா நீயே போய் வாங்கிட்டு வா
ஆனந்தி:ஏண்டா இப்படி சொல்ற? போடா போய் வாங்கிட்டு வாடா?
ஆதி: நான் எதுக்கும்ம வாங்கனும், நீதான் போய் வாங்கனும், ஏன்னா என் உயிர் உங்கிட்டதானேம்மா இருக்கு
அதுனாலதான் இப்பவரைக்கும் என் உயிர் பத்திரமா இருக்கு...அதுனாலா நீ நல்லா இருக்கிற வரை நானும் நல்லா இருப்பேன்மா
அதுனால நீதான் நல்லா இருக்கனும் நீதான் போய் வாங்கிட்டு வரனும் அப்பதான் எனக்கு சேஃப்டி...நான் எதையும் மறக்கலேம்மா..
போம்மா போயி வாங்கிட்டு வா
ஆனந்தி:சரிடா கண்ணா அம்மாவே போய் வாங்கிட்டு வந்துர்ரேன்.
ஆதி:அம்மா அழுவுறீயாம்மா?..ஏம்மா? என்னாச்சும்மா?
சுபம்
என்றும் உங்கள் ஆசீர்வாதத்தை விரும்பும்
ஆதித்யா
s/o ஆனந்தி.IPS
மதுரை.
அவ்வண்ணமே வாழ்த்தும்
ஆஷிக்/பஹ்ருதீன்

உண்மையாவே சூப்பரா இருக்கான்ப்பா, எல்லா வேஷமும் சூப்பர், அந்த ரோஸ் கலர் ட்ரஸ் போட்டுட்டு ஒரு பாப்பு நிக்குதே அது தான் உங்க அண்ணா பொண்ணா, நல்ல க்யூட்டா சிரிக்குதுப்பா.

உன் மீது மற்றவர்கள் பொறாமை படுகிறார்கள் என்றால் அதுவும் ஒருவித புகழ் மாலை தான்.

அன்புடன்
ஹேமா

ஆஷிக்
இந்த படத்தை எடுக்க தான் இவ்வளவுநாளா லொகேஷன் தேடி போயிட்டீங்களோ, அதான் அறுசுவை பக்கமே காணலையோ. நல்ல படம், நல்ல கதை, வசனங்கள் சூப்பர் ஆஷிக்.

கல்ப்ஸ் உப்புமாதான் ஹைலைட்டே.

அன்புடன்
பவித்ரா

ரம்யா நாங்க இல்லமா கல்யாணமா. அறுசுவைல இருக்குற மொத்த பேரும் வந்தா எப்படி இருக்கும் நீங்க இன்னுமொரு கல்யாண மண்டபமே பிக்கனும். அதுப்போல் சந்தோஷத்துக்கும் குறைவில்லாமல் இருக்கும். ஆஹா அங்க எத்தனை பெண் தோழிகள் இருப்பாங்க? இன்னும் 3 மாசம் இருக்கா, அது வரை கல்யாண கனவு தான் இனி எங்க தூக்கம்.

என்ன ரம்யா பவி எதோ பொடி வச்சு பேசுறாங்க, அதுல எதுவும் உள்குத்து இல்லையே.

மேலும் சில பதிவுகள்