தேதி: September 3, 2010
பரிமாறும் அளவு: 3 நபர்கள்
ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்
சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்
மொத்த நேரம்: 40 நிமிடங்கள்
சாதம் -2 கப்
முட்டை-2
வெங்காயம்-2
தக்காளி-1
கொத்தமல்லி,புதினா-சிறிதளவு
பச்சைமிளகாய்-1
மிளகுத்தூள் -1/2 ஸ்பூன்
பிரட்-2 துண்டுகள்
முந்திரி-10
நெய் -2 மேசை கரண்டி
எண்ணெய்-சிறிதளவு
பிரட்டை ஓரம் நறுக்கி சிறுசிறு சதுர துண்டுகளாக வெட்டி நெய்யில் பொரித்துகொள்ளவும். முந்திரிப்பருப்பையும் வறுத்துக்கொள்ளவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி பொடியாக நறுக்கிய பச்சைமிளகாய்,கொத்தமல்லி,புதினா சேர்த்து வதக்கவும்.
வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.
பின் முட்டை,உப்பு சேர்த்து நன்கு கிளறவும்.
முட்டை நன்கு பொரிந்ததும் தக்காளி வதக்கவும்.
அதன் பின் சாதம்,மிளகுத்தூள் சேர்த்து கிளறவும். அதன் பின் அடுப்பை அணைத்து பிரட் துண்டுகளை சேர்த்து ஒரு முறை கிளறவும்.
பரிமாறும் போது முந்திரியை தூவி அலங்கரிக்கவும்.
முட்டை வாசம் பிடிக்கவில்லை என்றால் முட்டையில் உப்பு பாதியளவு மிளகு சேர்த்து நன்கு அடித்து தோசைக்கல்லில் ஊற்றவும். ஆறியதும் கையால் உதிர்த்து சாதத்தில் பிரட் சேர்க்கும் முன் முட்டையை சேர்த்து கிளறவும். உடனடியாக செய்துவிடக்கூடிய உணவு. சாஸுடன் சாப்பிட அருமையாக இருக்கும். வெறும் சாதமாக கூட சாப்பிடலாம்.
Comments
ஆமி
அருமையானக் குறிப்புக்கு நன்றி. லன்ச் பாக்ஸுக்கு ஏத்த ரெசிப்பி.
Don't Worry Be Happy.
ஜெயலட்சுமி
ஜெயலட்சுமி
ரொம்ப நன்றி பா. கண்டிப்பா நீங்க சொல்வது போல் லஞ்ச் பக்ஸுக்கும் ஏற்ற உணவு தான். சாதம் மிஞ்சினாலும், வேலை செய்ய இயலாத நேரங்களிலும் இப்படி செய்துவிடுவேன்.
நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா
ஆமினா,
ஆமினா,
நல்லா இருக்கே..
மேலும் பல குறிப்புகள் தர வாழ்த்துக்கள்
என்றும் அன்புடன்,
கவிதா
கவிதா
நன்றி கவிதா!
செய்து பார்த்துட்டு சொல்லுங்க!
வாழ்த்துக்கு நன்றி. அது தான் என்னை ஊக்கப்படுத்தும் டானிக் :)
நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா
about egg rice
NIce recipe, thank u sister
mohamed rafiq
மிக்க நன்றி சகோ
நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா
எக் ரைஸ்
ஆமினா,
உங்கள் எக் ரைஸ் செய்தேன். மிகவும் சுவையாக இருந்தது. நன்றி!
முற்றுபுள்ளி அருகில் நீயும் மீண்டும் சின்ன புள்ளிகள் வைத்தால் முடிவென்பதும் ஆரம்பமே (^_^)