வெளிநாட்டு வாழ்க்கையில் உள்ள சிக்கல்களை சமாளிப்பது எப்படி?

நம்மில் பலரும் வெளிநாடுகளில்தான் இருக்கிறோம். சமீபகாலமாக எல்லா இடங்களிலும் வெளிநாட்டு ஊழியர்களுக்கும் அந்தந்த நாட்டு மக்களின் அதிருப்திக்கு ஆளாகும் நிலை இருக்கிறது. எங்கள் நாட்டுக்கு வந்து எங்கள் வேலையை பறித்துக் கொள்கிறார்கள் என்ற எண்ணம் அவர்களிடம் அதிகமாக இருக்கிறது. அது அதிருப்தியாக கோபமாக பல ஃபோரம்களிலும் கொட்டப் படுகிறது. அப்படிப்பட்ட நிலையில் நாம் சூழ்நிலையை எப்படி எதிர் கொள்வது? பொட்டிய கட்டிட்டு ஊர் வந்து சேருங்கன்னு பொத்தாம் பொதுவா சொல்லிட முடியாது. பலரின் சூழல் அதுக்கு இடம் கொடுக்காது. இதை எப்படி சமாளிப்பதுன்னு கொஞ்சம் ஆக்கப் பூர்வமா பேசலாம்னு நினைகிறேன். தோழி(ழர்)கள் வந்து தங்கள் கருத்துக்களை சொல்லுங்களேன்.

புதுசா வெளிநாடு செல்பவர்களுக்கும் வசதியாக இருக்குமே!

தோழி(ழர்)களே வாங்க வந்து உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக்கோங்க.

நம் நாட்டில் உள்ள வேலைகளை பிறர் பறித்துக் கொண்டால் நமக்கு நிச்சயம் கோபம் வரும்தானே! அதுபோல்தான் அவர்களும் நடந்து கொள்கிறார்கள். அதை நேரடியாக காண்பிக்க முடியாத நிலையில் நம்மிடம் உள்ள சில குறைகளை பெரிதாக்கி இப்படீல்லாம் இருக்காங்க அப்படீன்னு குறை சொல்லி வெறுப்பேத்துவாங்க.

பொதுவாக நம்மவர்களைப் பற்றி சொல்லப்படும் குறைகள்.

பெண்களை உற்றுப் பார்த்து ஜொள்ளு விடுகின்றனர். வேண்டுமென்றே வந்து இடிப்பது மோதுவது என தொல்லை கொடுக்கின்றனர் என்பது...இது உண்மையும் கூட (நான் எல்லா ஆண்களும் அப்படித்தான்னு சொல்லவில்லை) ஆனால் பெரும்பாலான ஆண்கள் அப்படி இருக்கிறார்கள். சிங்கையில் சனி ஞாயிறு தினங்களில் தேக்காவுக்கு போனால் இவர்களின்( இந்திய, பாகிஸ்தானி மற்றும் பங்களாதேஷி) தொல்லையை சமாளிக்க கொஞ்சம் கஷ்டமாத்தான் இருக்கு.

பார்ப்பதில் என்ன இருக்குன்னு நினைக்கலாம். ஆனால் அது பெண்களுக்கு நிச்சயம் சங்கடமாக இருக்கும் (எந்த ஊர்ப் பெண்ணானாலும்). கிராமங்களில் இருந்து இங்கு வரும் ஆண்களுக்கு இங்குள்ள பெண்கள் போடும் ஆடைகள் வித்தியாசமாக குட்டையாக இருப்பதால்தானே பார்க்கிறார்கள்னு சொல்ல முடியாது. ஏன்னா அது அவர்கள் நாடு அவர்களுடைய கலாச்சாரம். சுடிதார் சேலைன்னு போட்டுக்கிட்டு போனாலும் அப்படித்தான் பார்க்கறாங்க :(. கேவலமான கமெண்டுகள் வேறு அடிக்கிறார்கள். போய் நாலு அப்பு அப்பிட்டு வரலாம்னு இருக்கும். ஆண்கள் இந்த பழக்கத்தை விட்டுவிட்டால் கொஞ்சம் நல்லா இருக்கும்.

அடுத்து நம்ப பெண்கள். இந்த நைட்டி படுத்தற பாடு இருக்கே...இதை நானும் அறுசுவையில் பல இடங்களில் சொல்லிட்டேன் :(. நைட்டியை வீட்டுக்குள் மட்டும் போடுவதோடு நிறுத்திக்கிட்டா நல்லது. குழந்தைக்கு சாப்பாடு ஊட்ட ப்ளே கிரவுண்ட் போனாலும் நைட்டிதான் பக்கத்து கடைகளுக்கு போனாலும் நைட்டிதான் வாக்கிங் போவதற்கும் நைட்டிதான் குழந்தையை ஸ்கூலுக்கு கொண்டு விடுவதும் நைட்டியில்தான் சில நேரங்களில் மால்களுக்கு கூட நைட்டியில் வரும் நம் பெண்களைப் பார்த்திருக்கிறேன். ஆள் பாதி ஆடை பாதின்னு சொல்லுவாங்க.

இருக்கற இடத்துக்கு ஏற்ற ஆடைகள் போடுவது நம்மை மற்றவர்களிடம் இருந்து வித்தியாசமாக காட்டாது. அதற்காக அவர்கள் போடுவது போல் குட்டையாக போடணும்னு சொல்லலை. சிங்கையில் சுடிதார் சேலை போடுவதை யாரும் வித்தியாசமாக பார்ப்பதில்லை. ஆனால் அங்கும் சில இடங்களுக்கு போகும் போது மேற்கத்திய ஆடைகள்தான் நல்லது. அழகா பேண்ட் ஷர்ட் போட்டுக்கிட்டு போகலாம். ஜீன்சும் ஷாட் குர்தா டாப்ஸ் போட்டுக்கிட்டாலும் அழகா இருக்குமே.

பொதுவா நம்மவர்களைப் பற்றி சொல்லும் இன்னொரு குற்றச்சாட்டு... சுத்தமா இருக்க மாட்டாங்க எண்ணெய் வழியற தலையோட வருவாங்க... அப்படீங்கறது.

இது எல்லாருக்கும் பொருந்தாது. ஆனால் சிலர் இப்படியும் இருக்காங்க. நல்லா குளிச்சு எடுத்துதான் வருவாங்க. உண்மையைச் சொன்னா அவங்கதான் குளிக்காம நல்ல பெர்ஃப்யூம் அடிச்சுக்கிட்டு வருவாங்க. ஆனால் போடும் உடைகளை நீட்டா போட மாட்டாங்க. ஏனோ தானோன்னு ட்ரெஸ் பண்ணியிருப்பாங்க. தலைக்கு எண்ணெய் வைக்கும் பழக்கம் நம்மிடம் உண்டு. ஆனால் அதை ஷாம்பு போட்டு அலசிவிட்டால் போதும். அதை சிலர் செய்வதில்லை. பார்க்கும் போதே ஒரு மாதிரியாத்தான் இருக்கும்.

இன்னொன்னு ரெஸ்ட் ரூமில் கண்ட இடங்களில் டிஸ்யூவை எறிந்து விட்டு போவது. தேக்கா பகுதியில் இருக்கும் ரெஸ்ட் ரூம்களில் உண்மையிலேயே நிலைமை இதுதான் :(. உள்ளே நுழையவே சிலநேரங்களில் சங்கடமா இருக்கும். குறிப்பா முஸ்தஃபாவில் ரெஸ்ட்ரூம்... அங்கு வருவது பெரும்பாலும் நம்மவர்கள்தான். சின்ன சின்ன விஷயங்களில் கவனமாக இருப்பது எல்லாருக்குமே நல்லதுதானே.

இன்னொரு குற்றச்சாட்டு நம்மவர்கள் ரொம்ப சத்தமா பேசறோம் அப்படீம்பாங்க. ஹி ஹி நமக்கு கொஞ்சம் சத்தம் பெருசுதானே. அதையும் கொஞ்சம் குறைச்சுக்கணும் பொது இடங்களிலாவது...

நம்ம நாட்டில் நாம் எப்படி வேணும்னாலும் இருக்கலாம். ஆனால் வெளிநாடுகளுக்கு போகும் போது அவர்கள் கலாச்சரத்தையும் பழக்கங்களையும் மதிக்க கத்துக்கணும். நம் கலாச்சாரத்தை விட்டுவிடாமல் அவர்களுடையதையும் ஏத்துக்கிட்டு பேலன்ஸ் பண்ணி கொண்டு போகணும்.

நம் பெரியவர்கள் சொல்லியிருக்கங்களே ஊரோடு ஒத்து வாழ் அப்படீன்னு. அது மாதிரி அந்தந்த நாட்டு சூழலுக்கு ஏற்ப கொஞ்சம் நம்மை மாத்திக்கிட்டா பிரச்சினைகள் கொஞ்சம் குறையும்.

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

கவி! ரொம்ப அருமையான இழை. நேரமிருக்கும் போது பதிவு போடறேன்.. நான் முன்பிருந்த இடங்களில இப்படி பிரச்சனை இருந்ததில்லை.. இப்போ ஒரு சின்ன ஊர்... நிறைய நிறவேற்றுமை பிரச்சனை இருக்கு.விரிவா எழுதறேன்

"10 வது முறை விழுந்தவனைப் பூமி முத்தமிட்டுச் சொன்னது - "9 முறை எழுந்தவனல்லவா நீ?"..

கவி

அருமையான இழை. இது வெளிநாட்டிற்கு வரப் போகும் என்னைப் போன்றவர்களுக்கு நல்ல உபயோகமாய் இருக்கும். அனைவரின் அனுபவங்களும் கிடைக்கும். நன்றி..

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

கவிசிவா
சொன்ன மாதிரியே இந்த இழையை ஆரம்பிச்சுட்டீங்களே.. வாழ்த்துக்கள்...

நீங்க சொல்ற எல்லா விஷயமும் 100க்கு 100 உண்மை. நாமும் மாற வேண்டும். நம்மைச்சுற்றியுள்ளவர்களும் மாற வேண்டும். ஊரோடு ஒத்து வாழ் அப்படின்னு ஔவையார் சொன்னது அந்தக்காலத்திற்கு மட்டுமல்ல. இது இக்காலத்திற்கும் பொருந்தும்.

இங்கு நடந்த விவாதத்தில் நான் பார்த்தது... இங்கு வேலைபார்க்கும் ஆண்களிடம் நேடியாக கேள்விகள் கேட்டார்கள். நம் ஆண்கள் கூறிய பதில் இதுதான்

1. நாங்க பொண்ணுங்கள பாக்குறோம்னு சொல்றது உண்மை தான். இல்லைனு சொல்ல மாட்டோம். அதுக்காக அவுங்களை முறைச்சு பாக்குறோம்னு கிடையாது. எங்களை தாண்டிப்போனா நாங்க பாப்போம். ஏன்னா நாங்க வளர்ந்த சூழ்நிலை வேறு. இங்கு நாங்கள் பார்ப்பது வேறு. நாங்கள் பார்ப்பதைத்தவிர வேறு எந்தவித பிரச்சனையும் செய்வதில்லை. நாங்கள் யாரிடமும் தவறாக பேசுவது கூட கிடையாது என்று.. (ஆனால் சில மாதங்களுக்கு முன்பு சிங்கப்புரில் ஒரு கொலை நடந்தது. ஒரு prostitute பெண், அதுவும் கர்ப்பமாக இருக்கும் பெண் ஒரு இந்திய ஆடவரால் கொலை செய்யப்பட்டுள்ளார்.. இது அந்த சமயம் மிகவும் பரபரப்பையும், அனைத்து இந்தியர்கள் மீதும் ஒரு தவறான அபிப்ராயத்தையும் ஏற்படுத்தியது உண்மை)

இதில் பெண்களை உற்றுப்பார்ப்பது என்பது நம்மவர்களிடம் நாம் கண்கூடாகப்பாரக்கும் உண்மை. கிராமங்களில் இருந்து வரும் ஆடவர்கள் சினிமாவில் மட்டுமே இவ்வளவு ஆடம்பரமாக மாடர்னாக பார்த்தவர்கள் நேரில் பார்க்கும் போது அவா்களையும் அறியாமல் அவா்கள் உணர்ச்சிவசப்படுவது உண்மை.ஆனால் நாட்கள் செல்லச்செல்ல அவா்கள் அவ்வாறு இருப்பது கிடையாது. அது பழகிவிட்ட ஒன்றாகிவிடுகிறது. இங்கேயே பிறந்து வளர்ந்தவர்களுக்கு அப்படி அரை குறை ஆடைகளுடன் பார்ப்பது ஒரு பெரிய வித்தியாசமாகத்தெரிவதில்லை. ஆனால் நம் கலாச்சாரத்திற்கும் வெளிநாட்டுக்கலாச்சாரத்திற்கும் உள்ள வேற்றுமை நம் இந்திய ஆடவர்களை பாரக்க வைக்கிறது. இதற்கு முடிவு என்று எதையும் தீா்மானமாக கூற முடியாது. நானே வந்த புதிதில் ஆச்சரியமாக பார்த்திருக்கிறேன். பெண்களுக்கே அப்படி என்றால் ஆண்கள் என்ன செய்வார்கள். ஆனால் காலப்போக்கில் அவா்கள் அப்படி பார்ப்பதை நிறுத்திக்கொண்டால் நல்லது.
2. இந்தியர்கள் என்றால் சுத்தமாக எதையும் வைத்துக்கொள்ள மாட்டார்கள் என்ற எண்ணம். அதை நாம் செய்கையில் தான் புரியவைக்க வேண்டும். ஆனால் பல நேரங்களில் அது ஊர்ஜிதப்படுத்துவதாகவே அமைந்துவிடுகிறது. பொதுக்கழிவறைகள் உபயோகிப்பதிலேயே அது நன்றாக தெரிந்துவிடும். தேக்காவில் இருக்கும் கடைகளில் கழிவறைகள் அவ்வளவு சுத்தமாக இருப்பதில்லை. இதை கண்டிப்பாக நாம் மாற்றிக்கொள்ள வேண்டும். பேருந்து அல்லது இரயில்களில் பயணம் செய்யும்பொழுது நம் அருகே இடம் இருந்தால் கூட இங்குள்ளவர்களில் ஒரு சிலர் அருகில் வந்து அமர மாட்டார்கள். அதன் காரணம் இன்று வரை எனக்கு விளங்கவில்லை.
சுத்தமாக இருப்பது என்பது நம்மவர்களிடம் அதற்கான பழக்க வழக்கங்கள் குறைவு. பலருக்கும் முதன் முறையாக western toilet உபயோகப்படுத்துவது என்பது சற்று கடினமாக இருக்கலாம். எப்படி உபயோகிப்பது என்பது தெரியாமல் செய்யும் தவறுகளே அதிகம். முடிந்தவரை ஊரோடு ஒத்துவாழ் என்பது போல் நாம் உடுத்தும் ஆடைகளிலிருந்து தோற்றம் வரை அனைத்தும் கொஞ்சம் அந்தந்த நாடுகளுக்கு ஏற்றார்போல் மாறுதலோடு இருந்தால் நல்லது.

3. நம்மவர்கள் நைட்டி போட்டுக்கொண்டு வெளியே செல்வது. அது பலரும் தெரிந்தும் தெரியாததுபோல் சகஜமாக வெளியே வருகின்றனர். மேலும் இங்கு சிலர் முக்கால் நைட்டி போட்டுக்கொண்டு வருவது பார்க்கவே சற்று அருவருப்பாக உள்ளது.

நம் இந்தியர்களின் உடல்வாகுக்கு ஏற்றவாறு உடையணியலாமே. பொதுவாக இந்தியர்களில் பெரும்பாலானோர் சற்று உடல் பருமனாகவே உள்ளோம். இதில் இந்தமாதிரி நைட்டி போன்ற விஷயங்கள் எளிதில் முகம் சுழிக்க வைத்துவிடுகிறது. சுடிதார் போட்டுக்கொள்வது சிறந்தது. நான் பலமுறை புடவை உடுத்துவதை தான் விரும்புவேன். அதில் ஆபாசமோ அசிங்கமோ இருப்பதாக தோன்றவில்லை. ஆனால் ஏன் இங்கு யாரும் அதிகம் புடவை உடுத்துவதில்லை என்று தெரியவில்லை. அதையும் உடுத்தலாமே…

4. நம்மவர்களை இங்குள்ள சிங்கை இந்தியர்கள் பார்த்தால் கேட்கும் முதல் கேள்வி ”ஊர்காரங்களா?.........” இதில் பொதுவாகக்கேட்டால் தவறில்லை. கேட்கும் த்வனியைப்பொறுத்தே அனைத்தும் மாறுபடும். அவா்கள் கேட்பதில் இளக்காரம் மட்டுமே மிஞ்சும்.

இங்குள்ள தொழிலாளர்கள் அது தம்மனதை மிகவும் பாதிப்பதாக கூறுகிறார்கள். எல்லோரும் இந்தியர்கள் தானே. இதிலென்ன ஊர்காரங்களா? என்ற கேள்வி… அப்படி மற்றவர்களைப்பார்த்து கேட்பது தவறு என்று இங்குள்ள லோக்கல் டிவியில் பலரும் வாதிட்டனர். முடிவில் அப்படி கூறாமல் இருப்பதே நல்லது. அவா்களும் நம்மில் ஒருவர் என்று மதிக்க வேண்டும் என்று கூறினர்.

5. அடுத்த மிக முக்கிய விஷயம் நம்மவர்கள் அதிகமாக சத்தம்போடுவது. உதாரணமாக படத்திற்கு செல்கிறார்கள் என்றால் அங்கு அதிகமாக சத்தம்போட்டு கத்துவது. அது இங்குள்ள சிங்கப்புர் இந்தியர்களை முகம் சுழிக்க வைக்கிறது.
இதற்கு தொழிலாளர்கள் கூறும் காரணம், நாங்கள் ஒரு அறையில் 11 பேர் முதல் தங்குகிறோம். காலை வேலைக்குச்சொன்றால் இரவு தான் அறைக்கு திரும்புகிறோம். வேலைப்பளு காரணமாக துாங்கிவிடுகிறோம். எல்லா நாளும் எங்களுக்கு இது போல் தான் செல்கிறது. எங்களுக்கு பொழுதுபோக்கு என்றால் அது படத்திற்கு வருவது தான். படம் பாரக்கும் பொழுது நாங்கள் எங்களையும் அறியாமல் ஆனந்தக்கூச்சலிடுகிறோம். அது ஊரில் ஏற்பட்ட பழக்கம். அதை மாற்றிக்கொள்வது சற்று கடினமாக உள்ளது என்று. அவா்களுக்கும் சில பொழுதுபோக்குகள், மன அழுத்தம் தீர சில விஷயங்கள் தேவைப்படுகிறது. ஊரில் மனைவி, மக்கள் என்று அனைவரையும் பிரிந்து வாழ்பவா்களுக்கு வேறு எது போக்கிடம்?.. தியேட்டரும் வாரம் ஒரு முறை தேக்கா சந்திப்பும் தான்.

ஆனாலும் நாம் நம் பழக்கவழக்கங்களிலிருந்து சற்று மாறுபட வேண்டும். நம் நாட்டை விட்டு நாம் வேறு நாட்டிற்கு வேலை பார்க்க வந்துள்ளோம். அவா்களின் கலாச்சாரத்திற்கும், பண்பாட்டிற்கும் சற்று முக்கியத்துவம் கொடுத்தே தீர வேண்டும் என்பது திண்ணம். நம்மை மற்றவர்கள் குறை கூறாத வண்ணம் நடந்து கொள்ள வேண்டும். அதற்கு கட்டாயம் முயற்சிக்க வேண்டும்.
இதுவே ஜாஸ்தி ஆகிடுச்சு.. மீதியை அடுத்த பதிவுல போடுறேன்…..(அட்மின் அண்ணா குச்சி எடுத்து அடிக்க வரப்போறாருன்னு நினைக்கிறேன்....)

"செய்க தவம், தவமாவது அன்பு செலுத்துதல்"

ராதா ஹரி

ராதா நீங்கள் சொன்ன நிகழ்ச்சியை எனக்கு பார்க்க முடியவில்லை. ஆனால் நம் ஆண்கள் சொல்லும் சில காரணங்களை என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.

முக்கியமாக தியேட்டர்களில் கத்துவது... அமெரிக்காவில் அப்பா அம்மா போயிருக்கும் போது சிவாஜி படம் தியேட்டரில் போய் பார்த்தாங்களாம். படம் ஆரம்பித்ததில் இருந்து முடியும் வரை விசிலடிப்பது சத்தம் போடுவதுன்னு அமர்க்களம் பண்ணியிருக்காங்க இளைஞர்கள். முக்கால்வாசி பேரும் படித்து சாஃப்ட்வேர் துறையில் நல்ல வேலை பார்ப்பவர்கள். உயர்பதவியில் இருப்பவர்கள். எல்லோரும் பொது இட நாகரீகங்களை கடைபிடிப்பது முக்கியம். அது நம் நாட்டில் என்றாலும் வெளிநாட்டில் என்றாலும்.

இந்தமுறை ஊருக்கு போயிருந்த போது சிங்கம் படம் பார்க்க தியேட்டருக்கு போயிருந்தோம். ஒரே ஆட்டமும் பாட்டமும்தான் திரைக்கு முன் :(. இதில் வல்கரான கமெண்டுகள் வேறு. கோபம் வரத்தான் செய்தது. அந்த சூழலில் வளர்ந்த நமக்கே இப்படி இருக்கும் போது இங்கேயே பிறந்து வளர்ந்தவர்களுக்கு எரிச்சல் வரத்தான் செய்யும். ஒட்டுமொத்தமாக நம்மையும் சேர்த்தே திட்டுகிறார்கள் :(

அதுமாதிரி உற்றுப் பார்ப்பது... அவங்க தன்னோட செயலை நியாயப் படுத்த முயற்சிக்கறாங்க. வெளிநாட்டுப் பெண்கள் என்று இல்லை எந்தப்பெண்ணையுமே விழுங்கி விடுவது போல் உற்றுப் பார்ப்பது தவறுதான். பெண்களுக்கு உள்ளுணர்வு அதிகம். தன் பின்னால் இருந்து ஒருவன் குறுகுறுவென்று பார்த்தாலே அதை ஒரு பெண்ணால் உணர முடியும். சங்கடப்படுத்தவே செய்யும்.

நாம எல்லோருமே ஒரு விஷயத்தை மட்டும் எப்பவும் ஞாபகம் வச்சிருக்கணும். நாம் இருப்பது இன்னொருவர் வீடு. அவர்கள் வீட்டு சட்டதிட்டங்களையும் பழக்கவழகங்களையும் மதிக்க கற்றுக் கொள்ள வெண்டும். என் வீட்டில் எனக்கு இது பழக்கமில்லை அதனால்தான் இப்படி என்று சாக்கு போக்கு தேடக் கூடாது. அதற்கு ஏற்கெனவெ இங்கு இருக்கும் நம்நாட்டு மக்கள்(லோக்கல் ஆட்கள் இல்லை) உதவி செய்து இங்கே இது இது இப்படித்தான் அப்படீன்னு கற்றுக் கொடுக்க வேண்டும்.

ராதா ட்ரெயின்களில் நீங்கள் சொல்வது போல் நடக்கிறது. அப்படிப்பட்ட நேரங்களில் ரொம்பவே கஷ்டமா இருக்கும். அப்படிப்பட்ட நேரங்களில் அந்த இந்தியர்கள் அருகே நான் போய் உட்கார்ந்து விடுவேன் :). என்னால் கொடுக்க முடிந்த சின்ன ஆறுதல் அவ்வளவுதான்.

யாராச்சும் என்னிடம் ஊர்க்காரங்களான்னு கேட்டா ஆமாங்க நீங்க கொஞ்சம் சீக்கிரமா வந்துட்டீங்க நாங்க இப்பதான் படிச்சு முடிச்சுட்டு வேலை செய்ய வந்திருக்கோம் அப்படீன்னு புன்னகையோட சொல்லிடுவேன். அவங்களும் அசடு வழிஞ்சுட்டு போயிடுவாங்க :).

எனக்கு சில லோக்கல் இந்திய குடும்ப நண்பர்கள் உண்டு. எல்லோரும் நம்மவர்களை வெறுப்பதில்லை. ஆனால் எல்லோரும் எப்போதாவது இப்படி அவர்களால் வெறுக்கப்பட்ட நிலையை சந்தித்திருப்போம். முடிந்த வரை நாம் நம்மை அந்தந்த ஊர்ப் பழக்கவழக்கங்களை அறிந்து கொண்டு நடக்கப் பழகிவிட்டால் பிரச்சினைகள் இல்லாமல் இருக்கலாம்.

அதையும் மீறி அவர்கள் வேலையைத் தட்டிப் பறித்துவிட்டோம் என்று வெறுப்பு காட்டினால் போங்கடா போங்கன்னு கண்டுகாம போய்கிட்டே இருக்கணும் :)

என்னடா நம்மாளுங்களையே குறை சொல்லிக்கிட்டு இருக்காளேன்னு நினைக்காதீங்க. நம்ம மக்களிடம்தான் எனக்கு உரிமையாக சொல்ல முடியும். அவங்க நாட்டுக்கு வந்துட்டு அவங்களை நமக்கு ஏத்த மாதிரி மாற்ற முடியாது. நாமதான் நம்மைக் கொஞ்சம் மாற்றிக்கணும்.

இன்னும் நிறைய இருக்கு. நம் நாட்டிலிருந்து வரும் சுற்றுப்பயணிகள்... அவர்கள் செய்யும் லொள்ளுகள் இதையும் எழுதணும்...அடுத்த பதிவில்

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

நீங்கள் சொல்வது சரியே கவி... ஆனால் நான் கூறுவது வெளிநாட்டினர் எந்த இந்தியர் அருகிலும் உட்கார்வது இல்லை என்பதே.... நான் ஒரு முறை ஒருவர் அருகில் போய் பையனுடன் அமர்ந்ததற்கு அவா் உடனே எழுந்து பக்கத்து கம்பார்ட்மெண்ட் போயிட்டார். எனக்கு ரொம்ப தர்மசங்கடமா போச்சு.... பார்க்கும் பார்வையிலேயே ஏளனம்.. ஆனால் நிறைய பேர் ரொம்ப ஹெல்ப் பண்றாங்கப்பா.... குழந்தையோடு வந்தா கண்டிப்பா எழுந்து இடம் கொடுத்துவிடுகிறார்கள். ஒருசிலர் மட்டுமே ஏளனம் காட்டுகிறார்கள்.

நானும் இங்க சிவாஜி படம் பாக்க போனேன். பாதிக்கு மேல என்ன பேசுறாங்கனு கேக்கவே முடியல.. ஒரே சத்தம். என்ன பண்றது... யாரை கோபித்துக்கொள்ள முடியும். ஒன்றும் சொல்லாமல் படம் பார்த்துவிட்டு வந்தோம். சில நேரங்களில் நம்மவர்கள் நடந்து கொள்வது சற்று எல்லை மீறுவதாகவே உள்ளது.. என்ன செய்ய...

"செய்க தவம், தவமாவது அன்பு செலுத்துதல்"

ராதா ஹரி

வெளிநாட்டில் வாழும் பெண்கள், வாழப்போகும் பெண்களுக்கு முக்கியமான சில விஷயங்கள்:

1. தமிழ் என்று தெரிந்தாலும் வேறு ஆடவருடன் நட்பு ஏற்படுத்திக் கொள்ளவேண்டாம். நம் ஊரில் எப்படி இருப்போமோ அதே மாதிரி இருந்தாலே போதும். நாம் சும்மா ஒரே ஊர்காரர்னு ஸ்னேகமா பார்த்தாலும் அட்வாண்ட்டேஜ் எடுத்துக்குவாங்க. அதுவே நமக்கு பிரச்சனையில் போய் முடியலாம்.

2. வீடு பக்கத்திலேயே குரோசரி இருந்தாலும் ஃபோன் பண்ணி பொருள்களை ஆர்டர் பண்ண வேண்டாம். அவர்களிடம் சகஜமாக பேச வேண்டாம். பொருள் வாங்கிட்டு வந்துரது நல்லது.

3. டாக்சில போகும்போது நம்ம ஊர்காரர்தான் டிரைவர்னு தெரிஞ்சாலும் பேசாம பயணம் செய்றது நல்லது.

உடை விஷயத்தைப்பத்தி கவிசிவாவும், ராதாவும் சொல்லிட்டாங்க.அதைப் பின்பற்றினாலே போதும். ஊரோட ஒத்துவாழ்னு சொல்லியிருக்காங்க அதுக்கு ஏற்றமாதிரி சேலை கட்டிட்டு போற இடத்துக்கு சேலை கட்டுறது நல்லது.

Don't Worry Be Happy.

ராதா இனிமே யாராவது அப்படிப் பண்ணினா கண்டுக்காதீங்க. நாம மனசு சங்கடப்பட்டா அது அவங்களுக்கு நாம கொடுக்கற வெற்றி. எனக்கும் உன் அருகே இருக்க விருப்பம் இல்லை. நீயாகவே போயிட்டே நன்றின்னு மனசுக்குள்ள நினைச்சுக்கோங்க. நான் அப்படித்தான் நினைச்சுக்குவேன் ராதா :) சிலர் குழந்தைகள் இருந்தாலே(எந்த இன குழந்தைகள் என்றாலும்) எழும்பி போயிடறாங்க. இதுங்களை எல்லாம் லிஸ்ட்ல சேர்த்துக்கவே கூடாது .

ஜெயலெக்ஷ்மி நீங்க சொல்ற மாதிரி சிலர் அதிகமா அட்வாண்டேஜ் எடுத்துப்பாங்க. அவங்களை கொஞ்சம் தள்ளி வைக்கறதே நல்லது. நாங்க மலேசியா டூர் போன போது ஒரு சீனர் எல்லா உதவியும் செய்தார். ஆனால் ஒரு தமிழர்தான் ஏமாற்றி விட்டார் :(.

நம் ஊரிலிருந்து வரும் சுற்றுலாப்பயணிகளில் சிலர் நடந்து கொள்ளும் விதம் நம்மையே முகம் சுளிக்க வைக்கிறது. ஏண்டா இங்க வந்து இந்தியா மானத்தை வாங்கறீங்கன்னு கேட்கத் தோணும் ஆனா முடியாதே :(. சுற்றிப்பார்க்க வரும் நாடுகளின் சட்டதிட்டங்களை மதிக்கணும்னு நினைக்கவே மாட்டேங்கறாங்க.

இங்கு ரயில்களிலும் பஸ்ஸிலும் சாப்பிடக்கூடாது பானங்கள் குடிக்கக் கூடாது என்பது விதி. அதை எல்லா இடங்களிலும் எழுதியும் வைத்திருப்பார்கள். ரயிலில் தமிழ் ஆங்கிலம் மலாய் சீன மொழிகளில் அறிவிக்கவும் செய்வார்கள். ஆனாலும் நம்ப மக்கள் கண்டுக்கறதே இல்லை. ஒருமுறை நான் ரயிலில் வரும் போது ஒரு ஆந்திராவை சேர்ந்த குடும்பம் ரயிலில் ஏறினார்கள். ஒரு பையனின் கையில் கோக். பையனுக்கு 7 அல்லது 8 வயது இருக்கும். ரயிலில் கூட்டம் அதிகம் இல்லை. அந்த பையன் அங்கேயும் இங்கேயும் ஓடிக்கொண்டும் கோக் குடித்துக் கொண்டும் இருந்தான். பெரியவர்கள் அவனை கண்டுகொள்ளவே இல்லை. பயணிகள் சிலர் அந்த பையனிடம் சொன்னார்கள். ஆனால் அவனுக்கு புரியவில்லையோ என்னவோ அவன் சட்டை செய்யவே இல்லை. எல்லோரும் எது நடக்கக்கூடாதுன்னு நினைச்சோமோ அது கரெக்டா நடந்தது. மொத்த கோக்கையும் அப்படியே கொட்டி விட்டான். ஆனாலும் பெரியவர்கள் கலங்கணுமே ம்ஹூம் கூலா அடுத்த ஸ்டேஷனில் இறங்கி போயிட்டாங்க. ரயிலில் இருந்த அத்தனை பேரும் முகம் சுளிக்கத்தான் செய்தார்கள். சிறுவனுக்கு தெரியாது விளையாட்டுப் பிள்ளைகள். ஆனால் பெரியவர்கள் சொல்ல வேண்டாமா?

இன்னொரு முறை செந்தோசா தீவில் பார்த்து நொந்தே போய் விட்டேன். அங்கு குழந்தைகள் விளையாடும் ஒரு ஃப்வுண்டென் இருக்குமே சிறு நீரோடை போல. அதன் பக்கத்தில் உட்கார்ந்து ஒரு க்ரூப் கொண்டு வந்த புளிசாதம் தயிர்சாதம் எல்லாம் சாப்பிட்டாங்க. அதில் தவறு இல்லை. அதற்கு பின் நடந்ததுதான் கஷ்டமாயிடுச்சு. கொஞ்சம் புளிசாதம் ஃபவுண்டெனுக்குள் விழுந்து விட்டது. தவறுதலாகத்தான் நடந்தது. உடனே கையால் எடுத்து குப்பையில் போட்டிருக்கலாம். அவர்கள் கண்டு கொள்ளவே இல்லை. சிறு குழந்தைகளின் வாயைக் கூட அதில் கழுவி விடுகிறார்கள். என்ன சொல்வதென்றே தெரியவில்லை.

குழந்தைகள் இருப்பவர்கள் கையில் ஒரு கர்ச்சிப் அல்லது கொஞ்சம் டிஷ்யூ வைத்திருப்பது நல்லது. திடீரென்று தும்மும் போது அவர்கள் மூக்கை துடைக்க உதவும். ஆனால் சிலர் இது எதுவுமே இல்லாமல் பஸ்ஸில் வரும் போது குழந்தைகள் தும்மினால் சுடிதார் துப்பட்டாவால் மூக்கைத் துடைத்து விடுகிறார்கள்(வேறு வழியில்லாமல்தான்). ஆனால் மற்றவர்களுக்கு அதை பார்க்கும் போது கொஞ்சம் அருவருப்பாகத்தான் இருக்கிறது :(. ஆனால் ஒரு சிறிய முன்யோசனை இது போன்ற சங்கடங்களை தவிர்க்க உதவும். எல்லோரும் டிஷ்யூ வைத்திருப்பது நல்லது. யாருக்கு எப்போ தும்மல் வரும்னு சொல்ல முடியாதே :)

இதெல்லாம் நம் நாட்டிலும் செய்யக்கூடாத விஷயங்கள்தான். ஆனால் நாம் ஏனோ இதையெல்லாம் கண்டு கொள்வதே இல்லை. இதுபோன்ற சின்ன சின்ன விஷயங்களும் கூட நம் மீது உள்ள மரியாதையை குறைக்கும். இதெல்லாம் நாம் மாற்றிக்கொள்ளக் கூடிய விஷயங்கள்தான் மனமிருந்தால்.

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

இண்ட்ராக்ட் பண்றதுக்கு மன்னிக்கவும்.

நம்ம ஆட்கள் எல்லாரும் நம்ம நாட்டையே தூய்மையா வச்சுக்க மாட்றாங்க அப்பறம் எங்க மற்ற நாட்டை தூய்மையா வச்சுக்க போறாங்க. அவங்கவங்க நாட்டின் மேலே அக்கறை இல்ல.

தும்மும் போது இருமும் போதும் கர்சிஃபோ, டீஸுவோ வச்சுக்கனும்ங்கிறது பேசிக் மேனர் அது பெரியவங்க சின்னவங்களுக்கு சொல்லி கொடுத்து இருக்கனும். அப்பறம் எப்படி அந்த பசங்க பண்ணும்.

இன்னும் நிறைய சிலருக்கு வெளியில் போன எப்படி நடந்துக்கனும்ங்கிற சின்ன சின்ன விஷயத்தையே சொல்லிக் கொடுக்கனும் போல, அதுவும் பப்ளிக் ப்ளேஸ்லயே பிள்ளைகளுக்கு பீட் பண்றது அய்யோ அத என்னால எத்துக்கவே முடியாத விஷயம் இதுலாம் ஏன் அந்தந்த தாய்மார்களுக்கு(பெண்களுக்கு) தெரியலன்னு தெரியல.
***************************************************************
ஆனா கவி இன்னொரு விஷயம் என்னான்னா இது எல்லாத்தையும் இங்க பண்ணமா இருந்தாலும் ஒருத்தர் வெளிநாடுகளில் இருந்து அதே பழக்கத்துல இங்கயும் வந்து பாலோ பண்ண,
அட இவன பாருடா இவன் பெரிய பாரின்ல இருந்து வந்துட்டான் என்ன பந்தா விடுறான், அப்படினு புறனிதான் பேசுவாங்க.

யாழினி

நீங்க தாரளமா கருத்து சொல்லலாம். மன்னிப்பு எல்லாம் எதற்கு. மற்ற தோழிகளின் கருத்துக்களுக்காக தான் கவி இந்த இழை ஆரம்பிச்சு இருக்காங்க.

நீங்க சொல்வது போல ஒருவர் வெளி நாட்டில் இருந்த வந்தார். அவர் குழந்தைக்கு பூ கொடுத்ததற்கு அவர் தேங்க்ஸ் சொல்லு என்றார். அதற்கு பெரிய ஃபாரின் ரிட்டன்னாம்.. குழந்தை தேங்க்ஸ் சொல்லாட்டி என்னானு சொல்லி மற்றவர்கள் கேலி பேசினது கஷ்டமா இருந்தது. ;(

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

மேலும் சில பதிவுகள்