நியூசிலாந்து பூகம்பம்!

இப்ப தான் செய்தி பார்த்தேன்.. நியூசியில் இருக்கும் நமது அருசுவை தோழிகளின் நலனை தெரியப்படுத்தவும்.. இமா / செபா ஆன்டி இவர்களின் தொலைபேசி அறிந்தவர்கள் பேசினால் சொல்லுங்க.. இப்போதைக்கு செல்போன் வேலை செய்யுமா என்றும் தெரியலை...

நியூசியில் இருக்கும் நமது அருசுவை தோழிகள் பத்திரமாக இருக்க இறைவனை வேண்டுகிறேன்...

"10 வது முறை விழுந்தவனைப் பூமி முத்தமிட்டுச் சொன்னது - "9 முறை எழுந்தவனல்லவா நீ?"..

எந்த தீங்கும் நேராமல் இறைவன் துணை இருக்க வேண்டுகிறேன்.

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

இமா பத்திரமாக இருப்பதாக அருசுவை தோழி போன் செய்து சொன்னார்...

"10 வது முறை விழுந்தவனைப் பூமி முத்தமிட்டுச் சொன்னது - "9 முறை எழுந்தவனல்லவா நீ?"..

நானும் இதுபற்றி நினைத்தேன்.....

தொடர்பு கொண்டு தெரிவித்த தோழிக்கு நன்றி.
வேறு யார் யார் அறுசுவை தோழிகள் அங்கு இருக்கிறார்கள் என தெரியவில்லை..
நம் தோழிகள் உட்பட அங்கிருக்கும் அனைத்து உள்ளங்களுக்கும் உயிர்களுக்கும்
நலமுடன் இருக்க பிரார்த்திப்போம்.

புரியாத பிரியம் பிரியும் போது புரியும்.

நாம் நலம்.

‍- இமா க்றிஸ்

உங்களை நினைத்து கொண்டே டைப் செய்து பார்த்தால் உங்களின் பதில்..
நலமாய் இருப்பதில் மகிழ்ச்சி அம்மாவும் சுகம்தானே...?
கவனமாக இருங்கள்....
அன்புடன்
இளவரசி

புரியாத பிரியம் பிரியும் போது புரியும்.

இமா !

{{XOXOXO}}

"10 வது முறை விழுந்தவனைப் பூமி முத்தமிட்டுச் சொன்னது - "9 முறை எழுந்தவனல்லவா நீ?"..

நம் அறுசுவை தோழிகள் உட்பட நியூசிலாந்தில் வாழும் அனைத்து மக்களும் எவ்வித பாதிப்புமின்றி மீண்டுவர இறைவனை வேண்டிக் கொள்கிறேன்.

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

உறக்கத்தில் இருந்த எனக்கு வாணி சொல்லித் தான் தெரியும். செபாம்மா இன்னும் எழவில்லை என்று நினைக்கிறேன்.

நியூசிலாந்து இரண்டு பிரதான தீவுகளால் ஆனது. நாம் வசிப்பது வடக்குப் பகுதியில் உள்ல தீவில், Auckland எனும் இடத்தில். நிலநடுக்கம் ஏற்பட்டது தென் பகுதித் தீவில், Christchurch எனும் இடத்தில். அழகான இடம்.

நியூசிலாந்தில் அடிக்கடி எங்காவது இப்படி நிலநடுக்கம் ஏற்பதுவது உண்டு. ஆனால் இம்முறை நடந்துள்ளது கொஞ்சம் பெரிதாகத் தான் இருக்கிறது; நகருக்குப் பாதிப்பு ஏற்படுத்தி உள்ளது. கட்டிடங்கள், தெருக்களுக்குப் பாதிப்பு ஏற்பட்டு இருக்கும். ஆனாலும் பல இடங்களில் அப்படி எதும் ஆகவில்லை. மின்சாரம் துண்டிக்கப்பட்டிருக்கிறது. அதனால் மக்கள் போக்குவரத்து மற்றும் சிரமங்களுக்குள்ளாகலாம். குடிநீர்க் குளாய்களும் உடைந்திருக்கும். மக்களுக்கு உயிற்சேதம் ஏற்பட்டதாகத் தெரியவில்லை, காயமடைந்திருக்கிறார்கள்.

எப்பொழுதும் தயாராக இருக்கவேண்டும், குறைந்தது 3 நாட்களுக்கான சப்ளை ஒவ்வொரு வீட்டிலும் இருக்க வேண்டும் என்று தான் எல்லோருக்கும் அறிவுறுத்துவார்கள். ஓரளவு தயாராக இருப்போம். இதுவரை தேவை ஏற்படவில்லை.

எங்கள் குடும்பத்தாரைத் தவிர வேறு சிலர் நியூசிலாந்தைச் சேர்ந்தவர்கள் அறுசுவையில் உறுப்பினர்களாக இருக்கிறார்கள். எந்த இடத்தைச் சேர்ந்தவர்கள் என்பது தெரியவில்லை. அவர்கள் நலமாக இருக்க வேண்டும் என்பது எங்கள் பிரார்த்தனை.

‍- இமா க்றிஸ்

அன்பு இலா & வாணி, மனதைத் தொட்டு விட்டீர்கள். என்ன சொல்வதென்றே தெரியவில்லை. இப்படி அன்பு உள்ளங்கள் நட்பாகக் கிடைத்தமைக்கு அட்மினுக்கும் அறுசுவைக்கும் என் நன்றிகள்.

தனியே இங்கு இருக்கிறோம். பாதிப்பு என்று எதுவும் இல்லாவிட்டாலும் மனதுக்குக் கஷ்டமாக இருக்கிறது. இப்படி எங்களைப் பற்றிச் சிந்திக்கும் அன்பு மனங்கள் இருப்பது எவ்வளவு ஆறுதலாக இருக்கிறது தெரியுமா.

அதிகாலை 4.30க்கு நடந்திருக்கிறது. அதனால் எங்களுக்குத் தெரியவில்லை. விழித்திருந்த உலகிற்குச் சுடச்சுடச் செய்தி கிடைத்திருக்கிறது. இந்தச் சொற்ப நேரத்தில் இலா விடாமல் எங்கெல்லாம் முடியுமோ அங்கெல்லாம் என்னை விசாரித்திருந்தார். ஒன்றிரண்டு இடமல்ல, போகுமிடமெல்லாம் பதிவு கண்டேன். என்னை யாரழைப்பார் இந்தக் காலை வேளை என்று சிந்தித்துத் தொலைபேசியை வாங்கினால்... வாணி. எனக்குச் சகோதரிகள் இல்லை. அறுசுவையில் உள்ளவர்கள்தான் தற்போது எல்லாம். ஒரு நாள் உங்களை நேரில் காண வேண்டும்.

எம்மை அன்போடு விசாரித்த இலா, வாணி, ஆமினா, இளவரசி, கல்பனா மற்றும் வேறு இடங்களில் விசாரித்திருந்த அறுசுவை உறவுகளுக்கும் என் மனங்கனிந்த நன்றிகள்.

அன்புடன்
இமா, க்றிஸ், அலன்
& செபா

‍- இமா க்றிஸ்

மேலும் சில பதிவுகள்