Paralysis

எங்க அப்பாவுக்கு paralysis attack ஆகி இருக்கு. அவரால் எதுவும் சாப்பிட முடியல. ஒரு மாதமா மூக்கு வழியா ட்யூப் போட்டு liquid food கொடுத்தோம். இப்ப அந்த ட்யூப் எடுத்துடறார். வாய் வழியா சாப்பிட வைக்க ரொம்ப கக்ஷ்ட்மா இருக்கு. சுத்தமா சாப்பிட மாட்டேங்கறார். வாழைப்பழம் மட்டும் சாப்பிடறார். ஆனா தண்ணீர் சுத்தமா குடிக்க மாட்டேங்கறார். டாக்டர் தண்ணீர் குடித்தால்தான் எதுவும் மாத்திரை கொடுக்க முடியும். இல்லைனா side effect ஆகும்னு சொல்ரார். அவராத்தான் சாப்பிடனும். try panni சாப்பிட வைங்கனு சொல்றார். வேற வைத்தியம் எதுவும் இல்ல இதுக்கு phsiotherepy தவிர அப்படினு சொல்றார். எஙக அப்பாவுக்கு உடம்புல வேற எந்த வியாதியும் இல்ல. அதனால ஒரளவுக்கு தாங்கறார். அவ்ருக்கு வய்து 70க்கு மேல ஆகுது. ரொம்ப கக்ஷ்டமா இருக்கு பாக்கறதுக்கு.

இங்க நிறைய அனுபவசாலிகள் இருப்பீங்க. இந்த மாதிரி paralysis attack ஆனவங்களை பாத்து இருக்கலாம். உங்களுக்கு தெரிஞ்ச, கேட்ட, பாத்தவங்களுக்கு எப்படி சரி பண்ணினாங்க, என்ன treatment கொடுத்தாங்கனு சொன்னா ரொம்ப usefulla இருக்கும் . pls உங்க idea சொல்லுங்க.

mala

மாலா நீங்க சொல்லும் பொழுதே ரொம்ப கஷ்ட்டமா இருக்கு இதைபற்றி எனக்கு தெரியவில்லை தோழிகள் யாரவது வந்து கண்டிப்பா சொல்லுவாங்க உங்கள் தந்தை விரைவில் குணமடைய ஆன்டவனை பிராதிக்கிறேன், கவலை வேண்டாம்.

அன்புடன்
நித்யா

மாலா, படிக்கும் போது மிகவும் கஷ்டமாக இருந்தது. என் கணவரின் தாய்மாமாவிற்கு 8 மாதங்கள் முன்பு பாராலிஸிஸ் அட்டாக் வந்துவிட்டது. நீங்கள கூறிய அனைத்தும் அவரிடமும் உள்ளது. இன்று வரை அவரிடம் பெரிதாக எந்த முன்னேற்றமும் இல்லை. மிகவும் வருத்தமாக உள்ளது. கடவுளை நம்புவோம். ஆனால் அவர் முன்பு சுய நினைவு இல்லாமல் இருந்தார். இப்போது அதில் சற்று முன்னேற்றம் உள்ளது. மற்றபடி ஆகாரம் சிறிது சிரமமே. ஒரு குழந்தையை கவனித்துக்கொள்வது போல் கவனித்துக்கொள்ள வேண்டியுள்ளது. உங்க அப்பா விரைவில் குணமடைய கண்டிப்பா இறைவனை வேண்டுகிறேன். கவலைப்படாதீா்கள் மாலா. கண்டிப்பாக அனுபவ சாலிகள் யாராவது பதிவு போடுவார்கள். நம்பிக்கையே வாழ்க்கை.

"செய்க தவம், தவமாவது அன்பு செலுத்துதல்"

ராதா ஹரி

Thanks Radha & nithya too வேறு யாராவது இது பத்தி சொல்லுவாங்கனு wait பண்ணிட்டு இருக்கேன். தெரிஞ்சவங்க , பாத்தவங்க சொல்லுங்களேன்.
mala

மேலும் சில பதிவுகள்