தேதி: September 4, 2010
பரிமாறும் அளவு:
ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்
சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்
மொத்த நேரம்: 40 நிமிடங்கள்
கோவக்காய் சர்க்கரை வியாதிக்கு மிகவும் நல்லது. குறிப்பாக சர்க்கரை வியாதி உள்ளவர்களுக்காக திருமதி.ஜலீலா அவர்கள் அறுசுவையில் கொடுத்துள்ள குறிப்பினை பார்த்து திருமதி. இளவரசி அவர்கள், அளவுகளில் சிறிது மாற்றம் செய்து இந்த குறிப்பினை வழங்கியுள்ளார்.
கோவக்காய் - 10
வெங்காயம் - இரண்டு
தக்காளி - ஒன்று
புளி - கொட்டை பாக்களவு
வறுத்து அரைக்க:
காய்ந்த மிளகாய் - ஐந்து
தனியா - ஒரு மேசைக்கரண்டி
அரிசி - ஒரு தேக்கரண்டி
கடலைப்பருப்பு - ஒரு தேக்கரண்டி
சீரகம் - ஒரு தேக்கரண்டி
மிளகு - அரை தேக்கரண்டி
தேங்காய் துருவல் - ஒரு மேசைக்கரண்டி
பொட்டுக்கடலை - ஒரு தேக்கரண்டி
தாளிக்க:
எண்ணெய் - ஒரு மேசைக்கரண்டி
காய்ந்த மிளகாய் - இரண்டு
பச்சை மிளகாய் - இரண்டு
பூண்டு - இரண்டு பல்
மல்லி தழை - சிறிதளவு









Comments
இளவரசி,
இளவரசி,
நல்ல ரெசிப்பி. அழகா செய்து காட்டிருக்கீங்க.
வாழ்த்துக்கள்.
நன்றி
குறிப்பினை வெளியிட்ட அட்மின் நண்பர்களுக்கு நன்றி.
ஹர்ஷா தங்களின் அன்பான பின்னூட்டத்திற்கு நன்றி :-)
புரியாத பிரியம் பிரியும் போது புரியும்.
கோவைக்காய் புளி குழம்பு!
உ
இளவரசி!
நான் கோவைகாயை கறி பண்ணிருக்கேன்! புளி குழம்பும் பண்ணலாமா!
வாழ்க வளமுடன்!
அன்புடன்
மாமி (எ) மோகனா ரவி...
மோகனா மாமி
ஆமாம் மாமி புளிகுழம்பை ஜலீலா மேடம் குறிப்பை பார்த்து தான் செய்தேன்(நன்றி ஜலீலா)
மற்றபடி சாம்பார் ,குருமா,பொரியல் எல்லாமே இந்த காயில் செய்வேன்.
கலந்த சாதம் மாதிரி கூட பண்ணலாம்.
என்னோட கிட்ஸ் கோவக்காய் ரைஸ் பாருங்க...அது மாதிரி செய்தாலும் சுவைக்கும்.
தங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி மாமி
புரியாத பிரியம் பிரியும் போது புரியும்.
இளவரசி மேடம்
இளவரசி மேடம்,
குழம்பு கலர்புல்லா இருக்கிறது
கோவைக்காய் கிடைத்தால் செய்கிறேன் (கிடைக்கணுமே!!!)
மேலும் பல குறிப்புகள் தந்து அசத்த வாழ்த்துக்கள்
என்றும் அன்புடன்,
கவிதா
கோவைக்காய்
சுவையாகத் தெரிகிறது. அடுத்த தடவை கடைப்பக்கம் போகும்போது வாங்கிவிட வேண்டியதுதான். ஒரு பொழுதும் சாப்பிட்டது இல்லை.
- இமா க்றிஸ்
கவிதா,இமாம்மா
கவிதா தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி....கோவக்காய் கிடைக்கலன்னா சொல்லுங்க ..பார்சல் அனுப்பறேன்...ஆனா எந்த நாட்டில இருக்கீங்க நீங்கன்னு தெரியலயே...:-)
இமாம்மா,இது கொஞ்சம் காரசாரமாக இருக்கும்..சுவையில் கொஞ்சம் நாகர்கோவில் தீயல் மாதிரி இருக்கும்...சர்க்கரை வியாதிக்கு நல்லது அதனால கண்டிப்பா சாப்பிடுங்க...வருமுன் காப்பது நல்லதுதானே..தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றிம்மா
புரியாத பிரியம் பிரியும் போது புரியும்.
கோவக்காய் புளிக்குழம்பு
இளவரசி.. நல்ல குறிப்புப்பா.. நான் கோவக்காய் உபயோகித்து கறி செய்வேன் அல்லது பஜ்ஜி போடுவேன். இது புதிதாக இருக்கிறது. செய்து பார்த்துவிட்டு சொல்கிறேன். மிக்க நன்றி தங்கள் குறிப்புக்கு... பார்க்கவே சாப்பிடனும்போல இருக்கு
"செய்க தவம், தவமாவது அன்பு செலுத்துதல்"
ராதா ஹரி
ராதா
உங்கள் பின்னூட்டத்திற்கு நன்றிப்பா...
நான் இதுவரை கோவக்காயில் பஜ்ஜி செய்ததில்லை.இனி செய்து பார்க்கிறேன்..:-
புரியாத பிரியம் பிரியும் போது புரியும்.