கத்தரிக்காய் பொரியல்

தேதி: September 4, 2010

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 4.4 (5 votes)

தட்டைப்பயறு இரும்பு சத்து நிறைந்தது கூந்தல் வளர்ச்சியின்மை, அனிமிக் நோய் உள்ளவர்கள் தட்டைப்பயறை தொடர்ந்து சாப்பிட வேண்டும் .கர்ப்பிணிகள் தட்டைபயறை உணவில் சேர்த்து கொள்ள வேண்டும்.

 

கத்தரிக்காய் - 4
முளைக்கட்டிய தட்டைப்பயறு - அரை கப் (வேகவைக்கவும்)
வெங்காயம் - ஒன்று
தக்காளி - ஒன்று
ஆல் பர்பஸ் பொடி - ஒரு தேக்கரண்டி
உப்பு - தேவைக்கு ஏற்ப
மிளகாய் தூள் - 2 தேக்கரண்டி
மஞ்சள் பொடி - ஒரு தேக்கரண்டி
எண்ணெய், கடுகு, சீரகம், கறிவேப்பிலை - தாளிக்க
கொத்தமல்லித்தழை - சிறிது அளவு


 

கத்தரிக்காய், வெங்காயம், தக்காளியை நறுக்கி வைக்கவும். முளைக்கட்டிய தட்டைப்பயிறை வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, சீரகம், கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவும்.
அதில் நறுக்கி வைத்திருக்கும் வெங்காயம், தக்காளியை சேர்த்து வதக்கவும்.
வதங்கியதும் கத்தரிக்காய் துண்டுகளை சேர்த்து வதக்கிவிட்டு அதனுடன் வேகவைத்த தட்டைப்பயறை சேர்த்து நன்கு வதக்கவும்.
அதில் மிளகாய் தூள், மஞ்சள் தூள், உப்பு, தண்ணீர் சேர்த்து வேகவைக்கவும்.
எல்லாம் சேர்ந்து சுருள வெந்ததும் ஆல் பர்பஸ் பொடி, கொத்தமல்லித்தழை சேர்த்து கிளறி இறக்கவும்.
சத்தான கத்தரிக்காய் தட்டைப்பயிறு பொரியல் தயார்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

கவிதா,
எனக்கு கத்தரிக்காயுடன், பயறு வகைகள் ரொம்ப பிடிக்கும். உங்க டிஷ் பார்க்கவே சாப்பிடனும் போல இருக்கு. கண்டிப்பா செய்து பார்க்கிறேன்.வாழ்த்துக்கள்.

முளைப்பயிறு சேர்த்து செய்திருப்பது நல்ல ஐடியா...
ரெசிப்பி பார்க்கவே நல்லா இருக்கு

புரியாத பிரியம் பிரியும் போது புரியும்.

அடுத்த ஒரு சத்தான குறிப்பு

கவிதா கலக்குறீங்க. இன்னும் பல குறிப்புகள் தர வாழ்த்துக்கள்!!

புலாவ்மசாலா என்னன்ன இருக்கும்னு கேட்டுருந்தீங்க. அங்கேயே பதில் குடுத்துருக்கேன். நீங்க பாத்தீங்களா இல்லையான்னு தெரியல. அதான் கேட்டேன்...

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

எனது குறிப்பை வெளியிட்ட அட்மின் அவர்களுக்கு மிக்க நன்றி

என்றும் அன்புடன்,
கவிதா

அன்பரசி,

செய்து சாப்பிட்டு பாருங்க

உங்கள் வருகைக்கும்,பின்னூட்டத்திற்கும் நன்றி

என்றும் அன்புடன்,
கவிதா

இளவரசி மேடம் ,

செய்து சாப்பிட்டு பாருங்க நல்லா இருக்கும்

உங்கள் வருகைக்கும்,பின்னூட்டத்திற்கும் நன்றி

என்றும் அன்புடன்,
கவிதா

ஆமினா ,

சென்று பார்க்கிறேன்

செய்து பாருங்க உடலுக்கு நல்லது

உங்கள் வருகைக்கும்,பின்னூட்டத்திற்கும் நன்றி

என்றும் அன்புடன்,
கவிதா

கவிதா, நான் இதே மாதிரி புளிசேர்த்து குழம்பா வச்சிடுவேன்.ஆனா உங்க முறைப்படி பொரியலா செய்தேன் மிகவும் அருமை.
இதே மாதிரி புதுசு புதுசா நிறைய ரெசிப்பி கொடுங்க.நீங்க செய்யற எல்லாமே வித்தியாசமா இருக்கு.

புருசெல்ஸ் கடைசல்ல ஒரு சந்தேகம் பதில் சொல்லுங்க, கேள்வி அங்கே இருக்கு...

உமா,
உங்கள் வருகைக்கும்,பின்னூட்டத்திற்கும் நன்றி

என்றும் அன்புடன்,
கவிதா