நான் புதிய அம்மா. எனக்கு குழந்தையை வளர்க்க வழி காட்டுங்கள்

எனக்கு 20 நாட்களுக்கு முன்பு பெண் குழந்தை பிறந்தது. சிசேரியன் என்பதால் முதலில் புட்டி பாலை பழக்கிவிட்டார்கள் அதன் பின் தாய் பால் குடிக்க மாட்டேன் என்கிறாள். வருந்த வேண்டிய விஷயம் என்னவென்றால் இப்போது எனக்கு தாய் பால் சரியாக வரவில்லை. அவளும் சுத்தமாக குடிக்க மாட்டேன் என்கிறாள்.
புட்டி பால் கொடுபதால் குழந்தைக்கு அடிக்கடி நோய் வருமா என் சந்தேகத்தை தீர்த்து வையுங்கள் தோழிகளே
எனது குழந்தையை நல்ல படியாக வளர்க வழி கூறுங்கள் தோழிகளே ....

கவலை படாதீங்கோ! நன்னா பால் குடுக்கற எடத்துல தேனை தடவி சப்ப

விடுங்கோ! பால் குடிக்கற மட்டும் விடாதீங்கோ! புட்டி பாலை பழக்கினா ரொம்ப

கஷ்ட்டம்! கோந்தை குடிக்க ஆரம்பிச்சிடுத்துனா ஒங்களுக்கு பால் நன்னா ஊறும்!

இல்லாட்டி டாக்டர் கிட்டே கேட்டேள்னா பால் ஊற மாத்திரை தருவா!

வாழ்க வளமுடன்!
அன்புடன்
மாமி (எ) மோகனா ரவி...

நந்தினி கண்டிப்பாக டாக்டர் ஐ கேட்டு மாத்திரை சாப்பிடுங்கள். இல்லாவிட்டால் குழந்தை எப்போதும் பால் குடிக்கமாட்டாள். என் குழந்தையும் பாலே குடிக்கவில்லை. வேறு டேஸ்ட் தெரிவதற்குள் தாய்ப்பாலை பழக்குங்கள். நானும் தாய்ப்பால் பத்தாது என்று எண்ணி புட்டிப்பால் கொடுத்துவிட்டேன். குழந்தை எடை அதிகரிக்கவே இல்லை. அடிக்கடி உடம்பு சரி இல்லாமல் போய் விடும்.

நான் தேன் தடவின தேனை மட்டும் சப்பிட்டு அழ ஆரம்பிசிட்ரா....
டாக்டர் மாத்திரை சாப்பிட்டா பால் கட்டிடுமோ நு பயமா இறுக்கு

என்றும் அன்புடன்
நந்தினி

நானும் கஷ்டப்பட்டு ட்ரை பண்ணிட்டு தான் பா இருக்கேன்

என்றும் அன்புடன்
நந்தினி

நந்தினி முடிந்த வரை தாய்ப்பால் மட்டுமே குடுத்து பழக்கபடுதுங்கள். முதல் 6 மாதம் வரை குழந்தைக்கு கண்டிப்பாக தாய்ப்பால் குடுக்க வேண்டும். குழந்தைக்கு தேவையான அணைத்து ஊட்டசதுக்களும் தாய்ப்பாலில் தான் இருக்கு. தாய்ப்பாலில் நல்ல பக்டீரியா இருக்கிறது. அது குழந்தையின் immune சிஸ்டத்தை develope பண்ணி கெட்ட bacteria வை எதிர்க்கும். தாய்ப்பால் குடுக்கும் தாய்மார்களுக்கு breast cancer வருவதற்கான வாய்புகள் மிக மிக குறைவு. தொடர்ந்து முயற்சி செய்து கொண்டு இருங்கள். பசிக்கும் பொது புட்டிபால் குடுக்காமல் தாய்பால் கொடுங்கள். குழந்தை கொஞ்சம் கொஞ்சமாக பழகி விடும். அப்படியும் குடிக்கவில்லை என்றால் தாய்பாலை எடித்து பாட்டிலில் ஊற்றி குழந்தையை குடிக்க வையுங்கள். முதலில் taste பழகிய பின் பிறகு நேரடியாக நீங்களே குடுங்கள். குழந்தை குடிக்க குடிக்க தான் பால் ஊரும். nonveg , பால், பழங்கள், காய்கறிகள், சோயா பீன்ஸ், rusks. niraya saapidungal. பூண்டு குழம்பு, பூண்டு நெய்யில் வருது சாதத்தில் பிசைந்து சாப்பிடுங்கள்.

கார்த்திகா ஜெகன்
what's done to children, they'll do to society

ட்ரை பன்னிகிட்டே இருங்க..எனது உறவினர் பெண்ணுக்கும் சிசேரியன் இப்படியே புட்டிப் பால் கொடுத்து பழகி விட்டது..ஆனால் அவளும் விடாமல் தாய்ப்பாலுக்கு பழக்கி விட்டாள்..முதலில் அவள் நிப்பிள் ஷீல்ட் வாங்கி பொருத்தி பழக்கினாள் பிறகு அதனை அகற்றி பழக்கலாம்..இப்படியே விட்டால் பாலும் குறைந்து விடும்..அதுவரை எக்ஸ்ப்ரெஸ் பன்னிக் கொண்டாவது இருங்க.குழந்தை தூங்கும்பொழுது இப்படி ட்ரை பன்னி பாருங்க

இல்லை தூங்கும் போது தாய் பால் கொடுக்க கூடாது...அது,ஆபத்தாக ஆகும்....இது என் கணவர் கூட வேலை பார்ப்பவருக்கு நடந்தது...முடித்தவரை முழித்து இருக்கும் போது பால் கொடுத்தல் நல்லது.

தாய்மார்களுக்கு பால் சுரக்கவில்லை என்றால் அதற்கு சிகிச்சை அளிக்க இப்போது தனியாக லேடி டாக்டர்ஸ் இருக்கிறார்கள். குழந்தை வாய் வைத்து சிப் பண்ண பண்ணத் தான் பால் சுரக்கும். குழந்தை வாய் வைத்தாலே நமது பிரஸ்டில் உள்ள ஹார்மோன் சுரந்து குழந்தைக்கு தாய்ப்பால் கிடைக்கச் செய்யும்.

எனவே, அன்புத் தோழியே, முடிந்த வரை தாய்ப்பாலையே உனது மகளுக்கு கொடு. இதில் நிறைய நன்மைகள் உள்ளன. தாய்ப்பால் மட்டுமே குழந்தையின் 6 மாத காலம் வரை போதுமானது. வேறு எந்த உணவும் கொடுக்கத் தேவையில்லை. தாய்ப்பால் கொடுக்கும் வரை குழந்தைக்கு சளி பிடிக்காது. மேலும் எந்த வித உடல் உபாதைகளும் ஏற்படாது.

அதிலும் பெண் குழந்தையாக இருப்பதால், பிற்காலங்களில் ஏற்படும் பிரட்சனைகளைத் தவிர்க்க கண்டிப்பாக தாய்ப்பால் மிக அவசியம்.

புட்டி பாலை அறவே ஒழி. புட்டி பால் புகட்டுவதால் குழந்தைக்கு சளி, வயிற்றுப்போக்கு, சத்துக்குறைவு, சரியான வளர்ச்சி இன்மை போன்றவை ஏற்படலாம்.

அதே போல் பசும்பால், சர்க்கரைத் தண்ணி, கழுதைப்பால் போன்றவற்றையும் தராதே.

தோழி, எனக்கும் ஒரே மகள் பெயர் ஸ்ரீ ரங்கப்ரியா, அவளுக்கு 4 வயது ஆகின்றது. அவளுக்கு 8 மாதம் வரை தாய்ப்பாலைத் தவிர வேறு எந்த உணவையும் கொடுத்ததில்லை. 8 மாதத்திற்குப் பின் சாதம் ஊட்ட ஆரம்பித்துவிட்டேன். இரண்டரை வயது வரை அவளுக்கு தாய்ப்பால் தவிர வேறு பால் வாசனையே தெரியாமல் வளர்த்தேன். 3 வயதிலிருந்து டம்ளரில் பால் குடிக்க வைத்தேன். அவளுக்கு ஃபீடிங் பாட்டிலே வாங்கவில்லை.

இப்போது அவள் ஆரோக்கியமாக இருக்கிறாள். ஸ்கூலில் அவள் தான் முதல் மாணவியாக வருகிறாள். அனைத்திலும் first.

ஒன்று செய், அதுவும் நன்று செய்.
ரங்கலஷ்மி லோகேஷ்

எனக்கு பதில் அளித்த அணைத்து தோழிகளுக்கும் மிக்க நன்றி
என்னபா சொல்றீங்க புட்டி பால் தந்தா குழந்தை புத்திசாலியா வளராதா?
நான் என்னபா செய்ய என் குழந்தை தாய் பால் குடிக்க பழக மாட்டேன்றாலே
அது போக தனியாக எடுத்து பாட்டிலில் ஊற்றி கொடுக்கும் அளவுக்கு என்னிடம் பால் இல்லை
டாக்டர் உங்கள் மகள் குடித்தால் தான் பால் ஊரும் என்று சொல்றாங்க
புட்டி பாலின் தீமைகள் எனக்கும் தெரியும் ஆனால் என்ன பண்றதுன்னே எனக்கு தெரியல

இந்த அறுசுவையில் புட்டி பாலில் வளர்ந்த குழந்தைகள் பற்றி எனக்கு கொஞ்சம் சொல்லுங்கள் ப்ளீஸ்

என்றும் அன்புடன்
நந்தினி

புட்டி பால்தான் இப்ப கொடுத்தாகனும் வேற வழியே இல்லை அப்படீங்கற எண்ணத்தை முதலில் மறந்துருங்க. தாய்ப்பால்தான் என் குழந்தைக்கு சரியான உணவு அது அவளுடைய உரிமைனு நினைங்க. தாய்ப்பால் எப்படியாவது கொடுக்கணும்னு முயற்சி பண்ணுங்க.

எனக்கும் சி-செக்சன். என் பையனும் பால் குடிக்கத்தெரியாமல் அழுதான். அப்ப அங்க வந்த குழந்தைகள் நல மருத்துவர் தண்ணிய என் மார்பில் ஊற்றி அந்த தண்ணீரை குடிக்கவைத்தார். இப்படியே பசிக்கு அழும்போதேல்லாம் செய்யச்சொன்னார். இரண்டு மூன்று முயற்சியில் பால் குடிக்க ஆரம்பித்தான். இரண்டு வயதுவரை தாய்ப்பால் கொடுத்தேன். தாய்ப்பாலில் இருக்கும் உயிர்சத்து வேறு எந்தப் பாலிலும் இல்லை.

குழந்தை வளர்ப்பில் தளிகா அழகா சொல்லியிருப்பாங்க, படிங்க.

அந்த லின்க் இதுதான்
http://www.arusuvai.com/tamil/node/14968

Don't Worry Be Happy.

மேலும் சில பதிவுகள்