பல் கடிக்கிறான்

என் குழந்தைக்கு 1 வயது ஆக போகிறது. கீழே 2 பல், மேலே இங்கொன்று அங்கொன்று மாகபக்கவெட்டுப்பல் வருது. அவன் எப்பொதும் பல்லை கடித்து கொண்டு இருகிறான். நான் காரட் துருவி தந்தென். mash potato செஞ்சும், french fries செய்து தந்தென். சாப்பிட வில்லை. ஆனால் எப்பொதும் பல்லை நர நர என்று கடித்து கொண்டு இருக்கிறான். sound கேக்குது. help me pls

டாக்டரிடம் கொண்டு போய் வயிற்றில் பூச்சி உண்டா என்று பாருங்க..இல்லையென்றால் சும்மா ஒரு ஹேபிட்டாக இருக்கலாம்.

சாப்பாடு எல்லாம் சாப்பிடறான். இந்த ஹேபிட் எப்படி நிறுத்துவது

jaya

என் பைய்யனுக்கும் 1 வயது பல்லை கடித்து கொண்டிருந்தான்..டாக்டரிடம் போனேன் ..எதேச்சையாக அப்படின் செய்து பார்கக் சத்தம் கேட்க அந்த ஆர்வத்தில் அவர்கள் திரும்ப கடிப்பதாக சொன்னார்..அல்லது வேறு பல் முளைப்பதாலும் இருக்கலாம் கவலைப்பட தேவையில்லை சீக்கிரம் மாறி விடும் என்றார்.
நான் அவன் கடிக்கும்போதெல்லாம் வாயை லேசாக தட்டி நோ நோ என்பேன் இப்பொழுது செய்வதில்லை.

பெயர் சரிதானே! ;)
//sound கேக்குது.// அதுதான் காரணமே. ;))
அது எல்லாம் தாங்களாவே வேற புது சவுண்டு போட ஆரம்பிச்சதும் விட்டுருவாங்க. நீங்க டென்ஷனாகாதீங்க. வேணுமானா புதுசா வேற சத்தம் போடுற பொம்மை ஏதாச்சும் வாங்கிக் கொடுங்க, சரியாகிரும்.

‍- இமா க்றிஸ்

உங்கள் அனைவருடைய பதிலுக்கும் மிக மிக நன்றி.

எனக்கு மிகவும் உதவியாக இருந்தது. நான் கண்டிப்பாக உங்கள் அறிவுரை படி பின் பற்றுவேன்.

jaya

மேலும் சில பதிவுகள்