தென்றல் தொலைகாட்சி நிகழ்ச்சி

இந்த நாடகத்தை பார்க்கும் போது எனக்கு ஒரே சந்தோசம்.இந்த கதை பிடித்தவர்கள் வந்து என்னுடன் பகிர்ந்துக்கொள்ளுங்களேன்.

எனக்கும் இந்த தொடர் மிகவும் பிடிக்கும். மே மாசம் வரை பார்த்தேன். இங்கே பார்க்க முடியவில்லை. ஆனாலும் அவ்வப்போது ஆன்லைனில் பார்ப்பேன். துளசிக்கு கல்யாணம் தடைபட்ட பின் தான் நாடகம் விறுவிறுப்பாக போகிறது. அதற்கு முன் இந்த சீரியல் எனக்கு பிடிக்காது. இப்போ நல்ல கதை நகர்வதால் பார்க்கிறேன்

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

எனக்கு மிகவும் பிடித்த தொடர். ஏன் என்று புரியவில்லை, துளசி என்ற பெயர் மிகவும் பிடிக்கும் என்பதாலா இல்லை தொடர் நன்றாக உள்ளதா என்று தெரியவில்லை, தென்றல் முடியும் வரை ஏர்டெல் சூப்பர் சிங்கர் கூட இடைவேளையில் தான் பார்ப்பேன்.என்னை மிகவும் கவர்ந்துள்ளது. துளசியின் பாட்டியை மிகவும் பிடிக்கும்.

அன்புடன்
பவித்ரா

எனக்கும் இந்த தொடர் மிகவும் பிடிக்கும்.ஒருவாறு துளசியின் கலியாணம் முடிந்தது.இனி அவரின் படிப்பு எப்படி போகுமோ தெரியவில்லை.
துளசியின் சித்தியின் நடிப்பும் எனக்கு பிடித்திருக்கின்றது.நான் மிஸ் பண்ணாமல் பார்ப்பேன்.தவறினால் நெற்றில் பார்ப்பேன்.

தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.

நெட்டில் எப்படி பார்ப்பது. எனக்கு தெரியாது.எனக்கும் மிகவும் ஆர்வமாக உள்ளது என்ன நடக்க போகும் என்று

தொடரந்து பார்ககிரீங்களா

தென்றல் சீரியல் பரபரப்பாக போய் கொண்டிருக்கிறதே தவிர கதை சரியாக இல்லை துளசி தமிழை கல்யாணம் செய்துகொண்டது சரியே இல்லை. சாரு மேல்தான் பரிதாபம் ஏற்படுகிறது. துளசி படிப்பதற்காக அத்தனை போராடுகிறாள் ஆனால் எப்போதும் காதலுக்காக உருகிக்கொண்டே இருக்கிறாள்.எனக்கென்னவோ கோவமாக வருகிறது. சாருவை கெட்டவளாக காட்டியிருந்தால் கூட துளசி மேல் soft corner ஏற்படும்.தமிழ் செய்ததும் சரியில்லை சாரு உடன் நிச்சயம் ஆன பிறகு துளசியை காதலிப்பது நன்றாக இல்லை. தமிழின் அம்மா சண்டை போட்டது முற்றிலும் சரியே.

supera irukku aana saaru ethiriya katti irukkalam

அதிலும் துளசியின் பாட்டி துளசியிடம் எப்போதும் தமிழை வைத்து சீண்டிக்கொண்டே இருப்பதும் சகிக்கவில்லை. பிறகு துளசியின் அப்பா பாட்டியிடம் வயதிற்கு தகுந்தாற்போல் நடந்துகொள்ளுங்கள் என்று கூறியது நன்றாக இருந்தது. துளசியை தமிழ் கல்யாணம் செய்துகொள்ளும் சூழ்நிலை வராவிட்டால் தமிழ் சாருவையே கல்யாணம் செய்துகொண்டிருப்பார் இல்லையா? இது என்ன ஞாயம்?

நீங்க சொன்னதும் தான் கதை எனக்கு தெரியுது. அப்படியா? கல்யாணம் ஆச்சா? அப்படின்னா நீங்க சொல்வதை நான் முழுவதும் ஏற்றுக்கொள்கிறேன்.

ஏன்னா சாறு எந்த விதத்துலையும் தப்பு பண்ணாதவள். அவனையே நினைத்து மனதில் ஆசை வளர்த்து நிச்சயமும் முடிந்த பின் இன்னொரு கல்யாணம் பண்ணுவது போல் காட்டுவது பிடிக்கவில்லை தான். ஆனாலும் தமிழ் துளசியை திருமணம் செய்யாமல் சாறுவை செய்திருந்தால் கதை நகராது என நினைக்கிறேன். ஆரம்பம் முதலே ஏன் சாறு நிச்சயதார்த்ததின் போதே “ச்ச... இது ஏன் நடந்துச்சு? துளசிய கல்யாணம் பண்ணா தானே நல்லா இருக்கும். 2 பேரும் நல்லா ஜோடி” அப்படின்னு மனசு தோணுச்சு.

மீண்டும் பேசலாம்....
கவலபடாதீங்க. அடுத்து சாறு தான் வில்லியா மாறுவாங்க. “எந்த பாவமும் பன்ணாத என்னை இந்த நிலைக்கு ஆக்கிய துளைசியையும் தமிழையும் வாழ விட மாட்டேன்”னு சபதம் எடுத்து பல தொந்தரவு கொடுப்பாங்க (எத்தன நாடகம் பாத்துருக்கோம்?)

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

இது தவறு ரம்யா துளசியை அவ்வளவு அவமானப்படுத்தியது சரியில்லை அல்லவா.அவள் தமிழுக்கு திருமணம் நடைபெற போகின்றது என்று தெரிந்தவுடன் அவள் அவனை விட்டு விலகதானே நினைத்தால்.அவள் அவமானப்பட்டதால் அவனை திருமணம் செய்து கொண்டால் அவ்வளவுதான். அதோடு இல்லாமல் துளசியின் நிலமை அதில் சரியில்லை அவள் தவறு செய்யாத போதே அவள் மீது எவ்வளவு குற்றச்சாட்டு. ஆனால் சாரு அப்படி இல்லை அளுக்கு அவளுடைய குடும்பமே ஆதரவாக உள்ளதல்லவா.ஆனால் துளசிக்கு யார்ரும் ஆதரவாக இல்லை அல்லவா.....................

மேலும் சில பதிவுகள்