டவுட் ப்ளீஸ் ....

ஹெலோ தோழிகளே ....
நான் ப்ரீத்தி . அடுத்த மாதம் எனக்கு திருமணம் . கணவரோடு யூ எஸ் செல்ல இருக்கிறேன் . இப்பொழுது
அறுசுவை தளத்தில் இருந்து தான் என் சமையல் பாடங்கள் ஆரம்பித்து இருக்கின்றன.
(என் பெற்றோர் வேலைக்கு சென்று விடுவதால், அவர்களை தொந்தரவு செய்யாமல் அறுசுவை பக்கங்களையே அதிகம் கற்று கொள்கிறேன். அந்த வகையில் உங்கள் அனைவருக்கும் மிகவும் நன்றி .) :-) ;-)

என் வருங்கால கணவருக்கு சாம்பார் என்றால் மிகவும் பிடிக்கும் , அறுசுவை பக்கத்தில் a இருந்த கல்யாண சாம்பாரை இரு நாட்களுக்கு முன் ட்ரை செய்தேன் . கொஞ்சம் சுமாராக தான் வந்தது.

நான் அதிகம் சிரமப்பட்டது ,துவரம் பருப்பை வேக வைக்கவும் காய்கறி வெந்ததா இல்லையா என்று தெரியாமல் இருந்தது தான் .
தயவு செய்து எனக்கு துவரம் பறுப்பை எப்படி குக்கரில் வேக வைப்பது மற்றும் காய்கறிகள் வேக ,பச்சை வாசனை போக என்ன செய்ய வேண்டும் என்று சொல்லுங்களேன் .. ப்ளீஸ்..

ப்ரீத்தி உங்கள் வரவு நல்வரவாகுக! துவரம் பருப்பை குக்கரில் மூழ்கும் அளவு நீர் விட்டு மூன்று விசில் வச்சா போதும். காய்கள் வேக நேரம் 5 லிருந்து 10 நிமிஷதுக்குள்ள தான் ஆகும் அதன் அளவை பொறுத்து.
குக்கரிலேயே பருப்புடனும் போட்டு வேக வைக்கலாம்.
சமையல் என்பது ஒரு கலை அதை விரும்பி செஞ்சா உங்களுக்கே பிடிச்சி நிறைய செய்ய ஆரம்பிச்சுடுவீங்க. அறுசுவை இருக்கு பயமில்லாம வந்து கலக்குங்க(உங்க சாம்பாரைத்தான்)!!!
இன்னும் மத்த எல்லாரும் வந்து உங்களுக்கு ஈசி டிப்ஸ் நிறைய சொல்லுவாங்க.

வாழ்த்துக்கள்!!!!!!!

பிரீத்திக்கு, advance wishes. எதிலுமே பயப்படாம இருந்தா, செஞ்சா எல்லாமே நல்லா வரும். நீங்களாவது கல்யாணத்துக்கு முந்தியே கத்துக்கிறீங்க, அதுக்கு மேல அறுசுவை இணையதளம் இருக்கு.
ஆனா நான் கல்யாணத்துக்கு அப்புறம் தான் கத்துக்கவே ஆரம்பிச்சேன். அதுவும் எடுத்த உடனே தனிக்குடித்தனம் வச்சுட்டாங்க. அப்போ என்னிடம் நெட்டும் இல்லை. எனது கணவர் தான் சமைக்கக் கற்றுக் கொடுத்தார். இப்போ நல்லா சமைக்கிறேன்.

பிரீத்தி கவலைப்படாதீங்க அறுசுவை இருக்கரப்போ, எதுக்கு பயம்.

நல்லா ஒரு கலக்கு கலக்குங்க. வரவேற்கிறோம்

ரங்கலஷ்மி லோகேஷ்

ஒன்று செய், அதுவும் நன்று செய்.
ரங்கலஷ்மி லோகேஷ்

நான் இன்றுதான் வந்திருக்கேன்மா. துவரம் பருப்பை குக்கரில் வேக
வைக்க ஒன்றுக்கு மூன்று அளவு தண்ணீர் விட்டு 5 விசில் வரும்
வரை வேக விடனும். உங்க்ளிடம் மைக்ரொவெவ் ஓவன் இருக்கா
இருந்தால் காய்களை சுலபமாக வேக வைக்க லாம்.

ப்ரீத்தி

முதலில் என் வாழ்த்துக்கள். அறுசுவை பார்த்து சமையல்...என்று கேட்கும் போது என்னவோ சந்தோஷமாக இருக்கிறது. சாம்பார் செய்யும் போது பருப்புடன் ஒன்றுக்கு இரண்டு தண்ணீர் வைத்து இரண்டு சொட்டு எண்ணெய் மஞ்சள் தூள் பெருங்காயம் சேர்த்து மூன்று விசில் விடவும். காய்கறிகளை ரொம்பவும் வேகவிடாமல் சிறிதளவு உப்பு சேர்த்து வதக்கி 5 நிமிடம் மூடி வைத்தாலே வெந்து விடும். கடைசியாக தாளித்து கொட்டினால் வாசம் அதிகமாக இருக்கும். நீங்கள் செல்வியம்மா எழுதும் சமையல் அறிசுவடியை தொடர்ந்து படியுங்கள் உபயோகமாக இருக்கும். மேலும் சந்தேகம் இருந்தால் கேட்கவும்.

நன்றி
லாவண்யா

லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!

@POPS... #

hey thanks pa.. na iniku adhan try panen.. paruppu nala masinju vandhuchu..::):)

@Rengalakshmi.. #

லைட்டா வருமா வராதான்னு பயமா தன் இருக்கு .. ஹி ஹி ஹி.. :):) பட் பரவால.. அதான் நீங்க எல்லாம் இருக்கீங்களே.. :):)

:):) Lucky us..:):) enga daddy n wud be kooda nala samaipaanga.. nwadays its healthier to see our house-men helps us in kitchen.. :):)

@CHITRA...

thanks ka... :):) veetla oven ila ka.. :-|

@Lavanya

இன்னிக்கு ட்ரை பண்ணேன் பா .. நல்லா வாசனையா வந்துச்சு .. :):) சாம்பிள்க்கு கொஞ்சம் தான் செஞ்சேன் .. எங்க மம்மிக்கு ஆச்சர்யம் தாங்கல.. :):):) நெக்ஸ்ட் டைம் இன்னும் பெட்டரா வந்துரும் நு சொன்னாங்க ... :):)
செல்வியம்மா அரிச்சுவடி நேத்து தான் பாத்துட்டு இருந்தேன் .. will follow it for sure..

Thanku all for yr quick reply n wonderful help -tips.. enoda indha 2nd time sample sambara unga ellarukkum nan dedicate panraen .. ;););)...

அன்புத் தோழி பிரீத்திக்கு, நல்லா வந்ததுன்னு சொன்னா மட்டும் போதுமா? சீக்கிரமா எங்களை எல்லாம் சாப்பிடக் கூப்பிடுங்க, எல்லாரும் கண்டிப்பா வருவோம்
அதுக்காக் ஒருவழியா கல்யாண சாப்பாடு சாப்பிடுங்கோன்னு சொன்னே அப்புறம் அவ்வளவு தான்.

ஒன்றும் கவலைப்படாதீங்க, நீங்க சீக்கிரமாகவே நல்லா கத்துக்குவீங்க. அறுசுவைத் தோழிகள் எல்லாரும் உங்க பக்கம் சப்போர்ட்டுக்கு இருக்காங்க.

ரங்கலஷ்மி லோகேஷ்

ஒன்று செய், அதுவும் நன்று செய்.
ரங்கலஷ்மி லோகேஷ்

மேலும் சில பதிவுகள்