ஹாய்,
நான் புது வரவு. எல்லோரும் நலமா? நான் நலம். வணக்கம்.
எனக்கு1 1/2 வயதில் குழந்தை இருக்கிறான். அவன் கலர் கம்மி. கலர் ஆவதற்க்கு என்ன செய்வது, கொஞ்சம் புஷ்டி ஆவதற்க்கும் வழி சொல்லுங்கள்.
அன்புடன்,
மஹாலக்ஷ்மி.
ஹாய்,
நான் புது வரவு. எல்லோரும் நலமா? நான் நலம். வணக்கம்.
எனக்கு1 1/2 வயதில் குழந்தை இருக்கிறான். அவன் கலர் கம்மி. கலர் ஆவதற்க்கு என்ன செய்வது, கொஞ்சம் புஷ்டி ஆவதற்க்கும் வழி சொல்லுங்கள்.
அன்புடன்,
மஹாலக்ஷ்மி.
மஹா
கலரில் என்ன இருக்கிறது மஹா? மழலையின் சிரிப்பில் இல்லாததா? அதை விட்டு விட்டு குழந்தையின் அரோக்கியத்தில் கவணம் செலுத்துங்கள். தினமும் ஒரு பிடி நிலக்கடலையும், ஒரு பிடி பொட்டுக்கடலையும், ஒரு வாழைப்பழமும் கொடுங்கள். நிறைய காய் பழம் கீரை கொடுங்கள். நிறைய பாடல்கள் கதைகள் சொல்லிக்கொடுங்கள். புத்தகங்கள் வாசிக்க பழக்குங்கள். வாழ்த்துகள்
Try and try again until you reach the target.
Anitha
நன்றி அனிதா மேடம்
நன்றி அனிதா மேடம்
நீங்கள் சொல்ல்வது உன்மை தான்.நம் கவலை எல்லாம் மறக்க செய்வது குழந்தையின் சிரிப்பு தான்.உங்களது ஆலோசனை படி செய்துபார்க்கிறேன் ஆனால் அவன் வாழைப்பழம் சாப்பிடுவதே இல்லை. வாயை இருக மூடிக்கொள்கிரான்.எப்பொழுது பழம் கொடுக்க வேண்டும்? வேறு என்ன கொடுக்கலாம்?முட்டை டெய்லி கொடுக்கலாமா?
மகாலஷ்மி
மகாலஷ்மி, வணக்கம். நலமா? உங்கள் குழந்தை கலராக வர கடலை மாவை தேய்த்து குளிப்பாட்டி வாருங்கள். நல்ல நிறம் கிடைக்கும். இந்த வயதில் குழந்தைகளுக்கு எந்த உணவு வகைகளை கொடுத்தாலும் புஷ்டி ஆவார்கள். அவர்கள் நல்ல பசி எடுத்து சாப்பிட வேண்டும். பூச்சி மருந்து கொடுத்தீர்களா? வயிற்றில் பூச்சி இருந்தாலும் உடம்பு ஒல்லியாக இருக்கும். டாக்டரை கன்சல்ட் செய்த பிறகு கொடுங்கள். முட்டை தாராளமாக தரலாம். மீனும் கொடுங்கள். வாழைப்பழத்துடன் சிறிது தேன்கலந்து கொடுத்து பாருங்கள். அந்த இனிப்பு சுவையில் சாப்பிட்டாலும் சாப்பிடுவான். கவலைப்படாதீர்கள் குழந்தைகள் வளர வளர சரியாகும் :)
Natpudan,
Kalpana Saravana Kumar :)
A good friend sees the first Tear, catches the Second and stops the Third.
மகாலஷ்மி
மகாலஷ்மி, பொதுவாக நல்ல நிறம் உள்ளவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கும். மாநிறமாகவோ அல்லது கறுப்பாகவோ இருப்பவர்களுக்கு எதிர்ப்பு சக்தி அதிகம்.
இருந்தாலும் பாதாம் பருப்பு 4-கை இரவில் ஊற வைத்து மறுநாள் அதன் தோலை உறித்து பாலில் கலந்து மிக்சியில் அடித்து தரவும். உடலுக்கும் நல்லது. கலராகவும் ஆவான்.
ஒல்லியாக இருப்பதில் எந்த பிரச்சனையும் இல்லை. குழந்தை சுருசுருப்பாக இருப்பது தான் முக்கியம்.
ரங்கலஷ்மி லோகேஷ்
ஒன்று செய், அதுவும் நன்று செய்.
ரங்கலஷ்மி லோகேஷ்
நன்றி
நன்றி கல்பனா மேடம்,ரங்கலஷ்மி மேடம் உங்களது ஆலோசனை படி செய்துபார்க்கிறேன்.
மகாலஷ்மி
மகாலஷ்மி, மேடம் எல்லாம் வேணாம். பேர் சொல்லி கூப்பிடுங்க அது போதும். இங்க எல்லாரும் நல்ல தோழிகள் மட்டுமே.
Natpudan,
Kalpana Saravana Kumar :)
A good friend sees the first Tear, catches the Second and stops the Third.
maha lakshmi
ஹாய் மகாலட்சுமி, அறுசுவையில் அழகு குறிப்பு பகுதியில் தேவா அவர்களின் குறிப்பு நன்றாக இருக்கும்.அவரின் குறிப்பில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை வுபயோகிக்கும் பொடி தயாரிக்கும் முறை http ;//www .arusuvaai .com /tamil /node /3747 பேஜிற்கு போய் பாருங்கள் வுங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.
மேலும் குழந்தையின் வுடல் ஆரோக்கியம் மிகவும் முக்கியம், ஒன்னரை வயதில் முட்டை, கோதுமை கஞ்சி,கேப்பை கஞ்சி ,பழ சாறு ,மென்மையான பழங்கள் இன்னும் நிறைய லிஸ்டே இருக்கு.சத்தானவைகளை டைம் டு டைம் எப்படி கொடுக்கிறீர்கள் என்பதும் முக்கியம்.
Thankyou
hi..
Thankyou for your ideas.
hai
en kuzhandhaium apadi than erukiradhu,enna seivadhu neegal oru yosanai solungal