சாம்பார் பொடி இல்லா சாம்பார்

தேதி: September 8, 2010

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

3
Average: 3 (6 votes)

 

துவரம்பருப்பு - 1 கப்
சின்ன வெங்காயம் - 5
தக்காளி - 2
முள்ளங்கி - 200 g
மிளகாய் தூள் - 1/2 tsp
தனியா தூள் - 1/2 tsp
மஞ்சள் தூள் - 1/4 tsp
புளி - 1 நெல்லிக்காய் அளவு
எண்ணெய் - 2 tsp
கடுகு - 1/4 tsp
பெருங்காயம் - சிறிதளவு
கொத்தமல்லி, கருவேப்பிலை - சிறிதளவு
உப்பு - தேவையான அளவு


 

துவரம்பருப்பை நன்கு கழுவி மஞ்சள் தூள் சிறிதளவு பெருங்காயம் தக்காளி 2 சொட்டு எண்ணெய் சேர்த்து 2 கப் தண்ணீர் சேர்த்து 3 விசில் விட்டு இறக்கவும்.
தக்காளியை தனியாக எடுத்து வைத்து விட்டு பருப்பை கடைந்து வைக்கவும்.
புளியை 1/2 கப் தண்ணீரில் கரைத்து வைக்கவும்.
1 tsp எண்ணையில் வெங்காயம் தாளித்து வேகவைத்த தக்காளியை பிழிந்து வதக்கவும். நன்கு வதங்கியதும் அறிந்துவைத்துள்ள காயை மற்றும் சிறிதளவு உப்பு சேர்த்து 5 நிமிடம் வதக்கவும்.
1 கப் தண்ணீர், உப்பு மற்றும் எல்லா தூளையும் சேர்த்து கொதிக்கவிடவும்.
10 நிமிடம் கழித்து கடைந்து வைத்துள்ள பருப்பை சேர்த்து 5 நிமிடம் கொதிக்கவிட்டு புளி தண்ணீர் சேர்த்து ஒரு கொதி வந்ததும் இறக்கவும்.
மீதமுள்ள எண்ணெய் சூடு செய்து கடுகு பெருங்காயம் கருவேப்பிலை தாளித்து சாம்பாரில் கொட்டி கொத்தமல்லி தூவி பரிமாறவும்.


எந்த காய் வேண்டுமானாலும் சேர்த்து செய்யலாம்.

மேலும் சில குறிப்புகள்


Comments

இந்த சாம்பாரில் புளிசேர்த்தபிறகு ஒரு கொதி வந்தால் போதுமா?
புளியின் பச்சை வாசனை எப்படிப்போகும்?

புளி சேர்த்து ஒரு கொதி வந்தாலே போதும். நம்ப ரசம் மாதிரி தான் புளி தண்ணீர் சேர்த்து ஒரு கொதி வந்ததும் இருக்கிறோம் இல்லையா? புளி தண்ணீர் சேர்த்ததும் குறைந்தது ஒரு 5 நிமிடமாவது எடுக்கும் கொதிவர....கொஞ்சம் தானே சேர்க்கிறோம்....

லாவண்யா

லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!