அரட்டை அரட்டை அரட்டை - 41

எங்கு பார்த்தாலும் அரட்டை,எதில பார்த்தாலும் அரட்டை மாதிரி இருக்கு..... ஒரு காலத்துல ஒரு பாகத்தை முடிக்க பத்து நாள் போல ஆச்சு.......இப்போ ஒரே நாள்ல பத்து அரட்டை போகுது........என்ன நினைச்சு கிட்டு இருக்கீங்க எல்லோரும்....வாங்க இந்த பக்கம்....

இன்னைக்கு இந்த இழையில எல்லோரும் காலையிலிருந்து இரவு வரை என்ன என்ன வேலை செய்வீங்க? வீட்டை பராமரித்தல், குழந்தைகளை கவனித்தல், கணவருக்கு புதிய உணவு ,டிவி சிரியல்...அக்கம் பக்கத்து வீட்டுல கதை அடிச்சது...போன்ற "உண்மை சம்பவம் " மட்டும் எழுதறீங்க. இது நாலு பேருக்கு பாடமா இருக்கலாம், நல்லதை எடுத்து சொல்லலாம்...

அரட்டை - 41 க்கு வாங்க எல்லோரும்....

பாப்ஸ், இந்த அரட்டையிலும் நான் தான் ஃபர்ஸ்ட். எல்லாரும் பழைய இழையிலேயே பஜ்ஜி போண்டா சுட்டுட்டு இருக்காங்க போலிருக்கு :)

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

கல்ப்ஸ் நான் சொன்ன தலைப்பில ஏதாவது ஒன்ன பத்தி பேசுங்க...

எனக்கு கொஞ்சம் வேலை இருக்கு மதியம் போகணும். இப்போ வீட்டுல கிளீனிங் பண்றேன் அப்புறம் சும்மா தான் உங்ககூட கதை அடிக்கிறேன். சின்ன சின்ன வேலைகள் நிறைய இருக்கு...எழுத்து வேலை, வரைதல்(எனக்கு தான்)... இப்படின்னு இருக்க அப்பப்போ அர்டிகில்ஸ் படிக்க போயிடுவேன் இதனால கழுத்தை வேற வலிக்குது.
செய்யிற எல்லாமே என்டர்டேயிநிங் தான் இதுல படிக்கறது தான் ரிலாக்ஸ்....இது எப்படியிருக்கு.

ராக்கோழி வந்தாச்சா.ஏன் கல்பனா இப்டி பண்ணீங்க.இப்டி நீஈஈஈஈளமா பட்டில போட்டு மாமிக்கு ஜல்பு பிடிக்க வச்சுட்டு தூங்க போய்ட்டீங்க. நான் ல கார் பிடிச்சு மாமியை வீட்ல கொண்டு போய் விட்டுட்டு வந்தேன். மாமா பார்த்த பார்வைல காரை கூட எடுக்காம ஒடியே வந்துட்டேன்

கீது, எப்படி இருக்கீங்க? பையன் எப்படி இருக்கீங்க? ஏன்ப்பா இப்படி எல்லாரும் பட்டில நான் கொடுத்த பதிவை பார்த்து பயப்படுறீங்க? நான் சின்ன பதிவா தானே கொடுத்தேன். அதுவே நேரம் கிடைக்காம பத்து நிமிஷத்துல அடிச்ச பதிவுதான். நான் இன்னும் பொறுமையா உட்கார்ந்து அடிக்க ஆரம்பிக்கலை.

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

பாப்ஸ் இப்படி ஒரு பதிவு போட்டபடியால்,இன்று நடந்த இந்த சம்பவத்தை இங்கே எழுதுகின்றேன்.

நடிகர் முரளி மரணம்-மாரடைப்பால் உயிர் பிரிந்தது
சென்னை: பிரபல திரைப்பட நடிகர் முரளி திடீர் மாரடைப்பால் மரணமடைந்தார்.

நேற்று இரவு முரளிக்கு மாரடைப்பு ஏற்பட்டது. இதையடுத்து உடனடியாக அவரை தனியார் மருத்துவமனை ஒன்றுக்குக்கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆனால் சிகிச்சை பலனின்றி இன்று காலை முரளி உயிரிழந்தார்.

பாலச்சந்தரின் நாயகன்:

1984ம் ஆண்டு கே.பாலச்சந்தரின் கவிதாலயா தயாரிப்பில், அமீர்ஜான் இயக்கத்தில் வெளியான பூவிலங்கு படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் நாயகனாக அறிமுகமானவர் முரளி. இவரது தந்தை சித்தலிங்கையா பிரபலமான கன்னடத் திரைப்படத் தயாரிப்பாளர் ஆவார்.

கே.பாலச்சந்தர் அறிமுகப்படுத்திய வெற்றி நாயகர்கள் வரிசையில் இணைந்த குறிப்பிடத்தக்க நடிகர் முரளி.

முதல் படமே சூப்பர்ஹிட் ஆனதால் வெற்றிப் பட நாயகனாக உருவெடுத்தார். தொடர்ந்து பல்வேறு வெற்றிப் படங்களில் நடித்தார். காதல் படங்களுக்குத் தனி இலக்கணம் வகுத்தவை முரளி நடித்த படங்கள்.

பகல் நிலவு, இதயம், அதர்மம், காலமெல்லாம் காதல் வாழ்க, பொற்காலம், வெற்றிக் கொடி கட்டு, சொன்னால்தான் காதலா, இரணியன், சுந்தரா டிராவல்ஸ் உள்ளிட்ட பல வெற்றிப் படங்களில் அவர் நடித்துள்ளார்.

சாதனை படைத்த இதயம்:

முரளியின் நடிப்பில் வெளியான புது வசந்தம், இதயம் ஆகிய படங்களில் மிகப் பெரிய வெற்றி பெற்ற சூப்பர்ஹிட் படங்களாகும். குறிப்பாக புது வசந்தம் தமிழ்த் திரையுலகில் புதிய வரிசைப் படங்களுக்கு இலக்கணம் வகுத்தது. இதயம் திரைப்படத்தில் காதல் சொல்லப்பட்ட விதமும், முரளியின் நடிப்பும் அனைவரையும் வெகுவாக கவர்ந்தது.

தமிழ் உணர்வாளர்:

பாணா காத்தாடி தவிர தனது படங்கள் அனைத்திலும் ஹீரோவாகவே நடித்த பெருமைக்குரியவர் முரளி. முரளியின் தந்தை கன்னடர் என்றாலும், அவரது தாய் ஒரு தமிழ்ப் பெண். இதனால் பிறந்தது பெங்களூர் என்றாலும் சுத்தத் தமிழராக இருந்தவர். ஈழத் தமிழர்களுக்கு ஆதரவான போராட்டங்களின்போது கன்னட திரையுலகின் எதிர்ப்பையும் மீறி கலந்து கொண்டு தனது உணர்வைப் பதிவு செய்தார்.

அவரது மகன் அதர்வாவை சமீபத்தில் ஹீரோவாக்கி அழகு பார்த்தார் முரளி. அவர் ஹீராவோக நடித்த முதல் படமான பாணா காத்தாடியில் முரளியும் சிறிய ரோலில் நடித்திருந்தார். மகன் நடித்த முதல் படமே முரளியின் கடைசிப் படமாக அமைந்தது திரையுலகில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சிவாஜி கணேசன், சரத்குமார் விஜயகாந்த் பிரபு என தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திரங்களுடன் இணைந்து நடித்துள்ளார் முரளி.

47 வயதில் துயர மரணம்:

மறைந்த முரளிக்கு வயது 47 ஆகிறது. முரளியின் திருமணம் காதல் திருமணமாகும். அவரது மனைவி பெயர் ஷோபா.

பலரை தன் நடிப்பால் கவர்ந்தவர். அவரின் இழப்பு அதிர்ச்சியானது. அவரது ஆன்மா சாந்தியடையடைய என் பிரார்த்தனைகள்.

தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.

யோகராணி ஆண்டி இப்படி ஒரு துக்க சம்பவத்தை எப்படி பொறுமையா எழுதுனீங்க? கவலையா இருக்கு. அடுத்து சந்தோஷமா ஒரு பதிவு போடுங்க.
வேறு யாராவது வந்து உங்க கதைய சொல்லுங்க...நான் இப்போ கேட்கற மூடுல இருக்கேனாக்கும்.

நேற்றிரவு ஒரு சுவாரசியமான சம்பவம் நண்பர்களே (அத நாங்க
சொல்றோம் நீ கதைய சொல்லு டா) ,

மாலை 6 : 00 மணிக்கு அலுவலகம் முடிந்ததும்
(வெட்டிமுறிக்குறாரு??) நேராக ரூமுக்கு சென்று குளித்து முடித்துவிட்டு
(இத நம்பனுமா?) துணி மாற்றிக்கொண்டு சாப்பிட போனா(அதான),

மணி 6 : 40 ஆகிடுச்சு. சரின்னு சாப்டு முடிச்சுட்டு திரும்ப
ரூம்க்கு போகலாம்னு திரும்பி போனே. அப்ப நம்ப பசங்க ரெண்டுபேரூ மொபைல்ல
பேசிகிட்டு இருந்தாங்க,

சரி அவங்கள தொந்தரவு பண்ண வேணாம்னு கொஞ்ச நடந்துபோய் திரும்பினா அங்க
வழிஇல்ல, எப்டி இருக்கும்? அதன் என்னோட ரூம் கதவாச்சே

அதவும் பூட்டிவேற இருக்குது. சரி கதவ தொரக்கலாம்னு சாவிய தேடுனா பைல
சாவிய காணும் ஒருநிமிஷம் பகீர்னு ஆகிடுச்சு,

எப்டியோ மனச தைரியபடுதிக்கிட்டு இனொரு பைல தேடுனா சாவி இருக்கு, அப்டியே
கதவ மெல்ல தொரந்து உள்ள போய் மறுபடியும் கதவ சத்தமில்லாம பூட்டிட்டு லைட்
ஆப் பண்ணிட்டு

அப்புறம் என்ன படுத்து தூங்கிட்டேன். போ போ போய் வேலைய
பாருங்கப்பா!!!!!!!!!!!!!!! வெட்டி கத பேசிகிட்டு

தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.

தெரியாம இந்த பக்கம் வந்துட்டேன்.......விடறேன் ஜுட்.

நான் ஒரு கணக்கு போட்டுள்ளேன் அது சரியா என்று பாருங்கள் பொப்ஸ்.

திருமண வாழ்க்கை..!
சமன்பாடு - 1
மனிதன் = சாப்பிடுதல் + தூங்குதல் + வேலை செய்தல் + வாழ்க்கையை அனுபவித்தல்
கழுதை = சாப்பிடுதல் + தூங்குதல்
ஆகவே
மனிதன் = கழுதை + வேலை செய்தல்+ வாழ்க்கையை அனுபவித்தல்
அதாவது
மனிதன் - வாழ்க்கையை அனுபவித்தல் = கழுதை + வேலை செய்தல்
ஆக முடிவாக என்னான்னா, மனுஷனுக்கு வாழ்க்கையை அனுபவிக்கத் தெரியலைன்னா, அவன் சும்மா வேலை செஞ்சுக்கிட்டே இருக்குற கழுதைக்குச் சமம்.

சமன்பாடு - 2
ஆண் = சாப்பிடுதல் + தூங்குதல் + பணம் சம்பாதித்தல்
கழுதை = சாப்பிடுதல் + தூங்குதல்
ஆகவே
ஆண் = கழுதை + பணம் சம்பாதித்தல்
அதாவது
ஆண் - பணம் சம்பாதித்தல் = கழுதை
ஆக முடிவாக என்னான்னா, ஒருத்தன் ஆணாப் பொறந்து அவன் பணம் சம்பாதிக்கலேன்னா அவன் கழுதைக்குச் சமம்.

சமன்பாடு - 3
பெண் = சாப்பிடுதல் + தூங்குதல் + பணம் செலவு செய்தல்
கழுதை = சாப்பிடுதல் + தூங்குதல்
ஆகவே
பெண் = கழுதை + பணம் செலவு செய்தல்
அதாவது
பெண் - பணம் செலவு செய்தல் = கழுதை
ஆக முடிவாக என்னான்னா, ஒருத்தி பொண்ணாப் பொறந்து அவள் பணம் செலவழிக்கலேன்னா அவள் கழுதைக்குச் சமம்.
ஆகவே இறுதியாக,

சமன்பாடு 2, 3 இலிருந்து,
ஆண் - பணம் சம்பாதித்தல் = பெண் - பணம் செலவு செய்தல் அதாவது ஆண் பணம் சம்பாதிக்கலைன்னா பெண் பணம் செலவழிக்க மாட்டாள்.
ஆகவே,

முடிவு 1 - ஆண், ஒரு பெண்ணைக் கழுதையாக விடாமல் இருப்பதற்காகப் பணம் சம்பாதிக்கிறான்...

முடிவு 2 - பெண், ஒரு ஆணைக் கழுதையாக விடாமல் இருப்பதற்காகப் பணம் செலவு செய்கிறாள்.
அப்படீன்னா,
ஆண் + பெண் = கழுதை + பணம் சம்பாதித்தல் + கழுதை + பணம் செலவு செய்தல்

இதிலிருந்து என்ன தெரியுதுன்னா, சும்மா வேலை செஞ்சுக்கிட்டிருக்கிற ரெண்டு கழுதைங்க சேர்ந்து பணம் சம்பாதிக்கிறதும் செலவழிக்கிறதுமா வாழ்க்கையை அனுபவிக்குறதுதானுங்க திருமண வாழ்க்கை..!

நன்றி : மெயில் அனுப்பிய தோழிக்கு

தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.

மேலும் சில பதிவுகள்