பீட்ருட் சப்பாத்தி

தேதி: September 9, 2010

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

4
Average: 4 (4 votes)

 

கோதுமை மாவு - ஒரு கப்
பீட்ரூட் - பாதி (சிறிய அளவு பீட்ரூட்)
பச்சைமிளகாய் - ஒன்று
சீரகம் - சிறிதளவு
உப்பு - சிறிதளவு
நெய் - ஒரு மேசைக்கரண்டி
எண்ணெய் - ஒரு மேசைக்கரண்டி


 

பீட்ரூட்டை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். தேவையான பொருட்களை தயாராக எடுத்துக் கொள்ளவும்.
முதலில் பீட்ரூட், பச்சைமிளகாய், சீரகம் மூன்றையும் ஒன்றாக மிக்ஸியில் போட்டு தண்ணீர் சேர்த்து அரைக்கவும். பிறகு ஒரு வடிகட்டி மூலம் தண்ணீரை மட்டும் வடிகட்டி எடுத்துக் கொள்ளவும். பிறகு கோதுமை மாவுடன், உப்பு, நெய் சேர்த்து அரைத்து வடிகட்டிய தண்ணீரை சேர்த்து பிசைந்துக் கொள்ளவும். தேவைப்பட்டால் மேலும் சிறிது தண்ணீர் சேர்த்து பிசைந்துக் கொள்ளவும். கடைசியாக சிறிது எண்ணெய் விட்டு பிசைந்து அரை மணிநேரம் ஊற வைக்கவும்.
பின்பு சிறிய அளவு மாவு உருண்டையை எடுத்து சப்பாத்தி கல்லில் வைத்து சப்பாத்தியாக தேய்த்துக் கொள்ளவும்.
தேய்த்து வைத்த சப்பாத்தியை சூடாக உள்ள தோசைக்கல்லில் போட்டு லேசாக வெந்ததும் நேரடியாக தணலில் காட்டினால் நன்கு உப்பி வரும். பின்பு அந்த சப்பாத்தியின் மேல் நெய் அல்லது எண்ணெய் தடவிக்கொள்ளலாம்.
சுவையான பீட்ரூட் சப்பாத்தி ரெடி.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

அல்வா மாறி இருக்கு. இத போய் சப்பாத்தின்னு தப்பா போட்டுருக்காங்களான்னு வந்து பாத்தா உண்மையிலேயே சப்பாத்தி தான். எவ்வளவு அழகா உப்பி வருது. சூப்பர் ராதா!

கலக்கிட்டீங்க. வாழ்த்துக்கள்!

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

அடடா! சப்பாத்தியா இது! என்ன கலர்! ஆவலைத் தூண்டுதே!
;))

‍- இமா க்றிஸ்

எனது குறிப்பை வெளியிட்ட அட்மின் அண்ணாவிற்கு நன்றி..

உங்க பாராட்டுக்கு நன்றி ஆமினா... முதல் ஆளாய் வந்து வாழ்த்துகிறீா்கள். மிக்க நன்றிப்பா....

இமாமேடம் உங்க பாராட்டுக்கு மிக்க நன்றி....

"செய்க தவம், தவமாவது அன்பு செலுத்துதல்"

ராதா ஹரி

சூப்பரா இருக்கு பிங்க் சப்பாத்தி..:-

நேரடியா தணல்ல காட்ட ஒரு வலை மாதிரி உள்ள கம்பி வச்சு அதுல வைப்பாங்களே...இதுபோல நேரடியா வைக்கலாமா....?கருகாதா ..?

முயற்சி செய்யலாம் வருமான்னு வந்தா சொல்றேன் ராதா
உங்களின் எல்லா குறிப்புகளுமே அருமையா இருக்கு ராதா

அன்புடன்
இளவரசி

புரியாத பிரியம் பிரியும் போது புரியும்.

இளவரசி.. உங்க பாராட்டுக்கு மிக்க நன்றி..

நீங்க சொல்ற வலை என்னிடம் கிடையாது. அதுனால தான் நேரடி தணல்ல போட்டு எடுத்தேன். அந்த வலை இருந்தா தாரளமா உபயோகிக்கலாம். நான் நேரடித்தணல்ல தான் சூடு செய்யறேன் வேற வழியில்லாமல். கருகுவதற்குள் எடுத்துவிடவேண்டும்.

கண்டிப்பா செய்து பார்த்துட்டு சொல்லுங்கப்பா...

"செய்க தவம், தவமாவது அன்பு செலுத்துதல்"

ராதா ஹரி

நல்ல கலர்புல்லா பார்க்கவே ஆசையாக இருக்கு. கட்டாயம் குழந்தைகளுக்கு ரொம்பவே பிடிக்கும். அருமையான குறிப்பு. வாழ்த்துக்கள்.
லாவண்யா

லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!

ராதா அக்கா,
கலர்புல் சப்பாத்தி
சீக்கிரமே செய்து பார்கிறேன்..
வாழ்த்துக்கள்..

என்றும் அன்புடன்,
கவிதா

லாவண்யா மேடம்
உங்க வாழ்த்துக்கு மிக்க நன்றி. கண்டிப்பா செய்து பாருங்கள்.

கவிதா
நலமா? உங்க வாழ்த்துக்கு மிக்க நன்றிப்பா...தவறாமல் வந்து பின்னுாட்டம் கொடுக்கிறீங்க. நன்றி....

"செய்க தவம், தவமாவது அன்பு செலுத்துதல்"

ராதா ஹரி

ராதா,
பீட்ரூட் சப்பாத்தி,எளிமையா,அழகா இருக்கு.வழக்கம் போல படங்களும் பளிச்சுனு இருக்கு.சப்பாத்தியை,அடுப்பில் போட்டு சுட்டது கிடையாது.ட்ரை பண்ணி பார்க்கிறேன்.
வாழ்த்துக்கள்.

நன்றி அன்பரசி.. கண்டிப்பா செய்து பாருங்க... நன்றாக வரும். நன்றி..

"செய்க தவம், தவமாவது அன்பு செலுத்துதல்"

ராதா ஹரி

எங்க வீட்ல பீட்ரூட்டை எந்த விதத்தில் பொரியலோ கூட்டோ செய்தாலும்
சாப்பிடவே மாட்டார்கள். அதன்கலரோ, இல்லைனா அதன் அசட்டு தித்திப்போ
காரணம் சொல்வார்கள். ஆனா உங்க குறிப்பு பார்த்து பீட்ரூட் சப்பாத்தி செய்த
தும் பண்ணின சூட்டிலேயே காலி.

பார்க்கவே அழகாயிருக்கு,சரி சரி செய்து பார்த்துட்டு சொல்றேன், நேரடியா வைக்கலாமான்னு ஒரு சந்தேகம், இது மாதிரி நான் செய்ததே இல்லை அக்கா, அதான்.

ராதாக்கா, தண்ணி மட்டும் எடுத்துட்டு அந்த பீட்ரூட் என்ன பண்ணுவீங்க, பொறியல் மாதிரி ஏதாவது செய்தால் அதில் ருசி இருக்குமா என்ன?

அன்புடன்
பவித்ரா

சித்ரா என்னுடைய குறிப்பை செய்து பார்த்ததற்கு மிக்க நன்றி. உங்க புல்கா கூட பாக்க அழகா இருக்கு. நன்றிப்பா... நீங்களும் நிறைய குறிப்புகள் கொடுக்க வாழ்த்துக்கள்.

"செய்க தவம், தவமாவது அன்பு செலுத்துதல்"

ராதா ஹரி

தாராளமாக நேரடியாக வைக்கலாம். அதை திருப்பி எல்லாம் போட வேண்டாம். முதலில் சப்பாத்தியை தோசைக்கல்லில் போட்டுவிட்டு 1நிமிடம் கழித்து திருப்பி போடவும். அந்தப்பகுதி நன்கு வெந்ததும் சப்பாத்தியை அப்படியே திருப்பி (அதாவது தோசைக்கல்லில் இருந்த சப்பாத்தியின் மேல் பக்கம்) நேரடியாக தணலில் போட்டால் உப்பி வரும் பவி.

தண்ணீரை எடுத்துவிட்டால் மிகச்சிறிய அளவே சக்கை மிஞ்சும். அதை ஒன்றும் பண்ண முடியாது. சாறு அனைத்தையும் ஒட்ட பிழிந்து எடுத்துவிட்டால் சத்து அதில் வந்துவிடும். நான் ஒன்றும் பண்ணலைடா அதை. துாக்கிப்போட்டுட்டேன்.

செய்து பார்த்துட்டு சொல்லு. நீ செய்த பீட்ருட் சப்பாத்தி எல்லா காயையும் ஒன்னா வேகப்போட்டு மசித்து மாவில் சேர்க்கும்போது மாவு நீர்த்துபோய் சப்பாத்தி செய்ய வராது. நீ சொன்ன மாதிரி பிளாஸ்டிக் ஷீட்டில் வைத்து தேய்க்க வேண்டும். அதற்கு இந்த முறை ஈஸியானது.

"செய்க தவம், தவமாவது அன்பு செலுத்துதல்"

ராதா ஹரி

ராதா,
நேற்று உங்க பீட்ரூட் சப்பாத்தி தான் செய்தேன்.ரொம்ப நல்லா வந்தது.செய்வதற்கும் ஈசியா இருந்தது.வீட்டிலும் பாராட்டு கிடைத்தது.நல்ல குறிப்பு கொடுத்ததற்கு நன்றி.விருப்ப பட்டியலிலும் சேர்த்துட்டேன்.

இந்த குறிப்பை முன்பு எப்போதோ குஜராத்தி சமையல் என்று அம்மா செய்ய சொல்லி கேட்டிருக்கேன்.... நான் செய்ததில்லை இதுவரை. நேற்று செய்தோம்... எல்லாருக்கும் பிடிச்சுது. மிக்க நன்றி. :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா