2012 உலகம் அழியும்போது!!!

என்னப்பா பயந்துட்டீங்களா, சும்மா ஜாலியா பேசுவோம்.

2012ல உலகம் அழியும்னு சொல்லியிருக்காங்க. அது உண்மையா இல்லையானு எல்லாம் ஆராய்ச்சி பண்ணவேண்டாம்.

உலகம் அழியும்போது எப்படியும் தப்பிக்க முயற்சி செய்வோம், எப்படியெல்லாம் முயற்சி செய்யலானு சும்மா ஜாலியா யோசிச்சு சொல்லுங்க. கண்டிப்பா சீரியஸ் கிடையாது, சிரிக்க மட்டும்தான் வைக்கணும் சொல்லிட்டேன்,ஆமா;-)

நான் தான் பர்ஸ்ட் . ஏங்கிட்ட ஒரு சூப்பர் ஐடியா இருக்கு, அதை அறுசுவைத் தோழிகளுக்கு மட்டும் சொல்கிறேன். உலகம் அழியும் போது கடல் நீர் முழுவதும் நிலப்பரப்பிற்கு வந்த்துறுமாம். எனவே எல்லாரும் கடலுக்குள் போய் விடுவோம். சுனாமி வரும் போது நாமேல்லாம் தப்பிச்சுறுவோம். எப்படி என் ஐடியா? ஹிஹிஹி------

ரங்கலஷ்மி லோகேஷ்

ஒன்று செய், அதுவும் நன்று செய்.
ரங்கலஷ்மி லோகேஷ்

கிரேட் ஐடியா பிண்ணிட்டீங்க போங்க. இப்பவே எல்லாரும் நீர்முழ்கிக் கப்பல் ஒண்ணு வாடகைக்கு எடுத்துக்கலாம்;-)

Don't Worry Be Happy.

ஐய்யய்யோ, மேடம் நீர்மூழ்கிக் கப்பல் நீர்ல மூழ்கிடுச்சுன்னா என்னா ஆகறது. அதனால வேற ஐடியா பண்ணலாம். ரண்டாவது இங்க நிறைய பேருக்கு தண்ணில கண்டம். அதுக்கும் மேல சளி புடுச்சுச்சுன்னா?

யாருப்பா சீக்கிரம்மா எங்களுக்கு நல்ல ஐடியா கொடுங்கப்பா?

ரங்கலஷ்மி லோகேஷ்

ஒன்று செய், அதுவும் நன்று செய்.
ரங்கலஷ்மி லோகேஷ்

ஒரு இந்திப்படத்துல அனில் கபூர் ஒரு வாட்ச் வச்சிருபாரு அதக் கைல கட்டினா மறைஞ்சுபோயிடுவாரு. நம்ம பாக்கியராஜ் டைரக்ட் பண்ணினாரே, அதாங்க மெகம்பூகுஸ்குவானு ஒருத்தர் பயங்கரமா சிரிபாரே, ம்ம்ம் என்னபடம் மிஸ்டர் இண்டியா, ஹாங்! அந்த மாதிரி ஒரு வாட்ச் வச்சுக்கோங்க ஹி ஹி ஹி
உலகம் அழியும்போது கைல கட்டி மறைஞ்சு ஏமாத்திடலாம், என்னப்பா முறைக்கறீங்க ஹே! என்னது அடிக்க வரீங்களா வுடு ஜீட்.........

Don't Worry Be Happy.

உலகம் அழியும்போதும் நான் கவிதை படிப்பேன்!

அதை கேட்டு எல்லாரும் மயங்கி பேடுவேளா!

ஸ்வாமி இதை பாத்துட்டு லோகத்தை அழிக்காம் என்னை மட்டும் அழைச்சிண்டு பேடுவார்!

நான் மட்டும் அம்மாச்சியோட போய் நெறைய கவிதை படிச்சு அவர் கழுத்தை அறுப்பேன்!

அப்பப்போ அறுசுவைக்குமாவியா வருவேனாக்கும்!

ஈஈஈஈஈஈஈனு இளிச்ச்சுண்டு!

வாழ்க வளமுடன்!
அன்புடன்
மாமி (எ) மோகனா ரவி...

அவர் என்ன எல்லாம் செஞ்சு உலகத்தை அழிக்கலாம்னு பிளான் பண்ணி வந்துருப்பாரு. வெறும் கவிதை சொல்லி அழிச்ச உங்களப் பாத்து பயந்து ஓடிடுவாரு. ஐ ஜாலி ஜாலி. எப்படியோ மயக்கத்திலிருந்து எந்திருச்சன்னொ மறுபடியும் கவிதை சொல்லிடாதீங்க.......

Don't Worry Be Happy.

மாமி உங்க மனசு யாருக்குமே வராது. பெரியவா பெரியவாதான்னு நிரூபிச்சுட்டீங்க. உங்களுக்கு என் நமஸ்காரம் மாமி.

ரங்கலஷ்மி லோகேஷ்

ஒன்று செய், அதுவும் நன்று செய்.
ரங்கலஷ்மி லோகேஷ்

உலகத்தை அழிக்க கடவுள் வரும்போது நம்ம வடிவேளு மாதிரி அவர்கிட்டேயே இங்கதான உலகம் இருந்துச்சு, நான் திரும்பி வரதுக்குள்ள எங்க காணாம போயிருச்சு, நீதான் கண்டுபிடிச்சு கொடுக்கனும்னு கன்ஃபுயூஸ் பண்ணி எதுக்கு வந்தோம்னு தெரியாம குழம்பி கடவுள் வந்த வழியே திரும்பி போயிடுவாரு, எப்புடீ!!!!!!!!

Don't Worry Be Happy.


ஜெயா மன்னி!

பேஷ்! பேஷ்! இது நன்னாருக்கு!

வாழ்க வளமுடன்!
அன்புடன்
மாமி (எ) மோகனா ரவி...

ஜெய்....

எல்லாரும் பெரிய ஒரு பாராசூட் கட்டி ரொம்ப மேல போய் உக்காந்துக்கலாம்.. கீழே எல்லாம் முடிஞ்சு தண்ணீரா ஆன பின்னாடி ஆளுக்கு ஒரு கப்பல் செஞ்சு கீழ வந்துடலாம் சரியா?

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

மேலும் சில பதிவுகள்