கம்பு அடை

தேதி: September 10, 2010

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

4
Average: 3.8 (11 votes)

 

கம்பு மாவு - 200 கிராம்
காரட் - 1
முட்டைகோஸ் - 100 கிராம்
குடைமிளகாய் - 1
வெங்காயம் - 1
கொத்தமல்லி, புதினா, கறிவேப்பிலை - சிறிதளவு
மிளகாய் தூள் - தேவையான அளவு
சோம்பு தூள் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு


 

மேலே குறிப்பிட்டுள்ள தேவையான பொருட்கள் அனைத்தையும் தயாராக எடுத்துக் கொள்ளவும்.
காரட், முட்டைகோஸ் இரண்டையும் துருவிக் கொள்ளவும். வெங்காயம், கொத்தமல்லி, புதினா, கறிவேப்பிலை ஆகியவற்றை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். குடைமிளகாயை மெல்லியதாக நீளமாக நறுக்கிக் கொள்ளவும்.
கம்பு மாவை தயாராக எடுத்து வைத்துக் கொள்ளவும்.
மிளகாய் தூள், சோம்பு தூள், தேவையான அளவு உப்பு எடுத்துக் கொள்ளவும்.
மேலே கூறிய அனைத்தையும் கம்பு மாவுடன் கலந்து தேவையான அளவு தண்ணீர் விட்டு பிசைந்து கொள்ளவும்.
தவா சூடானதும் கையளவு பிசைந்த மாவை எடுத்து அடையாக தட்டவும்.எண்ணெய் விட்டு இருபுறமும் திருப்பிப் போட்டு எடுக்கவும்.
சுவையான, சத்தான கம்பு அடை தயார்.

அடை தட்டும் போது கையில் தண்ணீர் தொட்டு தட்டினால் அடை ஒட்டாமல் வரும். அடையை மெல்லிய தீயில் வேகவிட வேண்டும்


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

kambu adai recipe is very nice. can u give the instructions of using kambu in the form of grains

hi mam,,

it seems to b good .

i hav raagi powder .i bought from India .

can i make adai in in raagi powder ? pls guide me.

thanks,
priya.

ரம்யா மேடம்,
கம்பை வைத்து நல்ல அடைசெய்து கட்டியமைக்கு நன்றி
மேலும் பல குறிப்புகள் தர வாழ்த்துக்கள்

என்றும் அன்புடன்,
கவிதா

ரம்யா,
சத்தான,கலர்ஃபுல் ரெசிப்பி. அலங்காரமும் அழகாக உள்ளது. வாழ்த்துக்கள்.

நன்றி மதுசரோ, பிரியா, கவிதா,ஹர்ஷா மேடம்ஸ். பாராட்டுக்கு மிக்க நன்றி.

மதுசரோ மேடம் கம்பை சுத்தம் செய்து மாவுmachine ல் கொடுத்து அரைத்துக்கொள்ள வேண்டும். எனக்கு என் அம்மா அரைத்து தருவார்கள். இப்போதெல்லாம் departmental storeல் கிடைக்கிறது. அல்லது கம்பை mixi ல் கூட அரைத்துக்கொள்ளலாம்.

பிரியா மேடம், கம்பிற்கு பதிலாக ராகி போட்டு செய்யலாம். நாங்கள் ராகி அடையும் செய்வோம்.

அடடே ரம்யா மேடம் பாக்கவே சாப்பிடத்தோணுதே.. இதுக்காகவே உங்க வீட்டுக்கு வரணும் போலவே. எனக்கு கம்பு மாவு கிடைக்குமா என்று தெரியவில்லைப்பா.. ஆனால் கேழ்வரகு மாவு கிடைக்கும். அதில் செய்யலாமா? ரெடிமேட் மாவு நன்றாக வருமா?.

"செய்க தவம், தவமாவது அன்பு செலுத்துதல்"

ராதா ஹரி

ராதா மேடம், ரொம்ப சந்தோஷம் கண்டிப்பா வீட்டுக்கு வாங்க, சென்னை ல தான் இருக்கேன். கம்பு மாவு நிறைய இருக்கு அடை செய்து தருகிரேன். கேழ்வரகு மாவிலும் இதே போல் செய்யலாம். readymade மாவிலும் நன்றாக வரும்.செய்துபாருங்கள்.

ராதா கம்பு மாவு முஸ்தஃபாவில் கிடைக்கும்பா. பாஜ்ரா ன்னு தேடிப்பாருங்க (நன்றி சித்ரா, கோமு). நானும் இவ்வளவு நாள் என்னான்னு தெரியாம வாங்காம விட்டுருக்கேன் :(

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

அடடே! அழகாருக்கு. கம்பு மாவு வீட்டில் இருக்கு. என்ன பண்றதுனு தெரியாம முழிச்சிட்டு இருந்தேன், நல்ல குறிப்பு. ட்ரை பண்ணி பார்க்கிறேன் ரம்

அன்புடன்
பவித்ரா

Hai Ramya,

I have changed your recipie from Kambu adai to Kambu dosa. Because I don't like dry food. With your same recipie I have added more water in to dosa consistancy. It really came out well. Thank you very much for the healthy and tasty recipie.