சாக்லேட் புதிர்

ஒரு சாக்லேட் ஒரு ரூபாய், இது கூட‌ 3 சாக்லேட் எம்ப்டி க‌வ‌ரை குடுத்தால், அதுக்கும் ஒரு சாக்லேட் த‌ர்றாங்க‌. உங்ககிட்ட‌ 15 ரூபாய் இருக்கு. எத்த‌னை சாக்லேட் வாங்க‌ முடியும்?

மூன்று குச்சிகளையும் அதன் மருந்து பகுதி ஒட்டிக்கொள்ளுமாறு வைக்க வேண்டும். பின் மீதமுள்ள ஒரு குச்சியை எரிய வைத்து 3 குச்சிகளின் மருந்து பகுதியில் கொண்டு சென்றால் 3 குச்சிகளும் ஒட்டிக்கொள்ளும். அப்படியே எடுத்து விடலாம். சரியா?

அருமை.......... சரியான பதில் கீதா வாழ்த்துக்கள்.

தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.

ஒருவன் ஒரு கண்காட்சிக்குப் போயிருந்தான். அங்கே ஓரிடத்தில் ஒருவன் நின்றுகொண்டு, அவனை அழைத்து, " இதோ பார் நண்பா!.
நான் " உனது மிகச் சரியான எடை என்ன" என்று "இந்தக் காகிதத்தில் எழுதிக் கொடுப்பேன். அப்படி எழுதிக் கொடுப்பது சரியானதாக இருந்தால், நீ எனக்கு நூறு ரூபாய் தரவேண்டும். தவறாக இருந்தால், நான் உனக்கு இருநூறு ரூபாய் கொடுக்கிறேன். சம்மதமா? என்றான்.
அவன் சுற்றுமுற்றும் பார்த்தான். அவனை எடை போட்டுப் பார்க்க எந்தவித உபகரணமும் இல்லை. சவால் விட்டவன் என்னதான் உத்தேசமாகக் கூறினாலும் மிகச் சரியான எடையை அவனால் எப்படி எழுத இயலும். அதனால் தான் வெற்றி பெறுவது உறுதி என்று நினைத்துச் சம்மதித்தான். ஆனால் அவன் மிகச் சரியான விடையை எழுதிக் கொடுத்ததினால் 100 ருபாயை , பேச்சுப்படி கொடுத்துவிட்டுப் போனான்.
கேள்வி:-
எடை பார்க்க எந்த வித உபகரணமும் இல்லாமல் அவனால் எப்படி மிகச் சரியான விடையை எழுத முடிந்தது?

Life

கொஞ்சம் மூளையை கசக்குங்க-part-2
இந்த பகுதியில் இதே கேள்வியும் பதிலும் இருக்கு. பார்க்கவில்லைய கலியாணி. என்றாலும் முயற்சிக்கு வாழ்த்துக்கள்.

தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.

இனி அடுத்த புதிர்.

ஒரு ஒயின் கடை முதலாளி சமீபத்தில் இறந்துவிட்டார். அவரது உயிலில், பல்வேறு வகையான சொத்துக்களையும் தனது மூன்று மகன்களுக்கு சரி சமமாக எழுதி வைத்திருந்தார்.எல்லாவற்றையும் பிரித்துக்கொண்டர்கள். கடைசியாக அவரது கடையில் இருந்த ஒயின் பீப்பாய்களையும் பிரித்துக்கொள்ள முடிவு செய்தார்கள். அங்கே மொத்தம் 21 பீப்பாய்கள் இருந்தன.அதில் ஏழு பீப்பாய்களில் முழுவதுமாக ஒயின் நிறப்பப்பட்டிருந்தது. மேலும் ஏழு பீப்பாய்களில் பாதிப் பீப்பாய் ஒயின் நிறப்பப்பட்டிருந்தது. ஏழு காலி பீப்பாய்களும் இருந்தன. அதனால், ஒவ்வொரு மகனுக்கும், சரிசமமாகப் பகிர்வது எப்படி என்று தெரியாமல் தலையைப் பிய்த்துக்கொண்டார்கள்.அதாவது மொத்தம் 21 பீப்பாய்களைப் பகிரும்போது, முழுதும் நிறப்பப்பட்ட பீப்பாய்கள், பாதி
நிரப்பப்பட்ட பீப்பாய்கள், காலி பீப்பாய்கள் அனைத்தும், சரிசமமான எண்ணிக்கையில் பிரிக்கவேண்டும். அளந்து ஊற்றுவதற்கு எந்த வசதியும் கிடைக்கவில்லை.நீங்கள்தான் ஒரு யோசனை கூறுங்களேன்.

தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.

பாதி பாதி இருக்கும் பீப்பாய்களில், ஒரு பாதியை இன்னொரு பாதியுடன் ஊற்றி முழுதாக்காலம். இப்படி இருமுறை செய்தால், இப்பொழுது நம்மிடம் 9 முழு பீப்பாய்கள், 9 காலி பீப்பாய்கள், 3 பாதி பீர் பீப்பாய்கள் இருக்கும். ஒவ்வொருவருக்கும் 3 முழு, 3 காலி, 1 பாதி பீர் பீப்பாய்கள் கொடுத்து சரியாக பிரித்துவிடலாம்.

விடை சரியா யோகராணி அவர்களே.

இதுவும் கடந்து போகும்.

ஆமினா, சாந்தினி இருவருக்கும் மும்மடங்கு ஆச்சர்யம் கிடைத்ததா!!!!!! குட்

இப்பொழுது இன்னொரு வேடிக்கை. இதுவும் புதிர் அல்ல. நீங்கள் ஒரு செய்தித்தாளையோ அல்லது ஒரு சுருட்டிக்கொள்ள வரும் புத்தகத்தையோ நன்றாக சுருட்டிக்கொல்லுங்கள் ஒரு tube போல. இப்பொழுது இதை ஒரு கையில் பிடித்து கொண்டு, உங்களின் ஒரு கண்ணின் வழியே அந்த ஓட்டையை பாருங்கள், (telescope பார்ப்பது போல்). இரு கண்களும் திறந்திருக்க வேண்டும். இப்பொழுது இன்னொரு கையை நன்றாக விரித்து வைத்து (உள்ளங்கை மேலே தெரிவது போல்) அந்த tube-ஐ இந்த கையால் தொட்டுக்கொண்டு மெல்ல மேல உங்கள் கண் அருகில் கொண்டு வாருங்கள். ஆஹா, உங்கள் கையில் இப்பொழுது ஒரு பெரிய ஓட்டை தெரிகிறதா.

இதுவும் கடந்து போகும்.

ஆஹா சூப்பர் யோக லெட்சுமி.

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

யோகலட்சுமி சரியான பதில் வாழ்த்துக்கள்.

சரி அடுத்த புதிருக்கு போவோம்.

என் தாத்தாவின் வயது ஒரு இரட்டை இலக்க எண்.அதில் முதல் இலக்கமானது, என் வயதின் இரண்டாம் இலக்கம் ஆகும்.என் வயதின் முதல் இலக்கம், தாத்தாவின் வயதின் இரண்டாம் இலக்கம்.தாத்தா வயதின் முதல் இலக்கத்தில் இருந்து, என் வயதின் முதல் இலக்கத்தை கழித்தால் 6 வரும். என் வயதையும் என் தாத்தா வயதையும் கூட்டினால் 88 வரும்.
இப்போது என் வயதையும்,
தாத்தா வயதையும் கண்டு பிடியுங்கள்.

தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.

யோகலெட்சுமி மேடம்

தாத்தாவுக்கு வயசு - 71 உங்களுக்கு 17 வயசு. விடை சரியா??

மேலும் சில பதிவுகள்