கழுத்தில் கொழுப்புகட்டி

தோழிகள் உதவவும்,
என் கணவருக்கு தோலும் கழுத்தும் சேரும் இடது பகக்ம் கொழுப்புகட்டி எலுமிச்சைஅளவு உல்லது என்ன் செய்து கரைக்கலாம் 1 வருடமாக இருக்கு,பய்மாக உல்ல்து எதாவது சொல்லுங்கலேன் பதிலுகாக காத்திருக்ரேன்.

கொழுப்புக்கட்டி என்று எதை வைத்துச் சொல்றீங்க?
பயமாக இருக்கு என்கிறீங்க. ஒரு வருஷமா எந்த டாக்டரிடமும் காட்டவில்லையா? போய்க் காட்டுங்க.

‍- இமா க்றிஸ்

கொழுப்புக்கட்டி என்றால் பயம் எதற்கு தோழி..மருத்துவரை காட்டுங்கள்

சகோதரி இமா அவர்கள் கேட்டுள்ளது போல், அது கொழுப்புக் கட்டிதான் என்பதை யார் முடிவு செய்தது? நீங்களா? மருத்துவரா?

Lipoma வாக இருக்கும்பட்சத்தில் பயம் வேண்டியதில்லை. ட்ரீட் செய்துவிடலாம். இப்போது நிறைய எளிய வழிமுறைகள் இருக்கின்றன. எலுமிச்சை அளவு என்று குறிப்பிட்டு இருக்கின்றீர்கள். அது ஒரே நாளில் அந்த அளவை அடைந்திருக்காது. பட்டாணி அளவில் தொடங்கிதான் இந்த நிலையை அடைந்து இருக்க வேண்டும். எலுமிச்சை அளவு என்பது சாத்துக்குடி, பம்ளிமாஸ் என்று உருமாறுவதற்கு முன்பு மருத்துவரிடம் செல்லுங்கள்.

எனது பக்கத்து வீட்டுக்காரருக்கும் நீங்கள் குறிப்பிட்டுள்ளது போல் கழுத்தில் (பின்புறத்தில்) சிறிய அளவிலான கட்டி வந்து, அது நாளடைவில் பெரியதாகி, கடைசியில் அறுவை சிகிச்சை மூலம் அகற்றினார்கள். ஆரம்பத்திலேயே கவனித்தால், எளிய முறை சிகிச்சையில் அதை நீக்கலாம் என்று நம்புகின்றேன்.

பொதுவிதி (எங்கள் மருத்துவர் அடிக்கடி சொல்வது) : உடலில் எந்த பாகத்தில், எந்த அளவில் கட்டி வந்தாலும் அதை அலட்சியப்படுத்தாதீர்கள். உடனடியாக மருத்துவரிடம் காண்பித்து, ஏன், எதனால் என்பதை உறுதி செய்துகொள்ளுங்கள்.

நான் அமெரிக்காவில் உல்லேன்.இது சம்மந்த்மாக டாக்டரை பார்த்து டெச்ட் எடுத்தோம்
இது கொழுப்பு தான் ,அருவை சிகிச்சை டாக்டரை பாருங்கல் என்ரார், கொழுப்பு தான் சரியாகிடும் என்றார்கல் சிலர், என் கண்வரும் இதை இந்தியா சென்று பார்த்துக்கலாம்னு சொல்லுறாங்க நாங்கல் இந்தியா செல்ல 3 4 மாதம் ஆகும், இத்ற்கு வேறு ஏதும் வ்ழி இருக்கா அதான் உங்கலிடம் ஆலோசனை கேட்கலாம் என்று எழுதினேன்.

இரு வருடங்களுக்கு முன் என் 14 வயது மகனுக்கும் நீங்கள் குறிப்பிட்ட அதே இடத்தில் (பின் கழுத்தில்) தோன்றியது.சர்ஜனிடம் காட்டிய பொழுது இது கொழுப்புக்கட்டி பயப்படத்தேவை இல்லை.இன்னும் சற்று பெரிதாகட்டும்.சர்ஜரி செய்து நீக்கி விடலாம் என்றார்.ஆறு மாத காலத்தை தள்ளிவிட்டு முழுஆண்டுதேர்வு விடுமுறையின் போது இந்த அறுவை சிகிச்சை மேற்கொண்டோம்.(கிட்டத்தட்ட பெரிய எலுமிச்சை அளவில் இருந்தது)காலையில் ஏழு மணிக்கு ஹாஸ்பிடல் சென்றோம்.எட்டு மணிக்கு அறுவை சிகிச்சை நடந்தது.பகல் ஒரு மணிக்கு என் பையன் ஹாஸ்பிடலில் இருந்து நடந்தே வீட்டிற்கு அழைத்து வந்து விட்டோம்.இப்பொழுது என் பையன் இறைவன் கிருபையால் அறுவைசிகிச்சை நடந்த சுவடே தெரியாமல் இருக்கின்றான்.ஆதலால் சகோதரி நீங்கள் கவலைப்படாமல்,பயம் தவிர்த்து அறுவை சிகிச்சையை மேற்கொள்ளுங்கள்.பூரண நலம் பெற என் வாழ்த்துக்கள்!

arusuvai is a wonderful website

மேலும் சில பதிவுகள்