"அன்பு தோழிக்கு" - உங்கள் உயிர் தோழிப்பற்றி எழுதுங்க!

தோழிகள் அனைவருக்கும் வணக்கம்,

அனைவருக்கும் அம்மா,அப்பா,உடன் பிறப்புகள் தவிர எங்கேயோ பிறந்து,தீடீரென வந்து வாழக்கையில் எல்லாமும் ஆனா கணவன்/மனைவி போல் எந்த ஓட்டும் உறவும் இல்லாத உயிரை கூட கொடுக்ககூடிய அளவிற்கான நட்பு மிகவும் மகத்தானது தானே!!!
எல்லோருக்கும் ஒரு உயிர் தோழி/தோழன் இருப்பாங்க இல்லையா? அது உங்கள் பள்ளித்தொழியா? கல்லூரி தோழியா? அக்கம் பக்கத்து வீட்டில் இருக்கிறவங்களா? யாருன்னு கொஞ்சம் இங்கே வந்து சொல்லுங்களேன்...
ஒரு தோழி எல்லோருக்கும் கடைசி வரை என்றென்றும் நினைவில் இருப்பாங்க இல்லையா? அவங்க கூட இன்னும் தொடர்பு இருக்கா? இல்லை எங்கே என்று தேடுகிறீர்களா? உங்களுடைய சந்தோஷமான அனுபவங்களை கொஞ்சம் எல்லோருக்கும் இங்கே வந்து சொல்லுங்களேன்.
.

உங்க உயிர் தோழிக்கு மடல் எழுதுங்க... எல்லோரும் வாங்க!!!

என்னோட கல்லூரி தோழி ஒருத்தி(A) அவளோட பள்ளித்தோழிதான்(B) அவளுக்கு உயிர்த்தோழி என அடிக்கடி அவளை பற்றி கூறுவாள். அவள் லெட்டர் எழுதும் பொழுது நாங்களும் கூட ஆளுக்கொரு வரி எழுதுவோம். இப்படியாக தொடர்ந்தது அவங்க நட்பு.

ஒரு நாள் கல்லூரி காலம் முடிந்து வீட்டில் இருக்கும் பொழுது நான் வாரமலரில் வரும் "இது உங்கள் இடம்" படித்து அசந்து போயிட்டேன்.
எங்கள் தோழியின் தோழி (B) தான் அதை எழுதியிருந்தார்.அவங்க நட்பு மற்றும் நாங்க மற்றவங்க அவருக்கு எழுதிய லெட்டர் பற்றி கூட அழகாக சொல்லி ஒரு பெரிய கட்டுரை போல எழுதியிருந்தார் எனக்கு மிகவும் நெகிழ்ச்சியாக இருந்தது.

என்னே அவர்கள் நட்பு!!! இப்போ இது நினைவு வந்தது...நீங்களும் எல்லோரும் வந்து எழுதுங்க.

Natpu intha varthai powerfulanathu. Amma ,appa koda ilathavanga irukalam ana friends ilathavanga irukave mudiyathu. Enaku niraya friends irukanga. Analum en thozhiyai patri nan eluthiye aga vendum. Avar peyar shakila. Avalum nanum 9th padikarathil irunthu friends.indru varai enga natpu thodarkirathu. Avalodu iruntha 1voru nodiyum, enaku sorkam than. Nanga inai piraya thozhigalave vazhnthom. Enaku marriage agi vitathal, epothu avalai adikadi parka mudivathillai. En vazhkaila niraya pakakala avaloda ninavugal than iruku.avalai patri enal mudinthathai eluthi ullen. En anbu thozhi ne enga irunthalum, un vazhvil valam pera en vazhthukkal.

"Piranthathu vazhvatharkaga, vazhvathu anbirkaga"

ஹாய், என்னைப் பொறுத்தவரை எப்போவுமே நட்பிற்குத் தான் முதலிடம், எனக்கு ஒரு friend இருக்கா . அவ பேர் ஆனந்தி, ஆனந்தியும் நானும் சின்ன வயசிலிருந்தே (LKG , UKG லிருந்தே )friends, ஒரே ஸ்கூல் எல்லாம் கிடையாது . நானும் ஆனந்தியும் ஒன்னா 6th ல இருந்து 9th வரை தான் ஒன்ன படிச்சோம், ஆனாலும் இப்போ வரை நாங்க friends ஆகத்தான் இருக்கோம்,எங்க வீட்ல நான் எப்படியோ அவளும் அப்படித்தான், marriage அப்புறம் எப்படின்னு தெரியல.

எனக்கும் உயிர் தோழிகள் இருக்காங்கப்பா.. பள்ளியில் படிக்கும் போது சசிகலா என்னுடைய உயிர் தோழி. காலத்தின் சூழ்நிலை அவள் எங்கு இருக்கிறாள் என்று அறிய முடியாமல் போய்விட்டது. ஒரு பெண்ணுக்கு அப்பா அம்மா சரியாக இருந்தால் அந்தப்பெண் வாழ்வில நல்ல நிலைக்கு வரலாம். ஆனால் என் தோழிக்கு இவை இரண்டும் சரியாக அமையாத காரணத்தினால் அவளின் தற்போதைய இருப்பிடம் கூட அறிய முடியாமல் போய்விட்டது.

அடுத்து கல்லுாரியில் படிக்கும்போது உயிர் தோழி மற்றும் தோழன் இருவரும் உண்டு. இருவரிடமும் இன்றளவும் தொடர்பு உள்ளது. நல்ல நண்பர்கள் கிடைப்பது அரிது. எல்லாருக்கும் கிடைத்துவிடாது. எனக்கு கிடைத்த இரு நண்பர்களும் என்னுடைய அதிர்ஷ்டம். என்னுயிர் தோழன் இல்லையேல் நான் கல்லுாரியில் தொடர்ந்து படித்திருப்பேனா என்பது சந்தேகமே?..

பாப்ஸ் நல்ல ஒரு இழை. என் நண்பா்களை மீண்டும் நினைக்க வைத்து ஏக்கப்பட வைத்துவிட்டீா்கள். நன்றி....

"செய்க தவம், தவமாவது அன்பு செலுத்துதல்"

ராதா ஹரி

என் உயிர் தோழிக்கு இந்த இழையை பார்த்ததும் பள்ளி நாட்களும் கல்லூரி நாட்களும் நினைவுக்கு வந்துடுத்து
நான் பள்ளியில் படிக்கும் போது நாங்க நான்கு தோழிகள் ரொம்ப நெருக்கும் பள்ளி முடிந்து கல்லூரி வந்ததுக்கப்பறமும் எங்க நட்பு தொடர்ந்தது இப்பவும் நாங்க தொடர்புல இருக்கோம் ஒரு தோழிக்கு போன் வாரம் ஞாயிறுதான் திருமணம் முடிந்தது. மற்றொரு தோழிக்கு அக்டோபரில் திருமணம்,இன்னொருத்தி விப்ரோல வேலை செய்து கொண்டிறுக்கிறாள்.நாங்கள் கிட்டதட்ட பத்து ஆண்டுகளுக்கு மேலாக தோழிகளாய் இருக்கின்றோம்
எங்கள் நட்பு என்றும் தொடரும்னு நான் நம்பறேன்

மீரா கிருஷ்ணன்

யாதும் ஊரே யாவரும் கேளிர்
தீதும் நன்றும் பிறர்தர வாரா

என் உயிர் தோழியே... என் உயிர் தோழியே... நான்கைந்து சூரியன் ஆறேழு வெண்ணிலா ஆனதென்ன...
இது விஞ்ஞான மாற்றமா? மெய் ஞான மாற்றமா????????

ALREADY THERE IS ONE PLACE IN THE SAME HEAD PA, THATS Y LITTLE POST IN THIS.

http://www.arusuvai.com/tamil/node/14792

அன்புடன்
பவித்ரா

பாப்ஸ் நலமா?என் உயிர் தோழிகளில் ஒருத்தியான கல்லூரித்தோழி மகேஷ்வரியை நீண்ட நாட்களாக தேடிக்கொண்டிருக்கிறேன்.சேலம் போத்தனூர் சொந்த ஊர்,திருச்சியில் சொந்த வீடு,படிப்பு B.sc (Horticulture),2003 -ல் கணவர் பாண்டிச்சேரிக்கு ட்ரான்ஸ்ஃபெர் ஆனதாக வந்த லட்டர் ,அதன் பின்பு தொடர்பு கொள்ளமுடியலை.அவளுக்கு ஆர்த்தி,அகல்யான்னு இரண்டு பொண்ணுங்க உண்டு.யாருக்காவது தெரிந்தால் சொல்லுங்க.

என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

எனக்கு நிறைய ப்ரண்ட்ஸ் அதுல கடவுள் எனக்கு குறைவில்லாமல் செய்துட்டார். எல்லாருமே என் நல விரும்பிகள் தான். எல்லோரதும் தாயின் பாலை போல பரிசுத்தமானது இதற்கு மேல் என் நட்பை பற்றி வர்ணிக்க வார்த்தை இல்லை. ஆனால் இன்றும் நான் தேடிக் கொண்டிருக்கும் ஒரு தோழி சாந்தி என்னுடன் 7, 8 மட்டும் படித்தால் அவளை நான் ரொம்ப மிஸ் பண்றேன்.
இப்பதான் போனவாரம் தான் அவள் தம்பியை சந்தித்தேன் அவள் திருமணமாகி துபாயில் இருப்பதாக சொன்னான். ரொம்ப சந்தோஷமா இருக்கு.

நன்றி உமா என் ப்ரண்ட்ஸ் பற்றி பகிர்ந்துக் கொள்ள வைத்ததற்கு.

மேலும் சில பதிவுகள்