கொண்டைக்கடலை சுண்டல்

தேதி: April 10, 2006

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

கொண்டைக்கடலை அல்லது வெள்ளை சன்னா - ஒரு கப்
புளி பேஸ்ட் - ஒரு தேக்கரண்டி
தாளிப்பதற்கு
எண்ணெய் - 2 தேக்கரண்டி
கடுகு - ஒரு தேக்கரண்டி
கறிவேப்பிலை - ஒரு கொத்து
மஞ்சள் பொடி - ஒரு சிட்டிகை
தேங்காய் பல் பல்லாக கீறியது - 2 மேசைக்கரண்டி
மிளகாய் வற்றல் - 2
உப்பு - தேவையான அளவு


 

நாட்டுக் கொண்டைக்கடலை அல்லது பாம்பே ரகம் அல்லது வெள்ளைச் சன்னா, இதில் எதை வேண்டுமானுலும் பயன்படுத்தலாம்.
கொண்டைக்கடலையை கீழே குறிப்பில் சொன்ன முறையில் ஊற வைத்து எடுத்துக் கொண்டு, பிரஷர் பானில் 4 விஸில் வரை வேக வைக்கவும்.
குக்கரைத் திறந்து எடுத்து, நீரை வடித்துக் கொள்ளவும்.
வாணலியில் எண்ணெய் விட்டு, கடுகு, கிள்ளிய மிளகாய் வற்றல், கறிவேப்பிலை போட்டுத் தாளிக்கவும்.
அத்துடன் வேக வைத்த கொண்டைக்கடலையைக் கொட்டி, புளியை அரை கப் தண்ணீரில் கரைத்து விடவும்.
தேவையான உப்பு, மஞ்சள் பொடி போட்டு, கொதித்து சேர்ந்து வந்ததும் இறக்கவும்.


கடலைப்பருப்பு, பாசிப்பருப்பு முதலியவற்றைத் தவிர மற்ற பயறுகள் அனைத்தையும், ஒரு கப் பயறுக்கு அரை தேக்கரண்டி சமையல் சோடா என்ற அளவில் போட்டு குறைந்தது 10 மணி நேரம் ஊற வைக்கவும்.
வேகவைப்பதற்கு முன்பு, நன்கு சோடா போகக் கழுவி விட்டு, பயறு மூழ்கும் அளவிற்கு தண்ணீர் விட்டு பிரஷர் குக்கரில் வேகவிடவும்.

மேலும் சில குறிப்புகள்