ப்ளீஸ் ஹெல்ப் பண்ணுங்க..

ஹாய் தோழிகளே..
எல்லோரும் நலமா... எனக்கு ஒரு help பண்ணுங்கப்பா.. என் பையனுக்கு 11 மாதம் முடிய போகுது...என்னுடைய அப்பா அவனுக்கு your baby can read அப்படின்னு ஒரு product இப்போ டிவி ல விளம்பர படுத்திட்டு இருக்கங்கள அது வாங்கிக்கோ நு சொல்லறார்..ப்ளீஸ் எனக்கு அத பத்தி சொல்லுங்க...இந்த மாதிரி இங்கிலீஷ் learning products usefull ஆ இருக்குமா...வாங்கலாமா...ப்ளீஸ் சொல்லுங்கப்பா....இதோட விலை 5000 ரூபாய்...

நீங்க குழந்தைகிட்ட நிறைய பேசினால் போது. என் குழந்தைக்கு வயது 2 ஆகிறது நான் அவனுக்கு இதைத்தான் செய்தேன் . 1 1 /௨ வயதுக்கு அப்பறம் அந்த kit use செய்ங்க.பலன் கிடைக்கும். mother is the best teacher to the child. don,t use costly kits.a lot of kit available in net. download from www.youtube.com.

ரொம்ப நன்றிங்க.... நான் இப்போ அவனுக்கு தமிழ் உயிர் எழுத்துக்கள், இங்கிலீஷ் alphabets , சின்ன சின்ன ஸ்தோத்திரம், திருக்குறள் சொல்லிட்டு இருக்கேன்...

SaranyaBoopathi

In the world all child read is true. So you use ordinary words only. Your child will read from his school. so don't force to your child. Because your child age is just 11 months ok.

TRY TRY TRY
DON'T BE SHY
THEN YOUR POSITION WILL BE HIGH.

11 மாத குழந்தைக்கு இது வேண்டாம் என்றே நான் நினைக்கிறேன். உங்க அப்பா அவர் பேரன் மேல் உள்ளபாசத்தி வாங்கிக்க சொல்றாங்க அது சரிதான். ஆனா சரண்யா இப்பவே இது தேவையில்லை என்பது தான் என் கருத்தூ இப்ப நம்ம சும்மா டெய்லி பேசுற வார்த்தைகள் animal sounds, colours, rhymes, numbers, alphabets, சின்ன சின்ன வார்த்தைகள் இப்படியே சொல்லி கொடுக்கலாம். அதோட இதுப் போல் ப்ராகெட்ஸ் எல்லாம் முதலில் மார்கெட்டுக்கு வரும்போது கொஞ்சம் காஸ்ட்லியாதான் இருக்கு இன்னும் போக போக அதான் மார்கெட் வெல்யூ குறையும் அப்போ உங்க மகனும் கொஞ்சம் பெரியவனா ஆகியிருப்பான் அப்போ வாங்கிக்கலாம் என்பது என் கருத்து.

உங்கள் அப்பா சொன்ன பொருளை இப்ப வாங்கினாலும் அதை இப்ப யூஸ் பண்ண வேண்டாம். குறைந்தது 2, 3 வயசாக வேண்டும். அப்ப தான் புரிந்து கொள்வார்கள். சும்மா எல்லாத்தையும் திணித்தால் அவர்களுக்கும் வெறுப்பு வந்து விடும். டிவியில் காட்டுவது எல்லாம் 100% உண்மை கிடையாது. அவர்களுக்கு எதையாவது சொல்லி, விற்று பணம் பார்ப்பதே வேலை. இது போல வேறு பிரபலமான கம்பெனியின் பொருட்கள் மீது மக்கள் சில வருடங்களின் முன்பு கேஸ் போட்டார்கள். ஏனெனில், அவர்கள் விளம்பரத்தில் சொல்வது போல பிள்ளைகள் ஸ்மார்ட்டா வரவில்லை என்று. தாய் தான் சிறந்த ஆசிரியை. நிறையப் பேசுங்க குழந்தையிடம். பென்சில், கலர் பென்சில் வாங்கி குடுங்கள். அதுவும் 11 மாசக் குழந்தைக்கு வேண்டாம். அவரை அவர்பாட்டில் விட்டு விடுங்கள். இந்தப் பருவம் மீண்டும் வராது.
வாணி

மேலும் சில பதிவுகள்