ஓடியாங்க, ஓடியாங்க இங்கிட்டு ஓடியாங்க அரட்டை 45

எல்லாரும் இங்க வாங்க, வந்து கடிச்சிட்டு போங்க:-)
சிரிச்சி சிரிச்சி பேசலாம்! சிந்திச்சு பேசலாம்!!
கதயடிச்சி பேசலாம்! கவிதையும் பேசலாம்!!

வாங்கப்பா, எல்லோரும், ஒரே கண்டிஷன் இருக்கு :-)
இங்க வந்தா ஒரு பதிவு போட்டுட்டு தான் வெளிய போகனும்.
சண்ட எல்லாம் போடக்கூடாது. எது வேணும்னாலும் பேசலாம்.
யாரையும் புண்படுத்தாம பேசனும்.

ஓடியாங்க, ஓடியாங்க இங்கிட்டு ஓடியாங்க.
சிரிக்க மட்டுமே வாங்க,
சிந்திக்க வைக்கவும் வாங்க:-)

ஒரு விஷயம் சொல்ல மறந்த்துட்டேன். சமையல் சம்பந்தமா பேசனும். நாம சமைக்கும் போது நடக்கற விஷ்யங்களும் அதில் நாம ரசிச்ச விஷயங்கள் கூட நிறைய இருக்கும்:-) அந்த விஷயங்களையெல்லாம் இங்க சொல்லுங்க. நாமெல்லாம் சிரிச்சு, தெரிஞ்சுக்கலாம்:-)

சிரிச்சே ரொம்ப நாளாச்சு. அதனால தான் இந்த பதிவு:-) "வாய்விட்டு சிரிக்கலாம்

தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.

அனைவருக்கும் இனிய காலை வணக்கம்

எல்லாரும் நல்லா இருக்கீங்களா?

உன் மீது மற்றவர்கள் பொறாமை படுகிறார்கள் என்றால் அதுவும் ஒருவித புகழ் மாலை தான்.

அன்புடன்
ஹேமா

யோகராணி

சமயல் அப்படின்னு ஒன்ன நான் இனி தான் கத்துக்க போறேன். ஒரு நாள் சிக்கன் நூடில்ஸ் பண்றேனு சொல்லி கடையில் வாங்கின குக்டு நூடில்ஸ்ஸையும், அம்மா செய்து வெச்ச சிக்கனையும் ஒன்னு சேர்த்து சிக்கன் நூடில்ஸ்னு சொல்லி குடுத்துட்டேன்... :( என்ன செய்ய..

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

உங்களை மேடம்னு சொல்லலாமா? யாரை மேடம்னு சொன்னாலும் மேடம்னுலாம்
சொல்லாதீங்கன்னெ சொல்ராங்க.அனைவருக்கும் காலை வணக்கம்.

ஒரு வழியா வந்தாச்சா, திங்களன்று பட்டிக்கு வரமுடியாம போயிடுமோன்னு நினைச்சேன்ப்பா. இன்னும் பவர் ப்ராப்ளம் சரியாக எத்தனை நாள் ஆகும் கல்ப்ஸ். குட்டீஸ் நலமா.

ஷேக் அண்ணா,

12ந் தேதி வருவதாய் சொன்னீங்க, இன்னும் வரலையா ஊரில் இருந்து. ரம்ஜான் முடிஞ்சாச்சே அண்ணா, ஊரை விட்டு வர இன்னும் மனம் வரலையோ.

அன்புடன்
பவித்ரா

சரி யாராவது வந்தா எனக்கு ஒரு யோசனை சொல்லுங்க!
முன்பெல்லாம் நான் நிறைய தேங்காய் சமையலில் சேர்க்க மாட்டேன். குழம்பில் மட்டும் அரைத்து சேர்ப்பேன், இப்போதெல்லாம் பொறியல், சில சமயம் ரசத்திலும், எப்போதும் பொறியலிலும் சேர்க்கிறேன்.

சிலர் சொல்ல கேள்விபட்டிருக்கிறேன், தேங்காயை தினமும் உணவில் எடுத்துக்கொண்டால் இதயம் சம்பந்தப்பட்ட நோய்கள் வர வாய்ப்பு அதிகம் என்றும், 40 வயதிற்க்கு மேற்பட்டவர்கள் தேங்காயை அரிதாகவே சேருங்கள் என்றும் கேள்விபட்டிருக்கிறேன். கொஞ்சம் விளக்கம் சொல்லுங்க தோழிகளே.

அன்புடன்
பவித்ரா

பவி

சரிதான். தேங்காய் சமைக்கப்பட்ட உடன் கொழுப்பு அதிகம் உள்ள உணவாக மாறிவிடும்.. பச்சையாக சாப்பிட்டால் உடலுக்கு ரொம்ப நல்லது. என்னோட அப்பா பைப்பாஸ் சர்ஜரி ரீசன்டாக செய்து கொண்டவர்.. அவருக்கு தேங்காய் சேர்க்க வேண்டாம் என டாக்டர் கூறியுள்ளார். ஒரு குறிப்பிட்ட வயதிற்கு மேலே சில குறிப்பிட்ட உணவை தவிர்ப்பது நல்லதே

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

நன்றி ரம்ஸ். என்னோட ஒரு கருத்து என்னவென்றால், இப்போ நிறைய உடல் சம்பந்தப்பட்ட உபாதைகள் வருவதால் நாம் ரொம்பவே கேர்ஃபுல்லா இருக்க வேண்டியிருக்கு. ஒரு வயதிற்கு மேல் முற்றிலும் தவிர்ப்பதற்கு இப்போது முதலே அதிகம் உட்கொள்வதை தவிர்க்கலாம் இல்லையா. என் அப்பாவுக்கு சுகர் இருக்கு ரம்ஸ், என் பாட்டிக்கும் (அப்பாவின் அம்மா) சுகர் இருந்தது, சுகர் ஹெரிடிட்டியா வரும் என்பதால் நான் இப்பவே சர்க்கரை கம்மியாதான் உபயோகப்படுத்தரேன்.

அன்புடன்
பவித்ரா

பவி

நீ சின்ன பொண்ணு தானே? கவலப்படாம சாப்பிடு!

ஆனா தினமும் என்பதை வாரம் இருமுறை அல்லது 3 முறை என படிப்படியாக குறைத்துக்கொள். அதற்காக முழுவதும் தவிர்க்க தேவையில்லை. தேங்காயிலும் சத்து இருப்பதாக முன்பு ஒரு கட்டுரையில் படித்தேன்

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

நன்றி ஆமி, ஆனா இது ஒத்துக்க மாட்டேன்.நீங்க என்ன பெரிய பொண்ணா, ம், சும்மா கேட்டேன்.

அதான் ஆமி, முழுவதும் குறைக்கபோவதில்லை,வயசு இருக்கேன்னு இப்ப நிறைய சாப்பிட்டு விட்டு அப்புறம் ஓரேடியா தவிர்ப்பதற்கு இப்பவே குறைத்துக்கொள்ளலாம் என்று தான் கேட்டேன் ஆமி,

அன்புடன்
பவித்ரா

மேலும் சில பதிவுகள்