help for my life

தோழிகளே
எனக்கு அப்பா, அம்மா கிடையாது.அண்ணன் இருக்கிறார்.ஆனால் என் மீது அந்த அளவு அக்கறை கொண்டவர் இல்லை.அவருக்கும் திருமணம் ஆகிவிட்டது.அண்ணியும் பாசம் கொண்டவர் இல்லை. எனது திருமணத்தை எனது தாத்தா தான் நட்த்தி வைத்தார்.இப்போது எனது கணவர் வீட்டில் வாழ்கிறேன் திருமணம் ஆகி 4 வருடங்கள் ஆகிரது எனக்கு 3.5வயதில் ஒரு பெண் குழந்தை இருக்கிறாள்..திருமணம் ஆகி 1 வருடம் நன்றாக தான் இருந்தோம்.பிறகு என் மாமியார் பேசுவதெல்லாம் மனதை மிகவும் காயப்படுத்திவிட்டது.வாழ்க்கையே வேண்டாம் என தாத்தா வீட்டிற்கு சென்று விட்டேன்.கணவர் Support இருந்திருந்தால் மாமியார் பேசுவதெல்லாம் பெரிய விஷயமாக தெரிந்திருக்காது.அவரோ இங்கே இப்படிதான் இருக்கும்.Adjust செய்துகொள் என்கிறார்.ப்ரச்சனை மிகவும் பெரிதாகிவிடவே இப்போது நீ எல்லோருக்கும் சேர்த்து வேலை மட்டும் செய்துவிடு.என் அம்மாவோடு பேச வேண்டாம் என்றார்.6 மாதமாக இப்படி நடக்க் இப்போது என் கணவர் என்னிடம் சுத்தமாக பேசுவதில்லை.உன்னால் தான் என் குடும்பத்தில் சந்தோஷம் போய் விட்டது என்கிறார்.என் தாத்தா,அண்ணன்,இவர்கலுடன் பேசக்கூடாது, யாரும் இங்கு வரவும் கூடாது என்று சொல்லிவிட்டார்.இவர்கலுடய சொந்தங்கள் வீட்டிற்கும் அழைத்து செல்வதில்லை.இவர்கலுடய சொந்தங்கள் யார் வந்தாலும் என்னிடம் அதிகம் பேசுவதில்லை.அக்கம் பக்கம் கூட பேசக்கூடாது என என் மாமியார் சட்டம் போட்டுள்ளார்.ஏதாவது அவரிடம் கேட்டால் இனி இப்படிதான் விருப்பமிருந்தால் இருக்கலாம். இல்லையென்றால் உன் வழியை நீ பார்த்துக்கொள் என்கிறார். என் மகளிடம் கூட சரியாக அவர் பேசுவதில்லை பெரியவர்களை வைத்து பேசினாலும் அதற்கு பதில் கூறும் மன நிலைமையில் அவர்கள் இல்லை..நான் என்ன செய்வது என்று கூருங்கள்தோழிகளே

சுகந்தி

உங்களின் கதை வேதனையாக தான் இருக்கிறது.
நீங்கள் வாழ்க்கையை வாழ கற்றுக் கொள்ள வேண்டும். என்ன வாழ்க்கை என தோன்றும்.. ஆனால் இதுவும் கடந்து போகும் என இருப்பதை கொண்டு நிம்மதி அடைய வேண்டும்.

1. உங்களின் குழந்தையின் எதிர்காலம் அவசியமனது.

2.எதையும் காதில் போட்டுக் கொள்ள வேண்டாம். தாத்தா அண்ணாவிடம் சற்று விலகிதான் இருந்து பாருங்களேன்.

3.கணவரிடம் உஙகளின் அன்பை புரிய வையுங்கள்.

4. குழந்தை, அவள் படிப்பு, அவள் எதிர்காலம் என ஒரு பிடிப்பு இருக்கிறது. அது போதுமே.

5.வேலைக்கு சென்றால் அதிலும், வீட்டில் இருந்தால் மற்ற வீட்டு வேலை குழந்தை என கவனத்தை செலுத்துங்கள்.

6. மாமியார் மற்ற சொந்தங்களை கண்டுக் கொள்ள வேண்டாம். பொறுமையாக இருந்து கணவன் அன்பை மீண்டும் பெற முயற்சி செய்யவும்.

7.எடுத்தோம் கவுத்தோம் என்று எந்த முடிவும் எடுக்க வேண்டாம்.

8. பொறுமை மட்டுமே இந்த சூழலில் உங்களின் ஆயுதம்..

ஏதேனும் மற்ற வழி இருந்தால் பார்க்கலாம். வழி இல்லை என்றால் கவலைப் படுவதில் எந்தவித அர்த்தமும் இல்லை. குழந்தைக்காக அமைதியாக இருங்கள். வாழ்வின் நிலை அவசியம் மாறும்.

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

சுகந்தி உங்கள் கதையை கேட்க கஷ்டமாத்தான் இருக்கு. ரம்யா சொல்றதைத்தான்பா நானும் சொல்றேன். கொஞ்ச நாள் உங்கள் பிறந்த வீட்டினரை விட்டு ஒதுங்கி இருங்கள். குழந்தையை முன்னிறுத்தியே உங்கள் கணவரிடம் பேசுங்கள் அவளது படிப்பு எதிர்காலம் இதையெல்லாம் அவர் கேட்கிறாரோ இல்லையோ பேசுங்க. அடி மேல் அடி வைத்தால் அம்மியும் நகரும். அன்பும் அமைதியும் பொறுமையும்தான் உங்கள் ஆயுதம். மனதை ஒருமுகப்படுத்த யோகா அல்லது உங்களுக்கு பிடித்த விஷயங்களில் ஈடுபடுத்திக் கொள்ளுங்கள்.

ஒன்னு சொன்னா தப்பா எடுத்துக்காதீங்க. உங்கள் பிரச்சினையை உங்களை முன்னிலைப் படுத்தி யோசிக்காமல் அதிலிருந்து வெளியில் வந்து மூன்றாவது மனிதரா இந்த பிரச்சினையை அணுகுங்கள். அப்பதான் நீங்களும் எந்த இடத்தில் தவறு செய்திருக்கீங்கன்னு புரியும். முதலில் அப்படி ஏதேனும் தவறு செய்திருந்தால் தயங்காமல் மன்னிப்பு கேளுங்கள். மீண்டும் அதை செய்யாதீங்க. மெல்ல மெல்ல இந்த நிலையும் மாறும். நம்பிக்கையோட இருங்க. எல்லாமே சரியாகும். நாங்களும் உங்களுக்காக பிரார்த்திக்கிறோம்.

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

ரம்யா சொல்வது சரியே. நீங்கள் வருத்தப்படாதீங்க சுகந்தி. குழந்தை முக்கியம். மாமியாரும் சரி, கணவரும் சரி உங்களிடம் சரியா பேசலைன்னாலும் நீங்க உங்க கடமையை சரிவர செய்யுங்க. எக்காரணம் கொண்டும் அவர்களை எதிர்க்க வேண்டாம்.

ரொம்ப கஷ்டம் வரும்போது, "இதுவும் கடந்து போகுன்"ன்னு நீங்களே உங்களுக்குள் சொல்லிக்கோங்க. காலம் பதில் சொல்லும். அவர்கள் ஒருநாள் உங்கள் நல்லுள்ளத்தை உணர்வார். வருத்தப்படாமல் குழந்தையின் எதிர்காலத்தில் மனத்தை செலுத்துங்கள்.

அன்புடன்
பவித்ரா

Hi sugandhi,

My Problem as well as your problem. But i have no mother-in-law. I have only father-in-law. I divert my mind. Now i am going to office. They said your mother,father and all your relations are not come to my house.
I live only my children.

TRY TRY TRY
DON'T BE SHY
THEN YOUR POSITION WILL BE HIGH.

"ignorance" போல கொடுமையான விஷயம் உலகத்துல இல்லை.. அதுக்காக மனம் உடைந்து போகாதீர்கள். நீங்க கவனம் செலுத்த குழந்தை இருக்கிறது. குழந்த்தைக்கான வேலைகளை செய்யுங்க.. ஆன்லைன் வசதி இருந்தா அறுசுவைலேயே கலந்த்துக்குங்க..வேலைக்குப் போக முடியும்னா அதுக்கும் முயற்சி செய்யுங்கள். உங்களைக் கஷ்டப்படுத்தும் சூழ்நிலைக்குள்ள உங்களை கொண்டுபோகாம உங்க கவனத்தை நல்ல விதமா திசை திருப்பினாலே ஒரு நல்ல வழியும் விடையும் கிடைக்கும்.

சில வேளைகளில் நம்மால எதையுமே செய்யமுடியாமல் இருப்பது போல் உணர்வோம்.அது கூட பின்னால் நடக்கப்போகும் ஒரு நல்ல விஷயத்துக்குக்குத்தான்கிறதை நம்புங்கள்..மனதவில் கஷ்டப்படும் தருணங்கள் எல்லாமே மனசை பக்குவப்படுத்தவே செய்யும்.. பொறுமையா உங்களை உங்கள் குடும்பத்திற்கு உணரவையுங்கள்..

தோழி சுகந்திக்கு,

உங்கள் நிலைமையை என்னால் நன்றாக புரிந்து கொள்ள முடிகிறது. ஒன்னு மட்டும் எப்போவும் நினைவில் வச்சிக்கோங்க சுகந்தி, "எனக்கு மட்டும் இப்படி நடக்குது, நான் மட்டும் கஷ்டப்படறேன்" போன்ற எண்ணங்களை மட்டும் உங்க கிட்ட ஆண்ட விடாதீங்க. அது சுயபச்சாடாபத்தில் சென்று முடியும். இதை விட கொடுமையான சூழ்நிலைகளை சந்திச்ச பெண்கள் இருக்காங்க. உங்கள் கணவர் உங்களிடம் அன்பாக தான் இருந்திருக்கிறார், கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணு அப்படீன்னு வேற சொல்றார். இதிலிருந்தே அவருக்கு உங்கள் மேல் அன்பு இருக்கிறது என்பதை உணருங்கள், உங்களை அவரால் விட முடியவில்லை. ஆகையால் உங்கள் வாழ்க்கைக்கு மிகப்பெரிய பாதிப்புகள் வராமல் அவர் காப்பர் என்றே தோன்றுகிறது. அவருக்கும் ஏதேனும் குழப்பம் இருக்கலாம். அவருக்காக நீங்கள் பொறுத்து பாருங்கள்.

உனது கடமைகளை நீ சரிவர செய், உனது புகுந்தவீட்டார் என்ன சொன்னாலும், எப்படி நடந்தாலும், நீ அவர்களுக்கு செய்யவேண்டிய கடமைகளை செய், அது நீங்கள் செய்வதற்காக இருக்கும் கடமைகளே என்பதை உணர்ந்து சரியாகவே நடந்துகொள். நீங்கள் இதை செய்ய செய்ய உங்கள் சூழ்நிலை மாறுவதை காணலாம். இப்படி செய்யாவிடில், இந்த நிலைமை இன்னும் மோசமாக வாய்ப்புள்ளது. இதை விட கொடியவர்கள் இந்த உலகில் இருக்கிறார்கள் தோழி. எதற்கும் கோபப்படாதீங்க, அது உங்கள் கண்களை மறைத்து விடும், பகை உணர்ச்சியும் வேண்டாம், மன்னிக்க பழகுங்கள். அவர்கள் தவரே செய்யட்டும், நீங்கள் சரியானவராய் இருங்கள். இப்படி செய்தால், உங்கள் மனம் தெளிவு பெரும், குழப்பம், பயம் நீங்கும். எதற்கும் பயபடாதீங்க, ஆனால் பணிவுடன் இருங்கள். நிதானமாக யோசித்து முடிவெடுங்கள். இப்பொழுது நீங்கள் இருக்கும் சூழ்நிலைக்கு, நீங்கள் பொறுமையாக இருப்பதே சிறந்தது என்பது என் கருத்து.

இங்கே தோழிகள் கூறியிருப்பதை மனதில் வைத்து செயல்படுங்கள். ஒரு துயரம் வரும்போது, இறைவன் திருவடிகளை மானசீகமாக நன்கு பற்றுங்கள். அவர் இடம் உங்கள் குறைகளை கூறுங்கள். இது உங்களுக்கு தைரியத்தையும், தெளிவையும், மன அமைதியையும் கொடுக்கும்.

இதையும் மீறி அவர்கள் தான் சரியாக உங்களை புரிந்து கொள்ளவில்லை என்னும் நிலை வந்தால், சீதாலக்ஷ்மி அம்மா தொழில் பற்றி கூறிய இந்த கருத்து உங்களுக்கு உதவும்.

"இந்த முடிவு முழுக்க முழுக்க என்னுடையது. சரியாக வரும் என்ற நம்பிக்கையில் செயல்பட ஆரம்பிக்கிறேன். ஒரு வேளை எதுவும் திசை மாறினால், அதற்குண்டான ALTERNATIVE STEPS/SOLUTIONS யோசித்து வைத்திருக்கிறேன். எதிர்பாராமல் எதுவும் தவறாக நடந்தாலும், நானேதான் அவற்றை சமாளித்தாக வேண்டும் என்பதை நன்றாகப் புரிந்து வைத்திருக்கிறேன். "

முடிவுகளை நீங்களே யோசித்து எடுங்கள். உங்களுக்கு ஏற்பட்டிருக்கும் துயரங்களை ஒரு CHALLENGE ஆகா நினைத்து முன்னேறுங்கள். ஒரு ஐந்து வருடம் கழித்து, நீங்கள் திரும்பி பார்க்கும்போது, இதெல்லாம் ஒரு பிரச்சனையே இல்லை என தோன்றும் தோழி. ALL THE BEST.

இதுவும் கடந்து போகும்.

உங்கள் அனைவரின் பதில்களும் நன்றி.தனிகுடித்தினம் சென்றுவிட்டால் என் கணவர் மனம் மாற வாய்ப்புள்ளதா, கூறுங்கள் தோழிகளே..........(ஆனால் அவர் வர மறுக்கிறார்.)

அன்பு தோழி சுகந்திக்கு,
தனிக்குடித்தனம் என்று அவரை அழைத்து ஒருவேலை அவர் வந்தார், என்றால் கொஞ்ச நாள் சும்மா இருந்து விட்ட்டு பிறகு உன்னால் தான் என் அம்மாவை விட்டு வந்தேன்.என்று உங்கள் மீது குற்றம் சாட்டுவார். இதுபோதாதென்று உங்கள் மாமியார் ஒரு பக்கம் என் மகனை பிரித்து விட்டாள் என்று எல்லோரிடமும் கூறுவார்கள் எனவே உங்கலுக்கு பொறுமை வேன்டும், நிங்கள் ஒரு பெண் குழந்தை வைத்து கொண்டிருக்கிரிர்கள், கவனம் இருக்கட்டும். நீங்கள் எடுக்கும் முடிவு பொறுத்தே உங்களின் மகள் வழ்க்கையும் நிர்ணயிக்கப்படும். தோழியே எதிலும் நிதானமாக சிந்தித்து செயல் படுங்கள். உங்கள் கவலை கூடிய விரைவில் சரியாகிவிடும். நான் கடவுளை வேண்டிக்கொள்கிறென்.

ஏமாறாதே|ஏமாற்றாதே

மேலும் சில பதிவுகள்