பட்டிமன்றம் - 25 - இளைஞர்கள் சீரழிவுக்கு காரணம், குடும்பமா? சமுதாயமா?

அன்பு சகோதரிகளே! அருமை சகோதரர்களே! இனிய தோழிகளே! உங்களை பட்டிமன்றத்துக்கு வருக! வருக! என வரவேற்கிறேன் (சும்மா சாலமன் பாப்பையா மாதிரி ஒரு பில்ட் அப் தான்)

வெள்ளிவிழாவான 25வது பட்டிமன்றத்தில் என்னை நடுவராக ஏற்றுக்கொண்ட அனைத்து அறுசுவை அன்புள்ளங்களுக்கும் முதற்கண் என் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

(மொக்கையெல்லாம் போதும் சீக்கிரம் தலைப்பை சொல்லுங்க என்ற குரல் கேட்கிறது)

இதோ 25வது பட்டிமன்றத்தின் தலைப்பு, திரு. தவமணி அவர்கள் பட்டிமன்ற தலைப்புகள் இழையில் பதிவிட்ட,

-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-
“இளைஞர்கள் சீரழிவுக்கு காரணம், குடும்பமா? சமுதாயமா?”
-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-

அனைவரும் அவரவர்களின் வாதத்துடன் வாருங்கள் என்று அழைக்கிறேன். வாதிடும் போது பட்டிமன்றத்தின் விதிமுறைகளையும் மனத்தில் நிறுத்தி, பட்டியை நல்லபடி நடத்தி கொடுக்குமாறு அனைவரையும் அன்புடன் வேண்டிக்கொள்கிறேன்.

உங்களுக்காக பட்டியின் விதிமுறைகள்:

பட்டிமன்ற விதிமுறைகள்:

1. ஏற்கனவே வாதாடிய தலைப்புகளை தேர்வு செய்ய கூடாது.
2. பட்டிமன்ற தலைப்புகளை "பட்டிமன்ற தலைப்புகள்" என்ற இழையில் இருந்தே தேர்வு செய்ய வேண்டும்.
http://www.arusuvai.com/tamil/node/10388
3. அத்தலைப்பு மற்றவர்களால் கொடுக்கப்பட்டிருக்க வேண்டும். நீங்களே கொடுத்த தலைப்பாக இருக்க கூடாது.
4. சரியான தேதியில் துவக்கி, சரியான தேதியில் முடித்திட வேண்டும். தவிர்க்க முடியாத காரணங்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும்.
5. பட்டியில் யாரும் யார் பெயரையும் குறிப்பிட்டு வாதிட கூடாது.
6. எந்த மதம், ஜாதி, கட்சியையும் குறிப்பிட்டு பேசுதல் கூடாது. இவற்றை சார்ந்த தலைப்புகளும் தேர்வு செய்ய கூடாது.
7. நடுவரின் தீர்ப்பெ இறுதியானது. அதை பற்றிய கருத்துக்கள் மட்டுமே பதிவு செய்யலாம், வாதங்கள் கூடாது.
8. பொது மன்றம் என்பதை நினைவில் கொண்டு நாகரீகமான பேச்சு கட்டாயம்.
9. நிச்சயம் தமிழில் மட்டுமே பதிவுகள் அனுமதிக்கப்படும். மற்ற பதிவுகளுக்கு நடுவரின் பதிலோ, வாதிடுபவர் பதிலோ இனி இருக்காது.
10. அரட்டை... நிச்சயம் கூடாது. நலம் விசாரித்தவர், பதில் சொன்னவர் இருவருமே குற்றம் செய்தவரே.
இறுதியாக... அறுசுவையின் பொதுவான விதிமுறைகள் பட்டிக்கும் பொருந்தும்.

வாருங்கள் தோழர்களே, தோழிகளே மற்றும் சகோதர சகோதரிகளே!

நீங்கள் ஆவலுடன் எதிர்பார்த்த பட்டிமன்றம் - 25 இதோ உங்களுக்காக.

பட்டியை நல்லபடியா வந்து நடத்திக்கொடுக்குமாறு அனைவரையும் அன்புடன் அழைக்கிறேன்.

வாங்கோ, வாங்கோ, வாங்கோ என்று கூவி கூவி அழைக்கிறேன்.

அன்புடன்
பவித்ரா

நான் வந்துட்டேன்... முதல்ல..... முதலில் பட்டிமன்றம் நல்லா நடக்க இறைவனை பிரார்திக்கிறேன்.... நடுவராக பொறிப்பேற்ற பவித்ராவுக்கு என் வாழ்த்துக்கள்..... அப்புறமா சொல்றேன் நா எந்த பக்கம்னு...

ஒன்று செய், அதுவும் நன்று செய்.
ரங்கலஷ்மி லோகேஷ்

இந்த பட்டிமன்றத்தில் பங்கேற்கும்,மற்றும் வாதாடப்போதும் அனைத்து தோழிகளுக்கும், பார்வையிடப்போகும் மற்றும் எங்களுக்கு சப்போர்ட் பண்ணப்போகும் அனைத்து அறுசுவைத் தோழிகளுக்கும் எனது நன்றிகள்.... பாராட்டுக்கள்... வாழ்த்துக்கள்...

ஒன்று செய், அதுவும் நன்று செய்.
ரங்கலஷ்மி லோகேஷ்

நடுவர் அவர்களுக்கு வணக்கம்.... நான் இளைஞர்களின் சீரழிவுக்கு காரணம் சமுதாயமே என்ற தலைப்புல் பேச வந்துள்ளேன்......

ஒருவனின் சீரழிவுக்கு காரணம் நாம் இருக்கும் இந்த சமுதாயமே ஆகும்... ஒருவன் பிறந்து அவன் பள்ளி செல்லும் வரை தான் தாய் தந்தை அவனை வளர்க்கிறார்கள்... தாய், தந்தை வளர்ப்பில் அவன் பச்சைக் களிமண்ணாக மட்டுமே இருக்கிறான்.... அவன் ஒரு நல்ல பானை ஆவதும்.... எதற்கும் உதவாத உடைந்த ஓடு ஆவதும் அவன் இந்த சமுதாயத்தில் கால் வைத்த பிறகே.... எந்த ஒரு தாய் , தந்தையும் தன் மகன் சீரழிவதை விரும்பமாட்டார்கள்... ஒருவன் தன் குடும்பத்தில் மூலம் சீரழிந்து விட்டான் என்றால் அது அத்தி பூத்தாற் போல் எங்கோ ஒன்ரு இருக்கலாம்... ஆனால் நமது தலைப்பு அதிகம் சீரழிவுக்கு காரணம் என்பதே.... சமுதாயமே ஒரு இளைஞன் சீரழிவுக்கு பெரிதும் காரணம் என எனது முதல் வாதத்தை முடிக்கிறேன்...

நன்றி நடுவர் அவர்களே....

ஒன்று செய், அதுவும் நன்று செய்.
ரங்கலஷ்மி லோகேஷ்

வாங்க, வாங்க. முதல் ஆளாய் வந்து உங்க பதிவை போட்டதற்கு நன்றி.

**தாய், தந்தை வளர்ப்பில் அவன் பச்சைக் களிமண்ணாக மட்டுமே இருக்கிறான்.... அவன் ஒரு நல்ல பானை ஆவதும்.... எதற்கும் உதவாத உடைந்த ஓடு ஆவதும் அவன் இந்த சமுதாயத்தில் கால் வைத்த பிறகே.... எந்த ஒரு தாய் , தந்தையும் தன் மகன் சீரழிவதை விரும்பமாட்டார்கள்... **

முதல் வாதத்திலேயே சூப்ப்பரா தன்னோட கருத்தை சொல்லிட்டாங்க ரங்கலஷ்மி அவர்கள்.

என்ன எதிரணியில் யார் வந்து நம்ம ரங்கலஷ்மிக்கு பதில் சொல்ல போறீங்க. வாங்க வாங்க, வந்து ரங்கலஷ்மிக்கு பதில் கொடுங்கப்பா.

அன்புடன்
பவித்ரா

நடுவருக்கும் தோழிகளுக்கும் எனது அன்பான வணக்கங்கள். இளைஞர்கள் சீரழிவுக்கு காரணம் குடும்பமே என்பதுதான் என் வாதம்.

"எந்த குழந்தையும் நல்லக் குழந்தைதான் மண்ணில் பிறக்கையிலே அவன் நல்லவனாவதும் தீயவனாவதும் அன்னை வளர்ப்பினிலே அன்னை வளர்ப்பினிலே" இதிலிருந்தே தெரியவில்லையா ஒருவன் சீரழிவுக்கும் காரணம் குடும்பபே என்று!

ஒருவேளை இளைஞர்களின் சீரழிவுக்கு காரணம் சமுதாயமே என எதிரணி கூறினால் அவர்களிடம் என் கேள்வி இதுதான்...நாமும் இதே சமுதாயத்தில்தானே வளர்ந்தோம் வாழ்கிறோம். நாமெல்லாம் என்ன சீரழிந்தா போய் விட்டோம். நல்லது எது கெட்டது எது என்று பிரித்துப் பார்க்கும் அறிவை நமக்குத் தந்தது யார்? நாம் கற்ற கல்வியும் நம்மை வழிநடத்திய நம் பெற்றோரும்தானே! இதுபோன்ற பெற்றோரும் குடும்பமும் அமையாத இளைஞர்கள்தான் வழிதவறி சீரழிகின்றனர். அதனால்தான் இளைஞர்களின் சீரழிவுக்கு காரணம் குடும்பம் என்கிறோம்.

நம்மிடம் ஒரு குணம் உண்டு. ஏதாவது நல்லது செய்து பாராட்டு கிடைத்தால் உடனே அதற்கு முழு காரணகர்த்தாவும் நாம்தான் என்று பெருமைப்படுவோம். அதே ஏதேனும் தவறு நிகழ்ந்து விட்டால் அதற்கான காரணத்தை குற்றங்களை பிறரிடம் காண முயல்வோம். அப்படித்தான் நம் வளர்ப்பில் உள்ள தவறை மறைக்க இளைஞர்கள் சீரழிவுக்கு சமுதாயமே என்று சொல்வதும்.

நல்லதும் கெட்டதும் கலந்ததுதான் சமுதாயம். அதைப் பிரித்துப் பார்க்கும் அறிவை ஊட்டுவது குடும்பம். அதில் தவறும் குடும்பத்தைச் சேர்ந்த இளைஞந்தான் சீரழிவில் சிக்குவதும். குற்ற காரியங்களில் ஈடுபடும் இளைஞர்களின் குடும்ப பின்னணியை ஆராய்ந்தால் இப்படிப்பட்ட இளைஞர்களின் குடும்ப அமைப்பு பெரும்பாலும் சரியில்லாததாக இருக்கும்.

பருவ வயதில் தடுமாற்றம் ஏற்படுவது சகஜம். அதை தாயும் தந்தையும் புரிந்து கொண்டு பிள்ளைகளிடம் தோழனாக தோழியாக பழகி எல்லா விஷயங்களைப் பற்றியும் பேசும் ஒரு சூழலை குடும்பத்தில் உருவாக்கி விட்டால் அந்த பருவ வயது குழந்தை தனக்கு ஒரு பிரச்சினை என்றால் பிறரை நாடாது. தன் பெற்றோரிடமே தயக்கமின்றி பேசி தெளிவு பெறுவார்கள். இப்படிப் பட்ட சூழல் இல்லாமல் அப்பா என்றாலே சிம்ம சொப்பனமாக இருக்கும் குடும்பம் என்றால் நிச்சயம் அந்த குழந்தை தன் பெற்றோரிடம் எதையும் பகிர்ந்து கொள்ள மாட்டார்கள். இப்படிப்பட்ட குழந்தைகள்தான் கயவர்களிடம் சிக்கிக் கொண்டு முழிப்பார்கள். அப்போது கொஞ்சம் பெற்றோர்கள் விழித்துக் கொண்டால் கூட அந்த இளைஞனை திருத்தி நல்வழிக்கு கொண்டுவர முடியும்.

ஆக மொத்தத்தில் குடும்ப சூழல் சரியாக இருந்தால் இளைஞர்களும் நல்வழியில் நடப்பார்கள். சில விதிவிலக்குகள் இருக்கலாம். அந்த விதிவிலக்குகளைப் பற்றியே எதிரணியினர் பேசப் போகின்றனர்.

நடுவரே விதிவிலக்குகள் உதாரணமாகி விட முடியாது. அதனால் நல்லதொரு தீர்ப்பை எங்கள் அணிக்கு சாதகமாக சொல்வீர்கள் என்ற நம்பிக்கையுடன் முதல் சுற்று வாதத்தை நிறைவு செய்கிறேன். நன்றி வணக்கம்.

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

நடுவரே.... ஒருவன் பிறந்ததும் பறவைகள் தன் குஞ்சுகளை எப்படி அடை காக்குமொ அவ்வாறு காத்து... அவர்கலுக்கு நல்லனவற்றையும் தீதயும் எடுத்துச் சொல்லி பெற்றோர் வளர்க்கின்றனர்... அவனும் நல்லவனாகவே வளர்கிரான்... ஆனால் வயது ஏற ஏற அவனது தீய பழக்கங்களும் அவன் வயது ஏறுவதைப் போலல்லவா ஏறுகிறது... அவனது நட்பு வட்டம் விரிவடைகிரது.... போதாக்குறக்கு இப்போ டி.வி. கம்ப்யூட்டர் என இந்த சமுதாயத்தில் இருக்கும் ஒவ்வொன்றும் அவனை ஈர்க்கின்றது....

நடுவரே டிவி நெட் இதிலெல்லாம் நல்லதும் இருக்கு... ஆனால் நல்லதை விட தீயவற்றிற்கு ஈர்ப்பு அதிகம்... இன்னும் சொல்லப்போனால் எந்த இளைஞன் இன்னக்கி காலேஜ் விட்டதும் வீட்டுக்கு வருகிறான்... இன்னும் சில பேர் பிரண்டு வீட்ல தூங்கரேன்னு சொல்லி வீட்டுக்கே வர்ரது கிடையாது..... இன்னக்கி ஆண்களிடம் இருக்கும் புகை பழக்கம் எப்படி வந்து? ஒருஅப்பாவா தன் மகனை அழைச்சு பக்கத்துல வ்ச்சிகிட்டு இப்படித்தா புகைக்கனும்னு கத்துத் தர்ராரா? இல்லையே .... இவனா இந்த சமூகத்திலேந்து கத்துகிட்டதுதானே.....

இன்னக்கி பார்ல போய் பாருங்க எத்தனை பேர் க்யூ கட்டி நிக்கறாங்கன்னு.... சினிமாவுக்கு கூட ஹவுஸ்புல் போர்டு படம் வெளிவந்த 10 இல்ல 20 நாள் தான் போடுவாங்க... ஆனா வருசம் புல்லா ஹவுஸ்புல் போர்டு மாட்ற ஒரே இடம் பார் தானே.... எந்த அப்பா தன் மகனை கூட்டிகிட்டு போய் இது தாண்டா பார்.. இங்க தான் தண்ணி அடிக்கனும்னு சொல்லிதர்ராரு....

ஒரு இளைஞனை முதல்ல சீரழிக்கற விஷய்ம் புகையும் தண்ணியுந்தா இது ரண்டுத்தையு ஒருத்தனுக்கு கத்துக்கொடுக்கற பள்ளிக்கூடம் எது? இந்த சமூகம் தானே...

அதனால் தான் நடுவர் அவர்களே நான் ஆணித்தரமாக சொல்கிறேன் ஒருவனை சீரழிப்பது இந்த சமுதாய்மே என்று...

வாய்ப்பு அளித்ததற்கு மறுமுறை நன்றி கூறி விடைபெறுகிறேன்///

ஒன்று செய், அதுவும் நன்று செய்.
ரங்கலஷ்மி லோகேஷ்

வாங்க கவிசிவா. எதிரணிக்கு சரியான பதிலடி கொடுக்க வந்திட்டீங்களா!

அட, ஆமா, பருவ வயதில் தடுமாற்றம் ஏற்படுவது சகஜம் தானேப்பா. இது நான் கேட்கலை, கவிசிவா கேட்கிறாங்க, என்ன பதில் சொல்ல போறீங்க?

கவிசிவா சொல்றாங்க, பெற்றோர்கள் நினைத்தால் இளைஞனை திருத்தி நல்வழிக்கு கொண்டுவர முடியுமாம்!

** அப்பா என்றாலே சிம்ம சொப்பனமாக இருக்கும் குடும்பம் என்றால் நிச்சயம் அந்த குழந்தை தன் பெற்றோரிடம் எதையும் பகிர்ந்து கொள்ள மாட்டார்கள். இப்படிப்பட்ட குழந்தைகள்தான் கயவர்களிடம் சிக்கிக் கொண்டு முழிப்பார்கள்.**

நல்லதொரு கருத்தை முன் வைத்துள்ளார்.

பட்டியே இப்பதான் ஆரம்பிச்சிருக்கு. இப்பவே சாதகமான தீர்ப்பா சரியா போச்சு போங்க.

வாங்கப்பா, ரங்கலஷ்மியுடன் சேர்ந்து கவிசிவாவின் கேள்விக்கு வந்து பதில் சொல்லுங்கப்பா.

அன்புடன்
பவித்ரா

சபாஷ் சரியான போட்டி.

**ஒருஅப்பாவா தன் மகனை அழைச்சு பக்கத்துல வ்ச்சிகிட்டு இப்படித்தா புகைக்கனும்னு கத்துத் தர்ராரா? இல்லையே .... இவனா இந்த சமூகத்திலேந்து கத்துகிட்டதுதானே..... **

வந்து பதில சொல்லுங்கப்பா, அப்பாவா கத்துக்கொடுக்கிறார்? வாங்க வந்து சொல்லுங்க.

**ஆனா வருசம் புல்லா ஹவுஸ்புல் போர்டு மாட்ற ஒரே இடம் பார் தானே** அட ஆமாப்பா, ரொம்ப சரியான விஷயம். எங்க போயிட்டீங்க எதிரணியினரே, சீக்கிரம் வந்து சரியான பதிலடி கொடுங்க.

அன்புடன்
பவித்ரா

நடுவரே எனது வாதத்தை எடுத்துரைப்பதற்கு முன் எதிரணியினரின் சந்தேகத்தை தீத்து வைக்க கடமைப்பட்டுள்ளேன்.... பாடலோடு ஆரம்பித்தார்கள்.... எந்த குழந்தையும் நல்ல குழந்த்தைதான் என்று... நாங்களும் அதையே தான் சொல்கிரோம்... இந்த கவிஞர் பாடியது அந்த காலத்தில் ... அந்த காலத்தில் ஏது இத்தனை டிவி சேனல்கள்... ஏது இவ்வளவு அறிவியல் முன்னேற்றம்..... அதே கவிஞர் இப்போது இருந்த்திருந்தால் அதையே மாற்றி அவர் நல்லவராவதும் தீயவராவதும் நாட்டு நடப்பினிலே என பாடியிருப்பார்...

இரண்டாவது எங்கேயோ ஒரு மூலையில் ஒரு பெற்றோர் சரியில்லை என்பதற்காக குடும்பம் தான் காரணம் என சொன்னால் அது எப்படி நியாயம்? அப்புரம் நீங்களும் நானும் இன்று நல்லது கெட்டது பிரித்து பார்க்கிறோம் அது நம்முடைய குடும்பத்தினால் தானே என எந்த விதத்திலும் குடும்பம் சீரழிவுக்கு காரணம் இல்லை என மறைமுகமாக எங்களுக்கு சப்போர்ட் பண்ணி இருக்கிறார் எதிரணிக்காரர்......

பொதுவாக பென்கள் எப்போதும் குடும்பம் என்ற எல்லைக்குள் அடங்குவார்கள்.... அதனால் பெண்கள் சீரழிந்து போவது மிகக் குறைவு ... குடும்பம் என்ற எல்லைக்கோடு தான் பெண்களை சீரழியாமல் காக்கிறது... ஆனால் ஆண் பிள்ளைகள் அப்படி இல்லை ... ஏனெனில் அவர்களுக்கு மீசை முளைக்கும் போதே அவ்னுக்கும் அவன் குடும்பத்திற்கும் இடயில் ஒரு பெரிய சுவரும் முளைத்து விடுகிறது... இதற்கு காரணம் அவனின் பெற்றோர் என யாராவது சொல்லமுடியுமா? .... ஒரிவனின் தந்தை தான் தன் மகனிடம் ஒட்டாமல் விலகி போகிறார் என யாராவது கூற முடியுமா?..... அவனை சுற்றி உள்ள சமுதாயம் அவனை தீய வழியில் நெருங்கினால்.. அவன் தானாகவே தனது குடும்பத்தை விட்டு விலகுகிறான்.....

ஒன்று செய், அதுவும் நன்று செய்.
ரங்கலஷ்மி லோகேஷ்

மேலும் சில பதிவுகள்