காலிஃப்ளவர் குருமா

தேதி: September 20, 2010

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 5 (4 votes)

 

காலிஃப்ளவர் - பாதி (சிறிய அளவு பூ)
பெரிய வெங்காயம் - ஒன்று
தக்காளி - 2
இஞ்சி பூண்டு விழுது - ஒரு தேக்கரண்டி
மிளகாய் பொடி - 2 தேக்கரண்டி (காரத்திற்கேற்ப கூடுதலாக சேர்த்துக் கொள்ளவும்)
தனியா பொடி - 2 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு
வெண்ணெய் - சிறிதளவு
எலுமிச்சை - அரை மூடி
அரைக்க:
சின்ன வெங்காயம் - 5
முந்திரி பருப்பு - 10


 

முதலில் மேலே குறிப்பிட்டுள்ள தேவையானவற்றை அனைத்தையும் தயாராக எடுத்து வைத்துக் கொள்ளவும்.
காலிஃப்ளவரை தண்ணீரில் உப்பு சேர்த்து அதில் போட்டு கொதிக்க வைக்க வேண்டும். ஒரு நிமிடம் கொதித்ததும் அடுப்பை அணைத்து விடவும். பிறகு 5 நிமிடம் கழித்து காலிஃப்ளவரை வடிகட்டி வைத்துக் கொள்ளவும்.
வெங்காயம் தக்காளியை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். அரைக்கக் கொடுத்துள்ள பொருட்களை நைசாக அரைத்துக் கொள்ளவும்.
பின்னர் வாணலியில் எண்ணெய் ஊற்றி நறுக்கின வெங்காயம், தக்காளி, இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.
பிறகு மிளகாய்தூள், தனியா தூள், காலிஃப்ளவர் போட்டு ஒரு நிமிடம் வதக்கவும்.
அதன் பின்னர் அரைத்து வைத்துள்ள கலவையை சேர்த்து ஒரு நிமிடம் வதக்கி, தேவையான அளவு தண்ணீர் சேர்த்து உப்பு போட்டு கொதிக்க வைக்கவும்.
காய்கறி நன்கு வெந்து தண்ணீர் வற்றியவுடன் அடுப்பை அணைத்துவிட்டு அரை மூடி எலுமிச்சம்பழம் பிழியவும். வேறு பாத்திரத்தில் மாற்றி கொத்தமல்லித் தழை தூவி வெண்ணெய் சேர்த்து சூடாகப் பரிமாறவும்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

காலிஃப்ளவர் குருமா பாத்தோடனே பண்ணிப்பார்க்க நினைத்தேன் கைவசம்

காலிஃப்ளவர் இல்லை. நாளை வாங்கி வந்து செய்து பாக்கனும்.

சித்ரா உங்க வருகைக்கும் பின்னுாட்டத்திற்கும் மிக்க நன்றி.... கண்டிப்பா செய்து பாருங்க.. நன்றி...

"செய்க தவம், தவமாவது அன்பு செலுத்துதல்"

ராதா ஹரி

ராதா இன்னது இன்னைக்கி பாசமலர் இரண்டு பேருடைய குறிப்பும் சொல்லிவச்சமாதிரி வந்து இருக்கு. சாதரணமா குருமாவுல தேங்காய் அரைத்து சேர்க்காம, அதற்கு பதிலா இதுமாதிரி முந்திரி, சின்ன வெங்காயத்து அரைத்து சேர்க்கலாமா ராதா.

இதே முறையில் நான் தேங்காய் சேர்ப்பேன். ஆனா முந்திரியும்,வெங்காயமும் அரைத்து செய்வது வித்தியாசமாக இருக்கு. பாக்கும் போதே வயிறு பசிக்குது. சீக்கிரமே செய்துட வேண்டியது தா...

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

வினோஜா பாராட்டுக்கு மிக்க நன்றி... சும்மா தான் குடும்பத்தோட குறிப்பு கொடுக்கலாமேன்னு தான்... இது கொஞ்சம் வித்தியாசமான டேஸ்ட்ல நல்லாருக்கும். கண்டிப்பா ட்ரை பண்ணிப்பாருங்க.. விருப்பப்பட்டால் ஃப்ரெஷ் கிரீம் சேர்த்துக்கொள்ளலாம் கடைசியில்....... இன்னும் சுவையாக இருக்கும்..

"செய்க தவம், தவமாவது அன்பு செலுத்துதல்"

ராதா ஹரி

ஆமி கண்டிப்பா செய்து பாருங்க.. இதத்தான் நான் அன்னைக்கு சொன்னேன். நீங்க சொன்னதுக்கு அப்பறம் ஒரு வேளை அறுசுவைல ஏற்கனவே இது மாதிரி வந்துருக்கோனு தேடினேன். இன்னைக்கு வந்ததும் தான் ஓகே ஆச்சு... நல்லாருக்கும் இந்த முறை. செய்து பாருங்கப்பா...

"செய்க தவம், தவமாவது அன்பு செலுத்துதல்"

ராதா ஹரி

ராதா மேடம், பார்க்கும்போதே சாப்பிட தூண்டுகிறது. கண்டிப்பாக செய்துபார்க்கிறேன்.

குறிப்பை வெளியிட்ட அட்மின் அவா்களுக்கு நன்றி..........

ரம்யா
உங்க வருகைக்கும் பின்னுாட்டத்திற்கும் மிக்க நன்றி.. கண்டிப்பா செய்து பாருங்க.. நன்றி..

"செய்க தவம், தவமாவது அன்பு செலுத்துதல்"

ராதா ஹரி

ராதா,
குர்மா,பார்க்கவே ரொம்ப நல்லா இருக்கு.தேங்காய் இல்லாமல்,குர்மா செய்தது இல்லை.செய்து பார்த்துட்டு சொல்றேன்.மேலும் நிறைய குறிப்புகள் கொடுங்க.வாழ்த்துக்கள்.

ராதா, அடுத்தடுத்து இது மாதிரி கலர்புல்லா ரெசிப்பீஸ் கொடுத்து எங்களை கொடுமை படுத்தறதுன்னு முடிவு பண்ணிட்டு தான் வந்திருக்கீங்களா? தெளிவான விளக்கப்படங்களுடன் அழகா விளக்கியிருக்கீங்க. வாழ்த்துக்கள் பா. உங்கள் ருசிகரமான கொடுமை தொடரட்டும் :)எனக்கு இங்க எப்பவுமே காலிபிளவர் கிடைக்காது. கிடைக்கும் போது செய்து பார்த்துட்டு உங்களை நினைச்சுக்கறேன்.

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

அன்பரசி
தேங்காய் இல்லாமல் செய்யும் குருமா இது.கண்டிப்பா நன்றாக இருக்கும் செய்து பார்த்துட்டு சொல்லுங்க...

கல்ப்ஸ்
உங்கள கொடுமைப்படுத்தனும்னா நீங்க நான் சொல்ற ரெசிப்பிய செய்து சாப்பிடனும். அது தான் கொடுமையின் உச்சம். அதுனால என்ன பண்றீங்கன்னா ஒழுங்கா சமைத்து நீங்க சாப்பிடுறது பத்தாதுன்னு அண்ணாக்கும் செய்து கொடுத்து உங்க கொடுமையை கன்டினியு பண்ணுங்க அவர்கிட்ட.. காலிஃப்ளவர் இல்லைன்னா சிக்கன் உபயோகப்படுத்தலாம்பா.. என் தோழி சொன்னது. அவ சிக்கன் உபயோகப்படுத்துவா.. நான் தான் ஆல்டர்நேட்டிவ்வா காலிஃப்ளவர் உபயோகிச்சென். அதுவும் நல்லாதான் இருக்குமாம்..

"செய்க தவம், தவமாவது அன்பு செலுத்துதல்"

ராதா ஹரி

ராதா அக்கா,
காளிபிலோவேர் குருமா பார்க்கவே அழகா இருக்கு
மேலும் பல குறிப்புகள் தர வாழ்த்துக்கள்

என்றும் அன்புடன்,
கவிதா

கவி.. வருகைக்கும் பின்னுாட்த்திற்கும் மிக்க நன்றி டா.....

"செய்க தவம், தவமாவது அன்பு செலுத்துதல்"

ராதா ஹரி