கணவன் - மனைவி அன்யோன்யம்...

இந்த தலைப்பு ஆரம்பிக்க தூண்டுதல், ஆமினாவின் "பயனுள்ள அரட்டையில்" நான் போட்ட பதிவுக்கு பவித்ரா ராமும் ,சுந்தரி அர்ஜுனும் கொடுத்த பதில் தான்... கணவன் - மனைவி உறவுக்குள்ள எவ்ளவோ சின்ன சின்ன அழகான விஷயங்கள் நடக்கும்... அப்படி உங்களுக்கிடயே அன்பு/காதல் எப்படி எல்லாம் பகிர்ந்துகிட்டீங்க/பகிர்ந்துக்குவீங்க(ஒரு சின்ன gift கொடுக்கறதுல இருந்து)... எப்படி எல்லாம் பகிர்ந்துக்கனும்னு ஆசை...இதெல்லாம் வந்து சொல்லுங்க... இதுல நீங்க போடுற பதிவை பார்த்து மத்தவங்கலும் "அடடா நாமலும் இப்படி try பண்ணலாமே" நு நினைக்கலாம்... So, வந்து share பண்ணிகோங்க... அதுக்கு முன்னாடி, " இந்த இழையை என் அன்பு கணவருக்காக dedicate பண்றேன்"

நீங்க முதலில் சொல்லி ஆரம்பித்து வைங்க சரன்யா, அதுல அப்படியே மற்றவர்கள் வந்து கலந்துப்பாங்க. ம் வாங்க ரெடி ஸ்டார்ட்.

என் கணவர் லக்னோவிலும் நான் சென்னையிலும் இருந்த போது ஒவ்வொரு விசேஷ நாளும் வருதோ இல்லையோ அதற்கு முன் என்னவருக்கு நான் அனுப்பிய கிப்ட் வந்துடும். பரிசு பொருள் கொடுப்பதில் எவ்வளவு சந்தோஷம் என்பதை அனுப்பி காத்திருப்பவருக்கும், பிரித்து சந்தோஷப்படுபவருக்கும் தான் தெரியும்.

என்னை பிரியும் நாட்களில் என் பரிசு பொருட்களை பார்த்து மகிழ்ந்துகொள்வாராம். 200 கிப்ட் அனுப்ப 250 செலவு பண்ணுவது மற்றவர்களுக்கு முட்டாள் தனமாக தெரிந்த போது என்னவருக்கும் எனக்கும் அது ஒரு பொருட்டாகஏ தெரியவில்லை. அதை பார்த்த மற்றவர்களின்(தமிழ் நாட்டிலிருந்து இங்கு வேலைக்கு வந்த ஆட்கள்) மனைவிமார்களும் அனுப்ப ஆரம்பித்துவிட்டனர்.

அது போல் யாராவது ஊருக்கு வந்தால் பார்சல் அனுப்புவார். அதில் அவர் எழுதிய கடிதம் இருக்கும். போனில் பேசுவதை விட நேரடியாக என்னவர் எழுதியதை தடவியபடியே படிப்பதில் இருக்கும் சுகம் தனி தான். எல்லாம் சேர்த்து வைத்துள்ளேன். அவ்வப்போது சண்டை வந்தால் உடனே அதை அவர்முன் வைத்து போய்விடுவேன். உடனே சமாதானம் ஆகிவிடுவார்.
(இதெல்லாம் ரொமான்ஸ் ரகசியங்கள்:)

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

ஆமி சூப்பர் ஒரு மணிரத்னம் படம் போல இருக்கு
so romantic

மீரா கிருஷ்ணன்

யாதும் ஊரே யாவரும் கேளிர்
தீதும் நன்றும் பிறர்தர வாரா

என் அன்பு கணவர் பிறந்த நாள் என்னால மறக்கவே முடியாது... அவருக்கு தெரியாம heart-shape blackforest cake(அவரோட favourite) வாங்கி வச்சுடேன்...Night 12 கு cut பண்ணலாம்னு முழிச்சு இருந்து candle எல்லாம் பத்த வச்சு போயி எலுப்பினா என் அத்தான் எலுந்திரிகல... :( ... அப்புறம் upset ஆகி நானும் போயி படுத்திடேன்.. மறுபடியும் காலைல அவரு எழுந்திரிகறதுக்கு முன்னாடி எழுந்திருச்சு மறுபடியும் candle எல்லாம் பத்த வச்சு cake கொண்டு வந்து எழுபினேன்.. அப்போ தான் cake cut பண்ணாங்க... அப்புறம் ஒரு casual shoe gift கொடுத்தேன்... இதேல்லாம் முடிச்சு தான் அத்தான் office கிளம்ப ஆரம்பிச்சாங்க... "Happy Birthday", "பிறந்த நாள் வாழ்துக்கள்" அப்படி-நு நெறயா stick-it சின்ன paper-ல எழுதி அவங்க டூத் ப்ரஷ்,முகம் பார்க்கும் கண்ணாடி,coffee mug, ஜெர்கின்,ஹெல்மெட்,lunch box,TV remote நு நெறயா இடத்துல ஒட்டி வச்ச்டேன்.. ஒவ்வொன்னயும் பார்க்கும் போது அத்தானுக்கு ரொம்ப surprise + சந்தோஷம்... அப்புறம் என்ன என்ன எல்லாம் அன்னிக்கு பண்ணேன்னு அடுத்த பதிவுல சொல்றேன்... நீங்கலும் வந்து சொல்லுங்க...

சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே...
நிம்மதியாக வாழ முயற்சி செய்...
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்.
Saranya SangeethKumar :)

சரண்யா என்ன இப்படி ஒரு தலைப்பு ஆரம்பிச்சு..... எல்லரயும் திக்கு முக்காடிப் போக வச்சுட்டீங்க..... ஆனா நல்லா இருக்குதுப்பா....

எனக்கும் என் கணவருக்கும் சண்டை வந்தால்.. கொஞ்ச நேரம் அமைதியா இருந்து அப்புறமா அவர் பின்னாடி போய் நின்னு அவர் தோள்ல மெல்ல சாஞ்சுடுவேன்... உடனே அமைதியாய்டுவார்...

அவர் சமாதானப் படுத்தனும்னு வந்தார்னா நா உக்காந்துருக்கும் போது வந்து என் மடில தலை வச்சி படுத்துக்குவார்... நானும் அமைதியாய்டுவே... அப்புறம் உடனே எங்காவது வெளியில கிளம்பிடுவோம்.... ஆனா ஒன்னுப்பா சண்டை வந்ததுக்கப்புறம் வரும் ரொமான்ஸ் இருக்கே.... அதுக்காகவே அடிக்கடி சண்டை போடலாம் போல இருக்கும்..

ஒன்று செய், அதுவும் நன்று செய்.
ரங்கலஷ்மி லோகேஷ்

திருமணம் ஆன சில நாட்களிலே என் கணவர் சவுதி வந்துவிட்டார்.நான் 3 வருடங்களுக்கு பிறகுதான் இங்க வந்தேன்.என் ஹஸ் அப்போ எழுதிய கடிதங்கள் நான் இப்பொதும் பத்திரமா வச்சுருக்கேன்.முதலில் வாங்கிகொடுத்த
புடவை,dairymilkசாக்லேட் பேப்பர் கூட வச்சுருக்கேன்
தோழிகள் ,உங்கள் கணவர் கொடுத்த முதல் பரிசு என்ன என்பதை பற்றியும் சொல்லுங்களேன்.இதை எழுதும் போதே ப்ளாஷ் பேக் ஓடுது.

என்னவர் மிகவும் அமைதியான சுபாவம் உடயவர்.என்னை பற்றி தான் வுங்க எல்லாருக்கும் தெரியுமில்லையா.அவருக்கு இந்த பர்த்டே கொண்டாடரதேல்லாம் அறவே பிடிக்காது.என்னக்கு அதிலெல்லாம் இஷ்டம். சொன்ன நம்ப மாடீங்க அவர் என்னக்கு எழுதிய முதல் கடிதம் என் மகன் பிறந்த பிறகுதான்.அதை இன்னும் பத்திரமாக வைத்திருக்கிறேன்.அவருக்காக நான் நிறைய மாறியிருக்கிறேன்.அது போல் அவரும் எங்களுக்காக இப்ப குழந்தைகளின் பிறந்தநாள் சிறப்பாக கொண்டாடுவோம்.எங்களுக்கு சண்டை வந்தால் 5 நிமிடத்திற்கு மேல் தாக்கு பிடிக்காது.பேசிவிடுவோம். சரண்யா சொன்னது போலே இங்கு neckless ரோட்டில் வண்டியில் வேகமாக அவருடன் போவது என்னக்கு ரொம்பபிடிக்கும்.

என்னவர் மிகவும் அமைதியான சுபாவம் உடயவர்.என்னை பற்றி தான் வுங்க எல்லாருக்கும் தெரியுமில்லையா.அவருக்கு இந்த பர்த்டே கொண்டாடரதேல்லாம் அறவே பிடிக்காது.என்னக்கு அதிலெல்லாம் இஷ்டம். சொன்ன நம்ப மாடீங்க அவர் என்னக்கு எழுதிய முதல் கடிதம் என் மகன் பிறந்த பிறகுதான்.அதை இன்னும் பத்திரமாக வைத்திருக்கிறேன்.அவருக்காக நான் நிறைய மாறியிருக்கிறேன்.அது போல் அவரும் எங்களுக்காக இப்ப குழந்தைகளின் பிறந்தநாள் சிறப்பாக கொண்டாடுவோம்.எங்களுக்கு சண்டை வந்தால் 5 நிமிடத்திற்கு மேல் தாக்கு பிடிக்காது.பேசிவிடுவோம். சரண்யா சொன்னது போலே இங்கு neckless ரோட்டில் வண்டியில் வேகமாக அவருடன் போவது என்னக்கு ரொம்பபிடிக்கும்.

இந்த தலைப்பு அருமையா போகுதே... சந்தோசம்... நான் என் அன்பு கணவர் birthday celebration continue பண்றேன்... என் அத்தான் கூட வேலை செய்யுற ஒரு பொண்ணு என் கூட நல்லா பேசுவாங்க.. அவங்க கிட்ட birthday decoration things எல்லாம் முன்னாடியே வாங்கி கொடுத்து அத்தன் ofiice cubicle decorate பண்ண சொல்லிடேன்... அவங்க கிட்ட 2 gift boxes கொடுத்து நான் சொன்ன time-கு போயி என் அத்தான் கிட்ட நான் கொடுக்க சொன்னதா கொடுக்க சொல்லிட்டேன்... So, அத்தான் office போன உடனே ஒரு gift box அந்த பொண்ண கொடுக்க சொல்லிடேன்.. அப்புறம், lunch time-கு கொஞ்சம் முன்னாடி நா order பண்ணி இருந்த 12 red roses bouquet basket அத்தான் office-கு டெலிவெர் பண்ணிட்டாங்க... அப்புறம் lunch முடிஞ்சு கொஞ்ச நேரம் கழிச்சு இன்னொரு gift box அந்த பொண்ண கொடுக்க சொன்னேன்... அப்புறம் last gift நானே அத்தான் office-கு போயி கொடுத்தேன்... அன்னிக்கு night dinner வெளில போனோம்,அதும் pool-side seat book பண்ணிடோம்.. Very romantic... எல்லாம் முடிஞ்சு வீட்டுக்கு வந்ததுக்கு அப்புறம் அத்தான் சொன்னாங்க... "You are so sweet"- நு... அப்போ எனக்கு கேட்ட பாடல் வரி "என்தன் காதல் என்னவென்று சொல்லாமல் ஏங்க ஏங்க அழுகை வந்தது..."

சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே...
நிம்மதியாக வாழ முயற்சி செய்...
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்.
Saranya SangeethKumar :)

சின்னப்பொண்ணுங்கள்ளாம் கும்மி அடிக்குது. நாமளும் ஒரு கை கொடுப்போம்.

கண்ணுங்களா. 01.05.1983 ல ஜெ.மாமி ரமணி மாமா கல்யாணம். (பெரியவங்க பாத்து வெச்ச கல்யாணம்தான்). அதுக்கப்புறம் பிரிஞ்சதுன்னா மொத்தமே (டோட்டலா) ஒரு மாசம், 2 மாசம் இருந்தா அதிகம். ரெண்டு பிரசவத்துக்கும் கூட அம்மா வீட்டுக்கு (ஹைதராபாத்) போகல. இவர் தான் நைசா பேசி மாமியாரை இங்க வரவழைச்சுட்டாரே. மாமா ரொம்ப கோவக்காரர். ஆனா நான் பதில் பேசாம வாயை மூடிண்டு போயிட்டா அடுத்த நிமிஷம் கிச்சனுக்கு வந்துடுவார்.
என் அப்பா இவரிடம் கேட்டது ‘அது என்ன தினமும் காலையில கிச்சன்ல உக்காந்து பேப்பர் படிக்கறேள்.
என் அம்மா சொன்னது ‘அவாளாவது ஜாலியா இருக்கட்டுமே. உங்களுக்கு என்ன’

சண்டை, கிண்டை போட்டாலும் அரை செகண்ட் கூட பேசாம இருக்க மாட்டோம்.

என் பெண் சொல்வது ‘உங்க ரெண்டு பேருக்கும் விவஸ்தையே இல்ல.

அருமையான மண வாழ்க்கை. ஆச்சு 27 வருஷம் 4 மாசம் 21 நாட்கள். இன்னும் சொச்ச நாட்களும் உங்க எல்லாரோட அன்பினாலும், வாழ்த்துக்களாலும் இதே மாதிரி நல்லபடியா போகணும்.

பரிசெல்லாம் அதெல்லாம் ரெண்டு பேரும் கரெக்டா பிடித்த மாதிரி வாங்கிக் கொடுத்துடுவோம்.

எல்லாரும் எழுதுங்க.
முக்கியமான நிகழ்ச்சிகளை அப்பப்ப எழுதறேன்.
அன்புடன்
ஜெமாமி

மேலும் சில பதிவுகள்