தேதி: September 21, 2010
பேப்பர் ரிப்பன் - மஞ்சள், பச்சைநிறங்கள்
கோல்டுநிற கம்பி - 15 செ.மீ
பஞ்சு
ஊசி
நூல்
பெவிக்கால்
கத்திரிக்கோல்
பச்சைநிற கம் டேப்
பேப்பர் ரிப்பனை 115 செ.மீ நீளத்திற்கு நறுக்கி எடுத்துக்கொள்ளவும். இந்த பேப்பர் ரிப்பனில் இருப்புறமும் ஜிக்ஜாக் வடிவில் நறுக்கப்பட்டிருக்கும். மற்றவற்றை தயாராக எடுத்து வைக்கவும்.

பேப்பர் ரிப்பனில் வலதுபக்கம் நுனியின் நடுவிலிருந்து ஊசிநூலால் ரன்னிங் தையல் போடவும்.

இதுப்போல் வலதுப்பக்கம் ஆரம்பித்து இடது பக்கம் வரை உள்ள பேப்பர் முழுவதும் தையல் போட்டு முடிக்கவும்.

பிறகு இடமிருந்து வலது பக்கமாக பேப்பரை சிறிது சிறிதாக சுருக்கிக் கொண்டே வரவும்.

சுருங்கின பேப்பர் ஒரு பக்கம் நெருக்கமாகவும், மற்றொரு பக்கம் தளர்வாகவும் இல்லாமல் ஒரே சீரான அளவாக இருக்க வேண்டும்.

பூவின் இருப்பக்க ஒரங்களை எதிர், எதிர்ப்பக்கம் இருப்பது போல் முறுக்க கொள்ளவும்.

இரண்டு பக்க நூலையும் ஒன்றாக கொண்டு வந்து நன்கு இறுக்கமாக முடிச்சுப் போட்டுக் கொள்ளவும்.

இப்போது அந்த பூவின் நடுவில் ஆள்காட்டிவிரல் நுழையும் அளவிற்கு துளை செய்து கொள்ளவும்.

60 செ.மீ நீளம், 5 செ.மீ அகலத்தில் மஞ்சள்நிற ரிப்பன் பேப்பரை எடுத்து கொள்ளவும். அதன் ஒரு பக்கத்தில் மட்டும் ஜிக்ஜாக் டிசைனை கத்திரிக்கோலால் நறுக்கிவிடவும். பின்னர் அந்த பேப்பரை 3 செ.மீ நீளத்திற்கு 1/4 செ.மீ இடைவெளியில் நறுக்கவும்.

இடைவெளிவிட்டு நறுக்கின பேப்பரை துடைப்பம் போல் சுருட்டிக் கொள்ளவும். அதன் அடியில் 15 செ.மீ நீளத்திற்கு கோல்டுநிற கம்பியை கொண்டு நன்கு இறுக்கமாக கட்டி முடிச்சு போடவும்.

முன்பு செய்த பூவின் நடுவில் உள்ள துளையில் கம்பி சுற்றிய பேப்பரை உள்ளே சொருகி விடவும்.

கம்பி தெரியும் இடத்தில் பஞ்சை வைத்து படத்தில் உள்ளது போல் சுற்றிக் கொள்ளவும். சுற்றிய பஞ்சின் அடியில் வெள்ளைநிற நூலால் இரண்டு, மூன்று முறை சுற்றி முடிச்சுப் போட்டு நூலை நறுக்கிவிடவும்.

பஞ்சு சுற்றிய இடம் முழுவதும் பச்சைநிற கம் டேப்பை சுற்றிக் கொள்ளவும்.

அதன் மேல் பச்சைநிற ரிப்பன் பேப்பரை 6 செ.மீ X 4 செ.மீ நீள,அகலத்தில் நறுக்கவும். அதன் ஒரு பக்க ஜிக்ஜாக் டிசைனை நறுக்கிவிடவும். பின்னர் 2 செ.மீ நீளத்திற்கு 1/4 செ.மீ இடைவெளியில் பேப்பரை நறுக்கி பஞ்சு சுற்றிய பகுதி மற்றும் கம்பி தெரியும் இடம் முழுவதும் இந்த பேப்பரை கம் தடவி ஒட்டி முடிக்கவும்.

அழகான சாமந்தி பூ தயார். இந்த பூவை போல் டியூப்லக்ஸ் காகித்தை மேற்சொன்ன அளவுகளில் நறுக்கி எடுத்துக் கொண்டு அதன் ஒரங்களை ஜிக்ஜாக் கத்திரியில் நறுக்கிவிட்டு செய்யலாம்.

அறுசுவை நேயர்களுக்காக திருமதி. செண்பகா பாபு அவர்கள் பேப்பர் ரிப்பனை கொண்டு இந்த சாமந்தி பூ செய்முறையை வழங்கியுள்ளார். சமையல், கைவினைப் பொருட்கள், கார்விங் செய்தலில் ஆர்வம் அதிகமுள்ளவர். தான் கற்று அறிந்தவற்றை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளும் நோக்கில், அறுசுவையில் அவ்வபோது இதுபோன்ற செய்முறைகளை வழங்கவுள்ளார்

Comments
மிக நன்ரக உள்ள்து
மிக நன்ரக உள்ள்து
சாமந்தி பூ
எளிதான முறை
பாக்கவே அவ்வளவு அழகு
நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா
சூப்பர்
வாவ் சூப்பர் பாப்பி! ஹையா என்கிட்ட இந்த பொருட்கள் எல்லாமே இருக்கே. இப்பவே செய்யப்போறேனே!
வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!
பாப்பி
சாமந்திப்பூ அருமையாக இருக்கு.என் மகளை செய்து பார்க்க சொல்ல வேண்டும்.
என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.
செண்பகா,
இலகுவான முறையில் தெளிவான விளக்கங்களோடு சாமந்திப்பூ செய்திருக்கிறீர்கள். அழகாயிருக்கிறது.
வாழ்த்துக்கள்.
அன்புடன் செபா.
சூப்பர்
அப்படியே ரியல் பூ போல் இருக்கு.
செண்பகா
செண்பகா
உண்மையில் முகப்பில் பார்த்துவிட்டு.. என்ன இது சாமந்தி பூவை வைத்து இருக்கிறார்கள். பிறகு என்ன கைவேலை என நினைத்தேன். ஆனால் பூவே கைவேலை என தெரியாமல் போய்விட்டது செண்பகா தெரியாமல் போய்விட்டது.. ;)
மிகவும் அழகாய் உள்ளது. வாழ்த்துக்கள்.
Ramya Karthick B-)
When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)
பார்க்க அழகாக இருக்கிறது
பார்க்க அழகாக இருக்கிறது
செண்பகா, அருமையான முயற்சி.
செண்பகா,
அருமையான முயற்சி. உண்மையான சாமந்தி பூவை போலவே உள்ளது.
உங்கள் கை வண்ணத்துக்கு எனது பாராட்டுக்கள்.:-)
தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.
செண்பகா
செண்பகா,
தத்ருபமாக இருக்கிறது
வாழ்த்துக்கள்
என்றும் அன்புடன்,
கவிதா
Marigold flower.
நம் வீட்டுத் தோட்டத்தில் புத்தம் புதிய சாமந்தி பூத்திருப்பது போல் இருக்கிறது.Really superb.
செண்பகா
செண்பகா... ரொம்ப ரொம்ப ரொம்ப அழகு!!! நிஜமான பூ போலவே இருக்கு. கண்டிப்பா செய்து பார்த்து உங்களுக்கு படம் அனுப்பிடறேன். :) அழகான குறிப்பை செய்து காட்டிய செண்பகா'கு அண்ணா'ட சொல்லி அழகான மோதிரம் போட சொல்லிருக்கேன். கண்டிப்பா கேட்டு வாங்கிக்கங்க செண்பகா. ;)
துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!
அன்புடன்,
வனிதா
செண்பகா
ரம்யா சொன்னதையே தான் சொல்ல நினைத்தேன். என்ன இது பூவை வைத்திருக்கிறார்கள் என்று தான் நினைத்தேன்! ரொம்ப அழகாருக்கு! வாழ்த்துக்கள்.
அன்புடன்
பவித்ரா
சாமந்திப்பூ
சாமந்திப்பூ சூப்பர்ப்ப, நல்லா நிஜ பூ போலவே இருக்கு, நானும் செய்து பார்க்கிறேன்,எங்கள் வீட்டு சாமந்திப்பூ
உன் மீது மற்றவர்கள் பொறாமை படுகிறார்கள் என்றால் அதுவும் ஒருவித புகழ் மாலை தான்.
அன்புடன்
ஹேமா
கலக்க போவது யாரு?
கலக்க போவது யாரு? செண்பகா அக்கா!!!
எப்படி இப்படி கலக்குறீர்கள்!!!! முதலில் இதை உண்மையான பூ என்று தான் நினைத்தேன்.
shagila
ஷெண்பகா
ஷெண்பகா..கலக்கிறீங்க போங்க...உங்க கம்மல் மேல் எனக்கு ஒரு கண்ணு இருந்துகிட்டேஇருக்கு செஞ்சு பாத்துட்டு சொல்வேன் பாருங்க
நிஜமா?பொய்யா?
செண்பகா, இதை முதலில் பார்க்கும் போது நான் உண்மையான செடியில் இருந்து பறித்த பூ என்று தான் நினைத்தேன். பிறகு உங்கள் செய்முறையைப் பார்த்து தெளிந்தேன். மிகவும் நன்றாக உள்ளது. நான் இந்தியா போனபிறகு இதற்கு வேண்டிய மெட்டீரியல்ஸ் வாங்கி செய்ய முயற்சிக்கிறேன். வாழ்த்துக்கள் :)
Natpudan,
Kalpana Saravana Kumar :)
A good friend sees the first Tear, catches the Second and stops the Third.
செண்பகா
என்னடா இது செண்பகா செண்பகா னு எல்லாரும் கூவுறாங்களே.. எங்க செண்பகா தான் எதுலயோ பதிவு போட்டுருக்காங்கனு நினச்சு பாத்தா... ஒரு சாமந்திப் பூ -ம் செண்பகாவும் சிரிச்சுக்கிட்டே போட்டோல போஸ் கொடுத்திருக்காங்க....
ரொம்ப ரொம்ப அழகா இருக்கு செண்பகா.. எப்படி இப்டி எல்லாம் யோசிக்கிறீங்க.. ரூம் போட்டு யோசிப்பீங்களோ?.. நவினாக் குட்டி -ய வச்சுக்கிட்டு எப்படி இப்படி எல்லாம்.. ம்ம்ம் என்னை மாதிரி வெட்டி ஆபிசரா இல்லாம உருப்படியா எதாவது பண்றீங்க.. நடத்துங்க நடத்துங்க.. ஆல் தி பெஸ்ட்
"செய்க தவம், தவமாவது அன்பு செலுத்துதல்"
ராதா ஹரி
நன்றி, அனைவருக்கும் நன்றி
நிவேதா555, ஆமினா, கவிசிவா, ஆசியாஉமர், செபா அம்மா, விஜி, ரம்யா, மலர், யோகராணி, கவிதா, சித்ரா சுந்தர், வனிதா, ஹேமா, பவித்ரா, shalli, தளிகா, கல்பனா, ராதா. அனைவருக்கும் மிக்க நன்றி. தவறாக நினைக்க வேண்டாம் தாமதமான பதிலுக்கு.
பாப்பாக்கு கொஞ்சம் உடல்நிலை சரியில்லை அதனால் அவளுடனே நேரம் போய் விடுகிறது. பதிலளிக்க நேரமே இல்லை.
senbagababu
செண்பகா பாபு!
உ
தாங்களே ஒரு செந்தாழம்பூ!
தாங்கள் செய்ததோ சாமந்திப்பூ!
என் முகத்தில் உதித்ததோ புன் சிரிப்பூ!
இப்படி பேசினால் அப்பு!
அட்மின் வருவாரப்பு!
அடிதான் தருவாரப்பு!
நானும் எஸ்கேப்பு!
வாழ்க வளமுடன்!
அன்புடன்
மாமி (எ) மோகனா ரவி...
சாமந்திப்பூ
நிஜப்பூ போலவே இருக்கு செண்பகா மேடம். அழகாக செய்து காட்டி இருக்கிறீங்க.
சாமந்திப்பூ
நானும் இந்த சாமந்தி பூ செய்து பார்த்தேன் . நன்றாக வரவில்லை .எதோ தவறு செய்து உள்ளேன் . தையல் தைத்த பிறகு அந்த பேப்பர் சுருக்கும் பகுதி , முறுக்கும் பகுதி சற்று விரிவாக கூறினால் நன்றாக இருக்கும்.
jewellery making
ஹை தோழிகளே,
முத்து வளையல் எப்படி செய்வது என்று கற்றுக்கொள்ள வேண்டும். நான் முத்துகளும், வளையல் base-ம் வாங்கி வைதிருக்கிறேன்.வளையல் செய்ய சொல்லிக் கொடுக்க முடியுமா?
நன்றி.
Hi
செண்பகபூ செய்த சாமந்திபூ அசத்தல்
realistic
Really simple and superb
ஹலோ செல்லம் Hello Dear
ஹலோ செல்லம்
என் பெயர் binta உள்ளது
உங்கள் சுயவிவர மிகவும் அழகாக ஏனெனில் நான், இன்று உங்கள் சுயவிவரத்தை பார்த்தேன் நீங்கள் தெரிந்து கொள்ள ஆர்வமாக பெற, இங்கே என் மின்னஞ்சல் முகவரி (bintajaafar@yahoo.com) நான் நீங்கள் என் புகைப்படங்கள் அனுப்ப மற்றும் இன்னும் சொல்ல என்று என்னை ஒரு மின்னஞ்சல் அனுப்ப தயவு செய்து உள்ளது என் சுய பற்றி,. தூரம் நினைவில், நிறம், மதம் அல்லது பழங்குடி பிரச்சினையில்லை ஆனால் விஷயங்களில் மிகவும் நேசிக்கிறேன் இல்லை (bintajaafar@yahoo.com) எனக்கு மின் அஞ்சல்.
binta முத்தம்
::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::
Hello Dear
My name is binta
I saw your profile today and get interested to know you, because you look very nice in your profile, here is my email address (bintajaafar@yahoo.com) please send me an email so that i will send you my photos and tell you more about my self,mail me at(bintajaafar@yahoo.com).Remember distance,color,religion or tribe does not matter but love matters a lot.
kiss binta