குழந்தைக்கு நிறம் கிடைக்க

அறுசுவையின் இனிய சகோதரிகளே என் பெண் குழந்தைக்கு 1. 4 வயது ஆகிறது அவள் பிறந்தபொழுது கலராகத்தான் இருந்தால் ஆனால் இப்பொழுது கருப்பாக ஆகிவிட்டால் அவளை எனது உறவினர்களே(எனது பெரியப்பா பெண்ணே) எங்கள் மீது உள்ள பொறாமையால் குழந்தை என்று கூட பார்க்காமல் கருப்பாயி என்று கிண்டல் செய்கின்றனர் பெண் குழந்தை என்பதால் எனக்கும் கவலையாக உள்ளது அதுவுமின்றி அவள் வளர்ந்த பின் நிறமே அவளுக்குள் ஒரு தாழ்வு மனப்பான்மையை உருவாக்கிவிடுமோ எனவும் அச்சமாக உள்ளது என் குழந்தைக்கு மீண்டும் நிறம் கிடைக்குமா (நான் கலராகத்தான் இருப்பேன்)அதற்க்கு என்ன சோப் உபயோகிப்பது சோப் போட்டபின் கடலைமாவு உபயோகிக்கலாமா. சோப் கெமிக்கல், கடலைமாவு இயற்கை இரண்டையும் ஒன்றாக போடகூடாது என்கின்றனர் நான் என்ன செய்வது தோழிகளே என்னை உங்கள் சகோதரியாக நினைத்து பதில் கூறுங்கள் ப்ளீஸ்

என்னன்னு சொல்றது, ம்ம் கருப்பா இருக்கறவங்க சோப், லோசன் எல்லாம் போட்டா கலராயிடுவாங்கனா எல்லாருமே கலரா இருப்பாங்களே. அது உங்களுக்கே தெரியும் இல்லையா.

அவங்களே பொறாமையால சொல்றதா சொல்றீங்க அப்புறம் எதுக்கு அத மைண்ட் பண்றீங்க.

அவங்க உங்க குழந்தையப் பாத்தும் பொறாமைபடறமாதிரி நல்ல அறிவுள்ள, புத்திக்கூர்மையான குழந்தையா வளத்துங்க.

அப்புறம் சோப்பே போடவேண்டாம் குழந்தைக்கு எது ஒத்துக்குமோ கடலைமாவோ அல்லது பயத்தமாவோ பால் கலந்து போடுங்க. கஸ்தூரிமஞ்சள் ஒரு பின்ச் கலந்து எப்பவும் போல ஆலிவ் ஆயில் மசாஜ் பண்ணி குளிக்க வையுங்க.

இப்படி பண்ணினா கலராகுமான்னு தெரியாது ஆனா நல்ல ஷைனிங்கா இருக்கும். ட்ரை பண்ணி பாருங்க.

Don't Worry Be Happy.

அன்பு அனிதா குழந்தையிடம் இப்படி பேசுபவர்களை அண்ட விடாதீர்கள் இல்லைன்னே நேரடியாவே சொல்லிடுங்க. குழந்தையிடம் நீ எவ்வளவு அழகுடான்னு தலை வாரி விட்டதும் தினமும் சொல்லுங்க. ஆனால் ஓவரகி விடக் கூடாது. வேறு ஆட்கள் சொல்வதை விட அம்மா சொல்வதுதான் குழந்தை மனதில் பதியும்.
ஜெயா சொன்ன டிப்ஸை ஃபாலோ பண்ணுங்க. ஆரோக்கியமான அறிவுள்ள குழந்தைதான் முக்கியம்.

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

சொல்வதை தப்பாக எடுக்க வேண்டாம். உலகில் எவ்வளவு குழந்தைகள் சாப்பிட வழியில்லாமல் இருக்கிறார்கள். எவ்வளவு குழந்தைகள் ஆட்டிசம் உட்பட நிறைய பிறவிக் குறைபாடுகளுடன் பிறக்கிறார்கள். எப்போதாவது அப்படி குறைபாட்டுடன் பிறந்த குழந்தைகளை பார்த்திருக்கிறீர்களா? அவற்றோடு பார்க்கும் போது குழந்தை நோய், நொடியில்லாமல் இருப்பதை பார்த்து சந்தோஷப்படுங்கள்.

என் உறவினர் பெண் கறுப்பாக இருப்பார். நல்ல களையான முகம். ஆனால், அவர் உறவினர்கள் எப்போதும் கிண்டல் செய்தபடி. ஆனால், அந்தப் பெண் இன்று சாப்ட்வேர் கம்பெனியில் பெரிய வேலையில் இருக்கிறார். கிண்டல் பண்ணியவர்கள் இப்போது வியப்புடன் பார்க்கிறார்கள். உங்கள் மகளுக்கு தன்னம்பிக்கை தரும் வார்த்தைகள் சொல்லுங்கள். எப்போதும் கலர் பற்றி யோசிக்காமல் வேறு எதிலாவது கவனம் செலுத்துங்கள்.
அவள் எதிர்காலம் சிறக்க வாழ்த்துக்கள்.
வாணி

வனி சரியா சொல்லிட்டீங்க..கறுப்பை சொல்லி குழந்தைகளை கிண்டலடிப்பவர்களை நல்லா சாட்டையால் போட வேண்டும்

நீங்க ஒன்னு பண்ணுங்க பயிற்றம் பருப்பு , கஸ்தூரி மஞ்சள் , வெட்டி வேர் இத நல்லா பவுடர் பண்ணி வெச்சி குளிக்கும் போது உங்க குழந்தைக்கு போடுங்க.
இதுல என்ன ஒரு வித்யாசம்னா பயிற்றம் மாவு கலர் மாறும். அப்புறம் ஒருமாசத்துல பாருங்க உங்க பொண்ணு கலராகிடுவாங்க

அனிதா வுங்க கவலை எனக்கு புரிகிறது. கவலை படாமல் முயற்சியுங்கள். ஆலிவ் ஆயில் use பண்ணுங்க நல்ல கலர் குடுக்கும். ஆயிலை நல்ல தடவி ஊறவையுங்கள்.http ;//www .arusuvai .com /tamil /node /3677 இதில் தேவ கூறியுள்ள பொடியை தயார் பண்ணி வுபயோகியுங்கள்.
வுங்க குழந்தையை கருப்பி என சொல்லும் வுங்க வுரவினரை கண்டியுங்கள்.குழந்தையை தன்னம்பிக்கையுடன் வளருங்கள்.நம் குழந்தை நமக்கு அழகு.

அன்பு ஜெயலஷ்மி,கவிசிவா,வாணி,தளிகா,சுஜிவாசன் சுந்தரிஅர்ஜுன் உங்கள் அனைவருக்கும் முதலில் என் மனமார்ந்த நன்றிகள்.கஷ்டப்பட்டு ஆலோசனை கூறினோம் ஒரு பதில் கூட இல்லையேனு பார்த்திங்களா சாரிப்பா எங்க ஏரியாவுல இன்று பவர் சப்ளை காலை 9 -5.30 கட் அதனால் தான் .தோழிகளே நீங்கள் கூறியது எனக்கு மிகவும் ஆறுதலாக இருந்தது கண்டிப்பாக இனி கலர் பற்றி யோசிக்காமல் என் குழந்தையை நல்ல படியாக வளர்ப்பேன் மீண்டும் உங்கள் அனைவருக்கும் என் நன்றிகள் சமர்ப்பனம்

மேலும் சில பதிவுகள்