மாதவிடாய் நிற்கும் சமயம் செய்ய வேண்டியவை..

அன்புள்ள தோழிகளுக்கு......
என் அம்மாவின் வயது 47.......... இப்ப அவங்களோட Periods நிற்கற வயது.... கடந்த ஒரு ஆறு மாதமாவே 2 மாதங்கள் ஒரு தடவ தான் periods ஆகறாங்க.....இன்னைக்கு விடிய காலையில் தாங்க முடியத வலியில துடிச்சு போய்ட்டங்க...பிரசவ வலிய விட அதிகமா இருக்கு என்னலா முடியலனு சொன்னங்க.... நாங்க உடனே hospital கூட்டிக்கிட்டு போனோம் இது சாதரனமா இந்த மாதிரி time-ல வர்ரது தான்.....ஒன்னும் பிரச்சனை இல்ல சொல்லி doctors மாத்திர குடுத்தாங்க.....இந்த மாதிரி பிரச்ச்னைய எப்படி சமாளிக்கறதுனு சொல்லுங்க தோழிகளே.....Food habits-ல ஏதாது change பன்னனுமா......

அந்த வலிய தாங்கிக்க நல்ல சத்தான உணவு முறையை சாப்பிட்டா போதுமா... என்ன என்னலாம் சாப்பிடனும்?

மெனோபாஸ்க்கு அப்புறம் கால்சியம் குறைபாடு ஏற்படும் அதனால் கால்சியம் நிறைந்த உணவுகளை எடுத்துக்க வேண்டும். ஆனால் இந்த வயிற்று வலி பற்றித் தெரியவில்லை.. தோழிகள் வந்து பதில் கூறுவார்கள். காத்திருங்கள்..

காத்திருக்கிறேன்...

ஒரு பெண் தன்னுடைய நிலையிலிருந்து தடுமாறும் கால கட்டம் இது. கோபம், சோகம் என பல மனமாற்றங்களுக்கு ஆட்பட்டு தினரும் போது கணவனோ, மகனோ அவளின் நிலையை அறிந்து செயல்படுதல் முக்கியம்.

மெனோபாஸ் –

45 வயதிற்கு மேல் பெண்ணின் சினைப் பையின் செயல்பாடு குறைந்து மாதவிலக்கு முறையற்றதாகி இறுதியில் நின்றுவிடும் நிலைக்கு மெனோபாஸ் என்று பெயர்.

பொதுவாக 45 வயதிற்கு மேல் 52 வயதுக்குள் ஏற்படும் இது, தற்போது 30 வயதிற்கும் மேல் உள்ள பெண்களுக்கே ஏற்படுகிறது.

அறிகுறி –

1. உடல் முழுவதும் வெப்பம் பரவுவது போல இருக்கும். (ஹாட்ஃபாளஷ்).

2. திடீரென வியத்துக் கொட்டும். பனிக்காலமாக இருந்தாலும் வியர்க்கும்.

3. படபடப்பு, சோகம், எரிச்சல், அசதி, அழுகை என மனநிலை மாற்க்கொண்டே இருக்கும்.

4. ஈஸ்ட்ரஜன் ஹார்மோன் குறைவால் தாம்பத்திய உறவில் சிரமம் ஏற்படும்.

செய்ய வேண்டியது –

1. ஹார்மோன் ரீப்ளேஸ்மென்ட் தெரபி எடுத்துக் கொள்வது அவசியம்.

2. கால்சியம் சத்து குறைவதால் எழும்பு மெலியும் அபாயம் உள்ளது.

3. சரியான உணவுப்பழக்கம் இருந்தாலே மெனோபாஸ் சமயத்தில் ஏற்படும் பல பிரட்சனைகளுக்கு தீர்வு கிடைத்துவிடும்.

4. கொழுப்பு நீக்கப்பட்ட பாலால் ஆனா தயிரை தினந்தோறும் சேர்க்க வேண்டும்
5. சாப்பாட்டில் எள் நிறைய சேர்க்க வேண்டும்.
6. பச்சை காய்கற்கள், பழங்கள் சேர்ப்பது நலம்

7. கைக்குத்தல் அரிசியும், கோதுமை மாவால் செய்யப்பட்ட உணவுகளும் பல குறைபாடுகளை தீர்க்கும்.

8. கண்டிப்பாக நடைப்பயிற்சி செய்ய வேண்டும். குறைந்த்து 45 நிமிடங்கள் மாலைவேளையில் நடந்தால் 90 சதவீத மெனோபாஸ் காலத்தில் வரும் நோய்களை தவிர்க்கலாம்.

9. கால்சியம் பற்றாக்குறை ஏற்பட்டால் மருத்துவர் ஆலோசனைப்படி கால்சியம் மாத்திரைகளை எடுத்துக்கொள்ளலாம்.

நன்றி நீங்கள் சொன்னதை என் அம்மாவிற்கு கன்டிப்பாக சொல்கிறேன்

ரேணுகா

சொலவதை தவறாக நினைக்க வேண்டாம். வேறு தளங்களில் எடுத்ததை அப்படியே பிரதியிட கூடாது என்பது மன்றத்தின் விதி. அதையே மாற்றி உங்கள் சொந்த நடையில் சொன்னால் எந்த தவறும் இல்லை. புரியும் என நினைக்கிறேன். எதற்கும் மன்ற விதிகள் ஒரு முறை படிங்க:)

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

அன்பு தோழிகளே என் அம்மாவிற்கு 54 வயது மாதவிடாய் நின்று 8 வருடம் ஆகிரது போன மாதம் மாதவிடாய் ஏற்பட்டுள்ளது மகப்பேறு மருத்துவரை அனுகாமல் பொதுனல மருத்துவரை பார்திருக்காங்க அவங்க எந்த test பன்னாம உடனே cancer மருதுவமனைக்கு போகசொல்லிட்டாங்க என்ன பன்னலாம். இது பற்றி தெரிந்தால் தயவு செய்து சொல்லுங்க எனக்கு ரொம்ப பயமா இருக்கு.

என் அம்மாவிற்கு 50வயது ஆகிறது.ப்ரியட் ரெகுலராக வருவது இல்லை.கடந்த ஒரு வருடமாக சிலமாதம் இருமுறையும் சிலமாதம் இல்லாமலும் உள்ளது. அவ்வாறு இருப்பதால் கால்வலி உடல்வலி உள்ளது.அதற்காக டாக்டரிடம் காண்பித்தோம் ஆனால் கடந்த சிலதினங்களாக அம்மாவிற்கு ப்ரியட் வருவது போன்ற எண்ணம் உள்ளது. ஆனால் வெள்ளைப்படுதல் போன்று பிசுபிசுப்பு நீர் வருகிறது.அந்த நீர் வருவதால் கடுமையான கால்வலி உள்ளது.இது நார்மலா என் அம்மாவிற்கு தகுந்த ஆலோசனை கூறவும்.

இது சாதாரணமாக இருப்பதுதான். வலியைக் குறைக்க பனடோல் போடலாம். சூடாக காஃபி, வெந்நீர்க் குளியல், தேவையானால் கொஞ்சம் ஓய்வு உதவும். கால்வலியை இல்லாமல் செய்ய இன்னொரு நல்ல வழி நடைப்பயிற்சி. தசைகளை லூசாக்கி விடும். தசைகளுக்கு இரத்தோட்டம் நன்றாக இருக்கும். வேலைக்குப் போகிறவங்களா? அப்படியானால் நீங்க அவங்களுக்காகக் கேள்வியை வைத்திருக்க மாட்டீங்க. எப்பவும் மறக்காம கைபையில் சானிடரி நாப்கின்ஸ் தயாராக இருப்பது நல்லது. பீரியட்ஸ் வராட்டா இந்தப் பகுதியைக் கடந்து போகத்தான் வேண்டும். வந்தால், ப்ளீடிங் அதிகமாக இருக்குமானால் திரும்ப டாக்டரிடம் போகச் சொல்லுங்க. கண்ட்ரோல் ஆக டாப்லட்ஸ் கொடுப்பாங்க.

‍- இமா க்றிஸ்

மிக்க நன்றி இமா அம்மா.அம்மா வீட்டில் இருப்பவர் தான்.நீங்கள் சொன்னவற்றை கடைபிடிக்கச்சொல்கிறேன்.மேலும் ஏற்கனேவே கருப்பை கோளாறு இருக்குமா என்று ஸ்கேன் செய்து பார்த்தோம்.அப்படி ஒன்றும் பிரச்சனை இல்லை.இருந்தாலும் நினநீர் வருவதாலும் வெள்ளைப்படுவதாலும் கேட்டேன்.

மேலும் சில பதிவுகள்