வாழ்கையில் மறக்க முடியாத/மறக்க நினைக்கிற அனுபவங்கள்..........

அன்பு தோழிகளுக்கு...எல்லாருக்குமே வாழ்கையில ஏதாது மற்க்க முடியாத/மறக்க நினைக்கிற அனுபவம் இருக்கும்...நல்ல விசயங்கள் மட்டும் இல்ல கெட்ட விசயமா கூட இருக்கலாம்...செத்து பிழைச்சேன் அப்படினு எல்லாருமே சொல்லி கேட்டுருக்கோம்...அந்த மாதிரி அனுபவங்களை இங்க உங்களுக்கு விருப்பம் இருந்தா share பன்னிக்குங்க...

இந்த இழை ஆரம்பிச்சது ஏதாது தவறு இருந்தால் தோழிகள் என்னை மன்னிக்கவும்.

நீங்க இழை ஆரம்பச்சதில் எந்த தவறும் இல்லை. மன்றத்துல உரையாடமுடியற எந்த விஷயத்தப்பத்தியும் ஆரம்பிக்கலாம் பேசலாம். ஆனா ஒரு இழையப்பத்தி பேசிமுடிஞ்சதுக்கு அப்புறம் அடுத்தது ஆரம்பிச்சா நல்லாயிருக்கும். ஒருவரே பல இழைகளை ஒரே சமயத்துல ஆரம்பிக்ககூடாதுனு அருசுவையில் நிபந்தனை இருக்கு. நீங்க புதியவர் என்பதால் எதுக்கும் நிபந்தனைகளை ஒருமுறை படிச்சுடுங்க.

Don't Worry Be Happy.

இந்த இழை ஆரம்பிக்க எனக்கும் ஒரு மற்க்க கூடிய அனுபவம் இருக்கு அதை share பன்னிக்க தான் இத ஆரம்பிசேன்...என்னவர்(software engineer in UN) வேலை செஞ்ச இடம் Haiti.... ஒரு சின்ன தீவு.....Marriage முடிந்து ஒரு மாதத்தில அங்க கூடிக்கிட்டு போனர்..வாழ்க்கை நல்லாதான் ஓடுச்சு...ரென்டு பேரும் ரொம்ப சந்தோசமாதான் இருந்தோம்...
ஜனவரி 13த் இங்க என்க்கு முதல் தலை பொங்கல் எல்லாரும் ஏற்பாடு செஞ்சுகிட்டு இருந்தாங்க நாங்களும் Haiti-ல பொங்கல் கொண்டாட இருந்தோம்....13த் மாலை 4.45க்கு நான் Bed room-ல உட்காற்ந்து film பாத்துகிட்டு இருந்தேன்....திடிற்னு வீடே குலுங்குன மாறி இருந்துச்சு...ஒன்னுமே புரியல..10 seconds கழிச்சுதான் உணர்ந்தேன் நில நடுக்கம்....எந்திருச்சு Bed room door open பன்னி வெளிய வந்தேன்...main door அடையறத்துக்குல சுத்தமா நடக்க முடியல யாரோ என்ன பிடிச்சு வேகமா தல்லுன மாறி இருந்துச்சு...ஒரு 10 அடி தள்ளி போய் விளுந்தேன்...பயங்கற அடி எளுந்திருக்க முடியல அப்ப என் மனசுல நாம இனி பிளைக்க மாட்டோம் செத்துட்டேன்.... இருந்தும் கஸ்டபட்டு ஓடி main door அடஞ்சு வெளிய வந்தேன்....
45 seconds நில நடுக்கம் normal ஆச்சு.... ஆனா என்னவர் இன்னும் office விட்டு இன்னும் வேட்டுக்கு வர வீட்டுக்கு வரலய்யே.....அவருக்கு என்ன ஆய்ருக்கும்...call பன்னேன் நொ communication முலுவதும் stop ஆய்ருச்சு... நான் செத்துருந்தா கூட இவ்வளவு வலி இருந்துருக்காது ஆன அவருக்கு என்ன ஆச்சுனு தெரியாம ஒவ்வொரு seconds-ம் 1000-தட செத்துட்டேன். half hour கழிச்சு பத்திரமா வந்துட்டார்....அவர் car-ல இருந்து இற்ங்கின உடனே ஓடி போய் கட்டி பிடுச்சுக்கிடிடேன்...ஒரே அழுகை அவருக்கும் எனக்கும்...அன்னைக்கு night fulla தூங்கவே இல்ல யாரும்...அதுக்குள்ள ஒரு 30 times Earth Quake வந்துறுச்சு... ஊருக்கு வரலாம்னா Airport இல்ல மண்ணோட மண்ணா போய்ருச்சு...
2 நாள் களிச்சு Private flight இடிச்சு பக்கத்து நாடுக்கு வந்து அங்க இருந்து india வந்தோம்... ம்றுபடியும் போக அம்மா, allow பன்னல இப்ப இங்கயே Business start பன்னிடோம்.......ஒரு நிமிசம் இறப்ப நேர்ல பாத்துட்டு வந்த மாதிரி இருந்துச்சு.......

என்னை மன்னிக்கவும்......இனி கவனமாக நடந்து கொள்கிறேன்

உங்க அனுபவம் நிச்சயம் மறக்க முடியாத,மறக்க நினைக்கற அனுபவம் தான்.கடவுள் உங்களுக்கு கொடுத்த மறுஜென்மம்தான் இது.கவலைப்படாதீங்க.மன்னிக்கற அளவுக்கு நீங்க தப்பெல்லாம் பண்ணலையே...
அன்புடன் அனு

கௌசி

நீங்க சொல்றது நல்லா புரியுது. ஒரு நிமிஷம் என்ன ஆகி இருக்கும் என நினைத்து பார்த்தால் வியர்த்துவிடும். இந்தக் கொடுமை எதிரிக்கும் வரக் கூடாது என தோன்றும். நீங்கள் இருவரும் நலமாக இருப்பதில் மகிழ்ச்சி

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

கண்டிப்பா யாருக்குமே வர கூடாது தோழிகளே...

கெளசல்யா, நீங்க சொல்ற மாதிரி அனுபவம் நான் காங்கோல இருந்தப்ப எனக்கும் கிடைச்சுது. அதை நான் காங்கோ கட்டுரைல சொல்றேன். இங்க சொன்னா கட்டுரையோட சுவாரசியம் குறைஞ்சு போயிடும். அதுவரை அமைதி காக்கவேண்டும் :)

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

மேலும் சில பதிவுகள்