அலைபேசி பற்றிய சந்தேகங்கள்

பொதுவாக அலைபேசி என்பது இன்று நாம் அனைவரும் உபயோகிக்கும் அத்தியாவசியா தொலைதொடர்பு சாதனமாக இருந்து வருகிறது. இதில் எத்தனையோ வசதிகள் உள்ளன! ஆனால் சிலருக்கு இதில் வரும் கால்களை எடுத்து பேசவும் மற்றவருக்கு டயல் செய்ய மட்டுமே தெரிகிறது.

அது தவிர இதில் உள்ள மற்ற பயன்பாடுகளை எப்படி உபயோகப்படுத்துவது என்பதை இங்கே கேட்கலாம், தெரிந்தவர்கள் பதில் அளிக்க காத்திருக்கிறோம்.

அலை பேசுமா! பேசினா என்ன பேசும்!

சினிமால வராமாறி பேசுமா!வளஞ்சு வளஞ்சு பேசுமா!

அலை அலையா பேசுமா! ஆரவாரமா பேசுமா!

இனிக்க இனிக்க பேசுமா! ஈனு இளிச்சுண்டே பேசுமா!

உ போட்டு பேசுமா! ஊமை கோட்டான் மாறி பேசுமா!

என்னை மாறி பேசுமா! ஏறி வந்து பேசுமா!

ஐயடானு பேசுமா!

ஒழுங்கா பேசுமா! ஓடி வந்து பேசுமா!

ஒளவை பாட்டி மாறி பேசுமா!ஃனு பேசுமா!

( புதுசா இழை ஆரம்பிக்கறவாளை நான் இப்படிதான் அறிவு பூர்வமான கேள்வி கேட்டு அவாளை படுத்துவேன்! ஈஈஈஈ!)

வாழ்க வளமுடன்!
அன்புடன்
மாமி (எ) மோகனா ரவி...

என் ஃபிரண்ட்டோட பொண்ணு என் பதிவை பாத்து என்னை குட்டி பாப்பானு சொன்னா!

என் போனுள இருந்த வாய்ஸ் சேஞ்சை பயன் படுத்தி அவ கிட்ட நான் குட்டி பாப்பா மாறி பேசினேன்!

அவளுக்கு சந்தோஷம்!அப்பொ என் ஃப்ரண்ட் அங்க இல்லை!

அவுங்க அங்க வந்ததும் அவுங்ககிட்ட பேசினா சகிக்கலைனு சொல்லிட்டாங்கோ!

பாத்தேளா!கலி முத்தி போச்சு!

வாழ்க வளமுடன்!
அன்புடன்
மாமி (எ) மோகனா ரவி...

பவி நல்ல இழை ஆரம்பிச்சு வச்சி இருக்க. நன்றி முதலில்.
எனக்கு மெம்மரி கார்ட் வச்ச மொபைல் வாங்க ஆசை ரொம்ப நாளா. அதில் நமக்கு பிடித்தமான பாடல்கள், வீடியோ ஏற்றி வச்சிக்கலாம்ல அதான். நான் இப்போது வைத்திருக்கும் மொபைலில் 3 பாட்டுக்கு மேல் ஏற்ற முடியாது.
எனக்கு நோக்கியா ப்ராண்டில் எந்த மொபைல் மெஸ்ட்(with memory card) என்று யாராவது கொஞ்சம் ஆலோசனை சொல்ல முடியுமா?

எந்த விலையில் நீங்கள் வாங்கலாம்னு இருக்கீங்கப்பா!நிறைய மாடல்ஸ் இருக்கு.

அன்புடன்
பவித்ரா

முதன் முதலில் நான் 1100 தான் வச்சி இருந்தேன் பவி. அப்பறம் 3300 classic வச்சி இருந்தேன். இப்போ வச்சி இருக்கிற மாடல் பேரே தெரியலப்பா. நான் முன்னாடிலாம் ஜஸ்ட் போன் கால் வந்தா அட்டன் பண்ண மட்டும் தான் அலைபேசியே உபயோகிச்சுட்டு இருந்தேன். இப்ப ஒரு முறை என் ப்ரண்ட் போன்ல பாட்டு கேட்டனா அவ்வளவு clarity, livelyness பாட்டு கேட்கவே ரொம்ப இனிமையா இருந்துச்சா, அதுவும் எனக்கு ரொம்ப ரொம்ப பிடிச்ச பாட்டு கேட்டன் (நான் போகிறேன் மேலே மேலே பாட்டு) அதான் மெம்மரிகார்ட் போடற பாதிரி வாங்கலாம்னு ப்ளான் பவி. பட்ஜெட்டா நீ சொல்லு பவி எது நல்லா இருக்குனு பார்த்துக்கலாம்.

அந்த மாதிரி இல்லை, மெமரி கார்டு போடற மாடல் இருக்கு. நீங்க நான் ஒரு லின்க் சொல்றேன், அதில் போய் பாருங்க, நோக்கியா மட்டும் இல்ல, மற்ற கம்பெனி மாடல்களும் அதன் படமும், அதில் உள்ள வசதிகளையும், அதன் விலையையும் தெளிவாக கொடுத்திருப்பார்கள். நான் மொபைல் வாங்கும் போது இந்த தளத்தை பார்த்து தான் வாங்கினேன்.

நான் வைத்திருப்பது NOKIA 5130 XPRESS MUSIC. 2 GB மெமரி கார்டு, நான் இப்ப 1 GB போட்டு யூஸ் பண்ணிட்டு இருக்கேன், க்ளேரிட்டி கூட நல்லாதான் இருக்கு. இப்போதைக்கு ஒரு 110 பாட்டு இருக்கு. இதை விட ஜாஸ்தி தேவையில்லைனு தான் நான் 2 GB போடலை, 1 GB கார்டு அவர்களே கொடுத்திட்டாங்க. விலை நான் வாங்கும் போது 6000 இப்போ 4600 தான். www.fonearena.com and http://www.fonearena.com/nokia-5130-xpressmusic_726.html

போய் பாருங்க. ரெண்டாவது லின்கில் இருப்பது என் மொபைல் முதல் லின்கில் மற்ற மாடல்களும் நீங்க தேடிப்பார்கலாம்.

அன்புடன்
பவித்ரா

யாழினி நீங்கள் இசைப்ப்ரியராக இருப்பதால் நோக்கியாவில் மியூசிக் எக்ஸ்ப்பிரஸ் என்ற மாடல் உள்ளது.அதைப் பாருங்களேன்.

பட்டி நடுவரே நலமா? பேசி ரொம்ப நாள் ஆன மாதிரி இருக்கு. இந்த தடவையும் பட்டியில் ஒழுங்கா கலந்துக்க முடியல. நல்ல த்ரெட். என்னுடைய செல் நோக்கிய முதல் மாடல். (ஒரு டப்பா செல்தான் கைலவச்சுக்கிட்டு இருக்கேன்). ஆனா நல்ல கேமரா செல் வாங்கனும் நினனச்சுட்டு இருக்கேன் அது எப்போதான் தெரியல. போட்டோ எடுத்தா படம் தெளிவா இருக்கனும். எந்த கேமரா செல் பெஸ்ட்டா இருக்கும் பவி. நீங்க கொடுத்து இருக்குற லிங்குல பார்க்கலாமா.

அட நானும் இத தான் பவி கேட்க வந்தேன் இன்னும் சில ப்ரண்ட்ஸும் இத தான் சட்ஜஸ் பண்ணாங்க. நானும் பார்த்தேன். சிலிம்மா நல்லா இருக்கு பார்க்கவும். நீங்க கொடுத்த லிங்க்கும் பார்கிறேன். எனக்கும் 2 gb போதும். மாடலும் நல்லா இருக்கு பவி. நன்றி பவி. ஓ கார்ட் வந்து நம்ம இஷ்டத்துக்கு போட்டுகலாமா? அதுல உள்ளது தவிர நாமே வேற கார்டும் யூஸ் பண்ணலாமா பவி.

ரேணுகா மேடம் நன்றி. நீங்களும் express music தான் சட்ஜஸ் பண்ணி இருக்கீங்களா அப்போ இதனை பேரும் சொல்றப்ப நல்லா தான் இருக்கும்னு நினைக்கிறேன். நன்றி மேம்

யாழ் மொபைலோடு வரும் 1gp அல்லது நாம் வாங்கும் 2gp யும் யூஸ் பண்ணலாம். நான் 2gp தான் யூஸ் பண்றேன், நிறையா பாடல்கள்,படங்கள்,வீடியோக்கள் வைத்துக் கொள்ளலாம்.னிறையா வசதிகளும் உள்ளது .

மேலும் சில பதிவுகள்