சாஸேஜ் பயன்படுத்தி சமைப்பது எப்படி?

தோழிகளே, சாஸேஜ் பயன்படுத்தி எப்படி சமைப்பது? என் கணவருக்கு சாஸேஜ் மிகவும் பிடிக்கும். எனக்கு சமைக்க தெரியாததால் பலமுறை வாங்கி வேறு யாரிடமாவது கொடுத்து விடுவேன். இம்முறை எப்படியாவது செய்து தரவேண்டும் என்ற முடிவில் உள்ளேன். உங்களை நம்பி வாக்கும் கொடுத்துவிட்டேன். காப்பாற்ற வாருங்கள் தோழிகளே :))

http://www.arusuvai.com/tamil/node/11206

http://www.arusuvai.com/tamil/node/2802

இதுல பாருங்க கல்பனா. உங்களுக்கு உதவும்

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

சாஸேஜ் இழையை எனக்காக தேடி அனுப்பிய ஆம்ஸ்க்கு தேங்க்ஸ் :) செய்து பார்த்துட்டு நல்லா இல்லைன்னா உங்களுக்கு இருக்கவே இருக்கு. 6 மாச பிரியாணி, 3 மாச உப்புமா ;)))

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

ஆமினா கொடுத்த இரண்டாவது குறிப்பு நன்றாக இருக்கும். மைக்ரோவேவ் செய்யும் போது சாசேஜ் மேல் முள்ளுக்கரண்டியால் குத்தி விட்டு வைக்கவும். சில சமயம் குக்கரின் உள்ளே வெடித்து வைத்து சுத்தம் செய்கிற வேலை வந்துவிடும்.

சாசேஜ், குளிர் போக வெளியே வைத்து பிறகு பானில் சாதாரணமாக சமைத்தாலே போதுமே. நன்றாக இருக்கும். இப்படிப் போட்டு கூடவே கொஞ்சம் வெண்காயம் பொரித்து எடுங்கள். ஒரு ரொட்டித் துண்டில் ஒரு சாசேஜ் கொஞ்சம் பொரித்த வெண்காயம், மேலே கொஞ்சம் சாஸ் / கெட்சப், விரும்பினால் சிறிது மஸ்டர்ட் சாஸ் வைத்து சாப்பிடுங்கள். இங்கு இது பிரபலம். 'சாசேஜ் சிஸில்' என்று நன்கொடை வசூலுக்காக இப்படி விற்பார்கள்.

ப்ரீ குக்ட் சாசேஜ் ஆனால் அதிகம் சமைக்கத் தேவை இல்லை. 'சீஸி சாசேஜ்' குழந்தைகளுக்குப் பிடிக்கும்.

காக்டெய்ல் சாசேஜ் மைக்ரோவேவ் செய்து விட்டு சாஸ் மட்டும் தொட்டுக் கொண்டு சாப்பிடலாம். மேஜையில் ஒரு கிண்ணத்தில் டூத் பிக் வைத்துக் கொண்டால் எடுக்க சுலபமாக இருக்கும்.

சாசேஜஸ் வட்டமாக அல்லது சிறிதாக நறுக்கிக் கொண்டு, எந்த டிஷ் ஆனாலும் சேர்த்துச் சமைக்கலாம்.

ஒரு சாஸேஜை பார்பக்யூ குச்சியில் (குச்சி ஐஸ் போல) குத்திக் கொள்ளுங்கள். பஜ்ஜி மாவில் தோய்த்துப் பொரித்து எடுங்கள். சாஸ் தொட்டுக் கொண்டு குச்சியில் பிடித்து சாப்பிடலாம்.

இந்தியன் கடை ஒன்றில் ஸ்பைசி சாசேஜ் விற்கிறார்கள். ;P அது சாப்பிட்டால் அப்படியே கண்ணால் ஊற்றும். ஜலதோஷம் இருக்கிற போது சாப்பிட்டால் மூக்கடைப்பு போயே போய் விடும். அதை வாங்கி உரித்து வைத்து, கிழங்கு மைக்ரோவேவ் செய்து சேர்த்துப் பிசைந்து (உப்பு, காரம் எல்லாம் சேர்க்கத் தேவை இராது.) முட்டையில் தோய்த்து, ப்ரெட்க்ரம்ஸில் புரட்டி கட்லட்டாகப் பொரித்தால்... அப்படி ஒரு சுவை.

இன்னும் இருக்கு. நேரம் கிடைக்கிறப்ப வந்து சொல்றேன். இப்போதைக்கு இதை ட்ரை பண்ணுங்க.

புனிதா, சாஸேஜ்ல இவ்வளவு வெரைட்டீஸ் பண்ணலாமா? கண்ணைக் கட்டுதுப்பா. நான் ஒண்ணும் தெரியாம உட்கார்ந்துட்டு இருக்கேன். இனிமேல் நீங்க சொன்ன ஒவ்வொன்றையும் ட்ரை பண்றேன் பா. விளக்கமா சொன்னதுக்கு ரொம்ப தேங்ஸ்பா. இன்னும் தெரிஞ்சா சொல்லுங்க :)

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

http://www.arusuvai.com/tamil/node/12871

இது அதிராவின் குறிப்பு ரொம்ப நல்ல அளவுகள் துல்லியமாக இருக்கும்.

http://www.arusuvai.com/tamil/node/11206
இது என் குறிப்பு இதுவும் ரொம்ப நல்ல இருக்கும். குழந்தைகளுக்கு பிடிக்கும்

ஜலீலா

Jaleelakamal

மேலும் சில பதிவுகள்