ஊறுகாய் மசாலா

தேதி: April 10, 2006

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 5 (1 vote)

 

வெந்தயப் பருப்பு - முக்கால் கப் (கடைகளில் கிடைக்கும்)
கடுகுப் பருப்பு - கால் கப் (கடைகளில் கிடைக்கும்)
மஞ்சள் பொடி - 1 தேக்கரண்டி
பெருங்காயப் பொடி - 3 தேக்கரண்டி
நல்லெண்ணெய் - அரை கப்
மிளகாய்த்தூள் - 2 கப்
உப்பு - முக்கால் கப்


 

வெந்தயப்பருப்பு, கடுகுப்பருப்பு, மஞ்சள் பொடி, பெருங்காயப் பொடி முதலியவற்றை கலந்து, குவித்து, நடுவில் ஒரு குழி செய்து நல்லெண்ணெயை நன்கு சுட வைத்து ஊற்றவும்.
உடனே அதை ஒரு தட்டால் மூடவும்.
ஐந்து நிமிடம் கழித்து திறந்து மிளகாய்ப் பொடியும், பொடித்த உப்பும் போட்டு ஒரு தேக்கரண்டியால் நன்றாக கலந்து விடவும்.
இதை அனைத்து வித ஊறுகாய்களுக்கும் உபயோகப்படுத்தலாம்.
மேலே சொன்ன பருப்புகள் கிடைக்காவிட்டால் வெந்தயத்தையும் கடுகையும் நன்றாக வெய்யிலில் காய வைத்து மிக்ஸியில் பொடி பண்ணி சேர்த்துக் கொள்ளலாம்.


பலவித ஊறுகாய்கள் செய்வதற்கும் இந்த ஊறுகாய் மசாலாவை பயன்படுத்தலாம்.

மேலும் சில குறிப்புகள்