குழந்தைக்கு உரை விழுந்துச்சுன்னா...

தோழிகளே நலமா??? என் பொண்ணுக்கு 3வயசாக போகுது. ஒன்னரை மாசமாவே சும்மா சளி, காய்ச்சல், இருமல்னு வந்துட்டே இருக்கு. ஆனா நல்லா ஏக்டிவ்வா தான் இருக்கா... மருந்து குடுத்தா சரி ஆய்ருது ஆனா மறுபடியும் அப்படியே ஆகுது.

இன்னிக்கு அவளை பாத்த ஒரு பாட்டி திடீர்னு பாப்பா நல்லா சாப்டுவாளா? பசின்னு கேப்பாளா? சளி, காய்ச்சல்லாம் இருக்கான்னு கேட்டாங்க நானும் ஆமானு சொன்னேன். மேலும் அவங்க குழந்தைக்கு உரை விழுந்துருக்கும்மா உரை மருந்து குடு அப்பதான் அதெல்லாம் சரி ஆகும்னு சொன்னாங்க. உங்களுக்கு எப்படி தெரிஞ்சுதுன்னு கேட்டேன் அதுக்கு நெஞ்சு எப்படி தூக்கின மாறி இருக்கு பாரும்மா நீ கவனிக்கலையான்னு கேட்டாங்க. அதாவது நடு கழுத்துக்கு கீழ... நானும் அப்பதான் கவனிச்சேன். எனக்கு அதைப்பத்தி ஒன்னுமே தெரியாது. வாரத்துக்கு ஒரு நாள்னு மூனு வாரம் குடுக்கனுமாம் உரைமருந்து.

உரை விழுறதுனா என்ன அது எதனால வருது? உரைமருந்துன்னா என்னது? இதை பத்தி உங்க யாருக்காது தெரியுமா தெரிஞ்சா தயவுசெஞ்சு சொல்லுங்களேன்... எனக்கு பயமா இருக்கு.

மீண்டும் பேசலாம்...

ஹாய் லதா.... கடுக்காய், ஜாதிக்காய், மாசிக்காய், வசம்பு இந்த நான்கையும் சிறிது தாய்ப்பால் விட்டு ஒரு கல்லில் உரசி ஒவ்வொன்றிலிருந்து இரண்டு அல்லது மூன்று சொட்டு எடுத்துக்கொள்ள வேண்டும்... அத்துடன் வேப்பங்க்கொழுந்து இளங்கொழுந்தாக இருக்கவேண்டும் .. அதையும் சாறு பிழிந்து ஒன்று அல்லது இரெண்டு சொட்டு விட்டு இவை அனைத்தையும் தாய்ப்பாலில் கலந்து அரைபாலாடை அளவு கொடுக்க வேண்டும்..... 2 வயது வரை என் மகளுக்கு இப்படித்தான் செய்தேன்,,, நீங்கள் மூன்று வயது என்பதால் தாய்ப்பாலில் கலந்து கொடுப்பதா என தெரியவில்லை.... அதை கேட்டுக்கொள்ளுங்கள்.... எதற்கும் தோழிக்ளின் ஆலோசனையும் கேட்டுக்கொள்ளுங்கள்...

இந்த உரை மருந்தை தலைக்கு குளிப்பாட்டியவுடன் கொடுக்க வேண்டும்...

ஒன்று செய், அதுவும் நன்று செய்.
ரங்கலஷ்மி லோகேஷ்

நல்லாருக்கீங்களா? பதிவிற்க்கு ரொம்ப நன்றி... பசும்பால் கொண்டு வரசொல்லிருக்காங்க உரைமருந்து குடுக்கற இடத்துல. இல்லை எனக்கு என்ன சந்தேகம்னா எதனாலல்லாம் உரைவிழும்? நெஞ்சுல சின்னதா வீக்கம் மாறி இருக்கு. எதனால அப்படி ஆச்சு. அவ எப்பவும் எங்காது ஏறி குதிக்கறது தாண்டறதுன்னே இருக்கா அதனால தான் அப்படி ஆய்ருக்குமோ???

யாராச்சு தெரிஞ்சவங்க வந்து இதைப்பத்தி சொல்லுங்கப்பா... மருந்து குடுக்காம விட்டா ஏதாச்சு பிரச்சனை ஆகுமா???

மீண்டும் பேசலாம்...

இருப்பதின் அருமை இல்லாத பொழுது தெரியும்.

அன்புடன்
லதாவினீ.

லதா என்னப்பா இப்படி திடீர்ன்னு மேடம்னெல்லாம் சொல்லிட்டீங்க.... ரங்ஸ் போதும்பா..... பொதுவா குழந்தைகள் ஏறி, குதிச்சு விளையாட்றதுனாலல்லா உர விழாது.... என்று மட்டும் தெரியும்..... மத்த காரணங்கள் தெரியாது..... என் பொண்ணுக்கு வயசு 4... அவளுக்கு அம்மா மருந்து கொடுக்கறப்ப பக்கத்துல இருந்து பாத்து கத்துகிட்டேன்..... அவ்வலவு தான்...

ஆனா, நீங்க சொல்ற மாதிரி நெஞ்சு ஏறி இருக்கற குழந்தைகளை எனது கிராமத்தில் பார்த்ததுண்டு.... ஆனால் சில நாட்களிலேயே சரியாவதையும் பார்த்திருக்கிறேன்.... அதனால் இதைப் பற்றி கவலை வேண்டாம்... உங்கள் குழந்தையை அவள் இஷ்டம் போல் இருக்க விடுங்கள்... சீக்கிரமே எல்லாம் சரியாய் விடும்...

ஒன்று செய், அதுவும் நன்று செய்.
ரங்கலஷ்மி லோகேஷ்

என்னங்க இது புதுசா இருக்கு..குழந்தை ஆரோகியமா இருந்தா இந்த பாட்டி வைத்தியமெல்லாம் செஞ்சு பாக்காதீங்க..டாக்ட்ரட கேளுங்களேன்..இது ஒரு புது விஷயமா தெரியுது

எனக்கு தெரிந்து சுளுக்கு விழுவதை தான் உரை என சொல்வார்கள். தலை நிக்காத பிள்ளைகளுக்கு திடீரென தவறுதலாக தூக்கினால் அப்போது ஏற்படும். அனுபவசாலிகள் பக்குவமாக நீவிடுவார்கள். அதோடு வலி நிக்கும். அந்த நேரத்தில் குழந்தைகள் அதிகமாகவே கத்துவார்கள், காய்ச்சல் வரும், வாந்தி எடுக்கும்.
எனக்கு தெரிந்து இது 6 மாசம் வரை வரும். ஆனா 3 வயசுலையும் வருமான்னு தெரியல.

ஊரில் இருக்கும் வரை பாட்டியிடம் காட்டுவேன். சென்னையில் யாரை தேட முடியும்? டாக்டர் அதற்கு சிரப் கொடுத்தார்கள். அதோடு சரியாகும். நீங்கள் டாக்டரிம் காண்பியுங்கள்.

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

ஆமீனா.... நீங்கள் கூறுவது தலை நிற்காத குழந்தைகளுக்கு..... ஆனால் நான் எனது கிராமத்தில் 5 வயது வரை இப்படி உரை விழுந்த பசங்களை பாத்துருக்கேன்... ஆனா அது சளி அதிகமானால் வரும் என கேள்விப்பட்டதாக ஞாபகம்.... ஆனா சரியாகத் தெரியவில்லை.... ஆனால் இது சீக்கிரம் சரியாய் விடக்கூடிய ஒன்ருதான்...

ஒன்று செய், அதுவும் நன்று செய்.
ரங்கலஷ்மி லோகேஷ்

இப்ப ஓகே வா... நான் அவ இஷ்டத்துக்கு விட்டுருவேன் செமயா குதிப்பா கட்டில் மேலருந்து ஜன்னல் மேலருந்து கொஞ்சம் கூட அவளுக்கு பயமில்லை. நானும் விட்டுருவேன் கண்டுக்குறதில்லை. நேத்து அந்த பாட்டி சொன்னதுல இருந்து தான் கொஞ்சம் பயம். ஆண் புள்ளன்னாலும் பரவால்ல பெண் புள்ளல்லம்மா நாளைக்கு யாரும் எதும் சொல்லிரக்கூடாதுல்ல அதான்னு சொன்னாங்க எனக்கு ஒன்னுமே புரியலை. அதான் ஏதாச்சு பெரிய பிரச்சனை ஆகுமான்னு கேக்கறேன். எங்க வீட்ல யாரும் பெரியவங்க இல்லாததால அதுபத்தி ஒன்னும் தெரியலை. இங்க ஒரு இடத்துல கூட்டிட்டு வர சொல்லிருக்காங்க பாக்கலாம்...

மீண்டும் பேசலாம்...

இருப்பதின் அருமை இல்லாத பொழுது தெரியும்.

அன்புடன்
லதாவினீ.

லதா....குழந்தைய காட்டிட்டு எனக்கு உடனே தகவல் சொல்லுங்க... ஒன்னும் ஆகாது....பயப்படாதீங்க......நானும் உங்கள் மகள் விரைவில் நார்மலாக இறைவனை வேண்டுகிறேன்..

ஒன்று செய், அதுவும் நன்று செய்.
ரங்கலஷ்மி லோகேஷ்

நல்லாருக்கீங்களா? தெரியலை அக்கா எனக்கும் புதுசா தான் இருக்கு அவங்க சொன்னது. அவ நல்லா ஆரோக்யமா தான் இருக்கா. நான் இப்பதான் ஒரு நாலு மாசத்துக்கு முன்னதான் பாலை நிறுத்தினேன். அதுவரைக்கும் நல்லா குண்டா இருந்தவ இப்ப ரொம்ப ஒல்லியா தான் இருக்கா. ஆனா ஏக்டிவ்வா இருக்கானு கண்டுக்கறதில்லை. அந்த பாட்டி சொன்னதுல இருந்து ஒரு பயம்... வினீ இப்ப இல்லை ஊருக்கு போய்ருக்காங்க வந்தன்ன ஒரு டைம் டாக்டர்கிட்ட போலாம்னு இருக்கேன் அவர் என்ன சொல்றாருன்னு பாக்கலாம். பாத்துட்டு மருந்து குடுக்கறதைப்பத்தி யோசிக்கலாம்னு இருக்கேன்...

மீண்டும் பேசலாம்...

இருப்பதின் அருமை இல்லாத பொழுது தெரியும்.

அன்புடன்
லதாவினீ.

நீங்க சொல்றத நான் கேள்விப்பட்டு இருக்கேன் ஆமி. சுளுக்கு விழுந்தாலும் குடல் விழுந்தாலும் நீவி விடுவாங்க அதை நான் பாத்துருக்கேன். ஆனா இது அப்படி இல்லைப்பா சரியா சொல்லனும்னா தொண்டைக்குழிக்கு கீழே பொடச்ச மாறி இருக்கு அவ்ளோதான். ஒரு ரெண்டு மாசமா காய்ச்சல் வருது போது சளியும் இருமலும் அப்படிதான் வருது போது. அதான் அந்த பாட்டி சொன்னது சரியா இருக்குமோனு பயமாருக்கு... சரி பாக்கலாம் வினீ வந்தன்ன.

மீண்டும் பேசலாம்...

இருப்பதின் அருமை இல்லாத பொழுது தெரியும்.

அன்புடன்
லதாவினீ.

மேலும் சில பதிவுகள்