அரட்டை அரங்கம் 49

அரட்டை அரங்கம் 49க்கு உங்களை அன்புடன் வரவேற்கிறேன்
நான் முதல்முறையா அரட்டை அரங்கம் தொடங்கியிருக்கேன் வந்து சரமாரியா அரட்டை அடிங்க பாக்கலாம்

மீரா,பவி, ரம்யா, கலைவாணி, கவிசிவா, ஜெ மாமி அனைவரும் நலமா?

அன்புடன்
மகேஸ்வரி

மழை கொட்டுதுன் என் காதில புகை கிளப்ப பாக்கறீங்களா, இந்த தடவை வராது. ஏன்னா எங்க ஊர்ல கிளைமேட் சேஞ்சாகுது இன்னும் இரண்டு வாரத்துல குளிர் அடிக்கப்போகுது. அப்புறம் கால்ல சாக்ஸ் போட்டுட்டு நடப்பேன் ;-)

சரி சரி எடுத்துக்குங்க சூடான பஜ்ஜி....

Don't Worry Be Happy.

கவி..
ஹைய்யோ.. எனென்னவோ நினைச்சிட்டீங்களா?! கருத்துக்களை முன் வைப்பது மட்டுமே எனது நோக்கமா இருக்கும் .. தனி நபர் தாக்குதலைப் பற்றி மனதளவிலும் நினைத்ததில்லை கவி நான்.. உங்க mail-id கிடைக்குமா?
உங்களிடம் பேச விழைகிறேன்..

தோழிகள் அனைவருக்கும் வணக்கம். என்ன பாத்துட்டு இருக்கீங்க எல்லாருமே எடுத்துக்கோங்க பஜ்ஜி..............!

Don't Worry Be Happy.

மலேசியா இந்தோனேசியா இலங்கை இங்கெல்லாம் பணத்தின் மதிப்பு நம் நம்ம ஊரைவிட அதிகமா குறைவா?

இந்த சுக்கு காய வைத்த இஞ்சிதானே.. இந்தோனேசியாவில் அது கிடைக்காதா?

ஜெய்

அடடா.. இப்படி சூடா பஜ்ஜி வச்சுக்கிட்டு எடுத்துக்குங்க எடுத்துக்குங்கனு ஒரு பாச கார புள்ள கூப்பிட்டுட்டு இருக்கே.. யாருக்கும் தெரிலையா.. ?

தனியா வேற கேபின்ல இருந்த எனக்கு சினிமால வர மாதிரி கை துடித்தது கால் துடித்தது.. அதான் யாரோ அறுசுவைல ஏதோ கொடுத்துட்டு இருக்காங்கனு ஒரு உள்ளுணர்வு.. வந்து பாத்தா சரியா தான் இருக்கு... எப்படி?

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

சாந்தினி புதுசா ஒருத்தவங்க வந்து "அப்பாரு" ங்கற வார்த்தை யூஸ் பண்ணினதுதான் எனக்கு ரொம்ப கோபத்தை உண்டாக்கிடுச்சு. இல்லாம வெறுமனே அப்பாங்கற வார்த்தை யூஸ் பண்ணியிருந்தா எனக்கு கோபம் வந்திருக்காது. நானும் எதிர்த்தாக்குதல் போட்டுக்கிட்டு போய்கிட்டு இருந்திருப்பேன். அந்த வார்த்தை என்னைப் பொறுத்தவரை அவ்வளவாக மரியாதை இல்லாத வார்த்தை :(. மற்றபடி என் வாதங்களுக்கு எதிர்வாதங்கள் இருந்தால் எனக்கு சந்தோஷம்தான். அப்பதானே நானும் பதிலுக்கு பதில் பேச முடியும் :). பட்டிமன்ற வாதங்களை நான் தனிப்பட்ட தாக்குதலாக எடுத்துக் கொள்வதும் இல்லை.

ஓகே சாந்தினி அதை விட்டு விடுவோம். என் மெயில் ஐடி பவிகிட்ட இருக்கு.

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

இங்கயும் நேத்து ராத்திரியும், காலையிலும் மழை இப்ப வெய்யில் அடிக்குது.

புரட்டாசியில் பொன்னுருகக்காய்ந்து, மண்ணுருகப் பெய்யும்ன்னு சொல்வாங்க.

குவாலியர் கவிதான் இப்ப இந்தோனேஷிவா இருக்கற கவியா?
அன்புடன்
ஜெமாமி

ஒ.கே.. நான் பவியிடம் வாங்கிக் கொள்கிறேன்.. :)

சாந்தினி சுக்கு சிங்கையில் இருந்து வாங்கி வச்சிருக்கேன். ஆனா கருப்பட்டி கிடைக்காது. அதனால் சுக்கு காப்பியும் கிடையாது :(

இந்தோனேஷிய பணத்தின் மதிப்பைக் கேட்டா மயங்கி விழுந்திடுவீங்க. ஒரு இந்திய ரூபய் கொடுத்தால் சுமார் 150இந்தோனேஷியன் ருப்பியா கிடைக்கும் :)

1அமெரிக்க டாலர்= 47ரூபாய்(தோராயமாக)
1அமெரிக்க டாலர்=9000இந்தோனேஷிய ரூப்பியா

கணக்கு போட்டுக்கோங்க

மலேசிய ரிங்கிட் இந்திய ரூபாயை விட மதிப்பு மிக்கது
1மலேசியன் ரிங்கிட் க்கு சுமார் 12 முதல் 15ரூபாய் வரை கிடைக்கும்.

இலங்கை பணம் இந்திய பணத்தை விட மதிப்பு குறைவு

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

மேலும் சில பதிவுகள்