கோபத்தை கன்ட்ரோல் பண்றதுக்கு வழி சொல்லுங்க தோழிகளே....

என் இயற்கை சுபாவமே சீக்கிரம் கோபம் வந்து விடும். நானும் எவளவோ முயற்சி செய்து கம்மி பண்ணி கொண்டு இருக்கிறேன்.என்னை திருமணம் செய்து கொள்ள போகிறவர் மிகவம் நன்றாக பார்த்து கொள்வர். அவரு பிசினஸ் செய்யறனால கொஞ்சம் பிஸி ஹ இருப்பார். சில நேரங்களில் வெளியில் செல்லும் போது, அந்த நாள் எனக்காக மட்டுமே செலவிட வேண்டும் என்று நான் நினைக்கறேன். எப்போதாவது தான் நேரில் பார்க்கிறோம், அதனால் அவர் எனக்காக இருக்க வேண்டும் என்று நான் நினைத்து, நிறைய எதிர்பார்ப்பேன்.

அந்த நாள் எப்படி இருக்க வேண்டும் என்று, முந்தைய நாளே plan பண்ணி இருப்பேன். மறுநாள் அதில் ஏதாவது மாற்றம் வந்தாலோ, இல்லை அவருக்கு வேலை காரணமாக பாதியில் செல்ல வேண்டிய நிலைமை வந்தாலோ , என்னால் ஏற்றுக்கொள்ள முடிய வில்லை. கோபம் அதிகமாக வந்து விடுகிறது. ஒரு சின்ன ஏமாற்றத்தை கூட என்மனம் , ஏற்க மறுக்கிறது. அவரிடம் சண்டை போடறேன், அவருக்கும் கோபத்தில் பேச பிரச்சனை பெருசாகுது. அவரும் ஒரே வார்த்தை மட்டும் சொல்லி விட்டு கிளம்பிடுவார், " நான் எவளோ பண்ணுனாலும் உன்ன மட்டும் திருப்தி படுத்த முடியாது".அவரு கேட்பாரு, நீ நினைச்சது மட்டும் நடக்கணும், வேற ஒன்னுமே உனக்கு முக்கியம் கிடையாது. இந்த வார்த்தை கேட்கும் போது, சேச்ச ஏன்டா சண்டை போட்டோம் நு தோணும்.

என்னை விட அவருக்கு கோபம் ரொம்ப வருது. சண்டை வந்தா 3-4 மாசம் பேச மாட்டார். நான் எவளோ சொன்னாலும் பேசமாட்டார். அவரா மனசு மாறி பேசுனா தான்.என்னைய நான் எப்படி பக்குவ படுத்திகறது?? சில நேரங்களில் யோசிக்காம வார்த்தை விட்டறேன், பின்னாடி ரொம்ப கஷ்டமா பீல் பண்றேன்.

நான் எப்படி என்னை மாத்திக்கறது??? அவர எப்படி மாத்தறது??

தர்சி, நீங்க சொல்றது ரொம்ப சரி. நானும் இந்த மாதிரி சின்ன சின்ன விஷியம் ரொம்ப எதிர்பார்ப்பேன்.. நடக்காத அப்ப தாங்கிக்க முடியாது, அழுகைய வரும்,அந்த நேரத்துல தான் வார்த்தை கொட்டிடுவேன்...... இப்ப இருந்தே மாத்திக்க ட்ரை பன்னுனாத்தான், கல்யாணத்துக்கு அப்பறம் லைப் நல்லா இருக்கும்

சுகி
***பிரச்சனைகளை கிட்ட வைத்து பார்க்காதே, எட்ட வைத்து பார்***

சுகந்தி எல்லோருக்குமே இந்த எதிர்பார்ப்புகள் இருக்கும்பா. ஆனா அது நடக்கலேன்னா எப்படி சமாளிக்கணும்னு தெரிஞ்சுக்கணும் அதுதான் முக்கியம். கல்யானம் வாழ்க்கைன்னு வரும்போது எல்ல்லோருக்குமே ஆசைகளும் கற்பனைகளும் இருக்கும். யாருமே விதி விலக்கு இல்லை.

நீங்க உங்களை மாத்திக்கனும்னு நினைக்கறதுதான் முதல் படி. அடுத்தடுத்த படிகளையும் கடந்திட்டா பிரச்சினை இல்லை :). தர்சி சொல்வது போல் அவருடைய முன்னேற்றத்திற்கு நான் எந்த வகையிலும் தடையாகக் கூடாதுன்னு உங்களுக்குள் அழுத்தமா சொல்லிக்கோங்க.

அவரை எப்படி மாத்தணும்னா... அன்பும் பொறுமையும்தான் ஆயுதம் :). என் மனைவி என்னை புரிந்து கொள்வாள் அப்படீங்கற நம்பிக்கையை அவருக்கு ஏற்படுத்திட்டீங்கன்னா அவராவே உங்களுக்காக நேரம் கண்டுபிடித்து ஒதுக்குவார். அப்படியில்லாம சின்ன சின்ன விஷயங்களில் வரும் ஏமாற்றத்தைக் கூட கோபமாக கொட்டினால் உங்கள் கோபத்திற்கு எப்போதுமே மதிப்பில்லாமல் போய் விடும். நாம் என்ன செய்தாலும் இவளை திருப்தி படுத்த முடியாதுங்கர எண்ணம் வந்துடும்.

ஆனால் உங்கள் ஏமாற்றங்களை அன்பான வார்த்தைகளால் சொல்லுங்கள் புரிந்து கொள்வார்.

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

உங்களது பதில்ல 1000 அர்த்தம் இருக்கு கவி. கண்டிப்பா நீங்க சொன்னத கடைப்பிடுச்சு நம்பிகைய கொண்டு வந்துடறேன்

சுகி
***பிரச்சனைகளை கிட்ட வைத்து பார்க்காதே, எட்ட வைத்து பார்***

கவி சொல்வது நூற்றுக்கு நூறு உண்மை.யோசிக்காமல் வார்த்தையை விடாதீங்க,நாவினால் சுட்ட வடு மாறாது.அவர் உங்களை சந்தோஷமாக வைத்துகொள்ள தானே உழைக்கிறார்,அதை மறக்காதீங்க.
திருமண வாழ்வில் நிறைய ஏற்ற இறக்கங்கள்,ஏமாற்றங்கள் வரும் அதுக்கு இப்பவே உங்களை தயார்படுத்தி கொள்ளுங்கள். நம்ம நினைச்சது எல்லாமே நடக்கணும் என்ற சிந்தனையை மாத்துங்க.
வாழ்த்துக்கள்.

unaglku pidacha visayatha mansula ninachi kuga kovam varum pothu illana 1 to 10 eanuga kovam kuriya chance iruku na padi tan seiven ipo konchan konchan ma contrle ku vatuduchi anavisiyama kova padurathu illai.kava pata namakutan pb matavugalku illai.kovatala eataum satika mudiyathu.

எனக்கும் நிறைய கோவம் வரும். அவர் ரொம்ப அமைதி. நான் என்ன சொன்னாலும் பதில் பேச மாட்டார். கல்யாணம் ஆனா புதுசுல நான் ரொம்ப எதிர்பார்ப்பேன் அவர்கிட்ட. சில நேரம் அவரால் நிறைவேற்ற முடியும். சில நேரம் முடியாது. என் மாமியார் என் மனசு கஷ்ட படுற மாதிரி பேசினாலும் அவர் என்ன எதுன்னு கூட கேட்க மாட்டார். எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கும். பயங்கரமா சண்டை போடுவேன். ஆனா போக போக தான் புரிஞ்சுது அவர் என்ன பத்தி அவங்க அம்மா கிட்ட எந்த குறையும் சொல்ல மாட்டார். நான் தப்பு பண்ணிருந்தால் கூட அவர் எதுவும் சொல்ல மாட்டார். முதல்ல நீங்க எதிர் பாக்குறத குறைச்சுகோங்க. கொஞ்சம் கஷ்டம் தான். ஆனா ரொம்ப எதிர்பார்த்தால் தான் ஏமாற்றம் ஜாஸ்தியா இருக்கும். (என்னோட பிடித்த வாசகம் கூட அது தான்) கோபம் வந்தால் உடனே எதுவும் சொல்லாமல் அமைதியா இருங்க. முடிஞ்சா 1,2,3 எண்ண ஆரம்பிச்சிருங்க. எனக்கு கோபம் வந்தால் எதாவது வேலை பார்க்க போயிடுவேன். அப்புறம் கொஞ்ச நேரம் கழிச்சு நானே சமாதானம் ஆயிருவேன். முடிஞ்சா யோகா, தியானம் பண்ணுங்க.

எதிர்பார்ப்புகள் குறைவாக இருந்தால் ஏமாற்றம் குறைவாக இருக்கும்.

என்றும் அன்புடன்
கிருத்திகா

கோவம் வந்தா ஒடனே டிவியை ஆன் பண்ணனும்!

பண்ணி ஆச்சா! அதுல ஆதித்யா சேனல் போடனும்!

போட்டாச்சா! அதுல எப்போவுமே வடிவேலு அடி வாங்கற சீன்தான் வரும்!

வருமா! வடிவேலு முகத்து பதிலா நாம யார் கிட்ட கோவமா இருக்கோமோ

அவா முகத்தை கிராபிக்ஸ்ல மாத்தனும்!

( அதுக்கு ஷங்கரை கூப்பிடனும்னு நீங்க சொல்றது காதுல விழறது!

ஹிஹிஹிஹி அதுக்கேல்லாம் நமக்கு வசதி படுமா!அதனால கற்பனை

கிராபிக்ஸ் பண்ணனும்! )

மாத்தியாச்சா! இப்போ விழுந்து விழுந்து சிரிக்கனும்!

சிரிச்சாச்சா! அடி படும்! அதுக்கு நான் பொறுப்பில்லை!

( இதெல்லாம் மாமா சொல்லி நான் எழுதினது! நேக்கு கோவம் வந்தா

பூரிகட்டையால ஒரே போடு! அவ்ளோதான்! மண்டை குண்டு பூசனிக்கா மாறி

வீங்கிடும். அதை பாத்தா சிரிப்பா இருக்கும். கோவம் பேடும்! )

ஒங்களுக்கு மாமா சொன்னது பிடிச்சுருந்தா அப்படி பண்ணுங்கோ!

இல்லைனா நான் சொன்னா மாறி பண்ணுங்கோ! அது ஒங்க செளகர்யம்!

இப்போ நேக்கு கோவம் வர்ரது!

ஏன்னா எங்க ஓடரேள்! நில்லுங்கோ!சொன்னா கேளுங்கோ!

என்னால பி.டி. உஷா மாறி என் குண்டு உடம்பை வெச்சுண்டு ஓட முடியாது!

அடராமா! தப்பிச்சு பேட்டேளா! எங்க போவேள்! இங்கதானே வரனும்!

பூரி கட்டை ரெடியா இருக்கு!

வாழ்க வளமுடன்!
அன்புடன்
மாமி (எ) மோகனா ரவி...

இனிமேல் முடுஞ்ச வரைக்கும் கோபமே படபோறது இல்ல கிருத்திகா, ஒரு ஒரு முறையும் இப்படி தான் நினைப்பேன், இருந்தாலும் செயல் படுத்த முடியறது இல்ல. இருந்தாலும் இனிமேல் கண்டிப்பா செயல் படுத்தனும் நு முடிவே பண்ணிட்டேன்.....

சுகி
***பிரச்சனைகளை கிட்ட வைத்து பார்க்காதே, எட்ட வைத்து பார்***

மாமி, உங்க ஐடியா உம சூப்பர். மாமா ஐடியா உம சூப்பர். மாமா கு ரொம்ப அனுபவம் இருக்கும் போல.?? யாரு யாரா அடிப்பாங்க??? மாமா --> மாமி ??
மாமி -->மாமா ???ஹஹா

சுகி
***பிரச்சனைகளை கிட்ட வைத்து பார்க்காதே, எட்ட வைத்து பார்***

எல்லோருக்கும் கோவம் வருவது சகஜம் தான். அதிகபடியான எதிர்பார்ப்பு தான் கோவத்திற்கு காரணம். நாம் எப்படி நடக்க வேண்டும் என்று நினைத்திருப்போம்....அப்படி நடக்கவில்லை என்றால் கோவம் வரும்....எதிர்பார்ப்பை குறைத்து விட்டால் எல்லாமே சுலபம் தான்.....சொல்வது ரொம்ப ஈசி....ஆனால் நடைமுறையில் இது ரொம்ப கஷ்டம் தான்.....என்ன செய்ய நல்லது நடக்க வேண்டுமென்றால் இதை நாம் செய்து தான் ஆக வேண்டும். அதற்காக எதிர்பார்க்கவே கூடாது என்பது இல்லை....அப்படி எதிர்பார்த்தது நடக்கவில்லை என்றால் எப்பொழுதும் பிளான் பி வைத்திருக்க வேண்டும்.

ஆண்கள் எதையும் ஞாபகம் வைத்திருக்க மாட்டார்கள்.....அது அவர்களின் இயல்பு.....பெண்கள் ஒவ்வொரு விஷயத்தையும் ஞாபகம் வைத்துகொள்வோம்....நமக்கு எதிர்ப்பார்ப்புகள் ஜாஸ்தி.....அவர்கள் எதையும் அவ்வளவாக வெளிப்படுத்தமாடார்கள். ஒரு நல்ல புத்தகம் இருக்கிறது......"Men are from Mars and Women are from Venus".....இதை படியுங்கள்....

லாவண்யா

லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!

மேலும் சில பதிவுகள்