கோபத்தை கன்ட்ரோல் பண்றதுக்கு வழி சொல்லுங்க தோழிகளே....

என் இயற்கை சுபாவமே சீக்கிரம் கோபம் வந்து விடும். நானும் எவளவோ முயற்சி செய்து கம்மி பண்ணி கொண்டு இருக்கிறேன்.என்னை திருமணம் செய்து கொள்ள போகிறவர் மிகவம் நன்றாக பார்த்து கொள்வர். அவரு பிசினஸ் செய்யறனால கொஞ்சம் பிஸி ஹ இருப்பார். சில நேரங்களில் வெளியில் செல்லும் போது, அந்த நாள் எனக்காக மட்டுமே செலவிட வேண்டும் என்று நான் நினைக்கறேன். எப்போதாவது தான் நேரில் பார்க்கிறோம், அதனால் அவர் எனக்காக இருக்க வேண்டும் என்று நான் நினைத்து, நிறைய எதிர்பார்ப்பேன்.

அந்த நாள் எப்படி இருக்க வேண்டும் என்று, முந்தைய நாளே plan பண்ணி இருப்பேன். மறுநாள் அதில் ஏதாவது மாற்றம் வந்தாலோ, இல்லை அவருக்கு வேலை காரணமாக பாதியில் செல்ல வேண்டிய நிலைமை வந்தாலோ , என்னால் ஏற்றுக்கொள்ள முடிய வில்லை. கோபம் அதிகமாக வந்து விடுகிறது. ஒரு சின்ன ஏமாற்றத்தை கூட என்மனம் , ஏற்க மறுக்கிறது. அவரிடம் சண்டை போடறேன், அவருக்கும் கோபத்தில் பேச பிரச்சனை பெருசாகுது. அவரும் ஒரே வார்த்தை மட்டும் சொல்லி விட்டு கிளம்பிடுவார், " நான் எவளோ பண்ணுனாலும் உன்ன மட்டும் திருப்தி படுத்த முடியாது".அவரு கேட்பாரு, நீ நினைச்சது மட்டும் நடக்கணும், வேற ஒன்னுமே உனக்கு முக்கியம் கிடையாது. இந்த வார்த்தை கேட்கும் போது, சேச்ச ஏன்டா சண்டை போட்டோம் நு தோணும்.

என்னை விட அவருக்கு கோபம் ரொம்ப வருது. சண்டை வந்தா 3-4 மாசம் பேச மாட்டார். நான் எவளோ சொன்னாலும் பேசமாட்டார். அவரா மனசு மாறி பேசுனா தான்.என்னைய நான் எப்படி பக்குவ படுத்திகறது?? சில நேரங்களில் யோசிக்காம வார்த்தை விட்டறேன், பின்னாடி ரொம்ப கஷ்டமா பீல் பண்றேன்.

நான் எப்படி என்னை மாத்திக்கறது??? அவர எப்படி மாத்தறது??

Dear Sister..
I'm a new member of this site..
I hope that you will welcome me..
As I'm browsing thro my mobile, I couldn't type in tamil..
Kobam endbadhu oru iyalbana mana unarchi dhan.. Unarchi i unarvaga maatrinaal, andha kobam pirarin manadhinai nogadippadhillai..
Pala perin munnilaiyil oruvar meedhu kobapattu thittuvadhal, palarin munnilaiyil ketta peyar namakku mattume..
Unmai i sollattuma..? Pengalai vida Aangal dhan matravargal meedhu elidhil anbu seluththi viduvadhu.. Aanaal, andha anbai velippaduththa theriadha kaaranaththal, naangal, ungalai pola anbai kaatta iyaladhavargal ena maariponom..
Oruvarai aazhamaga purindhukondal.. Avar meedhu kobame varadhu.. Alladhu, avarai parkkave pidikkadhu.. Ungal kanavarin anbin aazhaththai purindhu kolungal.. Ungal kobam, ungalidam kobiththukondu poividum..
Nandri...

உங்கள் கருத்து எல்லாருக்கும் புரியனும் இல்ல, நீங்க இந்த லிங்க் ல தமிழ் டைப் கு ட்ரை பண்ணுங்க .
http://www.google.com/transliterate/

சுகி
***பிரச்சனைகளை கிட்ட வைத்து பார்க்காதே, எட்ட வைத்து பார்***

//மாமி, உங்க ஐடியா உம சூப்பர். மாமா ஐடியா உம சூப்பர். மாமா கு ரொம்ப அனுபவம் இருக்கும் போல.?? யாரு யாரா அடிப்பாங்க??? மாமா --> மாமி ??
மாமி -->மாமா ???ஹஹா//

என் கை பூரிகட்டையால அடி வாங்கற ஒரே ஜீவன் அவர் மட்டும்தான்!

அவரால திருப்பி அடிக்க முடியாது!

வாழ்க வளமுடன்!
அன்புடன்
மாமி (எ) மோகனா ரவி...

என்ன மாமி , இப்படி உண்மைய சொல்லிடிங்க ??? மாமா கோப படபோறார்!!!!!! அப்பறம் நாங்க பொறுப்பு இல்ல...சொல்லிபுட்டோம் ஆமா

சுகி
***பிரச்சனைகளை கிட்ட வைத்து பார்க்காதே, எட்ட வைத்து பார்***

கோவம் வராத ஒருத்தர் சாரி இன்னொருத்தர் (ஒருத்தர் நம்ம வடிவேலு) மாமாதான்!

அப்படியே கோவம் வந்தாலும் ஆதித்யா சானல் இருக்கே!

இதெல்லாம் எதிபார்த்து வர அனுபவம்தானே!

வாழ்க வளமுடன்!
அன்புடன்
மாமி (எ) மோகனா ரவி...

we shold silent and say soorry

hai...suganthi...kopam vanthal OM NAMA SIVAYA ennum matherathai solavum
kopam neenruvedum...bye...i too coimbatore ..

மேலும் சில பதிவுகள்