ஹாய் ஹாய் ஹாய்.. என்ன எல்லாரும் பாக்குறீங்க. என்னடா சும்மா இங்க அங்க நடக்கிறா, கையக் கால ஆட்டறான்னா.. அது ஒன்னும் இல்லை இப்பதான் சங்கர் ஃபோன் பண்ணி ரோபோ ரஜினி பன்ச் டயலாக் பேசறமாதிரி வச்சிருந்தேன் அது ஒரிஜினல் ரஜினியவிட ஃபாஸ்ட்டா பேசிருச்சு. டப்பிங்க் கொடுக்கும் போது பாத்தா என்ன பேசிச்சுனு தெரியலை, எப்படியாவது ஒன்னிரண்டு பன்ச் டயலாக் எழுதிக்கொடும்மானு காலைல இருந்து கால் மேல கால் ஃபோன் காலுங்க, போட்டு கெஞ்சிட்டு இருக்காரு. சரின்னு நானும் நடந்து நடந்து பேசி பாக்குறேன், கையக் கால ஆட்டிப்பாக்குறேன் வரவே மாட்டேங்குது. ஃப்ரண்ட்ஸ் நீங்கதான் ஹெல்ப் பண்ணனும். எல்லாரும் வந்து ஆளுக்கு ஒரு பன்ச் டயலாக் எடுத்துவிடுங்க பாப்போம் ;-)
பஞ்சு(?!) டயலாக்
என்பேரு ரோபோ வாலாட்டாம நீ போ போ
வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!
ஜெயா.... இதெல்லாம்
ஜெயா.... இதெல்லாம் கொஞ்சம் ஓவரா இல்ல... இருந்தாலும் கேட்டுட்டீங்க...... அழாதீங்க..... உலகம் அழியாம இருக்க கொடுத்த ஐடியா மாதிரி..... அடுத்தடுத்து சொல்லிகிட்டே இருக்கேன்.... நீங்க ஓட்ற வரைக்கும்....
ஒன்று செய், அதுவும் நன்று செய்.
ரங்கலஷ்மி லோகேஷ்
கவி...
சூப்பரப்பு....சூப்பரப்பு....... ஹா...ஹா....ஹா.... கவி... கலக்கிட்ட ...... பஞ்ச....
ஒன்று செய், அதுவும் நன்று செய்.
ரங்கலஷ்மி லோகேஷ்
நான் ஒரு எந்திரன்
ஏய்...ஏய்..ஏய்... நான் ஒரு எந்திரன்..
அழகுல நா ஒரு இந்திரன்
மனிசங்கல்ல நா ஒரு அன்னியன்
உலகத்த பொறுத்தவர இந்தியன்
என்ன எதுத்தா அவங்களுக்கு
னா அவங்கள புடிச்ச saturn (இத மட்டும் தமில்ல டிரான்சல் பண்ணுங்கப்பா)
ஒன்று செய், அதுவும் நன்று செய்.
ரங்கலஷ்மி லோகேஷ்
ஹாஹா ஹா
கெக்க கெக்கனு சிரிச்சுட்டேன் ;) சூப்பர் ரங்ஸ்
கவி பன்ச் டயலாக்க இப்படி பன்சர் போட்டு கொடுத்தீட்டீங்களேஏஏஏஏஏ!
எல்லாரும் வந்து அழகா அவங்க அவங்க பதிவப் போடனும். வாங்கபா வாங்க பன்ச் டயலாக் சொல்லுங்க. நம்ம ரஜினி பேசறமாதிரி சொல்லுங்க, வாங்கபா வாங்க.......
Don't Worry Be Happy.
சூப்பரு
ரங்ஸ் சூப்பரு! அடுத்த படத்துக்கு நீங்கதான் வசனம் எழுதறீங்களாம். இப்பத்தான் ரஜினி ஃபோன் பண்ணினார்.
வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!
கவி..... ,ஸ்பீல்பர்க்
கவி..... இந்த வருஷம் அமெரிக்கா போறேன்...... ஸ்பீல்பர்க் கால்ல விழுந்து ஒரே தொல்லை.... அடுத்த வருஷம் அப்படியே அடுதது கேமரூன் வீட்டு வாசல்லியே தவம் கிடக்கறாரு... அதனால அடுத்த வருஷமும் பிசி...... அதுக்கப்புறம்.... ஜான் ஊ வேற லயன்ல நிக்கராரு.... நீங்க சொன்னதுக்காக வேன்னா ஜான் ஊவ கென்சல் பன்னிட்டு வர்ரேன்... அதுவரைக்கும் ரஜினிய வெயிட் பன்ன சொல்லுங்க.... (இந்த கொசுத் தொல்லி தாங்க முடியலப்பா...)
ஒன்று செய், அதுவும் நன்று செய்.
ரங்கலஷ்மி லோகேஷ்
ஹவ் இஸ் இட்
கண்ணா கால் தரையில படாம அடிக்கிறது அந்தக் காலம்
நின்ன இடத்திலேர்ந்து அடிகிறது இந்த ரோபோவோட கரம்
(அப்படியே கை மட்டும் ஃபாஸ்ட்டா முன்னாடி நீண்டு வந்து அடிக்குது கும் கம் கும்...)
லேட்டா வந்தாலும் டேட்டஸ்ட்மா Tā shì rúhé, comment il est, bagaimana cara, Kak eto ஹா ஹா ஹா ஹவ் இஸ் இட்..........
(அர்த்தம் தெரியாதவங்களுக்காக மேல சொன்ன நாலு வார்த்தையும் சைனீஸ், ஃப்ரன்ச், மலே, ரஸ்யன் மொழிதான் அர்த்தம் நம்ம ரஜினி சொன்னதுதான் ஹவ் இஸ் இட்....)
Don't Worry Be Happy.
ஜெயா
ஜெயா குட்டித்தலை இங்க இருக்கும் போது மலாய் பாஷை பேசலாமோ?!
how is it? இதை bagaimana itu (பாகைமானா இத்து) அப்படீன்னு சொல்லணும்
வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!
கவி
ஆம்மாப்பா நானும் கூகுள்லேர்ந்து கரக்டாதான் எழுதிக்கொடுத்தேன். நம்ம ரஜினிதான் ஃபாஸ்ட்டா பேசறேன்னு இப்படி சொல்லிட்டாரு.....................
கூகுள்ல அப்படிதாம்பா போட்டிருக்கு;(
Don't Worry Be Happy.