போண்டா

தேதி: March 27, 2006

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

உளுத்தம் பருப்பு - 300 மில்லி
பச்சைமிளகாய் - 5
இஞ்சி - ஒரு அங்குலத் துண்டு
தேங்காய் - 2 கீற்று
கறிவேப்பிலை - ஒரு கொத்து
முந்திரிப்பருப்பு - 10
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - பொரிப்பதற்கு


 

உளுத்தம் பருப்புடன் உப்பு கலந்து கெட்டியாக நன்றாக அரைக்கவும். பச்சைமிளகாய், இஞ்சியைப் பொடியாக வெட்டவும்.
தேங்காயைச் சிறு பற்களாக வெட்டிக் கொள்ளவும். முந்திரிப் பருப்பை சிறு துண்டுகளாக உடைத்துக் கொள்ளவும்.
ஒரு தேக்கரண்டி எண்ணெயில் கடுகைப் போட்டு வெடித்ததும் மாவில் கொட்டவும்.
பச்சைமிளகாய், இஞ்சி தேங்காய் முந்திரிப்பருப்பையும் மாவுடன் கலந்து கொள்ளவும்.
எண்ணெய் காய்ந்ததும் மாவுக் கலவையை சுமாரான உருண்டைகளாக உருட்டி எண்ணெயில் போட்டு லேசாகச் சிவக்கும் வரை வேக விட்டு எடுக்கவும்.
காரச் சட்னி தொட்டு சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும்.


மேலும் சில குறிப்புகள்