Hi... ஊட்டி மற்றும் Wayanad (கேரளா)

நாங்கள் ஊட்டி மற்றும் Wayanad (கேரளா)நவம்பர் மாதம் சுற்றுலா செல்ல திட்ட்மிடுகிறோம். தங்குமிடம் மற்றும் சுற்றி பார்க்கக் கூடிய இடங்களை பற்றி அங்கு சென்று வந்தவர்கள் உங்கள் அனுபவங்களை கூறவும். நன்றி.

பிரபா
சென்னை

நவம்பர் மாதம் நல்ல மழையா இருக்குமேப்பா. அதுக்கும்முன்னாடி போகப்பாருங்க.

Don't Worry Be Happy.

ஜெயலெக்ஷ்மி நன்றி, அக்டோபர் அல்லது ஜனவரியில் சீசன் நன்றாக இருக்குமா

நீங்க GOOGLE சென்று ஊர் பேர் போட்டால், அந்த ஊர் அல்லது அந்த மாவட்டத்தின் அரசாங்க இணையதளம் ஓபன் ஆகும், அதில் உங்களுக்கு எல்லா விதமான தகவலும் கிடைக்கும், எந்த சீசன் நல்லா இருக்கும் என்று கூட பார்க்கமுடியும்.

WWW.WAYANAD.NIC.IN

அன்புடன்
பவித்ரா

ஜனவரி பிரமாதமா இருக்கும். அவசரம் இல்லைனா எதுக்கும் நீங்க ட்ராவல்ஸ்கிட்ட கேக்கலாம். ஆனா சீசன் டைம் வேண்டாம். ஒண்ணு சீசனுக்கு முன்னாடி போகப்பாருங்கபா. எனக்கு அங்க தங்கின ஹோட்டல் பேரு நியாபகம் இல்லை. அப்புறமா கேட்டு சொல்றேன்.
போட் ஹவுஸ், பொட்டானிக்கல் கார்டன் இங்கெல்லாம் டாக்ஸில போய்க்கலாம். ஏன்னா ரொம்ப நேரம் ஸ்பெண்ட் பண்ணுவேண்டியிருக்கும்.
பைக்கார ஃபால்ஸ் பாக்கவேண்டிய இடம். முதுமலை, ஸூட்டிங்க் ஸ்பாட் இன்னும் நிறைய இடம் இருக்கு.
ஹோட்டல்ல கேட்டால அவங்க அரேஞ் பண்ணிக்கொடுத்ருவாங்க. அருசுவைல ஊட்டியசேர்ந்தவங்க நிறைய பேர் இருக்காங்க. இரண்டு மூணு நாள் பொருங்க எல்லாரும் வந்து சொல்லுவாங்க;)

Don't Worry Be Happy.

எனக்குக்கூட டிசம்பர் மாதம் இந்தியாவில் எந்த ஊருக்குச் செல்லலாம் என்று சொல்லுங்கள் தோழிகளே
அன்புடன்
ஜெமாமி

நீங்க கோயமுத்தூர்தான் போகனும்;) ரம்ஸ் கல்யாணத்தப் பாக்க;-D

Don't Worry Be Happy.

ரம்யா கல்யாண தேதி தெரியுமா?
அன்புடன்
ஜெமாமி

ரம்யா கல்யாண தேதி டிசம்பர் 12. ரஜினி பிறந்தநாள் அன்னைக்கு.

டிசம்பர் 12 மாமி

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

ஞாயிற்றுக்கிழமையில் வருது.
கோயம்புத்தூர்ன்னா நைசா அம்மாவைப் பார்க்கணும்ன்னு பர்மிஷன் வாங்கிடலாம். இப்ப என்ன செய்யறது. பார்க்கலாம். ட்ரை பண்ணறேன்.
அன்புடன்
ஜெமாமி

மேலும் சில பதிவுகள்